{"title":"காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ்","description":"","products":[{"product_id":"தனிமையின்-நூறு-ஆண்டுகள்","title":"தனிமையின் நூறு ஆண்டுகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஹோசே அர்க்காதியோ புயேந்தியா ஒரு புதிய உலகை நிர்மாணிக்கிறார். சதுப்பு நிலப் பகுதியில் உருவாகும் மகோந்தா கிராமம் நூற்றாண்டுகளினூடே வளர்ந்து நகரமாக மாறுகிறது. புயேந்தியாவின் வம்சத்தைச் சேர்ந்த ஏழு தலைமுறைகள் அந்த நகரத்தின் வளர்ச்சிக்கும் இருப்புக்கும் அழிவுக்கும் மையமாகவும் விரிவாகவும் அமைகின்றன. உறக்கமின்மைக் கொள்ளை நோயும் உள்நாட்டுப் போர்களும் பழிவாங்கல்களும் அந்த நகரத்தின் வரலாற்றை உருவாக்குகின்றன. உலகின் மிகப் பெரிய வைரம் என்று ஹோசே அர்க்காதியோ புயேந்தியாவால் வர்ணிக்கப்படும் பனிக்கட்டியைப்போல மகோந்தா நகரமும் காலத்தின் வெம்மையில் கரைந்து மறைகிறது. ஒரு நகரத்தின் நூறு ஆண்டுத் தனிமையையும் ஒரு மக்கள் கூட்டத்தின் தனிமையான நூறு ஆண்டுகளையும் சொல்லுகிறது இந்த நாவல். ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்கு முன்பு எழுதப்பட்ட நாவல். இன்றும் புதிய வாசகர்களை ஈர்த்துக்கொண்டிருக்கும் காலத்தை மீறிய படைப்பு. எந்த மொழியில் பெயர்க்கப்பட்டாலும் அந்த மொழியைத் தாண்டி நிலைத்திருக்கும் மானுடக் கதையாடல்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47704510038252,"sku":null,"price":446.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/faacc58d80206e14b64f48664442a462.jpg?v=1780633775"},{"product_id":"க","title":"க","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇந்திய மனத்தின் ஆதார ஸ்ருதியை வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள், காவியங்களின் வாயிலாகப் பரிசீலிக்கும் ஆராய்ச்சி நூல்கள் வரிசையில் வைக்கப்படவேண்டிய நூல் மட்டுமல்ல ‘க’. இந்தப் பரிசீலனையைக் கலாபூர்வமாகச் செய்யும் அற்புதத்தை இந்த நூல் நிகழ்த்திக் காட்டியிருக்கிறது. பிரக்ஞையின் இயக்க சக்திகளான ஆசாபாசங்களைக் கடவுளருக்கும் மானிடருக்கும் பொதுவானதாக்கி அவர்களுக்கு இடையில் உள்ள இடைவெளியை இந்த நூல் இல்லாததாக்கிவிட்டிருக்கிறது. பிரக்ஞையின் தோற்றமும் மலர்ச்சியும் விகாசமும் அவதானிக்கப்பட்டிருக்கும் நுட்பம், ஆழம், விரிவு ஆச்சரியம் கொள்ளவைக்கிறது. இலக்கியம் என்னும் அளவில் மட்டுமல்லாது பிரக்ஞை சார்ந்த விசாரணை என்னும் தளத்திலும் இந்த நூலின் பங்கு அதி முக்கியமானது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47704565219564,"sku":null,"price":423.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/7de853068cbbcf420d32e592a910bf3d.jpg?v=1780634492"}],"url":"https:\/\/centaram.com\/collections\/gabriel-garcia-marquez.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}