{"title":"கணியன்பாலன்","description":"","products":[{"product_id":"பழந்தமிழர்-வணிகம்","title":"பழந்தமிழர் வணிகம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eகி.மு. 1000க்கு முன்பிருந்து பழந்தமிழகத்தில் நகர அரசுகள் இருந்து வந்துள்ளன. கி.மு. 750 முதல் கி.மு. 50 வரையான சங்ககாலத்தில் அவை வளர்ச்சி பெற்ற நகர அரசுகளாக உருவாகியிருந்தன. இந்த நகர அரசுகள்தான் பழந்தமிழகத்தின் வளர்ச்சிக்கும் சிறப்புக்கும் காரணமாக இருந்துள்ளன. உலக வரலாற்றில் பேரரசுகளைவிட நகர அரசுகள் சிறந்தனவாக இருந்துள்ளன என்பதை, உறுதிசெய்யும் வகையில் பழந்தமிழக நகர அரசுகள் வட இந்தியாவின் மகதப் பேரரசைவிட, பலவகையிலும் வளர்ச்சி பெற்றனவாக இருந்தன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47785053257964,"sku":null,"price":343.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PALANTHAMIL.jpg?v=1782381245"},{"product_id":"பழம்பெரும்-தமிழ்ச்-சமூகம்","title":"பழம்பெரும் தமிழ்ச் சமூகம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eகீழடி அகழாய்வுக்குப் பின். சங்ககாலம், அதன் ஆட்சியாளர்கள், புலவர்கள் ஆகியவர்களின் காலம் குறித்த ஒரு தெளிவு தேவைப்படுகிறது. கீழடி அகழாய்வுக்கு முன்பே சங்க இலக்கியம். கல்வெட்டுகள், நாணயங்கள். அகழாய்வுத் தரவுகள். வெளிநாட்டு உள்நாட்டு அறிஞர்களின் குறிப்புகள் ஆகிய பல்வேறு தரவுகளைக் கொண்டு, சங்க காலம் என்பது கி.மு. 750 முதல் கி.மு. 50 வரை எனவும் சங்கம் மருவிய காலம் என்பது கி.மு. 50 முதல் கி.பி. 250 வரை எனவும் வரையறை செய்ததோடு அக்காலகட்ட வேந்தர்களின் ஆட்சியாண்டுகளையும் கணித்து அக்காலம் குறித்த ஒரு தெளிவை இந்நூல் வழங்கியுள்ளது. பல்வேறு சான்றுகளையும் புதிய ஆய்வுமுறைகளையும் கொண்டு இதுவரை கி.பி. 2ஆம் நூற்றாண்டு எனக் கருதப்பட்ட சேரன் செங்குட்டுவனின் ஆட்சிக் காலத்தை 400 ஆண்டுகளுக்கு முன் நகர்த்தி, அவன் காலம் கி.மு.275 கி.மு.220 வரை என இந்நூல் நிறுவியுள்ளது. சங்ககாலம் நகர அரசுகளின் காலம் எனவும் சங்கம் மருவிய காலம் பேரரசுகளின் காலம் எனவும் இந்நூல் வரையறை செய்துள்ளது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47785186787564,"sku":null,"price":352.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PALAMPERUM.jpg?v=1782384038"},{"product_id":"சாதியின்-தோற்றம்","title":"சாதியின் தோற்றம்","description":"\u003cp\u003eகி.பி. 1400 வரை தமிழ் நாட்டில் சாதியில்லை\u003c\/p\u003e\n\u003cp\u003eவட இந்தியாவில் கி.மு. 8ஆம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் நாகரிகமும் வகுப்புகளும் தோன்றின. கி.மு. 2ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தான் வைதீக பிராமணியம், சாதியம் போன்றவற்றிற்கான கருத்தியல்கள் தோன்றத் தொடங்கின.\u003c\/p\u003e\n\u003cp\u003eகி.பி. முதல் நூற்றாண்டுக்குப் பின்னர் தான் வட இந்தியாவில் சாதியம் தோன்றியது. குப்தர்காலத்தில் (கி.பி. 4ஆம் 5ஆம் நூற்றாண்டு) சாதியம் அரசின் சட்ட அங்கீகாரத்தைப் பெற்று சமூகம் முழுவதும் நிலைநிறுத்தப்பட்டது.\u003c\/p\u003e\n\u003cp\u003eசிலர் சாதி இயற்கையாக உருவாகியது எனக் கருதுகின்றனர். அது உண்மையல்ல. ஒரு சமூகக் குழுவின் மேல்நிலையைப் பாதுகாப்பதற்காகத் திட்டமிட்டு செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒன்றுதான் சாதியம்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47829388787948,"sku":null,"price":441.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SATHIYINTHORCHAM.jpg?v=1782454427"},{"product_id":"கேரள-வரலாறு","title":"கேரள வரலாறு","description":"\u003cp\u003e\u003cspan\u003eபண்டைய காலம் முதல் சுமார் கி.பி. 500 வரை பழந்தமிழகத்தின் ஒரு பகுதியாக இருந்து வந்த கேரளம், கி.பி. 500 வாக்கிலும் அதன் பின்னரும் கேரளப் பகுதியில் நடைபெற்ற பிராமணக் குடியேற்றங்களின் காரணமாக பழந்தமிழகத்திலிருந்து பிரிந்து ஒரு தனிச் சமூகமாக உருவாகத் தொடங்கியது. கேரளா, ஒரு தனித்தன்மைமிக்க, புதிய சமூகமாக உருவான வரலாறும், அதன் பண்டைய சங்ககாலகட்ட வரலாறும், இன்றைய கி.பி. 1500 வரையான வரலாறும், பண்டைய சங்க இலக்கியங்கள், பண்டைய கல்வெட்டுகள், நாணயங்கள், அகழாய்வுத்தரவுகள், கேரளா குறித்த உள்நாட்டு, வெளிநாட்டு அறிஞர்களின் நூல்கள் ஆகிய பல்வேறு தரவுகளைக்கொண்டு ஆய்வுநோக்கில் கட்டமைக்கப்பட்டுள்ளது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47830269198572,"sku":null,"price":517.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KERALAVARALARU.jpg?v=1782465640"}],"url":"https:\/\/centaram.com\/collections\/kaniyanpaalan.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}