{"title":"Essay","description":"","products":[{"product_id":"தெய்வம்-என்பதோர்","title":"தெய்வம் என்பதோர்","description":"\u003cp\u003e\u003cspan\u003eநாட்டார் தெய்வங்கள் என்ற சொல்லாட்சி நம் மனங்களில் சாமியாட்டம், குருதிப்பலி, பலி வடிவங்கள் ஆகிய படங்களாகவே மூட நம்பிக்கைகளோடு பின்னிப் பிணைந்தவையாக விரிந்து கிடப்பது உண்மை. ஆனால் அவை முற்றிலும் தவறான பிம்பங்கள் என்று அழுத்தமாகத் தன் கருத்துக்களை வாசகர் உணரும் விதமாக இந்நூலின் கட்டுரைகள் எடுத்துரைக்கின்றன. வட்டாரம் சார்ந்த உற்பத்தி அசைவுகளும் சமூகம் உளவியலும் எனப் பன்முகத்தன்மையைக் கொண்டாடும் நாட்டார் தெய்வங்கள் ஒரு மக்கள் பண்பாட்டின் அடையாளமாக நிற்கின்றன. - முன்னுரையில் ச. தமிழ்ச்செல்வன்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47603506938092,"sku":null,"price":74.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/9a7d44836e4fce95bf201984d65a466c.jpg?v=1778062407"},{"product_id":"அறியப்படாத-தமிழகம்","title":"அறியப்படாத தமிழகம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eம் அறிந்த தமிழகத்தின் அறியாத பரிமாணம் இந்நூல். ஒரு பொருட்டாக நாம் கருதாத ஒரு செய்தியை எடுத்துக்கொண்டு அதில் வரலாறும் பண்பாடும் எவ்வாறு படிவம் படிவமாகப் படிந்துள்ளன என்பதை நூலின் ஒவ்வொரு கட்டுரையும் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது. உப்பு, எண்ணெய், தேங்காய், வழிபாடு, விழாக்கள், உடை, உறவுமுறை, உறவுப் பெயர்கள் என அன்றாட வாழ்வின் பகட்டில்லாத பல்வேறு கூறுகளைக்கொண்டு தமிழ்ச் சமூகத்தின் ஈராயிரம், மூவாயிரமாண்டு வரலாற்று அசைவியக்கம் இந்நூலில் கோடிட்டுக் காட்டப்பெறுகின்றது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47603531022572,"sku":null,"price":69.37,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ff601ba32da35531d6d39822f108fea6.jpg?v=1778063039"},{"product_id":"தெய்வங்களும்-சமூக-மரபுகளும்","title":"தெய்வங்களும் சமூக மரபுகளும்","description":"\u003cp\u003e\u003cspan\u003eதோன்றிய காலந்தொட்டே நம்பிக்கைகள் சார்ந்திருந்த தெய்வங்கள் காலப்போக்கில் பல்வேறு சமூக நடைமுறைகளாலும் சமூகப் பிரிவுகளாலும் தத்தமக்கான மரபுகளை உருவாக்கிக்கொண்டன. தமிழ்ச் சமூகத்தில் பெருந்தெய்வங்கள் [சிறு தெய்வங்கள்] என்கிற வகைப்பாடு புறநானூற்றிலேயே பதிவு பெற்றுவிட்டதையும் அதன் பின்புலத்தையும் தொட்டுக் காட்டுகிறார் தொ.ப. வாலியோன் என்கிற பலராமன் வழிபாடு வழக்குக் குன்றி மறைந்துவிட்டது என்று எழுத்துச் சான்றுகள் கொண்டு எவரும் சொல்லிவிடலாம். வெள்ளைச்சாமி, வெள்ளைக்கண்ணு முதலிய பெயர்களின் தொடர்ச்சியில் அதன் எச்சங்கள் நிலவுவதைத் தொ.ப.தான் கண்டுகாட்ட முடியும். கள்ளழகர் என்பது மாயனின் கள்ள அழகு வழிப்பட்டதென்பது பௌராணிகம். ஆனால் கள்ளர் சமூகத்தார்க்கும் அழகருக்குமான தொடர்பில் முகிழ்த்தவர் கள்ளழகர் என்பதைத் தொ.ப. கள ஆய்வின் மூலம் கண்டு வரலாற்றுப் பின்னணி தேடி நிறுவுகிறார். தமிழ் வைணவம் வைதிகப் பிடிக்கு வெளியே பரவிய விதத்திற்கு, திருக்கண்ணபுரம் சௌரிராஜப்பெருமாள் மீனவர் மாப்பிள்ளையாகத் திருமலைராயன் பட்டினம் எழுந்தருளும் விழாவும் ஒரு சான்று என விவரிக்கிறார் தொ.ப. தமிழகக் கோயிலமைப்புகளின் பின்னணியில் அழகர் கோயில் அமைப்பைத் துல்லிய வரையறைகளுடன் விளக்கும் தொ.ப. கோயிலமைப்புச் சாத்திர வரம்பை நெகிழ்த்தும் பெருங்கோயில்கள் அமைந்திருப்பதைக் காட்டுகிறார். தெய்வம், - சமூகம், - மரபு என்னும் மூன்று புள்ளிகளைக் கொண்டு வரலாற்றுப் பின்னணியில் தமக்கேயுரிய பண்பாட்டுக் கூர்நோக்கில் தொ.ப. வரைந்த கோலங்களின் ஒரு தொகுப்பு இது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47603602391276,"sku":null,"price":74.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/306212ba461bbaad8d78fb216c5d6c17.jpg?v=1778063447"},{"product_id":"ஆணவக்-கொலைச்-சாமிகளும்-பெருமிதக்-கொலை-அம்மன்களும்","title":"ஆணவக் கொலைச் சாமிகளும் பெருமிதக் கொலை அம்மன்களும்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஅகால மரணமடைந்த ஒரு பெண்ணோ ஆணோ தெய்வமாகி வழிபாடு பெறுவது ஒரு மரபு. இந்த மரணம் கொலை, விபத்து, தற்கொலை என்னும் காரணங்களால் அமையலாம். சாதி மீறிய காதல் திருமணங்கள் தொடர்பான கொலையைச் சாதி ஆணவக் கொலை என்று சொல்வது இன்று பொது வழக்காக உள்ளது. ஆணவக் கொலைக்குப் பின்னால் பணம், அதிகாரம், சாதி என்பன மட்டுமின்றிக் குடும்பப் பெருமிதமும் கொலைகளுக்குத் தூண்டுதலாக அமைகிறது. இப்படிப்பட்ட இறப்புகளுக்குப் பின் தெய்வமாக்கப்பட்ட பதினான்கு பேரின் கதைகள்தான் இந்த நூல்; இதைப் புலனாய்வு அறிக்கை என்றும் கூறலாம். கதைகளை மட்டும் சொல்லாமல் அவற்றின் குற்றப் பின்னணி, தெய்வமாக்கப்பட்ட பின் உருவான வழிபாட்டு முறை என எல்லாவற்றையும் நூலாசிரியர் ஆழமாகப் பதிவுசெய்துள்ளார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47603764297964,"sku":null,"price":129.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/99bce749339a87b9e6e7f6919b501056.jpg?v=1778066427"},{"product_id":"திருநெல்வேலி-எழுச்சியும்-வ-உ-சி-யும்-1908","title":"திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908","description":"\u003cp\u003e\u003cspan\u003eகப்பல் ஓட்டி வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு அறைகூவல் விடுத்த வ.உ.சி. கைதுசெய்யப்பட்ட செய்தியைக் கேட்டுத் திருநெல்வேலியிலும் தூத்துக்குடியிலும் மக்கள் கிளர்ந்தெழுந்தனர். தெருவில் இறங்கினர். கூட்டம் கூடினர். வேலைநிறுத்தம் செய்தனர். அரசு சொத்துகளை அழித்தனர். இரும்புக்கரம்கொண்டு இந்த எழுச்சியை அரசு ஒடுக்கியது. துப்பாக்கிச்சூட்டில் நால்வர் மாண்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் கைதாயினர். மக்கள்மீது திமிர்வரி விதித்த அரசு, ஆறு மாதங்களுக்குத் தண்டக்காவல் படையை நிலைநிறுத்தியது. அதற்கு முன்போ பின்போ விடுதலைப் போராட்டக் காலத் தமிழகத்தில் இப்படியோர் எழுச்சி ஏற்பட்டதில்லை எனலாம். ஏராளமான சான்றுகளைக் கொண்டு இந்த எழுச்சியின் போக்கை விவரிக்கும் இந்நூல் இதன் பின்னணியையும் விளைவுகளையும் விரிவாக ஆராய்கிறது. இந்த எழுச்சியின் நாயகரான வ.உ.சி. இதைப் பற்றி எடுத்த நிலைப்பாட்டை விளக்குவதோடு எழுச்சியில் பங்களித்த எண்ணற்ற எளிய மக்களின் கதையினையும் மீட்டுருவாக்கம் செய்கிறது இந்நூல். ஆய்வுத் திறமும் அறிவார்ந்த சுவாரசியமும் மிளிர இந்நூலை எழுதியிருக்கிறார் ஆ. இரா. வேங்கடாசலபதி.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47606298149100,"sku":null,"price":296.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/5.jpg?v=1778149509"},{"product_id":"நடந்தாய்-வாழி-காவேரி","title":"நடந்தாய் வாழி காவேரி","description":"\u003cp\u003e\u003cspan\u003eகாவேரி, காலந்தோறும் இலக்கியங் களில் இடம்பெற்று வந்ததன் உச்சமாக, தானே தலைவியாய்த் திகழும் இலக்கியம் இது. “காவேரி வெறும் ஆறு மட்டுமல்ல. அதன் கரையில் வாழும் மக்களின் பண்பை விளக்கும் வரலாற்று ஓவியம்” என உணர்ந்து தெளிந்த ‘சிட்டி’ (பெ.கோ. சுந்தரராஜன்)யும் தி. ஜானகி ராமனும் இணைந்து எழுதிய இப் பணயக் கதை - காவேரிக் கரைக் காட்சிகளை, அவற்றின் பகைப்புலங்களை, காவேரி சார்ந்த வரலாற்றை, பண்பாட்டை, புகைப்படங்கள் கோட்டோவியங்களுடன் தருகிறது. நாற்பதாண்டுகளுக்குப் பிறகு இந்தச் செவ்வியல் பயணக் கதை புதிய பதிப்பாக இப்போது வெளிவந்துள்ளது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47606325182700,"sku":null,"price":323.75,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/889a5b1e9626cb35e0190cfb293d762b.jpg?v=1778151399"},{"product_id":"ஆதிக்க-சாதிகளுக்கு-மட்டுமே-அவர்-பெரியாரா","title":"ஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா?","description":"\u003cp\u003e\u003cspan\u003eதீண்டாதாரின் முன்னேற்றந்தான் பிராமணரல்லாதார்களின் முன்னேற்றமாகும். தீண்டாதார்களின் துன்பந்தான் பிராமணரல்லாதாரின் துன்பமாகும் என்று சுயமரியாதை இயக்கம் தொடங்கியது (1925) முதல், இவ்வுலகில் இருந்து விடைபெறுவதற்கு ஒரு மாதம் முன்பு மதுரையில் ஆதிக்க சாதி மனோபாவத்தைக் கண்டித்துப் பேசியதற்காக கல்வீச்சுத் தாக்குதலுக்கு (1973 அக்டோபர் 20) ஆளானது வரை தந்தை பெரியார் பேசியது, எழுதியது, செயல்பட்டது அனைத்தும் எல்லாத் தமிழ் மக்களுக்குமே. அதை உணராமல், அவரைப் படிக்காமலேயே, “ஈ.வெ.ரா தலித் விரோதி, ஆதிக்க சாதிகளுக்கான பெரியார்” என நிறுவ முயற்சிக்கும் அபத்தக் களஞ்சியங்களுக்கான பதில்தான் இந்த நூல்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47619050078444,"sku":null,"price":376.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PERE2.jpg?v=1782985104"},{"product_id":"புறப்பாடு","title":"புறப்பாடு","description":"\u003cp\u003e\u003cspan\u003eஅனுபவங்களை காலவரிசைப்படி சொல்லமுடியாது. சொன்னால் அதில் இருப்பது புறவயமான காலம். கடிகாரக் காலம். அது அர்த்தமற்றது. அகவயமான காலத்தில் அனு பவங்கள் எப்படி சுருட்டி வைக்கப்பட்டிருக்கின்றன என்பதே முக்கியமானது. அதை வெளியே எடுக்க ஒரே வழி மிகவலுவான மையச் சரடு ஒன்றைத் தொட்டு இழுப்பதே. அது இழுத்துவரும் அனுபவங்களே அகக் காலத்தின் வரிசையை அமைத்து விடுகின்றன. நான் ஏதாவது ஒரு நினைவை கைபோன போக்கில் எழுத ஆரம்பிப்பேன். அந்த அனுபவத்தின் சாரமாக ஓடும் சரடு என ஒன்று தென்படும். அது எந்தெந்த விஷயங்களைக் கொண்டுவருகிறதோ அதை எழுதிச் செல்வேன். அதன் வழியாக அப்போது \u0026amp; அதாவது எழுதும் கணத்தில் \u0026amp; ஒரு மெய்மையை அடைந்ததும் முடிப்பேன்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47628181537004,"sku":null,"price":351.15,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/9f4cc6addcda2a4c97ad1876a2d5924a.jpg?v=1778654513"},{"product_id":"அமெரிக்க-உளவாளி","title":"அமெரிக்க உளவாளி","description":"\u003cp\u003e\u003cspan\u003eநவீனத் தமிழ் உரைநடைக்கு ஒரு புதிய பரிமாணத்தையும் வசீகரத்தையும் வீச்சையும் சேர்க்கும் எழுத்தில் ஆசிரியர் பல நிகழ்வுகளை இந்நூலில் விவரிக்கிறார். நிகழ் புலங்கள் இலங்கை, அமெரிக்கா, ஆப்பிரிக்கா, கனடா என மாறினாலும் கதை மாந்தர்களின் மனிதநேசமும் மகிழ்ச்சியும் துயரமும் தியாகமும் மாறாமல் ஒரு தமிழ் வாசகருக்கு முற்றிலும் பரிச்சயமில்லாத தருணங்களை வாசக மனத்தில் நீடித்து நிறுத்துகின்றன\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47628199100652,"sku":null,"price":259.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/5dae49ff8d386be7ee2e80d80a737ef7.jpg?v=1778655794"},{"product_id":"முத்தியம்மா","title":"முத்தியம்மா","description":"\u003cp\u003e\u003cspan\u003eபொதுவாக என்னை பெண்ணெழுத்துக்களை நெருங்க விடாமற் செய்து விடுகிற இரண்டு பிரதான விஷயங்கள் மிகையான உணர்ச்சிகள், சூழலில் தேய்ந்து கிழிந்து போன செயற்கையான சொற்பிரயோகங்கள். இரண்டும் இந்த பதினான்கு கட்டுரைகளில் இல்லை. ஓரிடத்தில் மனசில் ஏறின பாரத்திற்கு அளவீடில்லை என்கிறார். அளவில்லை எனும் பொதுப்பதத்தை அளவீடில்லை என மாற்றிய கணத்தில் ஷைலஜா எனக்கு முக்கியமான எழுத்தாளராகப்படுகிறார். மொழிபெயர்ப்பாளராக மட்டுமே நானறிந்த ஷைலஜாவின் மொழி வல்லமை துலங்கி வந்திருக்கும் இக்கட்டுரைகள் அடுத்து அவர் எழுத வேண்டியது புனைவுகளே என்பதை பறைசாற்றுகின்றன. வாசகி, அண்ணி, அக்கா, அன்னை, ஆசிரியை, விவசாயி, பதிப்பாளர் என அவரெடுத்த பெண்ணின் பெருந்தக்க வடிவங்களில் எழுத்தாளர் என்பதும் முக்கியமானதாக அமையவேண்டுமென்பது என் ஆவல். \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47628291506412,"sku":null,"price":84.75,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/86eaa2980e09d534c71ca0d46bff2222.jpg?v=1778663030"},{"product_id":"அந்திராகம்","title":"அந்திராகம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇத்தொகுப்பில் முக்கியமான இரண்டு கட்டுரைகளும் ஒரு திரைச்சித்திரமும் இடம்பெற்றுள்ளன. மூன்றுமே இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர்களுடையவை. கஸூவோ இஷிகுரோ வின் The Gourmet, BBC யில் ஒளிபரப்பான தொலைக்காட்சித் திரைப்படம். இஷிகுரோ பிறப்பால் ஜப்பானியர். சிறு வயதிலேயே பெற்றோர்களுடன் இங்கிலாந்தில் குடியேறிவிட்டவர். மரபான கீழைத்தேய மனதுக்கு மேலை நாட்டு கலாச்சாரம், அவர்களின் ரசனை, தேர்வு, வாழ்க்கைமுறை இவற்றோடு ஒருபோதும் இயைந்துவிட முடியாது என்பதற்கு இஷிகுரோவின் எழுத்துக்கள் உதாரணமாக இருக்கின்றன. அவருடைய பிரசித்தி பெற்ற, புக்கர் பரிசு பெற்ற The Remains of The Day வின் நீட்சியாகவே இந்த 'ருசிகர்' அமைந்துள்ளது. குந்தர் கிராஸ் ஜெர்மனியின் மனசாட்சி என்று அறியப்பட்டவர். ஹிட்லர் இழைத்த கொடுமைகளுக்காக உலகத்தின் முன்பு கூசிக் குறுகி நின்றிருந்த ஜெர்மானியர்களுக்கு குந்தர் கிராஸின் The Tin Drum பெரும் ஆறுதல் அளித்தது. ஜெர்மனியின் பாவக்கறைகளை கிராஸ் தனது படைப்புகளின் மூலம் அழித்து வந்தார். அரசியலிலும் ஈடுபட்டார். இவருடைய தேர்தல் பிரச்சாரம் ஜெர்மனியின் முதல் சோஷலிஸ்ட் தலைவரான வில்லி பிராண்ட் அதிபராவதற்கு பெரும் உதவியாக இருந்தது. ஆனால் குந்தர் கிராஸ் தனது அந்திமக் காலத்தில் ஒரு மிகப்பெரிய ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். அறியாத வயதில் ஹிட்லர் எழுப்பியிருந்த தேசியவெறியில் மயங்கி நாஜி படையில் சேர்ந்து போரில் ஈடுபட்டதாக அவர் தன்னிச்சையாக முன்வந்து ஒப்புக்கொண்டது இந்த மகா கலைஞனின் நேர்மைக்குச் சான்றாக இருந்தது. இத் தொகுப்பில் உள்ள அவரது கட்டுரை குந்தர் கிராஸின் Peeling the Onion நூலிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு பகுதி. 'அந்தி ராகம்' காப்ரியேல் கார்சியா மார்க்கேஸின் சுயசரிதை நூலான 'Living to Tell the Tale நூலில் அவருடைய பெற்றோர்களின் காதல் எவ்வளவு போராட்டங்களைத் தாண்டி வெற்றி பெற்றது என்ற சுவாரஸ்யமான கதையைச் சொல்லும் பகுதி. இவை கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு முன் மொழிபெயர்த்தவை. இன்று இவற்றை வாசித்துப் பார்க்கையில் மொழிபெயர்ப்பு செயல்பாடுகளில் நான் அடைந்திருக்கும் மெலிதான மாற்றங்களை உணர முடிகிறது. சில விஷயங்களில் பிடிவாதம் அதிகரித்திருக்கிறது. சில அம்சங்களில் இளகியிருக்கிறேன். இப்போது புத்தகமாக வரும்போது சில வாக்கிய அமைப்புகளை மாற்றுவதற்கு எழுந்த இச்சையை அடக்கிக்கொண்டு அப்படியே அனுமதித்திருக்கிறேன். மொழிபெயர்ப்பு குறித்த பார்வைகள் காலந்தோறும் மாறிவருகின்றன. மொழிபெயர்ப்பாளனும் மாறிவருகிறான். மாறக்கூடாதவொன்று மூலப்படைப்புக்கும் படைப்பாளிக்கும் நேர்மையாக இருப்பது. அதில் வழுவாமல் இருக்கிறேன் என்பதே மனநிறைவு அளிப்பதாக உள்ளது. நூலாக்கம் பெறாமல் குவிந்திருக்கும் என்னுடைய பல கட்டுரைகள், மொழிபெயர்ப்புகளை சேகரித்துத் தருவதற்கு அவர்கள் தொடர்ந்து நச்சரித்து வந்ததால்தான் என் சோம்பலை மீறி இந்நூல் வெளிவருகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47628391317740,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/80833c395db6955edef5a73397fecbf5.jpg?v=1778666132"},{"product_id":"சித்திர-சுவடுகள்","title":"சித்திர சுவடுகள்","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47632192831724,"sku":null,"price":282.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/a0ee11931c56dc7d87938e4cb5f2181e.jpg?v=1778756011"},{"product_id":"அறக்கயிறு-அனுபவ-பகிர்வுகள்","title":"அறக்கயிறு-அனுபவ பகிர்வுகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003e'அறக்கயிறு’ ஒரு தனிமனிதன் தன் கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்கும் நினைவோடையாகத்தான் தொடங்குகிறது. மெல்ல மெல்ல அது தமிழகத்திலும் அண்டை மாநிலங்களிலும் புதிய வரலாற்றைப் படைத்த, படைக்கும் சாதனையாளர்களின் வரலாற்றை இணைத்துக் கொண்டு ஓர் ஆற்றின் மிடுக்கோடு பயணிக்கிறது இப்புத்தகம். – பேரா. சாலமன் பாப்பையா\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47634188992748,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/4ce77718fbac8c92ba4b2de3de8ee6e9.jpg?v=1778833749"},{"product_id":"சில-இயக்குநர்கள்-சில-திரைப்படங்கள்","title":"சில இயக்குநர்கள் சில திரைப்படங்கள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇலக்கியத்தையும், சினிமாவையும் இக்கட்டுரைகள் முழுமையாகப் பிரதிபலித்து விட்டன என்றெல்லாம் நான் மார்தட்டிக்கொள்ள விரும்பவில்லை. இரு துறைகளுமே கடல் போன்றது. என்னால் இயன்றவரை, என் அறிவுக்கு எட்டிய வரை தொட்டுக் காட்டியிருக்கிறேன் என்று வேண்டுமானால் சொல்லலாம். இத்துறைகள் குறித்து எழுதுவதற்கு நிறைய இருக்கின்றன. சந்தர்ப்பம் வாய்த்தால் எழுதவும் ஆசை. -வண்ணநிலவன்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47634200625388,"sku":null,"price":84.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/c4cb3469f3089ea4bcce5f16c4282871.jpg?v=1778834667"},{"product_id":"கலை-அல்லது-காமம்","title":"கலை அல்லது காமம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eசீனிவாசன் நடராஜன், “கலை அல்லது காமம்” என்கிற அவருடைய இந்தக் கட்டுரைகளில் கவிதை பற்றி அதிகம் பேசுகிறார். பேச முயற்சிக்கிறார். மரபு தொடங்கி, நவீன கவிதைகள் வரையில் ஒரு பேச்சை உருவாக்குகிறார். அந்தப் பேச்சு தொடரப் படுதல் வேண்டும். கவிதை பற்றி, கலைகள் பற்றி ஒரு சமூகம் பேசத் தொடங்குமானால், அது நுண்ணுணர்வுக்குள் அடியெடுத்து வைக்கத் தொடங்குகிறது என்று அர்த்தம்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eநீண்ட நெடிய மரபு கொண்ட தமிழ், இன்று அன்றாடச் செய்திகளை மட்டுமே எடுத்து விவாதிக்கிறது. மறுநாள் அதனை மறதியில் தொலைத்து விட்டு, அடுத்த செய்தியை விவாதிக்கத் தேர்வு செய்கிறது. ஒரு பரபரப்பு அடங்குவதற்குள், மறு பரபரப்பு தேவைப்படுகிறது. கவிதையை, கலையை பேசு பொருளாக்காத எந்த ஒரு சமூகத்திற்கும் இந்த ஊழ் வந்து சேரும். ஓவியம் பற்றியும், கூடவே காரல்மார்க்ஸ் கணபதியின் நாவல் பற்றிய ஒரு பதிவும், ஒரு சினிமா மதிப்புரையும் இதில் இடம் பெற்றிருக்கின்றன. இத்தகைய சூழலில் நின்று சீனிவாசன் நடராஜன் கவிதை பற்றிய ஒரு பேச்சை நிகழ்த்துகிறார்.கவிதையைப் பொறுத்தவரையில் கவிஞர்களை மறு கண்டுபிடிப்புச் செய்ய வேண்டியது ஒரு முக்கியமான பணி. பாரதி உள்பட பெருங்கவிஞர்கள் பலர் அவ்வாறு மறு கண்டுபிடிப்புச் செய்யப்பட்ட பிறகு கண்டடையப் பட்டவர்களே. கவிதை முதலில் வாசகப்பரப்பில் ஒருவரால் எடுத்துக் கூறப்பட்ட பிறகே அடையாளம் காணப்படுகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47634359615724,"sku":null,"price":113.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/fe6de99f9f937a094762928d7aab4c5c.jpg?v=1778839234"},{"product_id":"கதாபாத்திரங்களின்-பொம்மலாட்டம்","title":"கதாபாத்திரங்களின் பொம்மலாட்டம்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eகதாபாத்திரங்களின் பொம்மலாட்டம்: \u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eஹெர்மன் மெல்வில், கோ யுன், மோ யான், ஸ்டீன்பெக்,லேர்மன்தேவ், கொரலன்கோ,.பால்சாக், பாஷோ, ஓனோ நோ கோமாச்சி, ஜேவியர் மரியாஸ் என உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர்களைப் பற்றியும் அவர்களின் முக்கியப் படைப்பு குறித்தும் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. உலக இலக்கியமெனும் நெடும் பாதையில் பயணித்துத் தனித்துவமிக்கப் படைப்பாளிகளை அடையாளம் காட்டுகிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47634412077292,"sku":null,"price":132.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/dad38ed157a048d6b4f44dfb507bf367.jpg?v=1778841430"},{"product_id":"பிகாசோவின்-கோடுகள்","title":"பிகாசோவின் கோடுகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eநவீன ஓவியங்களைப் புரிந்துகொள்வதற்காக எழுதப்பட்ட கட்டுகரைகளின் தொகுப்பு இது. வான்கோ, பிகாசோ, எஷர், லாட்ரெக், காகின், கிளிம்ட், புருகேல் போன்ற உலகப் புகழ்பெற்ற ஓவியர்களின் ஓவியங்கள் குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் விரிவான தனது ரசனையைப் பதிவு செய்திருக்கிறார். உலகின் மிக முக்கியமான கலைக்கூடங்களுக்கு நேரில் சென்று ஓவியங்களைக் கண்டுவந்த எஸ்.ராமகிருஷ்ணனின் தேடுதலின் வெளிப்பாடே இக்கட்டுரைகள். நவீன ஓவியங்களைப் புரிந்துகொள்வதற்குப் பயிற்சியும் ரசனையும் தொடர்ந்த ஈடுபாடும் தேவை என்பதை எஸ்.ராமகிருஷ்ணனின் இக்கட்டுரைகள் வலியுறுத்துகின்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47634414600428,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/374166cb0325d68154b14e062e549970.jpg?v=1778841783"},{"product_id":"அரூபத்தின்-நடனம்","title":"அரூபத்தின் நடனம்","description":"\u003cp\u003eகாஸபிளங்கா படத்தை எப்போதும் பார்த்தாலும். பழைய போட்டோ ஆல்பத்தைத் திரும்பப் பார்க்கும்போது ஏற்படும் கிளர்ச்சியும் சந்தோஷமும் உருவாகிறது.சினிமா நமக்குள் ஏற்படுத்தும் காட்சிப்படிமங்களும் உணர்வுகளும் மறக்கமுடியாதவை.\u003c\/p\u003e\n\u003cp\u003e1930களின் கறுப்பு வெள்ளை படங்களில் துவங்கி மும்பை திரைப்படவிழாவில் திரையிட்ட ஈப் அலே ஒ வரை பல்வேறு அயல்மொழித்  திரைப்படங்கள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.\u003c\/p\u003e\n\u003cp\u003eநிஜமான மனிதர்களையும் அவர்களின் வாழ்க்கையையும் மனித உறவுகளையும் திரையில் பதிவு செய்த உண்மையின் கவிஞன் எனத் தன்னை அழைக்க வேண்டும் என்று சொல்கிறார் புகழ்பெற்ற இயக்குநர் விட்டோரியோ டி சிகா. அது சிறந்த இயக்குநர்கள் அனைவருக்கும் பொதுவான வாசகமே.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47634460803308,"sku":null,"price":329.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/688231b5a181d503827d496e2f6cfa0b.jpg?v=1778843747"},{"product_id":"இந்தியாவின்-இருண்டகாலம்","title":"இந்தியாவின் இருண்டகாலம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eபிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின்மூலம் இந்தியாவுக்குக் கிடைத்துள்ள நன்மைகளை வியந்தோதும் நூல்கள் நம்மிடம் ஏராளம் உள்ளன. அவற்றில் பலவற்றை இந்தியர்களே எழுதியும் இருக்கிறார்கள். ஆனால் காலனியாதிக்கம் இந்தியாவை எப்படிச் சீரழித்தது என்பதையும் எப்படி இந்தத் தேசத்தைப் பின்னோக்கி இழுத்துச்சென்றது என்பதையும் விரிவாக அறிமுகப்படுத்தும் நூல்கள் அரிதாகவே எழுதப்பட்டுள்ளன.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eசசி தரூரின் இந்தப் புத்தகம் அந்தக் குறையைத் தீர்த்துவைத்திருக்கிறது. ஏராளமான வரலாற்றுத் தரவுகளையும் நியாயமான வாதங் களையும் முன்வைத்து எழுதப்பட்டிருக்கும் இந்நூல் பிரிட்டிஷ் காலனியாதிக்கம் இந்தியாவின் இருண்ட காலம்தான் என்பதைச் சந்தேகத்துக்கு இடமின்றி நிறுவுகிறது.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eதவிரவும், காலம் காலமாகச் சொல்லப்பட்டுவரும் பல கற்பிதங்களையும் தகர்த்தெறிகிறது. பின்தங்கியிருந்த இந்தியாவுக்கு நாகரிகத்தை அறிமுகப்படுத்தியது பிரிட்டிஷ் பேரரசுதான் என்பதையும் ஆங்கில மொழி, ரயில்வே, நாடாளுமன்ற ஜனநாயகம், சுதந்தர ஊடகம் ஆகியவற்றை இந்தியர்களின் நலனுக்காகவே பிரிட்டன் அறிமுகப்படுத்தியது என்பதையும் தரூர் ஏற்கமறுக்கிறார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47635904823532,"sku":null,"price":470.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/9fd6ae1e41e692a3c6d8c1d478327f60_d05c2cc0-3609-41b2-9a52-5872ae2f682f.jpg?v=1778908376"},{"product_id":"முகலாயர்கள்","title":"முகலாயர்கள்","description":"\u003cp\u003eமுகலாயர்கள் :\u003c\/p\u003e\n\u003cp\u003eபாபர், பானிபட், அக்பர், தின்-இ-லாஹி, தெய்வீகக் காதல், தாஜ்மஹால், ஔரங்கசீப், தேஜ் பகதூர், சிவாஜி, மாம்பழக் கூடை என்று முகலாய வரலாறை வேர்க்கடலைத் தோலுக்குள் திணித்து விடுகிறது நம் பாடப்புத்தகம்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஉண்மையில் அது ஒரு பிரம்மாண்டமான சரித்திர சமுத்திரம். நாம் இதுவரை பார்க்காத பக்கங்கள் மிக நிறைய! அத்தனையும் அற்புதம் சுமந்த பக்கங்கள்.\u003c\/p\u003e\n\u003cp\u003eபல கைக்குட்டை கிராம ராஜ்ஜியங்களாக இருந்த துணைக் கண்டத்தை முதல் முதலில் ஒரு பிரம்மாண்டமான தேசமாக்கும் முயற்சி முகலாயர்களாலேயே மேற்கொள்ளப்பட்டது. ஆந்திர எல்லை வரை ஔரங்கசீப் படையெடுத்திருக்காவிட்டால் இந்தியா (அன்றைக்கு ஹிந்துஸ்தான்) உருவாக இன்னும் நாளாகியிருக்கும்! நமது இன்றைய மதச்சார்பின்மை, அன்றைய அக்பரின் மத நல்லிணக்கத்தின் தொடர்ச்சியே.\u003c\/p\u003e\n\u003cp\u003eஇன்னும் சொல்லலாம். முகலாயர்களின் முன்னூறு ஆண்டுகால ஆட்சி, நவீன இந்தியாவின் முதல் மாதிரி வடிவம்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47635910951148,"sku":null,"price":602.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/d981161e44c3382d37428a649c4ebc58.jpg?v=1778908698"},{"product_id":"அதிர்ந்த-இந்தியா","title":"அதிர்ந்த இந்தியா","description":"\u003cp\u003e\u003cspan\u003eதேசத்தை உலுக்கிய பண மதிப்பு நீக்கம்...\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஇந்தியாவால் என்றென்றும் மறக்கவே முடியாத ஒரு தினமாக 8 நவம்பர் 2016 மாறிவிட்டது. 500 மற்றும் 1000 ரூபாய்த் தாள்கள் இனி செல்லாது என்னும் பிரதமரின் அறிவிப்பு ஒரு புயலைப் போல் தேசம் முழுவதும் பரவி அனைவரையும் கலங்கடித்தது. அன்று தொடங்கி இன்றைய தேதி வரை அதிர்வுகள் மறைந்தபாடில்லை.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஆதரவு, எதிர்ப்பு இரண்டுக்கும் குறைவில்லை. பண மதிப்பு நீக்கம் காலத்தின் கட்டாயம்; தவிர்க்கமுடியாதது என்கிறார்கள் ஒரு தரப்பினர். ஆனால் சில ஆதாரமான கேள்விகளுக்கு அவர்களால் விடையளிக்க முடியவில்லை. அரசு எதிர்பார்த்ததைப் போல் கறுப்புப் பணம் ஒழிந்திருக்கிறதா? பயங்கரவாதச் செயல்கள் குறைந்திருக்கின்றனவா? வரி ஏய்ப்பு இப்போது நடைபெறுவதில்லையா? ரொக்கத்தைக் கைவிட்டுவிட்டு, டிஜிட்டல் பொருளாதாரத்துக்கு அனைவரும் மாறுவதுதான் தீர்வா?\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47635916456172,"sku":null,"price":169.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/2d48f564a2886f123d6cf8d293613939.jpg?v=1778909153"},{"product_id":"மூலிகையே-மருந்து","title":"மூலிகையே மருந்து","description":"\u003cp\u003e\u003cspan\u003eநம் வீடுகளிலும் புல்வெளிப்பகுதிகளிலும் மிகச் சாதாரணமாக வளரக்கூடிய கீழாநெல்லி மஞ்சள் காமாலைக்கான கைகண்ட மருந்து, அதேபோல நம் அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் பல நறுமணப் பொருட்கள் மருத்துவ குணம் கொண்டவை. இவை அனைத்துமே தாவரங்களை அடிப்படையாகக் கொண்டவை. இதுபோன்ற 50 மூலிகைகளின் மருத்துவ குணங்களையும் பயன்களையும் இந்த நூல் எடுத்துரைக்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47635954860268,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/8be44e74bf5071a9f6b9d8c5b90cfc02_22ca6186-adae-456c-867b-f3b98e145194.jpg?v=1778913303"},{"product_id":"தெற்கிலிருந்து-ஒரு-சூரியன்","title":"தெற்கிலிருந்து ஒரு சூரியன்","description":"\u003cp\u003e\u003cspan\u003eதிராவிட இயக்கத்தின் நூற்றாண்டு, அடுத்து திராவிடக் கட்சிகள் ஆட்சியின் அரை நூற்றாண்டு, தொடர்ந்து தமிழ்நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவர் மு.கருணாநிதியின் சட்ட மன்றப் பணியின் அறுபதாண்டு... இந்த மூன்று தருணங்களும் தமிழ்நாட்டைத் தாண்டியும் இந்தியா முழுமைக்கும் முக்கியமானவை. ஆனால், இந்தியாவின் தேசிய ஊடகங்கள் வழக்கம்போல இதற்கும் பெரிய கவனம் அளிக்காமலேயே கடந்துபோயின. ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் ஆசிரியர் குழுவால் அப்படிக் கடந்து போக முடியவில்லை. எல்லா நிறை - குறைகளைக் கடந்தும், இந்த மண்ணில் மகத்தான ஒரு பணியை, குறிப்பாக சமூக நீதித் தளத்தில் திராவிட இயக்கம் நிறைவேற்றியிருக்கிறது. \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47635963707628,"sku":null,"price":282.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/79cc3d1b505e15dfca920590a24107c8.jpg?v=1778913760"},{"product_id":"விண்ணளந்த-சிறகு","title":"விண்ணளந்த சிறகு","description":"\u003cp\u003e\u003cspan\u003eசுற்றுச்சூழல் சார்ந்த அக்கறை என்பது தமிழ்ச் சூழலில் கடந்த 10-15 ஆண்டுகளாகத்தான் கவனம் பெற்றுவருகிறது. நெடிய பாரம்பரியமும் சூழலியல் பின்புலமும் கொண்ட தமிழ்ச் சூழலில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சமீபகாலமாக மட்டுமே கவனம் பெற்றிருப்பது சற்றே முரணானது. சுற்றுச்சூழல் சார்ந்த அக்கறை சமீப காலத்தில் பரவலாவதில், சூழலியல் எழுத்துக்கு முக்கியப் பங்கு உண்டு.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47635971997932,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/db3dbeee550f4f0115165f1a34b2d642.jpg?v=1778914525"},{"product_id":"சபாஷ்-சாணக்கியா","title":"சபாஷ் சாணக்கியா","description":"\u003cp\u003e\u003cspan\u003eபுத்தாண்டில் குறிப்பாக பொங்கல் பண்டிகையோடு அர்த்தமுள்ள விஷயங்கள் அடங்கிய ‘சபாஷ் சாணக்யா’ புத்தகமும் உங்கள் இல்லங்களில் தவழட்டும். வணிக வீதியின் ஒற்றை வரி முழக்கம் ‘அறிவே செல்வம்’.! அதை நூல் நூலும் நிரூபித்துள்ளது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47635973832940,"sku":null,"price":159.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/bbd711495bb20c86f438929b41f29662.jpg?v=1778914895"},{"product_id":"பன்முக-அறிவுத்-திறன்கள்","title":"பன்முக அறிவுத் திறன்கள்","description":"\u003cp align=\"justify\"\u003e\u003cspan\u003eஒரு நல்ல வேலை, ஆறு இலக்கச் சம்பளம், உயர் வாழ்க்கைத் தரம் இவற்றைப் பெற்றுத்தருவதே கல்வி என்று இந்தியா போன்ற நாடுகளில் கருதப்படுகிறது. பொருளாதாரத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இயங்கும் கல்வி அமைப்பில் வாசித்தல், மனப்பாடம் செய்து எழுதுதல், கணிதத் திறன் போன்றவை மட்டுமே சிறப்புத் திறன்களாகக் கருதப்படுவதிலும் வியப்பில்லை.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp align=\"justify\"\u003e \u003c\/p\u003e\n\u003cp align=\"justify\"\u003e\u003cspan\u003eஇவற்றுக்கு அப்பாற்பட்ட பன்முக அறிவுத் திறன்கள் இருக்கின்றன என்பதை  உளவியலாளர் ஹாவர்ட் கார்டனர் உலகத்துக்கு உணர்த்தினார். அவரது பன்முக அறிவுத் திறன்கள் கோட்பாடு உலகெங்கும் பள்ளி, கல்லூரிகளில் உள்ள கற்பிக்கும் முறைகளைக் கடந்த முப்பது ஆண்டுகளில் மாற்றி அமைத்துள்ளது. ஹாவர்ட் கார்டனரின் பன்முக அறிவுத் திறன்களை இந்திய, தமிழகச் சூழலில் எளிமையாகவும் ஆழமாகவும் அறிமுகம் செய்யும் நூல் இது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47635977601260,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/994ea6921d1f01ec040ed9f8d836a5da.jpg?v=1778915360"},{"product_id":"கேள்வி-நேரம்","title":"கேள்வி நேரம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eமத்திய அரசுப் பணித் தேர்வுகள், மாநில அரசுப் பணித் தேர்வுகள், இதர போட்டித் தேர்வுகளிலும் பொது அறிவுக் கேள்வி-பதில்கள் முக்கிய அம்சமாக இடம்பெற்றுவருகின்றன. இந்த இரு தரப்பினரைத் தாண்டி பொது அறிவுத் தாகம் கொண்டவர்களும் தமிழகத்தில் அதிகம். இவர்கள் அனைவருடைய தேவைகளையும் மனதில்கொண்டு இந்தக் கேள்வி-பதில் நூல் தொகுக்கப்பட்டுள்ளது. பல்வேறு அம்சங்கள் தேடித்தேடிச் சேர்க்கப்பட்டுள்ளன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47635980353772,"sku":null,"price":103.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/304f6642522038963329cf3328dcde9e.jpg?v=1778915716"},{"product_id":"ஆசியாவின்-பொறியியல்-அதிசயம்","title":"ஆசியாவின் பொறியியல் அதிசயம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஅட்சய பாத்திரமான அணைகள்! பல்வேறு அணைக்கட்டுத் திட்டங்களை உருவாக்கியிருந்தாலும், கொங்கு மண்ணை செழிக்கச் செய்யும் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தை `ஆசியாவின் பொறியியல் அதிசயம்' என்று போற்றுகின்றனர். தற்போதுள்ள நவீனத் தொழில்நுட்பங்கள், பிரம்மாண்ட இயந்திரங்கள் என எதுவும் இல்லாத அக்காலகட்டத்தில், பொறியியல் திறமை மற்றும் மனித உழைப்பைப் பிரதானமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதுதான் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47636005454060,"sku":null,"price":94.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/e28c948e665b0cba32d8462fa9195ce3.jpg?v=1778917841"},{"product_id":"உடல்-எனும்-இயந்திரம்","title":"உடல் எனும் இயந்திரம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇந்து தமிழ்’ நாளிதழின் இணைப்பிதழான மாயாபஜாரில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு இது. மனித உடல் குறித்த மருத்துவ அறிவியலை எளிமையான மொழியில் எடுத்துரைக்கிறது. பள்ளிப் பாடங்களில் கற்றுக்கொள்ளும் அடிப்படைகளை மேலும் சில தப்படிகள் உயர்த்தும் நூல்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47638672474348,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/c9c82ce25a8c92f57e5a4446bf833ec2.jpg?v=1779080237"},{"product_id":"விழுவது-எழுவதற்கே","title":"விழுவது எழுவதற்கே!","description":"\u003cp\u003e\u003cspan\u003eபெரிய நிறுவனத்தில் இத்தகைய பிரச்சினைகள் தோன்றியதா என்ற ஆச்சர்யம் மேலோங்கியதோடு, அத்தகைய சூழலை அந்நிறுவன அதிபர்கள் கையாண்டு மீண்ட விதம் நிச்சயம் பிரமிப்பாகத்தான் இருந்தது. 7 இந்திய நிறுவனங்கள், 6 அமெரிக்க நிறுவனங்கள் மட்டுமின்றி தனி நபர்களின் வீழ்ச்சியையும் அதிலிருந்து அவர்கள் மீண்ட விதத்தையும் சற்றும் சுவாரஸ்யம் குறையாமல் அதேசமயம் மிகைப்படுத்தாமல் நூலாசிரியர் எஸ்.எல்.வி.மூர்த்தி எழுதியுள்ளார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47638678569196,"sku":null,"price":164.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/8b73d9449ea12fc3a557bbd68674a2be.jpg?v=1779081108"},{"product_id":"யானைகளின்-வருகை","title":"யானைகளின் வருகை","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇயற்கையோடு இணைந்து வாழ்ந்த மனிதன் தன் பேராசையால் பிற உயிர்கள் வாழும் இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டதன் விளைவாக காடுகள் அழிக்கப்பட்டன. இதனால் காட்டில் வாழும் உயிர்கள் நேராக மனிதர்கள் இருப்பிடம் தேடி வர ஆரம்பித்தன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47638696263916,"sku":null,"price":169.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ec192985821dcf47cd73633ba4ba24f4.jpg?v=1779083276"},{"product_id":"சின்ன-மனசுக்குள்-சீனப்பெருஞ்சுவர்","title":"சின்ன மனசுக்குள் சீனப்பெருஞ்சுவர்","description":"\u003cp\u003e\u003cspan\u003eசோம்பல் ஒரு மனிதனை மட்டுமல்லாமல், அவன் சார்ந்த சூழலையும் சாய்க்கும் பேராற்றல் கொண்டது என்பதையும், அதைவெல்ல தன்னைத் தயார்படுத்திக்கொள்ளும் முனைப்புகளைப் பற்றியும் ஆணித்தரமாகச் சொல்கிறது இந்நூல்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47638719987948,"sku":null,"price":178.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/529ab62adf5aa082c25b6308071c7f52.jpg?v=1779088736"},{"product_id":"இனிப்பு-தேசம்","title":"இனிப்பு தேசம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஅலோபதி மருத்துவமுறை மட்டுமல்லாமல், மற்ற மருத்துவ முறைகளால் நீரிழிவு நோயை எந்த அளவுக்கு சிறப்பாகக் கையாள முடியும் அல்லது முடியாது என்ற கேள்விக்கும் இந்த நூல் பதில் தருகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47638742565100,"sku":null,"price":103.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/053f5e6af966b8ced24cb1689ce2a838_3cc51d95-92fe-4b58-9bda-06f5785fadc0.jpg?v=1779085945"},{"product_id":"காயமே-இது-மெய்யடா","title":"காயமே இது மெய்யடா","description":"\u003cp\u003e\u003cspan\u003eபிரபல உடல்நல எழுத்தாளரான போப்பு உடலைச் சீர்படுத்தும் வழிகளை இந்த நூலில் முன்வைத்திருக்கிறார். நம் மரபில் உள்ள நல்லனவற்றை திரும்ப நமக்கு ஞாபகமூட்டியிருக்கிறார். நம் உடலின் முதன்மை உள் உறுப்புகளான கல்லீரல், இதயம், மண்ணீரல், நுரையீரல், சிறுநீரகம் ஆகியனவற்றின் செயல்பாடுகள், அவற்றை புரிந்துகொள்வது எப்படி, மேம்பட்ட வகையில் பராமரிப்பது எப்படி என்று இந்தப் புத்தகம் விரிவாக விளக்கிச் சொல்கிறது. காயம் என்பது ஒன்றுமற்றதல்ல, ஊனும் உயிரும் சேர்ந்த உடம்பு. அதை முறையாக வளர்க்கவும் பராமரிக்கவும் தேவைப்படும் வழிகள் இந்த நூலில் கூறப்பட்டுள்ளன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47638746333420,"sku":null,"price":150.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/f9efef0b7493d299151c7ae324ba5597.jpg?v=1779086656"},{"product_id":"பின்நகர்ந்த-காலம்","title":"பின்நகர்ந்த காலம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇன்று ஒரு மகத்தான படைப்பாளியாக நம்மிடையே வாழ்ந்துவரும் வண்ணநிலவனின் இளமைக்காலப் பதிவு இந்நூல்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47638766387436,"sku":null,"price":263.2,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/b3b0716689f98a323e0b943e799fcb12.jpg?v=1779088431"},{"product_id":"தாராசுரம்-ஐராவதீசுவரர்-திருக்கோயில்","title":"தாராசுரம் ஐராவதீசுவரர் திருக்கோயில்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇரண்டாம் குலோத்துங்கனாகிய அநபாய சக்ரவர்த்தியின் முதல் மந்திரியாக விளங்கிய தெய்வச் சேக்கிழார் அம்மாமன்னன் வேண்டுகோளுக்கிணங்கி திருத்தொண்டர் புராணத்தை சொக்கழகாகச் சொல்லில் வடித்தார். அம்மா மன்னன் மகனாகிய இரண்டாம் இராஜராஜன் சேக்கிழார் அடிகள் வாழ்ந்தருளிய காலத்திலேயே அவருடைய ஆசியோடும் வழிகாட்டுதலோடும் மேற்சொன்ன திருத்தொண்டர் புராணத்தைக் கவின்கலை நுட்பத்துடன் கல்லில் வடித்தார். தாராசுரத் திருக்கோயில் சிற்பங்களை ஆய்வு செய்தவர்கள் அவையிற்றை நம்பியாரூரர் அருளிய திருத்தொண்டத் தொகையின் அடிப்படையிலேயே ஆய்வு செய்துள்ளனர். திருத்தொண்டத் தொகையின் அருஞ்செய்திகளை சற்றே விரித்து திருத்தொண்டர் திருவந்தாதி பாடியருளியவர் நம்பியாண்டார் நம்பி. தொகை, அந்தாதி ஆகிய இவையிற்றின் மீது அற்புதமாக எழுப்பப்பட்ட மாபெரும் மந்திரமே பெரியபுராணமாகும். இத்திப்பிய பனுவல் தந்த பார்வையின் அடிப்படையில் முதன்முதலில் தம் ஆய்வை மேற்கொண்டு, அதியற்புதமாக முடிவையும் சாதித்துள்ள பெருமை குடவாயில் பாலசுப்பிரமணியன் அவர்களையே சாரும். \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47638800826604,"sku":null,"price":752.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/6f1114b5cdebcb2e4a160482e16780bf.jpg?v=1779090019"},{"product_id":"நேர்முகம்-கவனம்","title":"நேர்முகம் கவனம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஎழுத்துத் தேர்வில் உயரிய மதிப்பெண் குவிக்கும் பலர் சறுக்கி விழுவது நேர்முகத் தேர்வில்தான். இந்த சோகம், வழக்கமான அலுவலகப் பணிவாய்ப்பு முதல் குடிமைப் பணிவரை பொருந்தும். ஏனென்றால், நேர்முகத் தேர்வை அணுகுவதற்கான பாடத்திட்டம் எந்த பல்கலைக்கழகத்திலும் கிடையாது. இதற்கென குறுக்குவழியோ சூத்திரங்களோ கிடையாது. ஆனால், நேர்முகத் தேர்வில் வெற்றி பெற பல நுட்பங்கள் உள்ளன. அதன் அடிப்படையில்தான் தேர்வாளர்கள் நேர்முகத் தேர்வை நடத்தித் தங்களுக்கு தேவையான ஊழியர்களைத் தேர்வு செய்கிறார்கள். இத்தகைய நுட்பங்களை நுணுக்கமாக விளக்கும் புத்தகம்தான், ‘நேர்முகம்-கவனம்’.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47638860497132,"sku":null,"price":131.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/b952280d037086b7a471415149206692.jpg?v=1779093807"},{"product_id":"காற்றில்-கரையாத-நினைவுகள்","title":"காற்றில் கரையாத நினைவுகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇறையன்பு அவர்களின் எழுத்துக்கென்று பெரும் வாசகப் பெருவெளி இருப்பதை நாங்கள் அறிவோம். அந்தப் பெருவெளியின் தனிப் பாதையில் அவரது நினைவுகள் வாச்கர்களை நோக்கி இதோ - பறந்து வருகின்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47638882746604,"sku":null,"price":150.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/9f286a0fd509f0a5fe4e2c8858b585d3.jpg?v=1779094034"},{"product_id":"புதிய-கல்விக்-கொள்கை","title":"புதிய கல்விக் கொள்கை","description":"\u003cp\u003e\u003cspan\u003eபுதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையின் அத்தனை பக்கங்களையும் ஒவ்வொருவரும் படித்தறிய இயலுமா என்றால், அதுவும் கேள்விக்குறிதான். அப்படிப்பட்ட கேள்விக்குறிக்கான பதிலை, தனது கருத்து ஏரைக் கொண்டு வாசிப்போரின் சிந்தனையில் ஆழ உழுது விதைக்கிறார். கூடவே, ஒவ்வொரு பெற்றோரும் கடனே என்று இருந்துவிடாமல் தங்களின் பொறுப்பையும் உணர வைக்கிறார். எதிர்காலத்தில் உறுதிமிக்க தேக்குமரமாக வளரத்தான் போகிறது என்பதற்காக, சின்னஞ்சிறிய கன்றாக இருக்கும்போது அதன் மீது நாம் சுமைகளை வைப்போமா? கனமான ஆணிகளை அறைவோமா? அப்படித்தான் இருக்கிறது இந்த கல்விக் கொள்கை என்று தனது கருத்துரையை தெளிவாக்கி இருக்கிறார்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47639089807596,"sku":null,"price":84.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/986c3013aa27c512a57ec78070ba46f6.jpg?v=1779099427"},{"product_id":"இந்தியா-என்றால்-என்ன","title":"இந்தியா என்றால் என்ன?","description":"\u003cp\u003e\u003cspan\u003eடால்ஸ்டாய், காந்தி, தாகூர், ஏங்கெல்ஸ், அக்பர், ஐன்ஸ்டைன், அம்பேத்கர், அமிர் குஸ்ரோ, சாக்ரடீஸ், புரோமிதியஸ், ரொமிலா தாப்பர் என்று இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள 25 கட்டுரைகள் உங்களுக்கு விருந்து படைக்கக் காத்திருக்கின்றன. ஒவ்வொரு கட்டுரையையும் மாறுபட்ட கோணத்தில், எளிமையான மொழி நடையில், அழகான சொற்களைக் கோத்து தந்திருப்பதோடு... ஆங்காங்கே நமக்குள் மென்முறுவல் பூக்கும் வகையில் நகைச்சுவையும் தூவித் தந்திருக்கிறார் மருதன்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47639098032364,"sku":null,"price":84.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/a236bf09949c5da5f3f0ce8121775eec.jpg?v=1779099841"},{"product_id":"புண்ணியம்-தேடுவோமே","title":"புண்ணியம் தேடுவோமே..!","description":"\u003cp\u003e\u003cspan\u003eவழிபாட்டுத் தலங்களைப் பற்றி விரிவாக ‘புண்ணியம் தேடுவோமே..!’ என்ற இந்த நூலில் விளக்கியுள்ளார் முன்னூர் ரமேஷ்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47639111270636,"sku":null,"price":150.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/11369d74950184432558608ea53dd0dc.jpg?v=1779100396"},{"product_id":"புண்ணியம்-தேடுவோமே-பாகம்-ii","title":"புண்ணியம் தேடுவோமே..! (பாகம் II)","description":"\u003cp\u003e\u003cspan\u003eகோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்பதும் ‘குரு பார்க்க கோடி நன்மை’ என்பதும் பெரியோர் வாக்கு. இயற்கையைக் கண்டு அஞ்சிய மனிதன் இயற்கையை வழிபடத் தொடங்கினான். சூரியன், சந்திரன், சிறுதெய்வம், பெண் தெய்வம், மழை, மரம், நீர், விநோத உருவம், பெருந்தெய்வம் என்று அனைத்தையும் வழிபடத் தொடங்கினான். வைணவம், சைவம் முதலிய சமயங்கள் தோன்றிய காலத்தே தெய்வங்களுக்கு கோயில் அமைத்து வழிபட்டனர் நமது முன்னோர்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47639193288940,"sku":null,"price":216.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/II.jpg?v=1779101702"},{"product_id":"புதிர்ப்பாதையில்-இருந்து-தப்பித்து-வெளியேறுதல்","title":"புதிர்ப்பாதையில் இருந்து தப்பித்து வெளியேறுதல்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஎல்லோராலும் மிகவும் நேசிக்கப்பட்ட ‘என் சீஸை நகர்த்தியது யார்?’ நூல் வெளிவந்து இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, அதன் தொடர்ச்சியாக இப்போது இந்நூல் வெளிவந்துள்ளது.‘என் சீஸை நகர்த்தியது யார்?’ நூலின் கதை எங்கே முடிந்ததோ, அந்த இடத்திலிருந்து தொடங்குகின்ற ‘புதிர்ப்பாதையில் இருந்து தப்பித்து வெளியேறுதல்’ என்ற இந்நூல், உங்கள் வாழ்க்கையை எவ்வாறு மாற்றுவது என்பது பற்றிய ஆழமான உண்மைகளை வழங்குகின்ற ஓர் எளிய கதையாகும்.சு\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47639197057260,"sku":null,"price":305.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/a2177e97d924f73bb22335bbd1207186.jpg?v=1779101435"},{"product_id":"பாபிலோனின்-மாபெரும்-செல்வந்தர்","title":"பாபிலோனின் மாபெரும் செல்வந்தர்","description":"\u003cp\u003e\u003cspan\u003eசெல்வத்தைக் குவிப்பது எப்படி என்பது குறித்து எழுதப்பட்டுள்ள நூல்களிலேயே மிகவும் பிரபலமான நூல்! உலகெங்கும் இப்போது கடைபிடிக்கப்பட்டு வருகின்ற, செல்வத்தைக் குவிப்பதற்கான அடிப்படை விதிகளை, நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பண்டைய பாபிலோனியர்கள் அறிந்திருந்தனர். செல்வத்தை ஈட்டி, அதைப் பாதுகாத்து, அதைப் பன்மடங்கு பெருக்கியிருந்த பாபிலோனியச் செல்வந்தர்களின் வெற்றி இரகசியங்களை, ஜார்ஜ் எஸ். கிளேசன், சுவாரசியமான கதைகளின் வடிவில் இந்நூலில் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47639210131692,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/456086e1be030587fd6337f8c10125a4.jpg?v=1779187598"},{"product_id":"ஆழமான-கேள்விகள்-அறிவார்ந்த-பதில்கள்","title":"ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஉலகப் புகழ் பெற்றப் பிரபஞ்சவியலாளரான ஸ்டீபன் ஹாக்கிங், ‘கடவுள் என்ற ஒருவர் இருக்கிறாரா? பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது? அறிவார்ந்த வேறு உயிரினங்கள் பிரபஞ்சத்தில் இருக்கின்றனவா? காலப் பயணம் சாத்தியம்தானா? விண்வெளியை நாம் காலனிப்படுத்த வேண்டுமா? செயற்கை நுண்ணறிவு நம்மை விஞ்சிவிடுமா?’ போன்ற, பிரபஞ்சம் தொடர்பான ஆழமான கேள்விகளுக்குத் தன்னுடைய அறிவார்ந்த கருத்துக்களை இந்நூலில் பதிவு செய்துள்ளார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47639219765484,"sku":null,"price":305.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/6fe068b94e5020d2681b3992d006880f.jpg?v=1779102575"},{"product_id":"மாணவர்களுக்கு-சூரிய-நமஸ்காரம்-ஏன்-எப்படி","title":"மாணவர்களுக்கு சூரிய நமஸ்காரம் ஏன்? எப்படி?","description":"\u003cp\u003e\u003cspan\u003eயோகா, சூரிய நமஸ்காரம் பற்றிய அறிமுகம், இதுகுறித்த நிபுணர்களின் அனுபவங்கள், வெவ்வேறு பள்ளிகள் வழங்கும் பயிற்சி முறைகள், சுவாசப் பயிற்சிகள், அவற்றால் கிடைக்கும் பயன்கள், பொதுவாக ஏற்படக்கூடிய சந்தேகங்களுக்கு ‘கேள்வி - பதில்’ வடிவில் விளக்கங்கள் என மிகத் தெளிவாக, எளிமையான கூறியிருக்கிறார். இன்றைய மாணவர்களுக்கு யோகா, சூரிய நமஸ்காரம் எந்த வகையில் ஏற்றதாக இருக்கும் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47639235592428,"sku":null,"price":94.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/3539a54648134b930ac61b40b4b75098.jpg?v=1779103414"},{"product_id":"அணிந்துரைகள்","title":"அணிந்துரைகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eவாழ்க்கையெனும் இரயில் பயணத்தில் நம்மோடு பயணிப்பவர்கள் பற்பலர். அற்ப நபர்களின் நினைவுகளை, சற்று நேரத்தில், சந்திப்பு தாண்டியதும் சத்தமின்றி இறக்கி வைத்து விடுகிறோம். சொற்ப நபர்களின் நினைவுகளை மாத்திரம் கர்ப்பக்கிரகத்து சிலைகளென பத்திரமாய் நெஞ்சினில் பதுக்கி வைத்து நித்தம் நித்தம் போற்றுகிறோம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47643284242668,"sku":null,"price":56.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/1731c554ee1bbb01876e5722a7ef0ec9.jpg?v=1779167330"},{"product_id":"கண்ணதாசன்-365","title":"கண்ணதாசன் 365","description":"\u003cp\u003e\u003cspan\u003eநான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, \u003c\/span\u003e\u003cspan\u003eகண்ணதாசன்\u003c\/span\u003e\u003cspan\u003e ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் \"அரசவைக் கவிஞராக\" இருந்தவர். இவர் சாகித்ய அகாதமி விருது (1980) பெற்றவர்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47643337916652,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/365.jpg?v=1779168064"},{"product_id":"நவம்","title":"நவம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47643409514732,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/fb2b2d44088887b1a4bdf462cc0eab62.jpg?v=1779170717"},{"product_id":"எப்படிப்-பாடுவேனோ","title":"எப்படிப் பாடுவேனோ","description":"\u003cp\u003e\u003cspan\u003eஎனது கட்டுரை நூல்களின் வரிசையில் பத்தாவது இது. 'பையத் தின்றால் பனையும் தின்னலாம்' என்று நம் மூதாதையர்கள் அறியாமலா சொன்னார்கள்! பனை எனில் பனை மரம் என்று மட்டும் பொருள் அல்ல. ஒரு பேரளவு, என்றும் பொருள் தருவது. தொல் காப்பியம், எழுத்ததிகாரம், 169-வது நூற்பா. பனையில் எதிர்ப்பதம் தினை என்றும் அறிக. எனவே 2012-2013ல் எழுதிய கட்டுரைகளும், முன்னுரைகளுமாக இத்தொகுப்பு உங்கள் பார்வைக்கு வருகிறது. சம்பிரதாயமான முன்னுரைகளை நான் எழுதுவதில்லை. பிறிதொரு படைப்பாளியின் நூலை மையப்படுத்தும் கட்டுரையாகவே அது இருக்கும். இளைய படைப்பாளிகள் என்பதால் சிறப்புக்களை மட்டுமே சிலாகித்துப் போகிறேன். \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47643434025196,"sku":null,"price":136.3,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/5c46b3153a29834e793d2550d7f0d0fb.jpg?v=1779170913"}],"url":"https:\/\/centaram.com\/collections\/essay.oembed?page=19","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}