{"title":"கருப்புப் பிரதிகள்","description":"","products":[{"product_id":"இந்தியாவில்-சாதிகள்-1","title":"இந்தியாவில் சாதிகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஉங்களுடைய சமூக அமைப்பை மாற்றாமல் நீங்கள் சிறிது கூட முன்னேற்றம் காண முடியாது. தற்காப்புக்கோ அல்லது போர் தொடுப்பதற்கோ மக்களை ஒன்றுதிரட்ட முடியாது. சாதியை அடிப்படையாக வைத்த நீங்கள் எதையும் உருவாக்க முடியாது. தேசிய இனத்தை உருவாக்க முடியாது. ஒரு ஒழுக்கப் பண்பை உருவாக்க முடியாது. சாதியை அடிப்படையாக வைத்து நீங்கள் எதை உருவாக்கினாலும் அது உடைந்து சிதறி உருப்படாமற் போகும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47917246382316,"sku":null,"price":47.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/9c73f1e40de815deea560004fc3ceb15.jpg?v=1783673436"},{"product_id":"உள்-ஒதுக்கீடு-சில-பார்வைகள்","title":"உள் ஒதுக்கீடு:சில பார்வைகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஉள்ஒதுக்கீடு கோரிக்கையின் நியாயங்களை விவாதங்களாக முன்வைக்கும் கவிஞர் மதிவண்ணன் அதற்கான பெரும்போராட்டத்தை ஆந்திர மாநிலத்தில் நடத்திய மாதிகாக்களின் 'தண்டோரா இயக்க' செயல்பாடுகளின் ஆவணமொன்றையும் இத்தொகுப்பில் தமிழாக்கி தந்துள்ளார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47917355761900,"sku":null,"price":94.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/6130de2b9b099e176a6e49fd817cdf3d.jpg?v=1783673907"},{"product_id":"இச்சா","title":"இச்சா","description":"\u003cp\u003e\u003cspan\u003eதற்கொலை செய்துகொள்வதில், உலகிலேயே இலங்கைக்குத்தான் நீண்டகாலமாக முதல் இடமிருக்கிறது. போருக்கு முன்பும் போரிலும் போருக்குப் பின்பும் இந்த முதலிடத்திலிருந்து இலங்கை கீழிறங்கவேயில்லை. கூட்டுத் தற்கொலை செய்துகொள்ளும் ஓர் சமூகத்தின் சுயசாட்சியமே இந்நாவல் என்று சுருக்கமாகச் சொல்லலாம்”\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47917392265452,"sku":null,"price":323.75,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/bf5f4ae9c192dfab052aa647d86f2944.jpg?v=1783674198"},{"product_id":"box-கதைப்-புத்தகம்","title":"BOX கதைப் புத்தகம்","description":"\u003cp\u003e\u003cspan\u003e'கொரில்லா', ம்' நாவல்களைத் தொடர்ந்து வெளியாகும் ஷோபசக்தியின் மூன்றாவது நாவல். முள்ளிவாய்க்காலிற்குப் பின்னான வன்னிக் கிராமமொன்றின் கதைப் பிரதி. யுத்தத்தின் ஊடும் பாவுமான கதைகளைச் சித்திரிக்கும் உபவரலாறு.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47917435158764,"sku":null,"price":272.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/BOX.jpg?v=1783674682"},{"product_id":"முப்பது-நிறச்-சொல்","title":"முப்பது நிறச் சொல்","description":"\u003cp\u003eபுலம்பெயர்ந்தோர் தமிழ் எழுத்துக்களில் இரண்டாவது கட்டுரை தொகுப்பு இது.\u003c\/p\u003e\n\u003cp\u003eகட்டுரைகளை கதைகளாக்கவும் கதைகளை கட்டுரைகளாக்கவும் தெரிந்த இலக்கிய வித்தைக்காரன் ஷோபாசக்தியின் இந்நூலில், தமிழ்ச் சமூக மனங்களில் உறைந்திருக்கும் சாதியம், தேசியம், இலக்கியப் போர்வைக்குள் இந்துத்துவம் பேணும் \"காலச்சுவடு\" வகைகளின் இதழியல் பார்ப்பனியம் போன்ற பாசிசக் கூறுகளை விரிவாக்கவும் கூர்மையாகவும் விமர்சிக்கும் 30 கட்டுரைகளின் தொகுப்பு இது.\u003c\/p\u003e\n\u003cp\u003eஈழத்தின் வடத் தீவுகளில் ஒன்றான லைடன் தீவின் அல்லைப்பிட்டி கிராமத்தில் பிறந்து தற்போது பிரான்சில் அகதியாக வசித்துவரும் அந்தோனிதாசன் என்கிற ஷோபாசக்தி ‘கொரில்லா (2001)’, ‘ம்’ (2004), BOX (2015) என்கிற மூன்று நாவல்களையும், தேசத்துரோகி (2003)’, எம்.ஜி.ஆர். கொலைவழக்கு (2009), ‘கண்டிவீரன்(2014)’ என்கிற மூன்று சிறுகதைத் தொகுதிகளையும், ‘வேலைக்காரிகளின் புத்தகம (2007)’, ‘முப்பது நிறச் சொல்(2014)’, ‘பஞ்சத்துக்கு புலி(2011)’ ஆகிய மூன்று கட்டுரை தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார்.\u003c\/p\u003e\n\u003cp\u003e‘சுவிஸ்’ தேவாவின் மொழிபெயர்ப்பில் வெளியான சைனா கெய்றெற்சியின் ‘குழந்தைப் போராளி (2008)’ நூலுக்கும், தன்வரலாற்று நினைவுக் குறிப்புகளான புஷ்பராணியின் ‘அகாலம் (2012)’ நூலுக்கும், பதிப்பாசிரியராக பணியாற்றியுள்ளார்.\u003cbr\u003eநண்பர் சுகனுடன் இணைந்து இவர் வெளியிட்ட‘சனதரும போதினி (2001)’, ‘கறுப்பு (2002), ஆகிய இரு தொகுப்புகள் பெரும் அதிர்வுகளையும் ஈர்ப்பையும் புலம்பெயர்ச் சூழலில் ஏற்படுத்தியது.\u003c\/p\u003e\n\u003cp\u003e2013-ல் இலங்கையில் நடைப்பெற்ற 41வது இலக்கிய சந்திப்பு நிகழ்விற்கு ஈழம்- புலம்பெயர்ந்த நாடுகள்- தமிழகம் என்கிற விரிந்த புலங்களில் இயங்கும் படைப்பாக்கங்களை ஒருங்கிணைத்து ‘குவர்னிகா’என்கிற தொகுப்பிற்கு பதிப்பாசிரியராக அவர் இருந்தது மிகுந்த தனித்துவமானது.\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47917552107756,"sku":null,"price":253.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/bd6f6bd22346a3f01e1daf871f62ef4c.jpg?v=1783675295"},{"product_id":"கண்டி-வீரன்","title":"கண்டி வீரன்","description":"\u003cp\u003e\u003cspan\u003e2011-14 காலத்திற்குள் எழுதப்பட்ட இச்சிறுகதைகள் இனவிடுதலை என்கிற முழக்கத்தின் பெயரால் நிகழ்த்திய அரசியற்போரையும் புலம்பெயர்தலின் பின்னணியில் எதிர் கொள்கிற உளவியல் அவதியையும் ஒருங்கே பிரதிபலிக்கக் கூடியவை.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47917611450604,"sku":null,"price":185.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/e513ace7c931fc5835e62b6e664dbe34.jpg?v=1783675514"},{"product_id":"பஞ்சத்துக்கு-புலி","title":"பஞ்சத்துக்கு புலி","description":"\u003cp\u003eஊர்கூடி பார்த்திருக்க நடுத்தெருவில் வீழ்த்தி\u003cbr\u003eஎம் பெண்களை வல்லாண்ட உம்மைக் கண்டு\u003cbr\u003eமறைவிடம் ஓடியொளிந்த நாய்கள்\u003cbr\u003eபிறிதொருபோதும் உம்முன்னே வருவதற்கஞ்சிய குற்றத்திற்காக\u003cbr\u003eகைகால்கள் கட்டப்பட்டு\u003cbr\u003eபனிப்பாளத்தின் மீது கிடத்தப்பட்டிருக்கிறேன்\u003cbr\u003eபிணமென விரைக்கும் உடலுக்குள் கடுத்தேறுகிறது சில்லிப்பு\u003cbr\u003eநடுங்கிச் சரிகிறது உயிர்\u003c\/p\u003e\n\u003cp\u003eதண்ணீர் கேட்டால் மூத்திரம் பெய்வதும்\u003cbr\u003eவாயைத் திறந்தால் மலம் திணிப்பதுமே\u003cbr\u003eநாகரீகக் கனவான்களாகிய உமது வாடிக்கையென்பதால்\u003cbr\u003eபசிதாகம் குறித்து புகாரிடாமல் மயக்கத்தில் வீழ்கிறேன்\u003c\/p\u003e\n\u003cp\u003eசித்திரவதைகளை உணராமலே செத்துவிடக்கூடாதென்ற பயத்தில்\u003cbr\u003eபந்தம் கொளுத்தி என்தலையைத் தீய்த்து\u003cbr\u003eபிரக்ஞையின் எல்லைக்குள் இழுத்துப் போடுகிறீர்கள் என்னை\u003c\/p\u003e\n\u003cp\u003eவிசேஷமாய் பயிற்சி எடுத்தக் காவலரைப் போன்ற ஒருவன்\u003cbr\u003eஎன் கால்களில் லாடமடித்துக் கொண்டிருக்கிறான்\u003cbr\u003eநகங்களைப் பிடுங்கி எடுத்துவிட்டு\u003cbr\u003eஎன் பற்களையும் பிடுங்கும் அவசரத்தில்\u003cbr\u003eகுறடு ஒன்று இயங்கிக்கொண்டிருக்கிறது இன்னொருவன் கையில்\u003cbr\u003eவன்மங்களை நவீனமாய் தணிக்கத் தெரிந்த மற்றையவன்\u003cbr\u003eவயர்களை என்குறியில் சுற்றி மின்னதிர்ச்சிக் கொடுக்கிறான்\u003c\/p\u003e\n\u003cp\u003eஅடுக்களையிலிருந்து டப்பர்வேருடன் வந்த\u003cbr\u003eஉங்கள் மனைவி\/மகள்\/ சகோதரி\/ யாரோ ஒருத்தி\u003cbr\u003eஇந்தக் கண்களா எம்மை ஏறெடுத்துப் பார்த்தவையென\u003cbr\u003eபலவந்தமாய் இமைபிரித்துத் தூவுகிறாள் மிளகாய்ப்பொடியை\u003c\/p\u003e\n\u003cp\u003eகொத்தியெறிந்தது போக நினைவில் எஞ்சியிருக்கும் என்னைத்தாளாது\u003cbr\u003eபுதிய கொலையாயுதங்களை தேடிக்களைத்த உமது வாரீசுகள்\u003cbr\u003eகணினியின் விசைப்பலகை அதிர்ந்திடாத வண்ணம்\u003cbr\u003eமென்மையாக பதிவேற்றத் தொடங்குகின்றனர்\u003cbr\u003eஎன்மீதான அவதூறுகளை.\u003c\/p\u003e\n\u003cp\u003e- ஆதவன் தீட்சண்யா\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47917853016300,"sku":null,"price":150.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/fbe63dc1ae331b264eef156bbeb1e802.jpg?v=1783676364"},{"product_id":"யுத்த-தூஷணம்","title":"யுத்த தூஷணம்","description":"\u003cp\u003eபோரின் கொடுமை, மனித வாழ்வின் மதிப்பு மற்றும் அமைதியின் அவசியத்தை சிந்திக்க வைக்கும் ஆழமான நூல். மனிதநேயம் வெல்ல வேண்டும் என்ற வலுவான செய்தியை எளிமையாக எடுத்துரைக்கிறது.\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47917946110188,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/74a2571aaa6849db797b9fe57ffa4d6e.jpg?v=1783676657"},{"product_id":"போர்-இன்னும்-ஓயவில்லை","title":"போர் இன்னும் ஓயவில்லை","description":"\u003cp\u003e\u003cspan\u003eஷோபா சக்தியிடம், நாவல், சிறுகதைகள், கட்டுரைகள் என்பதையும் தாண்டி உரையாடுவதற்கு நிறையக் கதையாடல்கள் உண்டு.அப்படியான உரையாடல்களின் தொகுப்புதான் போர் இன்னும் ஓயவில்லை.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47918001029356,"sku":null,"price":150.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/b01edf7b1ddcf638d8faefb11dcdb944.jpg?v=1783676876"},{"product_id":"எவராலும்-கற்பனை-செய்ய-முடியாத-நான்","title":"எவராலும் கற்பனை செய்ய முடியாத நான்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஈழம்... பேசிப்பேசி மாளாத நிலம். அதன் கடந்தகாலச் சோகங்களையும் தவறுகளையும் வெளிப் படையாகப் பேசுவதன் மூலமாக எதிர்கால அரசியல் தெளிவுக்கு இட்டு நிரப்புபவையாக சிலரது படைப்புகள் மட்டுமே இருக்கும். அப்படிப்பட்ட நான்கு ஆளுமைகளைப் பேட்டி கண்டு எழுதியிருக்கிறார் ஷோபாசக்தி. கவிஞர் கருணாகரனும் தமிழ்க்கவியும் தமிழ் தேசியம் சார்ந்த ஆதரவு தளத்தில் இயங்கியவர்கள். புலிகள் இயக்கத்துடன் கடந்த காலத்தில் அடையாளம் காணப்பட்டவர்கள். பழ.ரிச்சர்ட், இடதுசாரியாக அறியப்பட்டவர். ஜனதா விமுக்தி பெரமுனாவிலும் இருந்தவர். பெண்ணுரிமை மற்றும் இஸ்லாமியர் நலன் சார்ந்து பேசக்கூடியவர் ஸர்மிளா ஸெய்யித். 'உம்மத்’ நாவலை எழுதியவர் இவர். இவர்கள் அளித்த பேட்டிகள் பற்றிய தனது விமர்சனத்தைப் பதிவு செய்துள்ளார் கவிஞர் நிலாந்தன். இந்த அடிப்படையில் ஈழப் பிரச்னையை ஆறு பேர் பார்வையில் பார்க்க அடித்தளமாக அமைந்துள்ளது இந்தத் தொகுப்பு.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47918073446636,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/0f12a767867c4207fd5b0d7045915ec6.jpg?v=1783677128"},{"product_id":"கருங்குயில்","title":"கருங்குயில்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஷோபாசக்தியின் அய்ந்தாவது சிறுகதைத் தொகுப்பு. 2022 நவம்பர் – டிசம்பர் காலப்பகுதியில் எழுதப்பட்ட இந்தக் கதைகள் இனம், நிறம், சாதியொடுக்குமுறை, புலம் பெயர் வாழ்வு ஆகிய புள்ளிகளில் முகிழ்த்து; 12. மனித மனங்களினதும் இலங்கை ஆ சி நிலத்தினதும் சிக்கலான தருணங்களை ஆ எளிமையும் கூர்மையுமான மொழியில் விரித்துச் சொல்கின்றன. வரலாற்றில் முற்றாகவே மறைக்கப்பட்ட அல்லது திரிபுபட்ட உண்மைகளைப் புனைவுமொழியின் சாத்தியங்களால் கண்டடைகின்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47918137704684,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/4eb26036556f7cbf6cf7230b13d98191.jpg?v=1783677322"},{"product_id":"ஆகிதம்","title":"ஆகிதம்","description":"\u003cp\u003eவாழ்க்கை, மனித உணர்வுகள் மற்றும் சிந்தனைகளை ஆழமாகப் பதிவு செய்யும் சிறந்த படைப்பு. வாசகர்களை சிந்திக்கவும், வாழ்க்கையை புதிய கோணத்தில் பார்க்கவும் தூண்டும் நூல்.\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47918284800236,"sku":null,"price":231.25,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/8b1b024ef45e3fb5046442e74b5eb693.jpg?v=1783677675"},{"product_id":"அங்கிருந்துதான்-வந்திருக்கிறோம்","title":"அங்கிருந்துதான் வந்திருக்கிறோம்","description":"\u003cp\u003e\u003cspan\u003e'இலக்கியத்துக்கு எதிரானவர்' என்று சித்திரிக்கப்பட்ட பெரியாரை நவீனக் கவிதைகளுக்குள் கொண்டு வர முடியுமா என்ற சவாலையேற்று எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பு. நவீனச் சிந்தனைகளை முன்வைத்து தமிழ்ச் சூழலில் பல உடைப்புகளை ஏற்படுத்திய பெரியாரை நவீன கவிதை வடிவத்துக்குள் கொண்டுவராமல் இருந்த இலக்கியத் தீண்டாமைக்கு எதிரான முயற்சி. இந்தியா முழுவதும் பெரியாரின் தேவை உணரப்படும் சூழலில் பெரியார் என்னும் ஆளுமையின் சாரத்தை இறக்கி எழுதப்பட்ட இந்தக் கவிதை நூலைப் படியுங்கள்: பரப்புங்கள்; உங்கள் குழந்தைகளுக்கு, நண்பர்களுக்கு, காதல் துணைக்கு, இல்ல விழாக்களில் பரிசளியுங்கள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47918432551148,"sku":null,"price":84.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/65596605c50724cc2a268a18a7c384bf.jpg?v=1783678208"},{"product_id":"பெரியாரும்-தமிழியல்-ஆய்வறிஞர்களும்","title":"பெரியாரும் தமிழியல் ஆய்வறிஞர்களும்","description":"\u003cp\u003e\u003cspan\u003eபெரியாரையும் திராவிடர் இயக்கத்தையும் தொடர்ந்து அவதூறு செய்துவரும் இந்துத்துவ இலக்கிய மனநோயாளிகளையும் திரிபுவாத தமிழ்த் தேசியர்களையும் தொடர்ந்து அம்பலப்படுத்தி வரும் தோழர் பொதியவெற்பன் இந்நூலில் பெரியார் தமிழறிஞர்களை புறக்கணித்தார். இருட்டடிப்பு செய்தார் என்கிற பொய்மை வாதங்களை முறியடிக்கும் விதமாக தமிழறிஞர்களின் படைப்புகளிலிருந்து திரட்டிய வரலாற்று சான்றாதாரங்களை கொண்டே முறியடிப்பதோடு, பெரியாருக்கும் தமிழறிஞர்களுக்குமான பண்பாட்டுப் போராட்ட உணர்வு ஓர்மைகளிலிருந்தும் உறவுநிலைகளின் செழுமையிலிருந்தும் தனித்தறிந்து தேடியெடுத்த குறிப்புகளைக் கொண்ட உரையாடல் பிரதியாக இக்குறுநூலை நம்முன் வைத்துள்ளார். பெரியாரை ஒரு தீர்க்கமான உரையாசிரியராக அணுகி விவாதிக்கும் இத்தொகுப்பின் கட்டுரை தனித்துவமானது மட்டுமல்ல தர்க்க சுவையானதும் கூட\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47918512832748,"sku":null,"price":56.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/0c46aeabe892614927b0ae9521f1513c.jpg?v=1783678597"},{"product_id":"அண்ணல்-அம்பேத்கர்-அவதூறுகளும்-உண்மைகளும்","title":"அண்ணல் அம்பேத்கர் : அவதூறுகளும் உண்மைகளும்","description":"\u003cp\u003eதுர்வர்ணக் கருத்தியல் வன்மங்களால் படிநிலைப்படுத்தப்பட்ட சாதியினரிடையே சமத்துவத்தை நிலைநிறுத்த தம் வாழ்நாள் முழுவதும் தணலில் வெந்த புரட்சியாளர் அம்பேத்கரை - அவர் மறைவிற்குப் பிறகு - தன்வயப்படுத்த இந்துத்துவம் முயல்கிறது. அம்பேத்கரை அவமதிக்கும் இம்மோசடிக்கு மேலும் வலுசேர்க்க, முற்போக்கு முகமூடியுடன் ரங்கநாயகம்மாக்கள் முளைத்துள்ளனர். வமதிக்கப்படும் ஒவ்வோர் அம்பேத்கர் சிலையும் எப்படிப் பன்மடங்காகிறதோ, அதேபோல அருண் ஷோரி மற்றும் ஜெயமோகன்களின் அவதூறுகளுக்குப் பிறகும் அம்பேத்கரின் எழுத்துக்கள் அறிவாயுதங்களாய் திக்கெட்டும் முகிழ்த்தெழத் தவறவில்லை. அம்பேத்கர் சிலைகளை அவமதிக்கும் வன்கொடுமைகளுக்கும் அவர்தம் எழுத்துகள் மீதான வன்மங்களுக்கும் எவ்வித வேறுபாடுமில்லை. லித் மக்கள் மீதான வன்கொடுமைகளுக்குப் பெயரளவிலாவது தண்டனை உண்டு. ஆனால் வன்மங்களுக்கு (கருத்துச்) சுதந்திரம் உண்டே! வன்மங்களுக்குக் கட்டற்ற சுதந்திரம் இருக்கும் நிலையில் வன்கொடுமைகள் அதிகரிக்காமல் என்ன செய்யும்? விளைவு: இந்தியாவில் ஒவ்வொரு நாளும் தலித் மக்கள் மீது 16 வகையான வன்கொடுமைகள் ஜாதி இந்துக்களால் நிகழ்த்தப்படுகின்றன. ஒருபுறம் வன்கொடுமைகளை எதிர்ப்பவர்களாகவும் மறுபுறம் – அதற்குக் காரணமான – வன்மங்களை ஆதரிப்பவர்களாகவும் செயல்படும் ஜாதி இந்து முற்போக்காளர்களின் வன்முரணை இந்நூல் அம்பலப்படுத்துகிறது. ஒடுக்கப்பட்ட மக்கள், மரிஜ்ஜாப்பிகளையும் ரங்கநாயகிகளையும் தங்கள் புத்தியைக் கொண்டே புறந்தள்ளுவார்கள் என்பதற்கு இந்நூலே சிறந்த சான்றாயுதம். புனித பாண்டியன் சிரியர் ‘தலித் முரசு’\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47918606123244,"sku":null,"price":277.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/391442f22bb323f56f405863fc390fd4.jpg?v=1783678927"},{"product_id":"தோலீஸ்வரர்","title":"தோலீஸ்வரர்","description":"\u003cp\u003eகோவில் என்பது அதிகாரம். வர்த்தகத்தின் மய்யம் தான். பண்பாட்டு ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் ஒரு கோவில் எவ்வாறு உருவாக்கப்படுகிறது. கிராமங்களில் ஆதிக்க சக்திகள் எவ்வாறு அதைக் கைப்பற்றுகிறார்கள். அதற்கு குடும்பத்தின் உட்பகையையும் எப்படிப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். பின்னர் வருவாய் பெருகுவதைக் கண்டு பிராமணியம் எவ்வாறு கோவில்களை தனதாக்கிக் கொள்கிறது என்பதை அருமையாக விவரித்துள்ளார் முருகேசன்.\u003cbr\u003e-மதுக்கூர் இராமலிங்கம்\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47918649573612,"sku":null,"price":56.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/a84077c520e549d04cc44dedb8c0784f.jpg?v=1783679141"},{"product_id":"பெரியார்-அறம்-அரசியல்-அவதூறுகள்","title":"பெரியார்: அறம் அரசியல் அவதூறுகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eகவித்துவத்தையும் தர்க்கத்தையும் முரண் அலகுகளாய் கொள்ளாமல் கூட்டு மனநிலைகளாய் கொண்டுள்ள சுகுணா திவாகர், குடிப்பழக்கம் குறித்தும் இஸ்லாம் குறித்தும் பெரியாரின் சிந்தனைகள் மீது புதிய உரையாடலை நம்முன் வைக்கிறார். இந்துத்துவக் கதாசிரியர் ஜெயமோகனின் பெரியார் நடத்திய வைக்கம் போராட்டம் குறித்த அவதூறுகளை வரலாற்றுத் தரவுகளோடும் சமகால சான்றுகளின் துணையோடும் மிக நேர்த்தியாக எதிர் கொண்டு முறியடித்துள்ளது இத்தொகுப்பின் தனித்துவம் எனக் கொள்ளலாம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47918652752108,"sku":null,"price":159.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/d7cbf2d52d389274496d0f64005b8493.jpg?v=1783679529"},{"product_id":"உள்-ஒதுக்கீடு-தொடரும்-விவாதம்","title":"உள் ஒதுக்கீடு தொடரும் விவாதம்","description":"\u003cp\u003eதிருச்செந்தூரில் பிறந்து ஈரோடு பொருந்துரையில் வசித்துவரும் கவிஞர் ம.மதிவண்ணன் கலை இலக்கிய பெருமன்றத்தின் வழியே இலக்கியத்திற்குள் அறிமுகம் செய்து கொண்டவர். ‘நெரிந்து’ கவிதைத் தொகுப்பின் மூலம் தமிழின் முக்கிய கவிஞர்களில் ஒருவராக அறிமுகமானவர். இவர் எழுதிய கவிதைகள் “நமக்கிடையிலான தொலைவு” வெளிச்சங்களை புதைத்த குழிகள்” “ஏதிலியைக் தொடர்ந்து வரும் நிலா” இவரின் “மெல்ல முகிழ்க்கும் உரையாடல்” என்னும் கட்டுரை தொகுப்பும் “சாதி எதிர் வர்க்கம்” “எல்.சி.குருசாமி சட்டமேலவை உரைகள்” மொழியாக்க நூல்களும் வெளிவந்துள்ளன.\u003c\/p\u003e\n\u003cp\u003eதலித்களுள்ளும் மோசமான ஒடுக்குமுறைக்குள்ளாகி வரும் அருந்ததியர்களின் நிலையிலிருந்து தமிழ்ச்சூழலின் நிதழ்வுகளை கூர்னமயாகப் பார்ப்பவர், விமர்சிப்பவர். அருந்ததியர்கள் ஆலயத்துக்குள் சென்று செருப்பைக் காணிக்கையாக்கி. வழிபட்ட செய்தியை 1202 ஆம் ஆண்டின் திருவண்ணாமலை கோவில் கல்வெட்டு ஒன்று தெரிவிக்கிறது. அத்தகைய அருந்ததியர்கள் இன்று மலமள்ளிகளாகத் துப்புரவுப்பணியாளர்களாகச் சீரழிந்துப்போயிருப்பதுதான் இன்றைய எதார்த்தம். அயோத்திதாசப் பண்டிதரின் பார்வைகளுங்கூட பார்ப்பனீயத் தன்மையுடையதாகவும் அருந்ததியர் உள்ளிட்ட பல தலித் பிரிவுகளை இழிவு செய்வதாகவும் உள்ளன என்கிறார். பெரியாரைத் தலித்துகளின் எதிரியாக சித்தரிக்க முயலுதல் குறித்தும், சமகாலப் பிரதிகள் சிலவற்றின் மீதும் அவர் முன்வைக்கும் பொறிகிளப்பும் சிந்தனைகள் கடும் சர்ச்சைகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தக்கூடியவை.\u003c\/p\u003e\n\u003cp\u003eநாம் மவுனமாக்கப்பட்டுக் கொண்டும், போராட்ட உணர்வூட்டப்பட்டுக் கொண்டும் வருகிறோம். உலகமயம் – பார்ப்பனர் மற்றும் ஆதிக்க சாரி தவிர்க்க இந்தியச் சமூகமனைத்திற்கும் சவாலாகி வருகின்ற தருணத்தில் ‘உள்ஒதுக்கீடு’ என்கிற அடிப்படைக் கோரிக்கை முழக்கத்தை முன்வைத்து அருந்ததியர்கள் எழுத்துகளும், கொடிகளுமாய் களத்தில் நிற்கும் போது, நாம் என்ன செய்யப் போகிறோம் என்கிற ‘பெரியாரிய’க் கேள்விகள் துளைத்தெடுத்துக் கொண்டிருக்கின்றன.\u003c\/p\u003e\n\u003cp\u003eஇத்தனைக்கும் வகுப்புவாரி பிரதிநிதித்துவ கோரிக்கையை காலனியச் சூழலிலேயே முன்வைத்து, வெறும் இடஒதுக்கீடாக சுருங்கிப் போய்விட்ட பெருமைக்குரிய மாநிலம் நமது தமிழ் நாடு, வகுப்பிவாரி கோரிக்கையின் அடிப்படையான சாதிவாரி கணக்கெடுப்பையும் சாத்தியமாக்கியிருந்தால், உள்ஒதுக்கீடு இன்றைக்கு எழுப்ப வேண்டிய கோர்க்கையாய் இருந்திராது. ‘உள்ஒதுக்கீடு: சில பார்வைகள்’ என்கிற நூலின் தொடர்ச்சியில் வெளிவந்துள்ளது. பார்ப்பனர்கள் இடஒதுக்கீடுக்கெதிராக வைத்த மிக மோசமான வாதங்களை இன்று டாக்டர் கிருஷ்ணசாமியும், செ.கு.தமிழரசனும் அருந்ததியர்களுக்கான உள்ஒதுக்கீடுக்கு எதிராக முன்வைத்து வருகின்றனர். இந்த எதிர்ப்பு அரசியலின் அத்தனை வாதமுனைகளையும் தர்க்கப்பூர்வமாகவும், வரலாற்றுப்பூர்வமாகவும் அம்பேத்கரிய – பெரியாரிய அணுகுமுறையில் உடைத்தெறிகிறார் கவிஞர் மதிவண்ணன்.\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47918655733996,"sku":null,"price":84.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/45c42712c3795c417c986ead67b35886.jpg?v=1783679825"}],"url":"https:\/\/centaram.com\/collections\/karuppu-pirathigal.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}