{"title":"கி. ராஜநாராயணன்","description":"","products":[{"product_id":"கிடை","title":"கிடை","description":"\u003cp\u003e\u003cspan\u003e‘கிடை’ காட்டும் சமூக உறவுகள் மிகவும் இறுக்கமானவை. சாதி வேறுபாடும் பொருளாதார ஏற்றத்தாழ்வும் அங்கு இறுகிப் பிணைந்து கிடக்கின்றன. எல்லப்பனின் கலியாண ஊர்வலமும் செவனியின் பேயோட்டு வைபவமும் இந்தச் சமூக முரணை உக்கிரமாகக் காட்டுகின்றன. கிராமத்தின் சில வலியகரங்கள் சில தனிமனிதர்களின் வாழ்வை ரகசியமாக இறுக்கிக்கொண்டிருப்பதை இதில் காண்கிறோம். ஒரு கலை என்ற வகையில் ‘கிடை’தான் ராஜநாராயணனின் படைப்புகளிலேயே சிகரம் என்று இப்போதும் எனக்குத் தோன்றுகின்றது. இதில் அவர் காட்டி யுள்ள நுட்பம் அலாதியானது. எம்.ஏ. நுஃமான்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47599405957356,"sku":null,"price":83.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/0a98f543d1516d50b57c7129dd301965.jpg?v=1777976834"},{"product_id":"கோபல்லபுரத்து-மக்கள்","title":"கோபல்லபுரத்து மக்கள்","description":"\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan\u003e-\u003c\/span\u003e\u003cspan\u003eகோபல்லபுரத்து மக்களின் எளிமையும் வெள்ளந்தி மனமும்தான் இந்த நாவலின் உயிரோட்டம். அந்தக் கிராமத்தின் ஆன்மாவைத் தன் எழுத்தால் கி.ரா. படம் பிடிக்கிறார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003eமண் ஒன்றானாலும் மனங்கள் பிளவுபட்டிருக்கின்றன. இந்தப் பிளவை நாட்டில் நடக்கும் விடுதலைப் போரோடு இணைக்கிறார்; கோபல்லபுரத்தாரால் நேரடியாகப் போரில் ஈடுபட முடியவில்லை. ஆனாலும்  தலைவர்களின் நோக்கையும் போக்கையும் கண்டு விமர்சனம் செய்யும் அளவுக்கு அவர்களின் வாழ்க்கைக் கண்ணோட்டம் விரிவடைகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan\u003e‘\u003c\/span\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003eகோபல்ல கிராமம்\u003c\/span\u003e\u003cspan\u003e’ \u003c\/span\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003eநாவலின் தொடர்ச்சியாக எழுதப்பட்ட இந்த நாவலில் சமகால வரலாற்றுச் சம்பவங்களின் பின்னணியில் சாதாரண மக்கள் நாயகர்களாக விளங்குவதைத் தனக்கே உரிய நடையில் சொல்கிறார் கி.ரா. ஒவ்வொரு வரியிலும் மண் வாசனை வீசும் இந்த நாவல் தமிழின் சிறந்த வட்டார வழக்கு நாவல்களில் ஒன்று என்னும் சிறப்பையும் பெற்றது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003e1991ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்ற நாவல் இது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47603197477100,"sku":null,"price":360.75,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/c155b4a32885ff73309c9d7811196819.jpg?v=1778057183"},{"product_id":"மாயமான்","title":"மாயமான்","description":"\u003cp\u003e\u003cspan\u003eகி. ராஜநாராயணன், ஜானகிராமனின் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஜானகிராமனைப் போலவே அபூர்வமான அழகுணர்ச்சியும் ரசனையில் திளைக்கும் மனோபாவமும் கொண்டவர். இவரது கதை உலகத்தைத் தமிழ் மண்ணுக்கே உரித்தான ஒரு பழத்தோட்டம் என்று சொல்லலாம். வித்தியாசமான மனிதர்களைக் கதாபாத்திரங்களாக மாற்றும் ஆற்றல் இவர் கலை வன்மை. - சுந்தர ராமசாமி கரிசல் இலக்கியத்தின் முன்னோடி கி. ராஜநாராயணனின் தேர்ந்தெடுத்த 17 கதைகளின் தொகுப்பு இந்நூல்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47603728744684,"sku":null,"price":249.75,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/e6910cffabc186c313bf58c5e82da13b.jpg?v=1778064317"},{"product_id":"கோபல்ல-கிராமம்","title":"கோபல்ல கிராமம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇயற்கையோடு இணைந்த வாழ்வுக்கான கூருணர்வை இழந்துகொண்டிருக்கிற இன்றைய காலகட்டத்தில் அந்தக் கூருணர்வை உட்சரடாகக் கொண்டுள்ளது. கி. ராஜநாராயணனின் ‘கோபல்ல கிராமம்’ நாவல். மனிதர்களின் கதைகளை எழுதும்போதும் அசையும் அசையாப் பொருட்கள், பறவைகள், விலங்குகள், பூச்சிகள் என இயற்கை சூழ் வாழ்வின் மொத்தத் தொகுப்பின் ஒரு பகுதியாகவே மனித வாழ்வு இந்த நாவலில் வெளிப்படுகிறது. கிராமமும் அந்த நிலப்பரப்பும் இழந்துகொண்டிருக்கிற உயிர்க்களையைப் பற்றியும் இந்நாவல் கவலைகொள்கிறது. ஒரு கிராமத்தின் நிலவியல் தோற்றத்துடன் அதன் விலங்குகள், பறவைகள், செடிகள், கொடிகள், மனிதர்கள் என ஒரு முழுமையான சித்திரத்தை முன்வைக்கும் கதையாடலை இந்நாவலுக்குள் சாத்தியப்படுத்துகிறார் கி.ரா. கிராம வாழ்வில் சாதியின் இருப்பையும் மனிதர்களின் இடத்தையும் கி.ரா. இயல்பாகக் கவனப்படுத்துகிறார். கோபல்லம் எனும் கிராமத்தின் இயல்பையும் அதில் இயக்கம் கொள்ளும் வாழ்வையும் இந்நாவல் முன்னிறுத்தினாலும் அதன் பார்வை உலகம் தழுவும் பார்வையாகவும் விரிவடைவது கி.ரா.வின் எழுத்து வன்மைக்குச் சான்றாக அமைகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47605641150700,"sku":null,"price":231.25,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/8ca08c943a122b5706d00ada6f4ea05d.jpg?v=1778136770"},{"product_id":"கதவு","title":"கதவு","description":"\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan\u003e-\u003c\/span\u003e\u003cspan\u003e‘\u003cspan lang=\"EN-IN\"\u003eகதவு\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan\u003e’ \u003c\/span\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003eகி.ரா.வின் முதல் சிறுகதைத் தொகுப்பு. அவரது படைப்பாற்றலை அழுத்தமாகப் பறைசாற்றிய தொகுப்பும்கூட.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003eஇந்தத் தொகுப்பிலுள்ள கதைகள் அவருடைய கதை சொல்லும் முறையின் நவீனமுகத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கின்றன. கூர்மையான அவதானிப்பும் யதார்த்தமான சித்திரிப்பும் நம்பகத்தன்மையும் இவற்றில் கூடியிருக்கின்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003eகரிசல் வட்டார வழக்கை நவீன தமிழ் இலக்கியத்தில் முக்கிய இடம்பெறச் செய்த முதல் தொகுப்பு இது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003eகுழந்தைகள், முதியவர்கள், பெண்கள், ஆண்கள், மரங்கள், மாடுகள், ஆடுகள், கோழிகள், பறவைகள், பூக்கள், பூச்சிகளின் வழியாகப் புதுவகையான கதைகளைச் சொல்கிறார் கி.ரா.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003eஇக்கதைகளில் வரும் பாத்திரங்களின் ஆசைகளும் ஏமாற்றங்களும் தோல்விகளும் தியாகங்களும் அரசியலும் அன்றாடமும் யதார்த்தத்தைச் சித்திரிக்கின்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003eஇளம் படைப்பாளிகள் பலருக்கும் இன்றளவும் வழிகாட்டியாகவும் முன்மாதிரியாகவும் அமைந்திருக்கும் தொகுப்பு இது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47605983019244,"sku":null,"price":167.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/d33d763b4148fc9f48ff53873d5cc5f5.jpg?v=1778144435"},{"product_id":"வேட்டி","title":"வேட்டி","description":"\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eவேட்டி\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e என்பது தமிழரின் பாரம்பரியம், பண்பாடு மற்றும் வாழ்வியலுடன் நெருங்கிய தொடர்புடைய வேட்டியின் வரலாறு, சமூக முக்கியத்துவம் மற்றும் கலாச்சார அடையாளத்தை எடுத்துரைக்கும் சிறப்பான நூல். வெறும் ஆடையாக மட்டுமல்லாமல், தமிழரின் எளிமை, மரியாதை, உழைப்பு மற்றும் பாரம்பரியத்தின் அடையாளமாக வேட்டி எவ்வாறு விளங்குகிறது என்பதை இந்நூல் சுவாரஸ்யமாக விளக்குகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47645698261228,"sku":null,"price":94.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/f3491af73ae431e3748d08b5b6908c82.jpg?v=1779189888"},{"product_id":"புதுவை-வட்டார-நாட்டுப்புறக்-கதைகள்","title":"புதுவை வட்டார நாட்டுப்புறக் கதைகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇலக்கிய உலகில் தீண்டாமைக்கு ஆட்பட்டிருந்த நாட்டுப்புறவியல் இன்று நவீன ஆலயங்களாகக் கருதப்படும் பல்கலைக் கழகங்களில் \"பிரவேசம்' செய்யும் அளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது. முக்கியத்துவம் பெற்றுள்ளது.எனினும் இந்தியப்பல்கலைக் கழகங்கள் இத்துறையில் நிகழ்த்த வேண்டிய சாதனைகள் இன்னும் தொடக்கநிலையிலேயே உள்ளன. நாட்டுப்புறக் கதைகள், பாடல்கள் போன்றவற்றின் தொகுப்புப் பணிகள் முழுமையாக நிறைவேறினால்தான் இத்துறையில் மேலும் மேலும்ஆய்வுகள் செழிக்கமுடியும். \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47648360005868,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/eb15d791a6c6adee197d2c11e3967dda.jpg?v=1779257964"},{"product_id":"கொத்தை-பருத்தி","title":"கொத்தை பருத்தி","description":"\u003cp\u003e\u003cspan\u003eபெநருக்கு இப்பவும் குறைச்சல் இல்லைதான். பெயர் இருந்து நாக்கு வழிக்கவா ஒரு பயலும் பொண்ணு தர மாட்டேங்கானே என் பேரனுக்கு என்று நினைத்து தவுதாயப் பட்டார் கோனாரி.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47648364429548,"sku":null,"price":94.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/57d9b992093a3546a366d2134d8917d4.jpg?v=1779258463"},{"product_id":"ருசியான-கதைகள்","title":"ருசியான கதைகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஒரு எழுத்தாளன் வாழ்கிற காலத்திலேயே இப்படியான நிலை. கதைசொல்லி இதழ்களைத் தொகுக்கும் பணியில் ஈடுபட்ட போதும், கதை சொல்லியில் கி.ரா. எழுதிய பகுதிகளைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டபோதும் நண்பர்களின் உதவியைத்தான் நாட வேண்டியதாகிவிட்டது. நானும் கதைசொல்லி இதழ்களை முறையாகத் தொகுத்து வைக்கவில்லை. 'கி.ரா’விடம், \"தற்போது ஏன் இப்படி நீங்கள் எழுதி பிரசுரமான படைப்புகளையே சேகரித்து வைக்கவில்லை?\" என்று கேட்டேன். அதற்கு அவர் “எல்லாம் ஒரு துறவு மனப்பான்மைதான்\" என்றார். பிறகு எப்படி உங்கள் எழுத்துக்களை எல்லாம் தொகுத்து நூலாக்க முடியும்? என்று கேட்டேன். அதற்கு அவர் \"அந்த வேலையை யாராவது செய்வார்கள். இப்போதைக்கு கிடைத்த மட்டுக்கும் போதும்\" என்கிறார். \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47648371278060,"sku":null,"price":122.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/f8cbfdeaefa5a4ed087bea0cbd14f233.jpg?v=1779258788"},{"product_id":"இந்த-இவள்","title":"இந்த இவள்","description":"\u003cdiv class=\"product_description detailblocks\"\u003e\n\u003cdiv itemprop=\"description\"\u003e\n\u003cp\u003e“கி. ரா. காட்டும் உலகம் விந்தையானது. அதில் நடமாடும் மனிதர்களும் விந்தையானவர்கள். அதிலும் அவர் உயிரூட்டி உலவவிடும் பெண்கள் அதி விந்தையானவர்கள்.”\u003c\/p\u003e\n\u003cp\u003eஅப்படி கி. ரா. காலச்சுவடு வெளியீடாக உலவவிட்ட விந்தையான பெண்தான் ‘இந்த இவள்’.\u003c\/p\u003e\n\u003cp\u003e96 வயதை நிறைவு செய்திருக்கும் கரிசல் காட்டு கலைஞரின் புதிய படைப்பு இக்\u003cspan\u003eகுறுநாவல்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47655162151148,"sku":null,"price":150.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/574549f0843f33f9e9956a6499cf622f.jpg?v=1779441837"},{"product_id":"பிஞ்சுகள்","title":"பிஞ்சுகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eமக்களின் இயல்பான வழக்குமொழியைத் தன் படைப்பு மொழியாகக் கொண்ட கி. ராஜநாராயணன் எழுதிய குறுநாவல் 'பிஞ்சுகள்’.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003eபள்ளிப் பருவத்தில் தொடங்கும் நாவல் வெங்கடேஷ், செந்திவேல், அசோக் ஆகிய சிறுவர்கள் வழியாக மகிழ்ச்சியின் உச்சிக்கிளையைத் தொடுகிறது. ரப்பர் வில்லுடன் திரியும் திருவேதி நாயக்கர் பறவை வேட்டையை மாய ஜாலத்துடன் நிகழ்த்திக் காட்டுகிறார்.\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003eவாழ்வின் அசைவுகளை இயற்கையின் துணையோடு புனைவுகளாக்கும் கி.ரா., சிறுவர்களோடு வளர்ப்பு மைனாக்கள், காகங்கள், நாய்கள், கிளிகளையும் இந்த நாவலில் பாத்திரங்களாக்கியிருக்கிறார். குழந்தைகளின் உலகைக் குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் கண்டுணரும் விதமாக இயல்பாகப் படைத்திருக்கிறார்.\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47655234896108,"sku":null,"price":112.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/11e4afc55bf0d840302bb80d83b0c33c.jpg?v=1779443646"},{"product_id":"கி-ராஜநாராயணன்-தேர்ந்தெடுத்த-சிறுகதைகள்","title":"கி. ராஜநாராயணன்: தேர்ந்தெடுத்த சிறுகதைகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஒருகாலத்தில் சிறுகதை தனது வடிவத்துக்காக அல்லாடிக்கொண்டிருந்தது. பிரெஞ்சா, ருஷ்யாவா, அமெரிக்காவா, இங்கிலாந்தா,... என்று பரிதவித்தது. வந்தது வந்தது...... முத்து முத்தா வந்து விழுந்தது.... தமிழ், மலையாளா, மராட்டியம், வங்கம், இந்தி என்று சேகரித்து சேகரித்து மடியில் கட்டி முடியலை! சினையாகி சினையாகி பலரக குட்டிகள் ஈன்ரன! ஒரு கட்டத்தில் போதும் என்று தோன்றவே ரகங்கள் பலவிதமாகி வடிவங்கள் உடைந்து விதவிதமாகிவிட்டன. மேலும் மேலும் உடைந்து குழந்தைகள் வரைந்த படங்கள் ஆகிவிட்டன, இனி... சிறுகதை வடிவங்கள், தோன்றிய இடங்களான வாய்மொழிக் கதைகள் போலவே ஆகலாம்!\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47676257239276,"sku":null,"price":282.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/c35e492334c924aece9651f464184171.jpg?v=1779871856"},{"product_id":"கி-ரா-தாத்தா-சொல்லும்-கிராமியக்-கதைகள்","title":"கி.ரா. தாத்தா சொல்லும் கிராமியக் கதைகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇத்தொகுப்பில் உள்ள கதைகள் ‘கி.ரா’ தாத்தா, தன் பேரக்குழந்தைகளை அழைத்து வைத்துக் கொண்டு கதை சொல்லும் பாணியில் எழுதப்பட்டுள்ளன. எனவே இவற்றைப் படிக்கும் குழந்தைகள் ‘கி.ரா.’ என்ற தாத்தாவிடம் நேரடியாகக் கதையைக் கேட்ட அனுபவத்தைப் பெறலாம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47685419860204,"sku":null,"price":75.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NewDoc05-27-202619.41_30.jpg?v=1780044491"},{"product_id":"தாத்தா-சொன்ன-கதைகள்","title":"தாத்தா சொன்ன கதைகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003e42 சிறுகதைகள் மற்றும் ஒரு நீண்ட கதை கொண்ட இந்தப் புத்தகம் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்ததாக விமர்சகர் குறிப்பிடுகிறார். கதை சொல்லும் முறை: மனிதர்கள் பொதுவாக கதை கேட்பதை விரும்புவதைப் போல, குறிப்பாக தாத்தா-பாட்டி சொல்வது போல, இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் கதைகளை 'ஒரு தாத்தா, தன் பேரன் பேத்திகளுக்குச் சொல்வது போல' அமைத்துள்ளார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47736340414700,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/THATHATHATHA.jpg?v=1781246477"},{"product_id":"வேதபுரத்தார்க்கு","title":"வேதபுரத்தார்க்கு","description":"\u003cdiv class=\"row\"\u003e\n\u003cdiv class=\"col-md-12 col-md-12\"\u003e\n\u003cdiv class=\"tab-content\"\u003e\n\u003cdiv class=\"tab-pane active in\" id=\"desc_1\"\u003eநினைப்பு வரும் போதெல்லாம் கம்பளிசாமி மடத்துக்குப் போவேன், அந்த வெண்கலச் சிலையைப் பார்க்க.பல்வேறு கோணங்களில் நின்று ஆற அமரப் பார்க்கிறது. இந்தக் கோலத்தில் இப்படி வடிவமைத்த சிற்பி யார் என்று தெரியவில்லை. நமது கோயில்களிலும் நான் பார்த்ததில்லை, சிவன் சக்திக் கலவையை படக்கலையில் தேர்ந்த திரு. புதுவை இளவேனிலைக் கூப்பிட்டு அந்த சிலையை ஒரு படம் எடுத்து எனக்குத் தாயேன் என்றதும் தனது நண்பன் மோகனுடன் போய் படம் எடுத்துக் கொண்டுவந்து தந்தார்கள்\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47924321026284,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/0160d19efce820de281bdbaa8577a3af.jpg?v=1783750413"},{"product_id":"காதில்-விழுந்த-கதைகள்","title":"காதில் விழுந்த கதைகள்","description":"\u003cp\u003eவாழ்க்கையின் பல்வேறு அனுபவங்கள், மனித உணர்வுகள், சமூக நிகழ்வுகள் மற்றும் சிந்திக்க வைக்கும் தருணங்களை சுவாரஸ்யமான கதைகளாக தொகுத்து வழங்கும் நூல். எளிய மொழிநடை, மனதைத் தொடும் கருத்துக்கள் மற்றும் வாழ்வியல் பாடங்களுடன், அனைத்து வயதினரும் விரும்பிப் படிக்கக்கூடிய சிறந்த கதைத்தொகுப்பாக இது அமைகிறது.\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47924694352108,"sku":null,"price":150.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/d16de938eebde3bef450dbc9132a6f31.jpg?v=1783751845"},{"product_id":"பெண்-கதை-எனும்-பெருங்கதை","title":"பெண் கதை எனும் பெருங்கதை","description":"\u003cp\u003e\u003cspan\u003eஆண்களுக்கு எல்லைகள் வகுத்து, தங்களுக்கான உலகை நிறுவிக்கொண்ட பெண் கள். ஆண்கள், பகிஷ்கரிக்கப்பட்ட அந்தரங்க உலகம். அந்த உலகின் ஆளு ைம கள். அதன் அர வ ைண ப்புகள் , அ ளித்த அடைக்கலங் கள். வாழ்வைக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களான பாட்டிமார்கள், கதை கதையாக விரிந்த பாடங்கள். 'பெண்கதை எனும் பெருங்கதை' பலரும் அறியாத, ருசிகரமான, பெண்ணின் புதிய கோலங்களை, கோணங்களை அளிக்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47924799963372,"sku":null,"price":84.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/d21e3fb6e6c376aff63ee4a7afc3d0af.jpg?v=1783752138"},{"product_id":"வேட்டி-1","title":"வேட்டி","description":"\u003cp\u003e\u003cspan\u003eகடிதம் எழுதும் சகானுபவம் நான் கதை எழுதும்போது எனக்குக் கிடைத்தில்லை.கதை எழுத உட்கார்ந்தால் அது ஒரு பிரசவ வேதனை.எழுதும்போது நம்பிக்கை கிடையாது.எழுதி முடித்தபின்னோ திருப்தி ஏற்படவே செய்யாது.கதை எழுத ஆரம்பித்துச் சில வரிகள் எழுதிவிட்டு பேனாவை கையில் பிடித்துக்கொண்டே கதையை மேற்கொண்டு போவதில் தான் சொகம் கண்டிருக்கிறேன் நான்.அவைகளை மடக்கிப் பிடித்து எழுத்துக்குக் கொண்டு வருவது என்பது.குழந்தை வண்ணாத்திப் பூச்சிக்குப் பின்னாலே திரிந்து அது உட்காரும் இடங்களிலேல்லாம் நின்று நின்று பிடித்துக்கொண்டு வருகிற மாதிரிதான்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47925038285036,"sku":null,"price":122.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/VETTI.jpg?v=1783752805"},{"product_id":"குழந்தைப்-பருவக்-கதைகள்","title":"குழந்தைப் பருவக் கதைகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eநாற்பது வயதுக்குமேல்  எழுதத் தொடங்கிய கி.ரா.சிறுகதை, நாவல்,  கடித இலக்கியம், நாட்டுப்புறப் படைப்புகள், வட்டாரச் சொல் அகராதி என்று தமிழின் பல்வேறு இலக்கியத் தளங்களிலும் தடம் பதித்திருப்பவர். தமிழில் அருகியுள்ள குழந்தை நூல்களுக்கு மத்தியில் மிகக் குறிப்பிடத்தகுந்த சிறுகதைகள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47925733097708,"sku":null,"price":150.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KULANTHA3.jpg?v=1783755704"},{"product_id":"நாட்டுப்புறக்-கதைகள்","title":"நாட்டுப்புறக் கதைகள்","description":"\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eகி. ராஜநாராயணன்\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e எழுதிய \u003c\/span\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eநாட்டுப்புறக் கதைகள்\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e, தமிழக கிராமிய வாழ்வின் மண்வாசனையையும், மக்களின் நகைச்சுவை, அறிவு, நம்பிக்கைகள் மற்றும் வாழ்க்கை அனுபவங்களையும் உயிரோட்டமாகப் பதிவு செய்கிறது. எளிய மொழிநடையில் சொல்லப்படும் இக்கதைகள், நாட்டுப்புற மரபையும் தமிழரின் வாழ்வியல் பண்பாட்டையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் அரிய இலக்கியச் செல்வமாக விளங்குகின்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47925759639788,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NAATUPURA_77dab586-0140-4091-9fcd-e87803c1d169.jpg?v=1783756286"}],"url":"https:\/\/centaram.com\/collections\/ki-rajanarayanan.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}