{"title":"டாக்டர் மு. ராஜேந்திரன்","description":"","products":[{"product_id":"மதாம்","title":"மதாம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eபிரெஞ்சிந்தியாவின் கவர்னராக 12 ஆண்டுகள் இருந்தவர் ஜோசப் துயூப்ளே. அவரின் மனைவி மதாம் என்றழைக்கப்பட்ட ழான் பேகம்தான் நிழல் கவர்னராகக் கோலோச்சியவர். செல்வாக்குமிக்க கவர்னராகப் பதவியேற்க கப்பலில் வந்திறங்குவதில் தொடங்கி, பதவி பறிக்கப்பட்டு குற்றவாளியாய் பிரான்ஸ் தேசத்திற்குச் செல்ல கப்பல் ஏறுவது வரையிலான காலகட்டம் பற்றிய நாவல்....\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47729445044460,"sku":null,"price":376.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MATHAAM.jpg?v=1781169229"},{"product_id":"காலா-பாணி","title":"காலா பாணி","description":"\u003cp\u003e\u003cspan\u003eகிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகளின் கடிதங்கள், நினைவுக் குறிப்புகள் ஆகியவற்றையும் கே.ராஜய்யன், எஸ்.ஜெயசீல ஸ்டீபன் முதலிய வரலாற்று ஆய்வாளர்களின் நூல்களையும் ஆதாரங்களாகக் கொண்டு இந்த நாவலுக்கான அடித்தளங்களைக் கட்டமைத்திருக்கிறார் மு.ராஜேந்திரன். வேலு நாச்சியாரும் அவரது மருமகன் பெரிய உடையணரும் தலைமறைவாயிருந்த விருப்பாச்சிக் காடுகளிலிருந்து பினாங்கு, சுமத்ரா வரையில் இந்த வரலாற்றுச் சுவடுகளைப் பின்தொடர்ந்து பயணங்களை மேற்கொண்டிருக்கிறார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47873429078252,"sku":null,"price":658.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KAALAPAANI.jpg?v=1782972531"},{"product_id":"செயலே-சிறந்த-சொல்","title":"செயலே சிறந்த சொல்","description":"\u003cp\u003eஇந்திய நிர்வாகவியலின் அடிப்படை கட்டுமானமே ஆட்சிப் பணிதான். உச்சபட்ச அதிகாரத்துடனும் கவர்ச்சியுடனும் இன்றும்  வசீகரித்துக் கொண்டிருக்கும் ஆட்சிப் பணி, அலங்காரமோ,  புகழோ  நிரம்பியவை மட்டுமல்ல. ஒவ்வொரு  துறையும் அரசு இயந்திரத்தை சுழலச் செய்வதற்காகவும்  மக்களின் வாழ்வியலை மேம்படுத்தவும் மட்டுமே என்ற புரிதலில், முப்பதாண்டு கால ஆட்சிப் பணி அதிகாரியாக இருக்கும் டாக்டர் மு.ராஜேந்திரன், இஆப நிர்வகித்த பல்வேறு துறைகளைப் பற்றிய அனுபவப் பகிர்வுகளே, செயலே சிறந்த சொல்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47873440710892,"sku":null,"price":893.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SEYALESIRANTHA.jpg?v=1782973308"},{"product_id":"1801","title":"1801","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇந்திய சுதந்திர வரலாற்றில், விடுதலை எழுச்சிக்கான முதல் குரல் தென்னகத்தில்தான் ஒலித்தது. ஒலிக்கச் செய்தவர்கள் பூலித்தேவர், திப்பு சுல்தான், கட்டபொம்மன், தூந்தாஜி வாக், மருதுபாண்டியர், ஊமைத்துரை, விருப்பாச்சி கோபால் நாயக்கர், தீரன் தின்னமலை உள்ளிட்ட போராளிகளே. தென் இந்தியாவின் போராளிகளை ஒன்று திரட்டி மருது சகோதரர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடத்திய போராட்டமே இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தொடக்கமாகும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47873488748780,"sku":null,"price":517.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/1801.jpg?v=1782973942"},{"product_id":"பல்லவர்-காலச்-செப்பேடுகள்","title":"பல்லவர் காலச் செப்பேடுகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eசெப்பேடுகள் அனைத்தும் பழங்கால அரசு ஆவணங்கள். மன்னர்களின் நேர்முக ஆணைகள், ஆணையிட்டது முதல் செயல்படுத்தும் வரை உள்ள செயல்களின் குறிப்புகள் அடங்கியவை. சுலபமாக எல்லோராலும் எடுத்துப் படித்து விட முடியாது. இந்நிலையில் மாணவர்களும் வரலாற்று ஆர்வலர்களும் எளிதாக படித்து தெரிந்து கொள்ளும் வகையில் படைத்திருக்கிறார் நூலாசிரியர்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47873780711660,"sku":null,"price":329.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PALLAVAR.jpg?v=1782978748"},{"product_id":"கட்டபொம்மன்-வழக்கு-விசாரணை","title":"கட்டபொம்மன் வழக்கு விசாரணை","description":"\u003cp\u003eகட்டபொம்மன் கைது செய்யப்பட்டதிலிருந்து அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள், நடைபெற்ற விசாரணை, தூக்குத் தண்டனை மற்றும் அதன் பின்னர் பாளையக்காரர்களுக்கு எதிராக ஆங்கிலேயர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் ஆகியவை இந்நூலில் விரிவாக இடம்பெற்றுள்ளன. உணர்ச்சிபூர்வமான கதையாக அல்லாமல், ஆவணங்களின் அடிப்படையில் வரலாற்றை அறிந்துகொள்ள விரும்பும் வாசகர்களுக்கு இது அரிய ஆதார நூலாக அமைகிறது.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47873899593964,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KATTAPOMMAN.jpg?v=1782980632"},{"product_id":"சிப்பாயி-களவு-போன-கதை","title":"சிப்பாயி (களவு போன கதை)","description":"\u003cp\u003e\u003cspan\u003eதனது 50வது வயதுக்குப் பிறகு எழுதத் தொடங்கி, பத்தாண்டுகளுக்குள் வரலாற்று ஆய்வு, செப்பேடுகள் உரை, சிறுகதை, நாவல், கட்டுரைகள் என எழுத்தின் பல்வேறு வகைமைகளிலும் எழுதியவர் மு.ராஜேந்திரன், இவரது, ’வடகரை - ஒரு வம்சத்தின் வரலாறு’ என்ற தன் வரலாற்று நாவல், தமிழ் இலக்கியத்தின் முதல் இனவரைவியல் நாவலாக அறியப்படுகிறது. தென்தமிழகத்தில் 1801ஆம் நடைபெற்ற காளையார்கோயில் போரை மையமாக வைத்து இவர் எழுதிய, ’1801’, ’காலாபாணி’ ஆகிய இரட்டை நாவல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றவை. இதில் காலாபாணி நாவல், மத்திய அரசின் 2022ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்றது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47873917059308,"sku":null,"price":206.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SIPAYI.jpg?v=1782980948"},{"product_id":"சட்ட-வல்லுநர்-திருவள்ளுவர்","title":"சட்ட வல்லுநர் திருவள்ளுவர்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஉலகெங்கும் அந்தந்த நாடுகளின் அறக்கருத்துக்களே, அந்தந்த நாடுகளின் சட்டங்களுக்கு முன்னோடிகளாக இருந்துள்ளன. திருக்குறள் தமிழர்களின் மிகச் சிறந்த அறநூல். திருக்குறளில் உள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சட்டக் கருத்துக்காளை ஆழ்ந்த புலமையுடன் ஆய்ந்து, தற்கால நடைமுறையுடன் இந்நூலின் ஒப்பாய்வு செய்துள்ளார் டாக்டர் மு.ராஜேந்திரன் இ.ஆ.ப.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47873937309932,"sku":null,"price":329.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SATTAVALLUNAR.jpg?v=1782981205"},{"product_id":"சேரர்-காலச்-செப்பேடுகள்","title":"சேரர் காலச் செப்பேடுகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eசேர மன்னர் வரலாறு முழுமையாகவும், தொடர்ச்சியாகவும் தொகுத்து எழுதப்பெறாதது போலவே சேரர் செப்பேடுகளும், மிகச் சிலவற்றைத் தவிர, பெரும்பாலும் வரலாற்று நூல்களில் இடம் பெறாதது மட்டுமல்ல, அவை அறிமுகப்படுத்தப்படவுமில்லை. இது பெரும் குறையே. அக்குறையை நீக்கும் பொருட்டு மிக அரிதின் முயன்று இச்சேரர் காலச் செப்பேடுகள் பற்றிய தம் அறிமுக ஆய்வு நூலை முனைவர் மு,ராஜேந்திரன் அவர்கள் படைத்துள்ளார்கள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47874148630764,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SERARKAALA.jpg?v=1782982239"},{"product_id":"சேவல்-கூவி-விடிந்தது","title":"சேவல் கூவி விடிந்தது","description":"\u003cp\u003e\u003cstrong data-start=\"0\" data-end=\"24\"\u003eசேவல் கூவி விடிந்தது\u003c\/strong\u003e – \u003cstrong data-start=\"27\" data-end=\"46\"\u003eமு. ராஜேந்திரன்\u003c\/strong\u003e எழுதிய இந்த நாவல், கிராமிய வாழ்க்கை, மனித உறவுகள் மற்றும் சமூக மாற்றங்களின் தாக்கத்தை யதார்த்தமாகப் பதிவு செய்யும் சிறந்த படைப்பாகும். எளிய மக்களின் அன்றாட வாழ்வில் நிகழும் போராட்டங்கள், நம்பிக்கைகள் மற்றும் வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்லும் மனவலிமை ஆகியவற்றை உணர்வுபூர்வமாக சித்தரிக்கிறது.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47874436104428,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SEVALKOOVI.jpg?v=1782986118"},{"product_id":"வெயில்-தேசத்தில்-வெள்ளையர்கள்","title":"வெயில் தேசத்தில் வெள்ளையர்கள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇந்தியாவில் ஆங்கிலேயர்களின் வாழ்வைப் பற்றி அவர்களே புத்தகங்களாக, நாட்குறிப்புகளாக, கடிதங்களாக, அரசாங்கச் செய்திப் பரிவர்த்தனைகளாக எழுதியிருக்கிறார்கள். அவைகள் நூலகங்களின் கவனிக்கப்படாத இடுக்குகளில் உறங்கிக் கொண்ருக்கின்றன. அவைகளை நூற்றாண்டு கால உறக்கத்திலிருந்து எழுப்பி அழைத்து வந்திருக்கிறேன். ஆங்கிலேயர்களின் வாழ்வை, அவர்கள் சந்தித்த சிக்கல்களைத் தமிழ் வாசகர்களுக்கு விளக்க விரும்பியதன் விளைவு இந்த நூல். ஆங்கிலேயர்களைப் பற்றி நமது பாடப் புத்தகங்களில், பொதுப் புத்தியில் உள்ள கற்பிதங்களை இந்தப் பதிவுகள் மாற்றக்கூடும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47874473165036,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/VEYILTHESAM.jpg?v=1782986852"},{"product_id":"வந்தவாசிப்-போர்-250","title":"வந்தவாசிப் போர் 250","description":"\u003cp\u003e\u003cspan\u003eவந்தவாசிப் போர் நடந்து 250 வருடங்கள் ஆகின்றன என்றும், அச்சமயத்தில் இம்மலையும் ஒரு முக்கிய களமாக இருந்திருக்கலாம் என்றும் அறிந்தோம். மலையிலிருந்து பார்த்தபோது வந்தவாசியின் இடிந்த கோட்டை தென்பட்டது. பின்பு மலையைவிட்டு இறங்கியவுடன் தொல்பொருள் ஆய்வுத் துறையின் காப்பாட்சியர் கலைவாணனிடம் தொடர்பு கொண்டேன். எனது உதவியாளர்கள் ரமேசும் பன்னீர்செல்வமும் கணினி வலையில், 1760 ஆம் ஆண்டு நடந்த வந்தவாசிப் போர் என்று தேட ஆரம்பித்தனர்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47874592637164,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/VANTHAVAASI.jpg?v=1782990427"},{"product_id":"சோழர்-காலச்-செப்பேடுகள்","title":"சோழர் காலச் செப்பேடுகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eடாக்டர் மு.ராஜேந்திரன் IAS, இந்நூலின் வழி எடுத்துரைத்துள்ள அறிய செய்திகள் தமிழுக்கும் தமிழ் வரலாற்றுக்கும் புதிய பரிணாமத்தை அளிக்கும் என்பதில் ஐயமில்லை. வரலாற்று அடிப்படையிலோ அல்லது ஆய்வின் அடிப்படையிலோ குற்றம் இல்லாத வகையில் திகழும் வரலாற்று நூல் இது. பயனுடைய நூல்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47889780834540,"sku":null,"price":470.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/cholarkalam.jpg?v=1783052610"},{"product_id":"வண்ணச்-சீரடி","title":"வண்ணச் சீரடி","description":"\u003cp\u003e\u003cspan\u003eசிலப்பதிகார காப்பிய நாயகி கண்ணகிக்கு நடக்கும் ஒரே திருவிழா சித்திரை பௌர்ணமி திருவிழா. மங்கலதேவி கண்ணகிக் கோட்டம் இருக்கும் விண்ணேற்றிப் பாறையில் இரு மாநில எல்லைப் பிரச்சினையில் பராமரிப்பின்றி சிதிலமடைந்து கிடைப்பது குறித்து, இந்து தமிழ் திசையில் கட்டுரை ஒன்று எழுதியுள்ளேன். நாற்பதாண்டுகளுக்கும் மேலாக நடக்கும் மங்கலதேவி கண்ணகிக் கோட்டம் பராமரிப்பு குறித்து டாக்டர் மு.ராஜேந்திரன்,இஆப 'வண்ணச் சீரடி' என்றொரு நூல் எழுதியிருக்கிறார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47889802526956,"sku":null,"price":423.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/vannaseweradi.jpg?v=1783052991"},{"product_id":"யானைகளின்-கடைசி-தேசம்","title":"யானைகளின் கடைசி தேசம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eசிவகங்கை அரசர் வெங்கம் பெரிய உடையணத் தேவர் நாடு கடத்தப்பட்டு, சிறை வைக்கப்பட்டிருந்த நாடு. கலையெழில் நிரம்பிய இந்து, பௌத்தக் கோயில்கள் நிரம்பிய தீவு. ஒரே நேரத்தில் பெருமிதமும் துயரமும் பெருகச் செய்யும் பதினாயிரம் தீவுகள் கொண்ட தேசமான இந்தோனேசியா பற்றிய பயண அனுபவங்களைப் பேசும் நூல். ‘யானைகளின் கடைசி தேசம்.’ இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான டாக்டர் மு. ராஜேந்திரனின் இந்தோனேசியப் பயண அனுபவங்கள், வரலாற்றைத் தேடி அறியும் நோக்கத்தையும் கொண்டிருப்பதால், பயணக் கட்டுரைகளுக்கானப் புதிய பரிமாணத்தைக் கொடுக்கின்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47889860428012,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/yanaigalinkadaisidesam.jpg?v=1783053568"},{"product_id":"பாதாளி","title":"பாதாளி","description":"\u003cp\u003e\u003cspan\u003eநாம் எல்லோரும் நம்முடைய பழைய நினைவுகளைச் சுமந்து கொண்டுதான் நம்முடைய கிராமங்களை நோக்கிப் போகிறோம். ஆனால், நம் நினைவுகளின் பசுமையை நம்முடைய கிராமங்களிலேயே நம்மால் காண முடியவில்லை. நாம் நினைத்துக் கொண்டு செல்லும் கிராமம் அங்கு இருப்பதில்லை. நம்முடைய நினைவுகளாய் இருக்கும் தெருக்களின் முகங்கள் மாறிவிட்டன. நம்மிடம் அன்பு செலுத்திய அப்பத்தாக்கள், வீட்டுத் திண்ணைகளோடு சேர்ந்து காணாமல் போய் விட்டார்கள். கால் போன போக்கில் ஊரைச் சுற்றிச் சுற்றி வந்தாலும், நம்முடைய நினைவில் பதிந்த நம் பழைய கிராமத்தை நம்மால் யதார்த்தத்தில் மீட்டெடுக்க முடியவில்லை.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47889903354092,"sku":null,"price":282.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/paathali.jpg?v=1783054354"},{"product_id":"பாண்டியர்-காலச்-செப்பேடுகள்","title":"பாண்டியர் காலச் செப்பேடுகள்","description":"\u003cp\u003e  பாண்டியர் வரலாறு பழையது, நெடியது, தொடர்ந்தது, தமிழக முப்பேரரசுகளின் முழுவரலாறு இந்நாள் வரை முழுமையாகப் பெறப்படவில்லை. இது ஒரு தவக்குறை. தவக்குறை நீக்கும் அரும்பெரும் முயற்சியாளர்களில் ஒருவராய் ’பாண்டியர் காலச் செப்பேடுகளை’ படைத்தளிப்பவர் எமது சால்புறு ஞானமகன் முனைவர் மு.ராஜேந்திரன், ஐ.ஏ.எஸ்., ஆவர்.\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47890017616108,"sku":null,"price":329.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/pandeyarkaala.jpg?v=1783056939"},{"product_id":"கம்பலை-முதல்","title":"கம்பலை முதல்","description":"\u003cp\u003eவரலாறு குறித்து பல்வேறு தளங்களில் எழுதியும், படித்தும், பயணித்தப் போதும் நாங்கள் வியந்த, பிரமித்த, சந்தேகித்த, விவாதித்த, புதிதாக அறிந்து கொண்ட வரலாற்றின் நுணுக்கங்களே இக்கட்டுரைகள்.\u003c\/p\u003e\n\u003cp\u003eவரலாற்றின் மேல் கவிந்துள்ள நூற்றாண்டு தூசியையும், சோம்பலையும், அதன் புராதனத்தையும் கொஞ்சம் திரை விலக்கி, வரலாற்ற்றை வெகுஜன தளத்தில் சுவாரஸ்யப்படுத்த வேண்டும், வரலாற்றை அறிந்து கொள்வதின் மூலமாகவே பிற துறைகளை, இன்றைய வாழ்வை, நம் மரபை, நம் புதுமையைப் புரிந்து கொள்ள முடியும் என்பதை இன்றைக்குள்ள இளைய தலைமுறையிடம் உணர்த்த வேண்டும் என்ற ஆர்வத்தில் எழுதப்பட்டவையே இத்தொகுப்பின் கட்டுரைகள்.\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47890269405420,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/kappalai.jpg?v=1783059229"},{"product_id":"வடகரை-ஒரு-வம்சத்தின்-வரலாறு","title":"வடகரை: ஒரு வம்சத்தின் வரலாறு","description":"\u003cp\u003e\u003cspan\u003eஒரு வம்சம் 600 ஆண்டு காலத்தில் எப்படியெல்லாம் துளிர்த்தும் துவம்சம் ஆகியும் உருமாறிக்கொண்டு இருந்தது என்பதைச் சொல்லும் வரலாறு இது. புனைவுகளில் மட்டும்தான் திடுக்கிடும் திருப்பங்களும், அலற வைக்கும் அழுகைகளும் நல்லது கூடி வரும்போது குலமே கெட்டுப் போகும் அளவுக்கு இழப்புகளும் இருக்க முடியுமா? இல்லை, உண்மை வரலாற்றிலும் இப்படி படிநிலை வளர்ச்சியைப்போல் நடக்கும் அல்லவா? அப்படி ஒரு குடும்பத்துக்காரராக டாக்டர். மு.ராஜேந்திரன் இருக்கிறார். எங்கோ ஓர் ஊருக்குப் போய், எவர் குலத்து கதையையோ கள ஆய்வு செய்து எழுதுவதைவிடத் தனது சொந்த வம்சத்தைப் பற்றி எழுதப் புகுந்தது முதல் துணிச்சல். \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47890360631532,"sku":null,"price":470.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/vadagarai.jpg?v=1783059765"}],"url":"https:\/\/centaram.com\/collections\/dr-m-rajendran.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}