{"title":"சைபர் சிம்மன்","description":"","products":[{"product_id":"டிஜிட்டல்-பணம்","title":"டிஜிட்டல் பணம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eமொபைல் வாலெட், பேடிஎம், இணையப் பரிவர்த்தனை என்று ரொக்கத்துக்கான அற்புதமான மாற்றுகள் ஏற்கெனவே வெற்றிபெற ஆரம்பித்துவிட்டன. இருந்தும் சந்தேகங்களும் அச்சங்களும் முற்றிலுமாக விலகிவிடவில்லை. பணக்காரர்களும் படித்தவர்களும் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறலாம்; ஏழைகளும் படிக்காதவர்களும் என்ன செய்வார்கள்? அடிப்படை வசதிகளே அற்ற கிராமங்களில் டிஜிட்டல் பணம் சாத்தியமா? வயதானவர்களுக்கு நவீனத் தொழில்-நுட்பமெல்லாம் புரியுமா? பெட்டிக்கடைகளில் இது வேலை செய்யுமா? டிஜிட்டல் பணத்தால் அடித்தட்டு மக்களுக்கு என்ன லாபம்? டிஜிட்டல் பணம் பாதுகாப்பானதா? வளர்ந்த நாடுகளிலும் பின்தங்கிய நாடுகளிலும் டிஜிட்டல் பரிவர்த்தனை எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது? விரிவாக அலசுகிறது இந்நூல். டிஜிட்டல் பரிமாற்றத்துக்கு இணையமோ ஸ்மாட்போனோ அவசியமில்லை, சாதாரண மொபைலே போதுமானது என்று விரிவான ஆதாரங்களுடன் நிறுவுகிறார் சைபர் சிம்மன். அதனாலேயே அடித்தட்டு மக்களுக்கான முதன்மையான தொழில்நுட்பமாகவும் டிஜிட்டல் பணமே இருக்கப்போகிறது. அனைவரையும் உள்ளடக்கிய, அனைவருக்கும் பலனளிக்கக்கூடிய ஒரு நிதிச் சமூகத்தை இந்தியாவில் உருவாக்கவேண்டுமானால் அதற்கு டிஜிட்டல் பணமே ஒரே வழி என்பதை எளிமையாகவும் திறமையாகவும் புரியவைக்கிறது இந்நூல்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47729637753068,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/acf4a1b9ae86f4b49ac9d1456e200a8d.jpg?v=1781170770"},{"product_id":"சாட்ஜிபிடி-சரிதம்","title":"சாட்ஜிபிடி சரிதம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eசாட்ஜிபிடி எனும் ஏஐ திறன் கொண்ட பேசும் மென்பொருள் உருவான விதத்தையும், அதன் வரலாற்று பின்னணியையும் விவரிக்கும் நூல் இது. உலகையே தலைகீழாக மாற்றிவிடும் என சாட்ஜிபிடி அறிமுகம் உண்டாக்கிய பரபரப்புக்கு மத்தியில், இந்த சாட்பாட் செயல்படும் விதத்தையும், முக்கியமாக அதன் வரம்புகளையும் இதில் உள்ள கட்டுரைகள் உணர்த்துகின்றன. அதோடு, சாட்ஜிபிடியை மையமாக கொண்டு பொதுவாக ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த பிரச்சனைகளையும் பல்வேறு கோணங்களில் படம் பிடித்துக்காட்டுகிறது. ஏஐ விவாதத்தில் அதன் அடிப்படை அம்சங்கள் தொடர்பான புரிதல் அவசியம் எனும் வகையில், ஏஐ நுட்பங்களை விளக்க முற்பட்டுள்ளதோடு, ஆக்கத்திறன் ஏஐ சார்ந்த சிக்கல்களையும், கேள்விகளையும் அலசுகிறது. செயற்கை தரவுகள், பொய் ஆக்கங்கள் உள்ளிட்ட நவீன பிரச்சனைகளையும் சுட்டிக்காட்டுகிறது. ஏஐ பரப்பில் இந்த நூல் தொட்டுக்காட்டும் புள்ளிகள் அநேகம். இந்து தமிழ் திசையின் காமதேனு டிஜிட்டல் பதிப்பு மற்றும் தமிழ் யுவர்ஸ்டோரியில் வெளியான கட்டுரைகளின் நூல் வடிவம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47944788476140,"sku":null,"price":329.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/1c1180bd7b6ec0509bf787e913a03370_2aefc60e-7692-4891-99a6-f5560612e790.png?v=1784033293"}],"url":"https:\/\/centaram.com\/collections\/cyber-simman.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}