{"title":"ஜெயகாந்தன்","description":"","products":[{"product_id":"ஒரு-வீடு-பூட்டிக்-கிடக்கிறது","title":"ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது","description":"\u003cp\u003e\u003cspan\u003eதமிழ்ச் சிறுகதைகளுக்கு புதிய வார்ப்பும் வடிவமும் வனப்பும் வழங்கியவர் ஜெயகாந்தன். சிறுகதை இலக்கியத்துக்கு விரிவான வாசகப் பரப்பை உருவாக்கியவரும் அவரே. ஜெயகாந்தனின் மொத்தச் சிறுகதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பதினேழு கதைகளின் தொகுப்பு ‘ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது’. ஒரு காலகட்டத்தைச் சேர்ந்த தமிழ் சிறுகதைப் போக்கையும் முன்னோடி எழுத்தாளர் ஒருவரின் நோக்கையும் அடையாளப்படுத்துகிறது இத்தொகுப்பு. சுகுமாரன்\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eஜெயகாந்தன்\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eஜெயகாந்தன் (1934 - 2015) த. ஜெயகாந்தன் தென்னார்க்காடு மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் 1934இல் பிறந்தார். தொடக்கப் பள்ளிக் கல்வியைக்கூட முடிக்காத இவர், சுயமாகக் கற்று 1950 முதல் சிறுகதைகள் எழுதத் தொடங்கினார். சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்கள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், திரைக்கதை வசனங்கள், நேர்காணல்கள் என எழுபத்தைந்துக்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவந்துள்ளன. கவிதைகளும் எழுதியுள்ளார். சிறுகதைகள், கட்டுரைகளின் முழுத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன. இவரது சிறுகதைகள், நாவல்கள் பல்வேறு இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நாளிதழ், இலக்கிய இதழ்களின் ஆசிரியராகவும் இருந்துள்ளார். சில திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். ஞானபீட விருது, சாகித்ய அகாதெமி விருது, ராஜராஜன் விருது பெற்றுள்ளார். இவர் இயக்கிய ‘உன்னைப் போல் ஒருவன்’ திரைப்படம் குடியரசுத் தலைவர் விருது (1964) பெற்றது. ஏப்ரல் 8, 2015 அன்று சென்னையில் காலமானார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47605662318828,"sku":null,"price":323.75,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/bc3e77407bb03d43ef02f4edf9676777.jpg?v=1778138317"},{"product_id":"சில-நேரங்களில்-சில-மனிதர்கள்","title":"சில நேரங்களில் சில மனிதர்கள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eபெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய 'அக்கினிப் பிரவேசம்' சிறுகதையின் நீட்சியாக உருவான 'சில நேரங்களில் சில மனிதர்கள்' நாவல், ஒரே சம்பவத்தின் மாறுபட்ட சாத்தியக் கூறுகளைப் பற்றிய சிந்தனைக்கான வாசல்களைத் திறந்துவைக்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eஒரு சம்பவத்தின் விளைவு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். நிஜ வாழ்வில் அதன் சாத்தியங்கள் எண்ணற்றவை; புனைவிலும் அப்படித்தான். பதின் பருவத்தில் வன்புணர்வுக்கு ஆளான ஒரு பெண் சமூகத்தின் பார்வையில் களங்கப்பட்டு நிற்கிறாள். ஆனால் அந்தக் களங்கத்தைக் கண்டு ஒடுங்கிவிடாமல் கம்பீரமாக எழுந்து நிற்கிறாள். தன் வாழ்க்கையைத் தானே தீர்மானிக்கும் துணிவுடன் செயலாற்றுகிறாள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eதமிழ்ப் புனைவுலகின் மறக்க முடியாத பாத்திரங்களில் ஒன்றாக இந்த நாவலின் நாயகி உருப்பெறுகிறாள். அந்தப் பாத்திரத்தின் முன்னிலையில் மற்றவர்கள் சிறுத்துப்போகாமல் தத்தமது அடையாளங்களுடன் காத்திரமாக வெளிப்படுகிறார்கள். இதன் மூலம் அவளோடு சம்பந்தப்பட்ட அனைவருக்குமான நியாயத்தை ஜெயகாந்தன் வழங்குகிறார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eதனியொரு பெண்ணின் கதையைச் சொல்லவந்த ஜெயகாந்தன் அதன்வழி சமூகத்தின் மதிப்பீடுகளையும் தீவிரமாகக் கேள்விக்குட்படுத்துகிறார். கருத்தின் மூலம் அல்லாமல் வாழ்வின் அசைவுகளைக் கலாப்பூர்வமாகச் சித்தரிப்பதன் மூலம் இதைச் செய்கிறார். எழுதி 55 ஆண்டுகள் கழித்தும் வாசகர்களின் மகத்தான வரவேற்பைப் பெற்றுவரும் இந்த நாவல் நவீன இலக்கியத்தின் செவ்வியல் படைப்புகளுள் ஒன்றாக மிளிர்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47605713338604,"sku":null,"price":394.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/74e842865cddbcdd1501b27d00dcb049.jpg?v=1778139497"},{"product_id":"ஒரு-மனிதன்-ஒரு-வீடு-ஒரு-உலகம்","title":"ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eதனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ஜெயகாந்தனாலும் அவரது நாவல்களில் ஆகச் சிறப்பானது என்று இலக்கிய விமர்சகர்களாலும் குறிப்பிடப்படுவது ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்.’ எந்த ஊர், பெற்றோர் யார், என்ன இனம், என்ன சாதி என்று எதுவும் தெரியாத, அது பற்றிக் கவலையும் கொள்ளாத ஒரு உலகப் பொது மனிதனைக் கதாபாத்திரமாக்கி, அவன் எதிர்கொள்ளும் அனுபவங்களின் மூலம் இந்த வாழ்க்கையின் போக்கு குறித்த புரிதலை உணர்த்த முனையும் நாவல் இது.எழுதப்பட்டு ஏறத்தாழ முப்பத்தைந்தாண்டுகளைக் கடந்த பின்னரும் இன்றைய சூழலுக்கும் பொருந்துவதான வாசிப்பனுபவத்தைத் தருவதன் மூலம் இந்த நாவல் ஒரு கலைப்படைப்பாக நிமிர்ந்து நிற்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eஜெயகாந்தன்\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eஜெயகாந்தன் (1934 - 2015) த. ஜெயகாந்தன் தென்னார்க்காடு மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் 1934இல் பிறந்தார். தொடக்கப் பள்ளிக் கல்வியைக்கூட முடிக்காத இவர், சுயமாகக் கற்று 1950 முதல் சிறுகதைகள் எழுதத் தொடங்கினார். சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்கள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், திரைக்கதை வசனங்கள், நேர்காணல்கள் என எழுபத்தைந்துக்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவந்துள்ளன. கவிதைகளும் எழுதியுள்ளார். சிறுகதைகள், கட்டுரைகளின் முழுத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன. இவரது சிறுகதைகள், நாவல்கள் பல்வேறு இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நாளிதழ், இலக்கிய இதழ்களின் ஆசிரியராகவும் இருந்துள்ளார். சில திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். ஞானபீட விருது, சாகித்ய அகாதெமி விருது, ராஜராஜன் விருது பெற்றுள்ளார். இவர் இயக்கிய ‘உன்னைப் போல் ஒருவன்’ திரைப்படம் குடியரசுத் தலைவர் விருது (1964) பெற்றது. ஏப்ரல் 8, 2015 அன்று சென்னையில் காலமானார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47606026010860,"sku":null,"price":347.75,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/57b2b1d96b1155a76c1843b1367c8315.jpg?v=1778146194"},{"product_id":"சில-நேரங்களில்-சில-மனிதர்கள்-1","title":"சில நேரங்களில் சில மனிதர்கள்","description":"\u003ch3\u003e\u003c\/h3\u003e\n\u003cdiv\u003e\n\u003ch4\u003e\n\u003cspan\u003e \u003cb\u003eஇந்த நாவலை எழுதுவதன் மூலம் என்னைப் புதிதாய் ஒரு சோதனையில் நான் ஈடுபடுத்திக் கொண்டேன். காலங்கள் மாறும்போது மனிதர்களும் மாறித்தான் ஆக வேண்டும். மாறிய மனிதர்களைக் காலத்தின் மாற்றமே காண வைக்கிறது. \u003c\/b\u003e\u003c\/span\u003e\u003cspan\u003e\u003cb\u003eபல மாற்றங்கள் சமுதாய வாழ்வில் புதுமையானைவயாக இருந்தாலும் தனி மனிதர்கள் வாழ்வில் காலங்கடந்த மாற்றங்களாகவே, நிராசைகளின் நிலைத்த சித்திரங்களாகவே உயிரிழந்து வந்து நிற்கின்றன. காலத்தின் அலைகளால் எற்றுண்ட, மோதி மூழ்கிய, போக்கில் மிதந்த, எதிர்த்து ஓய்ந்த ஓர் ஆத்மாவின் கதை இது! ஜெயகாந்தன்.\u003c\/b\u003e\u003c\/span\u003e\n\u003c\/h4\u003e\n\u003c\/div\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47718082380012,"sku":null,"price":399.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SILANERANGALIL.jpg?v=1780912742"},{"product_id":"சில-நேரங்களில்-சில-மனிதர்கள்-2","title":"சில நேரங்களில் சில மனிதர்கள்","description":"\u003ch3\u003e\n\u003cb\u003eசில நேரங்களில் சில மனிதர்கள்( sila nerangalil sila manitharkal\u003c\/b\u003e\u003cb\u003e)-ஜெயகாந்தன்(Jayakanthan) (Sahitya Academy Winning Novel)(\"சாகித்திய அகாதெமி விருது\" பெற்ற சிறந்த நாவல்)\u003c\/b\u003e\n\u003c\/h3\u003e\n\u003cdiv\u003e\n\u003ch4\u003e\n\u003cspan\u003e \u003cb\u003eஇந்த நாவலை எழுதுவதன் மூலம் என்னைப் புதிதாய் ஒரு சோதனையில் நான் ஈடுபடுத்திக் கொண்டேன். காலங்கள் மாறும்போது மனிதர்களும் மாறித்தான் ஆக வேண்டும். மாறிய மனிதர்களைக் காலத்தின் மாற்றமே காண வைக்கிறது. \u003c\/b\u003e\u003c\/span\u003e\u003cspan\u003e\u003cb\u003eபல மாற்றங்கள் சமுதாய வாழ்வில் புதுமையானைவயாக இருந்தாலும் தனி மனிதர்கள் வாழ்வில் காலங்கடந்த மாற்றங்களாகவே, நிராசைகளின் நிலைத்த சித்திரங்களாகவே உயிரிழந்து வந்து நிற்கின்றன. காலத்தின் அலைகளால் எற்றுண்ட, மோதி மூழ்கிய, போக்கில் மிதந்த, எதிர்த்து ஓய்ந்த ஓர் ஆத்மாவின் கதை இது! ஜெயகாந்தன்.\u003c\/b\u003e\u003c\/span\u003e\n\u003c\/h4\u003e\n\u003c\/div\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47718132023532,"sku":null,"price":319.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/38e79f13bdaca759aed7793816065acd.jpg?v=1780916213"},{"product_id":"ஓர்-இலக்கியவாதியின்-கலையுலக-அனுபவங்கள்","title":"\"ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்","description":"\u003cp\u003e\u003cstrong data-start=\"273\" data-end=\"315\"\u003eஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்\u003c\/strong\u003e என்பது எழுத்தாளர் \u003cstrong data-start=\"334\" data-end=\"348\"\u003eஜெயகாந்தன்\u003c\/strong\u003e திரைப்பட உலகில் பெற்ற அனுபவங்களையும், கலை, இலக்கியம் மற்றும் சமூகத்தைப் பற்றிய அவரது ஆழமான சிந்தனைகளையும் பதிவு செய்த முக்கியமான கட்டுரைத் தொகுப்பாகும். எழுத்தாளராகவும், திரைப்பட இயக்குநராகவும் அவர் சந்தித்த மனிதர்கள், நிகழ்வுகள் மற்றும் படைப்புப் பயணத்தின் பல்வேறு பரிமாணங்களை இந்த நூல் வெளிப்படுத்துகிறது.\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47951555231980,"sku":null,"price":310.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/OORELAKEYA.jpg?v=1784185084"}],"url":"https:\/\/centaram.com\/collections\/d-jayakanthan.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}