{"title":"ஜி. நாகராஜன்","description":"","products":[{"product_id":"குறத்தி-முடுக்கு","title":"குறத்தி முடுக்கு","description":"\u003cp\u003e\u003cspan\u003eகுறத்தி முடுக்கு’ ஓர் இடமில்ல. ரத்தமும் நிணமும் சீழும் ஓயாமல் கசியும் ஆறாத ரணம். தான் உயிர்தப்ப, பல்லி துறந்த வால். பிறகு அதே பல்லியின் தினவுக்கு வடிகாலன அவலம். மும்பையின் காமாட்டிபுரா, கொல்கொத்தாவின் சோனாகாச்சி போல, தமிழ்நாட்டுத் திருநெல்வேலியில் ஜி.நாகராஜன் உருவக்கிய விலைப்பெண்டிர் தெரு. ‘குறத்தி முடுக்’ கின் பிரவாகத்தில் அமிழ்ந்து மூச்சுத்திணறும் பெண்கள் ஒருபுறம்; சந்தர்ப்பவசத்தால் சிக்கிக்கொண்ட தொழிலுக்கு உடம்பையும் கொஞ்சமும் மங்கிவிடாதபடி தான் அடைகாக்கும் கனவுக்கு மனத்தையும் கொடுத்து நீர் ஒட்டாத இலைபோல வாழும் தங்கம் மறுபுறம்; இருதரப்பையும் ஒரு மாயக்கோடுபோல இணைக்கும் பத்திரிகையாளன் என மூன்று தரப்புகளின் சங்கமம் இந்தக் குறுநாவல். பொதுவாகவே ஜி.நாகராஜனின் படைப்புகளில் ஒருவிதக் கைப்புச்சுவை உண்டு. ‘குறத்தி முடுக்’கிலும் நிராசையின் குரல் ஓங்கித்தான் ஒலிக்கிறது. ஆனால் அதையும் மீறி, மனித மனத்தில் இயற்கையாக ஊற்றெடுக்கும் வாஞ்சையும் கம்பீரமும் இந்தக் குறுநாவலில் முன்நிற்கின்றன. -யுவன் சந்திரசேகர்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47599399436524,"sku":null,"price":129.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/850503c3bcf25fa56fbdfad63b739bfb.jpg?v=1777976305"},{"product_id":"நாளை-மற்றுமொரு-நாளே","title":"நாளை மற்றுமொரு நாளே","description":"\u003cp\u003e\u003cspan\u003eதன்னை ஏமாற்றியவனே தனக்குத் தந்திரத்தைக் கற்றுக்கொடுக்கும் குரு என்று ஏற்றுக்கொள்ளும் சாமானியர்களின் அடையாளங்களை, அவர்களின் மனப்போக்குகளை ‘நாளை மற்றொரு நாளே...' நாவலில் பதிவுசெய்திருக்கிறார் ஜி. நாகராஜன்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003e கந்தனின் ஒருநாள் பொழுதுதான் இந்த நாவல். கிளைக்கதைகளையும் துணைக் கதாபாத்திரங்களையும் கொண்டு விரியும் கந்தனின் ஒருநாள் பொழுதின் வழியாக, தமிழ்ச் சமூகத்தின் அடியாழத்தில் மறைந்திருக்கும் சல்லித்தனத்தை, கயமையை, சுரண்டலை, இச்சையை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது இந்த நாவல்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003e புறக்கணிக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட சாமானியர்களின் உலகை அதன் அசல்தன்மையுடன் ஜி. நாகராஜன் காட்டுகிறார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eதமிழில் சிறந்த படைப்புகளில் ஒன்றான ‘நாளை மற்றொரு நாளே...' ரவி பேலட்டின் கோட்டோவியங்களுடன் புதிய பொலிவுடன் வெளியாகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47605964538092,"sku":null,"price":180.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NAALAIMACHORUNAALE.jpg?v=1778143205"},{"product_id":"டெர்லின்-ஷர்ட்டும்-எட்டு-முழ-வேட்டியும்-அணிந்த-மனிதர்","title":"டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஎன்னமோ வாழ்க்கை, வாழ்க்கை என்று கதைக்கிறீர் களே, என்னமோ உறவு, பாசம் என்று கதைக்கிறீர்களே, என்னமோ காதல், பாலுறவு என்று கதைக்கிறீர்களே என்னமோ குடும்பம் என்று கதைக்கிறீர்களே இதுதானய்யா அவை . . . இவற்றின் லட்சணத்தைப் பாருங்கள் என்று நம்முன் ஓர் உலகை விரித்துக் காண்பிக்கிறார் ஜி. நாகராஜன்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47648806469868,"sku":null,"price":211.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/4b41308797898fe316cd5f487708b9d6.jpg?v=1779271624"}],"url":"https:\/\/centaram.com\/collections\/g-nagarajan.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}