{"title":"இந்து தமிழ் திசை பதிப்பகம்","description":"","products":[{"product_id":"மூலிகையே-மருந்து","title":"மூலிகையே மருந்து","description":"\u003cp\u003e\u003cspan\u003eநம் வீடுகளிலும் புல்வெளிப்பகுதிகளிலும் மிகச் சாதாரணமாக வளரக்கூடிய கீழாநெல்லி மஞ்சள் காமாலைக்கான கைகண்ட மருந்து, அதேபோல நம் அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் பல நறுமணப் பொருட்கள் மருத்துவ குணம் கொண்டவை. இவை அனைத்துமே தாவரங்களை அடிப்படையாகக் கொண்டவை. இதுபோன்ற 50 மூலிகைகளின் மருத்துவ குணங்களையும் பயன்களையும் இந்த நூல் எடுத்துரைக்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47635954860268,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/8be44e74bf5071a9f6b9d8c5b90cfc02_22ca6186-adae-456c-867b-f3b98e145194.jpg?v=1778913303"},{"product_id":"தெற்கிலிருந்து-ஒரு-சூரியன்","title":"தெற்கிலிருந்து ஒரு சூரியன்","description":"\u003cp\u003e\u003cspan\u003eதிராவிட இயக்கத்தின் நூற்றாண்டு, அடுத்து திராவிடக் கட்சிகள் ஆட்சியின் அரை நூற்றாண்டு, தொடர்ந்து தமிழ்நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவர் மு.கருணாநிதியின் சட்ட மன்றப் பணியின் அறுபதாண்டு... இந்த மூன்று தருணங்களும் தமிழ்நாட்டைத் தாண்டியும் இந்தியா முழுமைக்கும் முக்கியமானவை. ஆனால், இந்தியாவின் தேசிய ஊடகங்கள் வழக்கம்போல இதற்கும் பெரிய கவனம் அளிக்காமலேயே கடந்துபோயின. ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் ஆசிரியர் குழுவால் அப்படிக் கடந்து போக முடியவில்லை. எல்லா நிறை - குறைகளைக் கடந்தும், இந்த மண்ணில் மகத்தான ஒரு பணியை, குறிப்பாக சமூக நீதித் தளத்தில் திராவிட இயக்கம் நிறைவேற்றியிருக்கிறது. \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47635963707628,"sku":null,"price":282.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/79cc3d1b505e15dfca920590a24107c8.jpg?v=1778913760"},{"product_id":"விண்ணளந்த-சிறகு","title":"விண்ணளந்த சிறகு","description":"\u003cp\u003e\u003cspan\u003eசுற்றுச்சூழல் சார்ந்த அக்கறை என்பது தமிழ்ச் சூழலில் கடந்த 10-15 ஆண்டுகளாகத்தான் கவனம் பெற்றுவருகிறது. நெடிய பாரம்பரியமும் சூழலியல் பின்புலமும் கொண்ட தமிழ்ச் சூழலில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சமீபகாலமாக மட்டுமே கவனம் பெற்றிருப்பது சற்றே முரணானது. சுற்றுச்சூழல் சார்ந்த அக்கறை சமீப காலத்தில் பரவலாவதில், சூழலியல் எழுத்துக்கு முக்கியப் பங்கு உண்டு.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47635971997932,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/db3dbeee550f4f0115165f1a34b2d642.jpg?v=1778914525"},{"product_id":"சபாஷ்-சாணக்கியா","title":"சபாஷ் சாணக்கியா","description":"\u003cp\u003e\u003cspan\u003eபுத்தாண்டில் குறிப்பாக பொங்கல் பண்டிகையோடு அர்த்தமுள்ள விஷயங்கள் அடங்கிய ‘சபாஷ் சாணக்யா’ புத்தகமும் உங்கள் இல்லங்களில் தவழட்டும். வணிக வீதியின் ஒற்றை வரி முழக்கம் ‘அறிவே செல்வம்’.! அதை நூல் நூலும் நிரூபித்துள்ளது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47635973832940,"sku":null,"price":159.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/bbd711495bb20c86f438929b41f29662.jpg?v=1778914895"},{"product_id":"பன்முக-அறிவுத்-திறன்கள்","title":"பன்முக அறிவுத் திறன்கள்","description":"\u003cp align=\"justify\"\u003e\u003cspan\u003eஒரு நல்ல வேலை, ஆறு இலக்கச் சம்பளம், உயர் வாழ்க்கைத் தரம் இவற்றைப் பெற்றுத்தருவதே கல்வி என்று இந்தியா போன்ற நாடுகளில் கருதப்படுகிறது. பொருளாதாரத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இயங்கும் கல்வி அமைப்பில் வாசித்தல், மனப்பாடம் செய்து எழுதுதல், கணிதத் திறன் போன்றவை மட்டுமே சிறப்புத் திறன்களாகக் கருதப்படுவதிலும் வியப்பில்லை.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp align=\"justify\"\u003e \u003c\/p\u003e\n\u003cp align=\"justify\"\u003e\u003cspan\u003eஇவற்றுக்கு அப்பாற்பட்ட பன்முக அறிவுத் திறன்கள் இருக்கின்றன என்பதை  உளவியலாளர் ஹாவர்ட் கார்டனர் உலகத்துக்கு உணர்த்தினார். அவரது பன்முக அறிவுத் திறன்கள் கோட்பாடு உலகெங்கும் பள்ளி, கல்லூரிகளில் உள்ள கற்பிக்கும் முறைகளைக் கடந்த முப்பது ஆண்டுகளில் மாற்றி அமைத்துள்ளது. ஹாவர்ட் கார்டனரின் பன்முக அறிவுத் திறன்களை இந்திய, தமிழகச் சூழலில் எளிமையாகவும் ஆழமாகவும் அறிமுகம் செய்யும் நூல் இது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47635977601260,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/994ea6921d1f01ec040ed9f8d836a5da.jpg?v=1778915360"},{"product_id":"கேள்வி-நேரம்","title":"கேள்வி நேரம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eமத்திய அரசுப் பணித் தேர்வுகள், மாநில அரசுப் பணித் தேர்வுகள், இதர போட்டித் தேர்வுகளிலும் பொது அறிவுக் கேள்வி-பதில்கள் முக்கிய அம்சமாக இடம்பெற்றுவருகின்றன. இந்த இரு தரப்பினரைத் தாண்டி பொது அறிவுத் தாகம் கொண்டவர்களும் தமிழகத்தில் அதிகம். இவர்கள் அனைவருடைய தேவைகளையும் மனதில்கொண்டு இந்தக் கேள்வி-பதில் நூல் தொகுக்கப்பட்டுள்ளது. பல்வேறு அம்சங்கள் தேடித்தேடிச் சேர்க்கப்பட்டுள்ளன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47635980353772,"sku":null,"price":103.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/304f6642522038963329cf3328dcde9e.jpg?v=1778915716"},{"product_id":"ஆசியாவின்-பொறியியல்-அதிசயம்","title":"ஆசியாவின் பொறியியல் அதிசயம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஅட்சய பாத்திரமான அணைகள்! பல்வேறு அணைக்கட்டுத் திட்டங்களை உருவாக்கியிருந்தாலும், கொங்கு மண்ணை செழிக்கச் செய்யும் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தை `ஆசியாவின் பொறியியல் அதிசயம்' என்று போற்றுகின்றனர். தற்போதுள்ள நவீனத் தொழில்நுட்பங்கள், பிரம்மாண்ட இயந்திரங்கள் என எதுவும் இல்லாத அக்காலகட்டத்தில், பொறியியல் திறமை மற்றும் மனித உழைப்பைப் பிரதானமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதுதான் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47636005454060,"sku":null,"price":94.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/e28c948e665b0cba32d8462fa9195ce3.jpg?v=1778917841"},{"product_id":"உடல்-எனும்-இயந்திரம்","title":"உடல் எனும் இயந்திரம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇந்து தமிழ்’ நாளிதழின் இணைப்பிதழான மாயாபஜாரில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு இது. மனித உடல் குறித்த மருத்துவ அறிவியலை எளிமையான மொழியில் எடுத்துரைக்கிறது. பள்ளிப் பாடங்களில் கற்றுக்கொள்ளும் அடிப்படைகளை மேலும் சில தப்படிகள் உயர்த்தும் நூல்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47638672474348,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/c9c82ce25a8c92f57e5a4446bf833ec2.jpg?v=1779080237"},{"product_id":"விழுவது-எழுவதற்கே","title":"விழுவது எழுவதற்கே!","description":"\u003cp\u003e\u003cspan\u003eபெரிய நிறுவனத்தில் இத்தகைய பிரச்சினைகள் தோன்றியதா என்ற ஆச்சர்யம் மேலோங்கியதோடு, அத்தகைய சூழலை அந்நிறுவன அதிபர்கள் கையாண்டு மீண்ட விதம் நிச்சயம் பிரமிப்பாகத்தான் இருந்தது. 7 இந்திய நிறுவனங்கள், 6 அமெரிக்க நிறுவனங்கள் மட்டுமின்றி தனி நபர்களின் வீழ்ச்சியையும் அதிலிருந்து அவர்கள் மீண்ட விதத்தையும் சற்றும் சுவாரஸ்யம் குறையாமல் அதேசமயம் மிகைப்படுத்தாமல் நூலாசிரியர் எஸ்.எல்.வி.மூர்த்தி எழுதியுள்ளார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47638678569196,"sku":null,"price":164.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/8b73d9449ea12fc3a557bbd68674a2be.jpg?v=1779081108"},{"product_id":"யானைகளின்-வருகை","title":"யானைகளின் வருகை","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇயற்கையோடு இணைந்து வாழ்ந்த மனிதன் தன் பேராசையால் பிற உயிர்கள் வாழும் இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டதன் விளைவாக காடுகள் அழிக்கப்பட்டன. இதனால் காட்டில் வாழும் உயிர்கள் நேராக மனிதர்கள் இருப்பிடம் தேடி வர ஆரம்பித்தன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47638696263916,"sku":null,"price":169.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ec192985821dcf47cd73633ba4ba24f4.jpg?v=1779083276"},{"product_id":"சின்ன-மனசுக்குள்-சீனப்பெருஞ்சுவர்","title":"சின்ன மனசுக்குள் சீனப்பெருஞ்சுவர்","description":"\u003cp\u003e\u003cspan\u003eசோம்பல் ஒரு மனிதனை மட்டுமல்லாமல், அவன் சார்ந்த சூழலையும் சாய்க்கும் பேராற்றல் கொண்டது என்பதையும், அதைவெல்ல தன்னைத் தயார்படுத்திக்கொள்ளும் முனைப்புகளைப் பற்றியும் ஆணித்தரமாகச் சொல்கிறது இந்நூல்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47638719987948,"sku":null,"price":178.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/529ab62adf5aa082c25b6308071c7f52.jpg?v=1779088736"},{"product_id":"இனிப்பு-தேசம்","title":"இனிப்பு தேசம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஅலோபதி மருத்துவமுறை மட்டுமல்லாமல், மற்ற மருத்துவ முறைகளால் நீரிழிவு நோயை எந்த அளவுக்கு சிறப்பாகக் கையாள முடியும் அல்லது முடியாது என்ற கேள்விக்கும் இந்த நூல் பதில் தருகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47638742565100,"sku":null,"price":103.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/053f5e6af966b8ced24cb1689ce2a838_3cc51d95-92fe-4b58-9bda-06f5785fadc0.jpg?v=1779085945"},{"product_id":"காயமே-இது-மெய்யடா","title":"காயமே இது மெய்யடா","description":"\u003cp\u003e\u003cspan\u003eபிரபல உடல்நல எழுத்தாளரான போப்பு உடலைச் சீர்படுத்தும் வழிகளை இந்த நூலில் முன்வைத்திருக்கிறார். நம் மரபில் உள்ள நல்லனவற்றை திரும்ப நமக்கு ஞாபகமூட்டியிருக்கிறார். நம் உடலின் முதன்மை உள் உறுப்புகளான கல்லீரல், இதயம், மண்ணீரல், நுரையீரல், சிறுநீரகம் ஆகியனவற்றின் செயல்பாடுகள், அவற்றை புரிந்துகொள்வது எப்படி, மேம்பட்ட வகையில் பராமரிப்பது எப்படி என்று இந்தப் புத்தகம் விரிவாக விளக்கிச் சொல்கிறது. காயம் என்பது ஒன்றுமற்றதல்ல, ஊனும் உயிரும் சேர்ந்த உடம்பு. அதை முறையாக வளர்க்கவும் பராமரிக்கவும் தேவைப்படும் வழிகள் இந்த நூலில் கூறப்பட்டுள்ளன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47638746333420,"sku":null,"price":150.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/f9efef0b7493d299151c7ae324ba5597.jpg?v=1779086656"},{"product_id":"நேர்முகம்-கவனம்","title":"நேர்முகம் கவனம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஎழுத்துத் தேர்வில் உயரிய மதிப்பெண் குவிக்கும் பலர் சறுக்கி விழுவது நேர்முகத் தேர்வில்தான். இந்த சோகம், வழக்கமான அலுவலகப் பணிவாய்ப்பு முதல் குடிமைப் பணிவரை பொருந்தும். ஏனென்றால், நேர்முகத் தேர்வை அணுகுவதற்கான பாடத்திட்டம் எந்த பல்கலைக்கழகத்திலும் கிடையாது. இதற்கென குறுக்குவழியோ சூத்திரங்களோ கிடையாது. ஆனால், நேர்முகத் தேர்வில் வெற்றி பெற பல நுட்பங்கள் உள்ளன. அதன் அடிப்படையில்தான் தேர்வாளர்கள் நேர்முகத் தேர்வை நடத்தித் தங்களுக்கு தேவையான ஊழியர்களைத் தேர்வு செய்கிறார்கள். இத்தகைய நுட்பங்களை நுணுக்கமாக விளக்கும் புத்தகம்தான், ‘நேர்முகம்-கவனம்’.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47638860497132,"sku":null,"price":131.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/b952280d037086b7a471415149206692.jpg?v=1779093807"},{"product_id":"காற்றில்-கரையாத-நினைவுகள்","title":"காற்றில் கரையாத நினைவுகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇறையன்பு அவர்களின் எழுத்துக்கென்று பெரும் வாசகப் பெருவெளி இருப்பதை நாங்கள் அறிவோம். அந்தப் பெருவெளியின் தனிப் பாதையில் அவரது நினைவுகள் வாச்கர்களை நோக்கி இதோ - பறந்து வருகின்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47638882746604,"sku":null,"price":150.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/9f286a0fd509f0a5fe4e2c8858b585d3.jpg?v=1779094034"},{"product_id":"புதிய-கல்விக்-கொள்கை","title":"புதிய கல்விக் கொள்கை","description":"\u003cp\u003e\u003cspan\u003eபுதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையின் அத்தனை பக்கங்களையும் ஒவ்வொருவரும் படித்தறிய இயலுமா என்றால், அதுவும் கேள்விக்குறிதான். அப்படிப்பட்ட கேள்விக்குறிக்கான பதிலை, தனது கருத்து ஏரைக் கொண்டு வாசிப்போரின் சிந்தனையில் ஆழ உழுது விதைக்கிறார். கூடவே, ஒவ்வொரு பெற்றோரும் கடனே என்று இருந்துவிடாமல் தங்களின் பொறுப்பையும் உணர வைக்கிறார். எதிர்காலத்தில் உறுதிமிக்க தேக்குமரமாக வளரத்தான் போகிறது என்பதற்காக, சின்னஞ்சிறிய கன்றாக இருக்கும்போது அதன் மீது நாம் சுமைகளை வைப்போமா? கனமான ஆணிகளை அறைவோமா? அப்படித்தான் இருக்கிறது இந்த கல்விக் கொள்கை என்று தனது கருத்துரையை தெளிவாக்கி இருக்கிறார்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47639089807596,"sku":null,"price":84.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/986c3013aa27c512a57ec78070ba46f6.jpg?v=1779099427"},{"product_id":"இந்தியா-என்றால்-என்ன","title":"இந்தியா என்றால் என்ன?","description":"\u003cp\u003e\u003cspan\u003eடால்ஸ்டாய், காந்தி, தாகூர், ஏங்கெல்ஸ், அக்பர், ஐன்ஸ்டைன், அம்பேத்கர், அமிர் குஸ்ரோ, சாக்ரடீஸ், புரோமிதியஸ், ரொமிலா தாப்பர் என்று இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள 25 கட்டுரைகள் உங்களுக்கு விருந்து படைக்கக் காத்திருக்கின்றன. ஒவ்வொரு கட்டுரையையும் மாறுபட்ட கோணத்தில், எளிமையான மொழி நடையில், அழகான சொற்களைக் கோத்து தந்திருப்பதோடு... ஆங்காங்கே நமக்குள் மென்முறுவல் பூக்கும் வகையில் நகைச்சுவையும் தூவித் தந்திருக்கிறார் மருதன்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47639098032364,"sku":null,"price":84.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/a236bf09949c5da5f3f0ce8121775eec.jpg?v=1779099841"},{"product_id":"புண்ணியம்-தேடுவோமே","title":"புண்ணியம் தேடுவோமே..!","description":"\u003cp\u003e\u003cspan\u003eவழிபாட்டுத் தலங்களைப் பற்றி விரிவாக ‘புண்ணியம் தேடுவோமே..!’ என்ற இந்த நூலில் விளக்கியுள்ளார் முன்னூர் ரமேஷ்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47639111270636,"sku":null,"price":150.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/11369d74950184432558608ea53dd0dc.jpg?v=1779100396"},{"product_id":"புண்ணியம்-தேடுவோமே-பாகம்-ii","title":"புண்ணியம் தேடுவோமே..! (பாகம் II)","description":"\u003cp\u003e\u003cspan\u003eகோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்பதும் ‘குரு பார்க்க கோடி நன்மை’ என்பதும் பெரியோர் வாக்கு. இயற்கையைக் கண்டு அஞ்சிய மனிதன் இயற்கையை வழிபடத் தொடங்கினான். சூரியன், சந்திரன், சிறுதெய்வம், பெண் தெய்வம், மழை, மரம், நீர், விநோத உருவம், பெருந்தெய்வம் என்று அனைத்தையும் வழிபடத் தொடங்கினான். வைணவம், சைவம் முதலிய சமயங்கள் தோன்றிய காலத்தே தெய்வங்களுக்கு கோயில் அமைத்து வழிபட்டனர் நமது முன்னோர்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47639193288940,"sku":null,"price":216.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/II.jpg?v=1779101702"},{"product_id":"மாணவர்களுக்கு-சூரிய-நமஸ்காரம்-ஏன்-எப்படி","title":"மாணவர்களுக்கு சூரிய நமஸ்காரம் ஏன்? எப்படி?","description":"\u003cp\u003e\u003cspan\u003eயோகா, சூரிய நமஸ்காரம் பற்றிய அறிமுகம், இதுகுறித்த நிபுணர்களின் அனுபவங்கள், வெவ்வேறு பள்ளிகள் வழங்கும் பயிற்சி முறைகள், சுவாசப் பயிற்சிகள், அவற்றால் கிடைக்கும் பயன்கள், பொதுவாக ஏற்படக்கூடிய சந்தேகங்களுக்கு ‘கேள்வி - பதில்’ வடிவில் விளக்கங்கள் என மிகத் தெளிவாக, எளிமையான கூறியிருக்கிறார். இன்றைய மாணவர்களுக்கு யோகா, சூரிய நமஸ்காரம் எந்த வகையில் ஏற்றதாக இருக்கும் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47639235592428,"sku":null,"price":94.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/3539a54648134b930ac61b40b4b75098.jpg?v=1779103414"}],"url":"https:\/\/centaram.com\/collections\/hindu-tamil-thisai-pathippagam.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}