{"title":"கிங் விஸ்வா","description":"","products":[{"product_id":"தமிழ்-சிறுவர்-இலக்கியம்-அறிந்து-கொள்ளவேண்டிய-ஆளுமைகள்-பாகம்-1","title":"தமிழ் சிறுவர் இலக்கியம் - அறிந்து கொள்ளவேண்டிய ஆளுமைகள் (பாகம் 1)","description":"\u003cp\u003e\u003cspan\u003eநான் எட்டாவது வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோதுதான் அந்தச் சம்பவம் நடந்தது.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஎன்னுடைய வகுப்பாசிரியர் லண்டன் தேம்ஸ் நதியைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது நான் குறுக்கிட்டு அந்த நதி எப்படி இருக்கும், அதன் அழகு, அதன் மேலே கட்டப்பட்டிருக்கும் பாலம், பின்னால் இருக்கும் பிக்-பென் கடிகாரம் என்று விவரமாகச் சொல்ல, ஆசிரியருக்கு ஆச்சரியம். “நீ லண்டன் சென்றிருக்கிறாயா?\" என்று கேட்க, நான் மஞ்சள் பூ மர்மம் என்ற முத்து காமிக்ஸ் கதையைச் சொல்லி அதில் இருக்கும் ஓவியங்களின் வாயிலாகத்தான் இவ்வளவும் தெரிய வந்தது என்று விளக்கினேன். அதன் பிறகு இன்னொரு முத்து காமிக்ஸ் கதையான \"சதிகாரர் சங்கம்\" வாயிலாக, இன்று ஒரு நாட்டில் இருந்து பயணத்தைத் தொடங்கி நேற்றைய தினத்தில் இன்னொரு நாட்டிற்கு சென்றடைவதைச் சொன்ன உடனே ஆசிரியருக்கே ஆச்சரியம்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஇப்படியாக காமிக்ஸ் வாசிப்பு என் வாழ்க்கையில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்தது. இந்தக் காமிக்ஸ் இதழ்களின் பதிப்பாசிரியரான முல்லை தங்கராசன் எனது முதல் ஆதர்ஸமாக மாறினார். ஓவியச் சக்ரவர்த்தி செல்லம் (எ) செல்லப்பன், சிறுவர் இலக்கிய சிந்தனைச் சிற்பி வாண்டுமாமா, அணில் அண்ணா என்று என்னுடைய இளம் பிராயம் மிகச்சிறந்த நினைவுகளுடன் கடக்க பலரும் உதவினர்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஅம்புலிமாமா, பாலமித்ரா, ரத்னபாலா என்று ஆரம்பித்து பின்னர் 1930களில் வந்த இதழ்கள் முதல் 1940களில் ஆரம்பித்த சிறுவர் இதழ்கள், 1950, 60, 70 என்று தொடர்ச்சியாக இதழ்களைச் சேகரித்துப் படிக்க ஆரம்பித்தேன். நம்மிடையே இருந்த மகத்தான ஆளுமைகளை இத்தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தவும் இவர்களின் சாதனைகளை ஆவணப்படுத்தவும் இப்புத்தகம் உதவும் என்றே நம்புகிறேன்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47737118818540,"sku":null,"price":197.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/1.webp?v=1781259897"},{"product_id":"சிறுவர்களுக்கான-உலக-புத்தக-அலமாரி","title":"சிறுவர்களுக்கான உலக புத்தக அலமாரி","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇருபத்தி ஆறு ஆண்டுகளாக சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு ரெகுலராக விஜயம் செய்து வந்ததில் சில விஷயங்களை கவனித்தேன். இளம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு புத்தக வாசிப்புப் பழக்கத்தை உருவாக்க நினைக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு எந்தப் புத்தகத்தை வாங்கிக் கொடுப்பது என்பதில் ஏற்படும் தெளிவின்மையால் இரண்டு பொதுவான தவறுகளைச் செய்கிறார்கள்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e1. ஆன்லைனில் \/ புத்தகக் கடைக்காரர்களிடம் விசாரித்து அவர்கள் பரிந்துரைக்கும் புத்தகங்களை வாங்கிக் கொடுப்பது.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e2. இளம் பெற்றோர்களின் சிறுவயதில் அவர்கள் படித்து ரசித்த புத்தகங்களையே இப்போது அவர்களின் குழந்தைகளுக்கும் வாங்கிக் கொடுப்பது.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஇவையிரண்டுமே சரியான அணுகுமுறை இல்லையென்பதால், இளம் பெற்றோர்களுக்கான ஒரு கையேட்டை உருவாக்குவதின் அவசியம் புரிந்தது. கடந்த பத்தாண்டுகளில் விற்பனையிலும் விமர்சனத்திலும் ட்ரென்ட் செட்டர் ஆக இருக்கும் 20 புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து என்னுடைய வழக்கமான பாணியில் ஸ்பாய்லர் இல்லாமல் ஒவ்வொரு கட்டுரையையும் கதை உருவான பின்னணி, உருவாக்கத்தில் இருந்த சுவையான தகவல்கள், இது எதைப்பற்றிய கதை, என்ன ஜான்ர என்று பல விஷயங்களையும், மிகவும் முக்கியமாக இளையோர்கள் ஏன் இந்தக் கதையைப் படிக்க வேண்டும் என்றும் எழுதி இருக்கிறேன். ஓவியங்களில், வண்ணங்களில், புத்தக அமைப்பில் இருக்கும் அழகியலையும் நான் ரசித்த விஷயங்களையும் தனியாகக் குறிப்பிட்டிருக்கிறேன்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eவாசிப்பில் ஆர்வமுள்ள அனைத்து பெற்றோர்களும் தங்கள் வாரிசுகளுக்கு இப்புத்தகத்தைப் பரிசளித்து உலகப் புத்தக அலமாரியின் கதவைத் திறந்து வைப்பார்கள் என்று நம்புகிறேன்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47737121702124,"sku":null,"price":244.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/9cec961d9cc60a7aa084288c4750d9d0.webp?v=1781260307"},{"product_id":"தலைசிறந்த-இந்திய-கிராஃபிக்-நாவல்கள்-பாகம்-1","title":"தலைசிறந்த இந்திய கிராஃபிக் நாவல்கள் (பாகம் 1)","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47737123176684,"sku":null,"price":300.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/THALAISIRANTHA1.jpg?v=1781260302"},{"product_id":"லைசிறந்த-கிராஃபிக்-நாவல்கள்-பாகம்-1","title":"தலைசிறந்த கிராஃபிக் நாவல்கள் பாகம் - 1","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47737148932332,"sku":null,"price":282.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/THALAIGRA.jpg?v=1781263546"},{"product_id":"கிராஃபிக்-நாவல்-அறிந்துகொள்ள-வேண்டிய-ஆளுமைகள்-பாகம்-1","title":"கிராஃபிக் நாவல் – அறிந்துகொள்ள வேண்டிய ஆளுமைகள் (பாகம் - 1)","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47745272873196,"sku":null,"price":329.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/GRAPHICSARINTHU.jpg?v=1781497180"},{"product_id":"ஜப்பானிய-மங்கா-காமிக்ஸ்-அறிமுகமும்-ஆளுமைகளும்","title":"ஜப்பானிய மங்கா காமிக்ஸ் – அறிமுகமும் ஆளுமைகளும்","description":"\u003cp\u003e\u003cspan\u003eகடந்த இரு தசம ஆண்டுகளாக உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வெளிவரும் காமிக்ஸ் மற்றும் கிராஃபிக் நாவல்களைத் தொடர்ச்சியாக படித்து வருபவன் என்ற வகையில் ஜப்பானிய காமிக்ஸ் புத்தகங்களான Manga-வின் மீது தீராக்காதல் ஏற்பட்டு விட்டது என்றே சொல்லலாம். பிரான்சின் பொந்-தெஸினி, இத்தாலியின் லிப்ரோ அ ஃபொமிட்டி, அமெரிக்காவின் கிராஃபிக் நாவல்கள் \u0026amp; OEM, கொரியாவின் மன்வா, இங்கிலாந்தின் காமிக்ஸ் என்று பல தரப்பட்ட புத்தகங்களுடனான அறிமுகம் ஆங்கில மொழியாக்கத்துடன் நடந்திருந்தாலும் உலக காமிக்ஸ் மற்றும் கிராஃபிக் நாவல்கள் சந்தையையே தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஜப்பானிய மங்காவின் மீதான ஆர்வம் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eபதின்ம வயதினர் முதல் 25 வயதுள்ள இளையோர் அனைவருமே மங்காக்களைத்தான் முதலில் படிக்க ஆரம்பிக்கின்றனர். அதன்பிறகுதான் காமிக்ஸ் \u0026amp; கிராஃபிக் நாவல்கள் என்று வாசிப்பின் பரப்பு அதிகரிக்கிறது. ஒரு திரைப்பட ஆந்தாலஜியில் மங்கா என்றால், அழகான பெண், கார்ட்டூன் என்று அறிமுகம் செய்தபோது, தமிழில் உறுதியாக இதைப்பற்றிய ஓர் அறிமுகக் கட்டுரையை எழுத வேண்டும் என்று முடிவெடுத்தேன். இப்புத்தகத்தில் மங்கா பற்றிய அறிமுகம், டாப் 10 மங்கா காமிக்ஸ்கள், ஆளுமைகள் என்று மங்காவைப் படிக்க நினைப்பவர்களுக்கான வழிகாட்டியாக இருக்கும் என்று நம்புகிறேன்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஎன்னுடைய வழக்கமான பாணியில் ஸ்பாய்லர் இல்லாமல் ஒவ்வொரு கட்டுரையையும் கதை உருவான பின்னணி, உருவாக்கத்தில் இருந்த சுவையான தகவல்கள், இது எதைப் பற்றிய கதை, என்ன ஜான்ர என்று பல விஷயங்களையும், மிகவும் முக்கியமாக ஏன் இந்தக் கதையைப் படிக்க வேண்டும் என்றும் எழுதி இருக்கிறேன். ஓவியங்களில், வண்ணங்களில், புத்தக அமைப்பில் இருக்கும் அழகியலையும் நான் ரசித்த விஷயங்களையும் தனியாகக் குறிப்பிட்டிருக்கிறேன்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47745341784300,"sku":null,"price":150.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/294b2a889875c389903fafb91cbef520.webp?v=1781501494"},{"product_id":"சித்திரமும்-சரித்திரமும்-காமிக்ஸ்-உலகின்-திருப்பு-முனைகள்","title":"சித்திரமும் சரித்திரமும் காமிக்ஸ் உலகின் திருப்பு முனைகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eகடந்த 18 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் பயணம் செய்து காமிக்ஸ் பற்றிய ஆவணப்படத்தைத் தயாரித்து வருகிறார், கிங் விஸ்வா. குறிப்பாக தமிழ் சிறுவர் இலக்கியம் மற்றும் காமிக்ஸ் குறித்தான அனைத்து விவரங்களையும் சம்பந்தப்பட்ட பதிப்பாளர், எடிட்டர், கதாசிரியர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஓவியர்கள் மற்றும் அவர்களது உறவினர்களை நேரில் சந்தித்து முழுமையான தகவல்களைத் தொகுத்து நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதியுள்ளார்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eதமிழில் வெளியான அனைத்து சிறுவர் இலக்கியம், சிறுவர் நூல்கள், காமிக்ஸ் மற்றும் அச்சில் வராத காமிக்ஸ்கள் என்று 10,000 புத்தகங்களுக்கு மேலாக சேகரித்த இவர்தான் தமிழ் காமிக்ஸ் உலகின் மிகப்பெரிய கலெக்டர் என்றும் அறியப்படுகிறார்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஒரு நிகழ்ச்சியில் இந்தியாவில் காமிக்ஸ் என்ற கலை ஏன் வளரவில்லை?\" என்று கேட்கப்பட்ட கேள்விக்கு கிங் விஸ்வா அளித்த பதில் \"டிம்பிள் கபாடியா\".\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஇன்றைய 2K Kidsகளுக்கு இது Cliok Bait தலைப்பாகத் தோன்றினாலும் உண்மை அதுதான். \"ராமரின் தாயாரின் பெயர் என்ன?” என்ற வினாடி-வினா கேள்விக்கு மாணவர்கள் பதில் அளிக்கத் தடுமாறியதில் இருந்துதான் இந்தியாவின் காமிக்ஸ் என்று அறியப்பட்ட அமர் சித்ர கதா துவங்கியது. இதுபோன்ற பல முக்கியமான திருப்புமுனைகளையும், இப்புத்தகத்தின் நோக்கம். நிகழாத தருணங்களையும் ஆவணப்படுத்துவதே\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47745356267756,"sku":null,"price":244.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/06d4df19d9a754679cd6f1b05798e81d.webp?v=1781502303"}],"url":"https:\/\/centaram.com\/collections\/king-viswa.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}