{"title":"கே.ஆர்.மீரா","description":"","products":[{"product_id":"அந்த-மரத்தையும்-மறந்தேன்-மறந்தேன்-நான்","title":"அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஅந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான்’ நாவலைப் படித்து முடித்துப் புத்தகத்தைக் கீழே வைத்த போது இந்தக் கதாசிரியையின் மற்ற படைப்புகளை மீண்டும் படிக்க வேண்டும் என்ற உள் தூண்டுதல் எனக்குள் ஏற்பட்டது. ஒரு கதையின் வாசிப்பு அப்படி ஒரு விருப்பத்தை நம்மிடம் உண்டு பண்ணும் போது, அந்தக் கதைப் படைப்பாளியின் மற்ற படைப்புகளை நோக்கித் திரும்பிச் செல்லத் தூண்டும்போது அது எதனைக் காட்டுகிறது? அந்தப் படைப்பாளி நம்மை வென்று விட்டார் என்பதைத் தான். ஒரு சிறந்த இலக்கியப் படைப்பின் முக்கிய நோக்கம், வாசகர்களை ரசிக்கும்படி செய்வதோ, அவர்களுக்கு அழகியல் அனுபவத்தைப் பகிர்ந்து கொடுப்பதோ மட்டுமல்ல – ஒரு நல்ல படைப்பு வாசகர்களுக்குக் காயத்தை ஏற்படுத்த வேண்டும். அவர்களுக்கு வெட்கத்தை உண்டாக்க வேண்டும். அவர்களை வேதனைப்படுத்த வேண்டும். அவர்களின் உறக்கத்தைக் கெடுக்க வேண்டும். இந்த நாவல் அந்த அறத்தை அழகாகச் செயல்படுத்துகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47707097301228,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ANTHAMARATHAUM.jpg?v=1780652790"},{"product_id":"தேவதையின்-மச்சங்கள்-கருநீலம்","title":"தேவதையின் மச்சங்கள் கருநீலம்","description":"\u003cp\u003e\u003cspan\u003e“மிகவும் விசித்திரமான ஒரு காதல் அனுபவத்தைத்தான் நான் விவரிக்கப்போகிறேன். ஒரு விசயத்தை முன்பே சொல்லிவிடுகிறேன். சதி சாவித்திரிகளும் கண்ணியமான உத்தமபுருஷர்களும் இதை வாசிக்காதீர்கள். வாசித்தால் ஏற்படக்கூடிய ஒழுக்க மீறல்களுக்கு நான் பொறுப்பல்ல.” என்று அதிர்ச்சியூட்டும் அறிவிப்புடன் தொடங்குகிறது ‘கருநீலம்’. எல்லாவகைப்பட்ட ஒழுக்கங்களையும் சுமந்துகொண்டிருப்பவர்களுக்கு மத்தியில் அவை எதுவும் தன்னிடம் இல்லாமல் போன நிலையிலும் தனக்குள் ஒரு அழகான வாழ்க்கையை எழுதிக்கொள்ளத் துடிக்கும் பெண்ணின் மாயப் புன்னகையையும் அவல வாழ்க்கையின் உச்சத்தில் நிர்கதியாகும் இரண்டு பிஞ்சுகளின் கண்ணீரையும் வாசகர் மனதில் மாறாத் துயரமாய் எழுதிச்செல்கிறது ‘தேவதையின் மச்சங்கள்’. கே.ஆர். மீராவின் எழுத்தில் – மொழியில் கலைநேர்த்தியோடு இரு புனைவுகளும் உயிர்பெறுகின்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47759534457068,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/DEVATHAI.jpg?v=1781760689"},{"product_id":"யூதாஸின்-நற்செய்தி","title":"யூதாஸின் நற்செய்தி","description":"\u003cp\u003e\u003cspan\u003eவரலாற்றை, அதைக் கட்டமைத்த ஆதிக்கத் தரப்பிலிருந்தும் பாதிக்கப்பட்டவர்களின் \u003c\/span\u003e\u003cspan\u003eதரப்பிலிருந்தும் ஒருசேர எழுதிப்பார்க்கும் ஒரு விளிம்புநிலை வரலாற்று எழுத்தியலை இந்த\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eநாவல் மிகச்செறிவாக வெளிப்படுத்துகின்றது. இரண்டு எல்லைகளுக்கு இடையே உள்ள \u003c\/span\u003e\u003cspan\u003eஇடைவெளியை ஒரு பெண்ணின் வாழ்க்கையைக் கொண்டு நிறைத்திருக்கும் நுட்பம் \u003c\/span\u003e\u003cspan\u003eஅலாதியானது. அவள் சிறுமியாக இருந்த காலத்திலிருந்து தனது முப்பத்தாறாம் வயதுவரை\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eகரைகாண முடியாத அந்த வரலாற்று எச்சங்களின் பேரலைகளுக்குள் சிக்கி மூச்சு முட்ட அலைந்து \u003c\/span\u003e\u003cspan\u003eதிரிகிறாள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47759613591788,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/UTHAVIN.jpg?v=1781766077"},{"product_id":"மீராசாது","title":"மீராசாது","description":"\u003cp\u003e\u003cspan\u003eஅறிவற்றவள், நுகர்வுப்பண்டம், தானாக எதையும் செய்யும் தகுதியற்றவள், சார்பு உயிரி எனப் பலவாறு ஒடுக்கிய ஆணியப் பொதுப்புத்திக்குள் புகுந்து அதன் மேட்டிமைத்தனங்களை உடைத்துச் சுக்குநூறாக்கி நடுத்தெருவில் எறிந்துவிடும் அறிவிலும் செயலிலும் ஆற்றல் மிக்க பெண்களைப் படைத்துக்காட்டும் மீராவின் எழுத்து, பழமைவாதக் கருத்தியல்களுக்குள் ஊறிக்கிடந்து அவற்றின் உடல்களாக ஆகிப்போனவர்களுக்குப் பேரதிர்ச்சியைத் தராமல் இருக்காது. \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47759666708716,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MEERASATHU.jpg?v=1781767845"},{"product_id":"கபர்","title":"கபர்","description":"\u003cp\u003e\u003cspan\u003eகே. ஆர். மீராவின் படைப்பாளுமையில் கனன்றெரிவது பெண்மைதான் என்ற உண்மையை கபர் நாவலும் உறுதிப்படுத்துகின்றது. அதன் தீக்கொழுந்து சுயமரியாதையினுடையது. அந்தச் சுயமரியாதை மனிதத்தன்மையின் ஒளிர்வேதான் என்ற புரிதலுக்குக் கபர் வாசகரைக் கொண்டு சேர்க்கிறது. - பேரா. எம்.கே. ஸானு\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47759724118252,"sku":null,"price":169.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KABAR.jpg?v=1781769141"},{"product_id":"சூரியனை-அணிந்த-ஒரு-பெண்","title":"சூரியனை அணிந்த ஒரு பெண்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஆண் பிரக்ஞையாலும் ஆணதிகாரத்தாலும் உருவாக்கப்பட்டுக் கட்டுமானம் செய்யப்பட்டு எழுகின்ற மனித வரலாற்றின் அஸ்திவாரக் கற்களை அசைக்க எந்தப் பெண்ணால் முடியும்? பைபிளில், ஒரு \u003c\/span\u003e\u003cspan\u003eஜெஸபெல்\u003c\/span\u003e\u003cspan\u003e அதற்கு முயற்சி செய்தாள். – பின்னர் யார், என்ன? இதோ இங்கே மறுபடியும் வருகிறாள், ஒரு \u003c\/span\u003e\u003cspan\u003eஜெஸபெல்\u003c\/span\u003e\u003cspan\u003e – சூரியனை அணிந்த ஒரு பெண். அவள் ஆண் உலகின் சட்டதிட்டங்களையும் \u003c\/span\u003e\u003cspan\u003eசிந்தனைகளை\u003cwbr\u003eயும் அடிமுதல் முடிவரை கேள்வி கேட்கிறாள் – தன் சொந்த வாழ்க்கையை அதன் முன்னால் \u003c\/wbr\u003e\u003c\/span\u003e\u003cspan\u003eதூக்கியெறிந்துகொண்டு\u003c\/span\u003e\u003cspan\u003e. \u003c\/span\u003e\u003cspan\u003eஅப்போது\u003c\/span\u003e\u003cspan\u003e உலகத்தின் அஸ்திவாரக் கற்கள் அசையத்\u003c\/span\u003e\u003cspan class=\"gmail_default\"\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eதொடங்குகின்றன. மற்றொரு உலகத்தைச் \u003c\/span\u003e\u003cspan\u003eசாத்தியமாக்குவதற்கான\u003c\/span\u003e\u003cspan\u003e அந்த நகர்வுகளில் நிறைய பெண்களும் பங்கேற்கின்றனர்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47760089874668,"sku":null,"price":611.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SOOREYANAI.jpg?v=1781774837"},{"product_id":"சூர்ப்பனகை","title":"சூர்ப்பனகை","description":"\u003cp\u003e\u003cspan\u003eசூர்ப்பனகையில் நம் சமூகத்தின் பல்வகையான பெண்கள் வந்து வந்து போகிறார்கள். அவர்களின் சந்தோசக் கதவுகள் அடைக்கப்படுவதால் மனச்சோர்வில் மூழ்கிப் போகிறார்கள். அன்பின் ஈரம் கசியும் ஒரு வார்த்தைக்காக ஏங்குபவர்களாகவும் செல்லும் இடங்களிலெல்லாம் புறக்கணிக்கபடுவேராகவும் இருக்கிறார்கள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47865755336940,"sku":null,"price":94.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SOORPANAKAI.jpg?v=1782803706"}],"url":"https:\/\/centaram.com\/collections\/k-r-meera.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}