{"title":"சாரு நிவேதிதா","description":"","products":[{"product_id":"எக்ஸைல்","title":"எக்ஸைல்","description":"\u003cp\u003e\u003cspan\u003eAutofiction என்ற இலக்கிய வகையில் உலக அளவிலேயே ஒன்றிரண்டு பேர்தான் எழுதுகிறார்கள். இந்த நாவலில் அதனை வெற்றிகரமாகக் கையாண்டிருக்கிறார் சாரு. நடையும் விவரணங்களும் baroque பாணியில் அமைந்திருக்கின்றன. ஆடம்பரமும் நுணுக்கமான கலை வேலைப்பாடுகளும் படாடோபமும் கலந்தது பரோக் பாணி கட்டிடக் கலை. உதாரணமாக, கைலாச மலையின் வடக்கே உள்ள மைநாக மலைக்கு அருகே உள்ள பிந்து நதியின் கரையிலிருந்து ரத்தினங்களையும் தங்கத்தையும் எடுத்து வந்து பாண்டவர்களுக்காக மயன் கட்டிய மாளிகையைச் சொல்லலாம். இந்த நாவலின் கட்டமைப்பும் விவரணங்களும் பிரம்மாண்டமும் அந்த மயன் மாளிகைக்கு ஒப்பானவை. சாரு நிவேதிதாவின் வழக்கமான பாணியில் இல்லாமல் செவ்வியல் மரபில் எழுதப்பட்ட இந்த நாவல் ஐயாயிரம் ஆண்டுகள் நீண்ட தமிழர்களின் ஞான மரபை அகத்தியர், தேரையர், தொல்காப்பியரிலிருந்து தொடங்கி, இன்றைய முள்ளிவாய்க்கால் வரை ஆவணப்படுத்துகிறது. மரம், செடி, கொடி, பாம்பு, யானை, எலி, பூனை, நாய், பல்லி, குரங்கு, மீன் என்று பல்லுயிர்களையும் பேசும் இந்த நாவலில் மனித வர்க்கத்தைப் பற்றி மிகக் குறைவாகவே காண முடியும். வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்ற சித்தன் வாக்கு வெகு சுவாரசியமான நடையில் நாவலாக விரிந்திருக்கிறது. இந்தப் பக்கங்களில் இதை ஒரு நாவலாகவும் ஒருவர் வாசிக்கலாம். வாழ்க்கை பற்றிய ஒரு வழிகாட்டி நூலாகவும் கொள்ளலாம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47943687078124,"sku":null,"price":940.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/5278170d6bad8a9afb05304058139c08.png?v=1784018058"},{"product_id":"நிலவு-தேயாத-தேசம்துருக்கி-பயணக்-கட்டுரை","title":"நிலவு தேயாத தேசம்(துருக்கி பயணக் கட்டுரை)","description":"\u003cp\u003e\"ஒரு இடம் என்பது அங்கே வாழ்ந்த மனிதர்களின் பெருமூச்சுகளையும் கண்ணீர்த் துளிகளையும் சிரிப்பின் அலைகளையும் வேட்கையின் கங்குகளையும் இசையையும் நாட்டியத்தையும் நூற்றாண்டு நூற்றாண்டுகளாகத் தன்னகத்தே வைத்துக்கொண்டு அந்தக் கதைகளைக் கேட்க வரும் யாரோ ஒருவருக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது.”\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47943869104364,"sku":null,"price":357.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/365c5419836d0175122c54b4b30be155.jpg?v=1784019050"},{"product_id":"காமரூப-கதைகள்","title":"காமரூப கதைகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eசாருநிவேதிதாவின் புனைவுகள் அனைத்தும் திரும்பத் திரும்ப உறவுகளின் உறைபனியையே தொட முயலுகின்றன. ஆனால் உறைபனி நமக்குப் பழக்கமில்லாதது. அல்லது நாம் அவை நம்மீது இடையறாது பொழிகிறது என்பதை நம்பவிரும்புவதில்லை. பயத்திற்கும் நிச்சயமின்மைக்கும் இடையே நிகழும் வாழ்வின் நடனங்களை எதிர்கொள்கிறது இந்த நாவல். அது களியாட்டத்திற்கும் மரணத்திற்கும் இடையே காமத்தை அது சூழ்ச்சியும் வாதையும் போதமும் மிகுந்த மர்ம வெளியாக மாற்றுகிறது. இந்த மர்ம வெளியைக் கடந்து செல்பவர்கள் தங்கள் அடையாளம் என்று எதையும் நிறுவுவதில்லை. மாறாக தங்களது ஒடுக்கப்பட்ட கனவுகளை சோதித்துப் பார்க்கும் ஒரு சோதனைக் களமாக சிறிய சாகசங்களை நிகழ்த்திவிட்டு மீண்டும் தமது ராணுவ ஒழுங்குகளுக்குள் திரும்பிச் சென்றுவிடுகிறார்கள். ஒற்றர்கள், மறைந்து திரிபவர்கள், தண்டிக்கப்படுபவர்கள், தப்பிச் செல்பவர்கள் மட்டுமே நிறைந்த ஒரு காதல்கதையை எழுதுவதுதான் இந்த நாவலாசிரியனின் சாத்தியமாக இருக்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47943873134828,"sku":null,"price":464.07,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/1e858a1dbd81187533968af18fa112c2.jpg?v=1784019494"},{"product_id":"இச்சைகளின்-இருள்வெளி","title":"இச்சைகளின் இருள்வெளி","description":"\u003cp\u003e\u003cspan\u003eகேரளத்தை சேர்ந்த நளினி ஜமிலா தன் கதையை உலகிற்கு சொன்னபோது அது பாலியல் தொழிலாளிகள் உலகின் நேரடிக்குரலாக வெளிப்பட்டது.பாலியல் தொழிலாளர்களைப் பரிதாபத்திற்குரியவர்களாக மட்டுமே பார்க்கும் பாசாங்கான மனிதாபிமான பார்வைகளை நளினி ஜமிலாவின் குரல் கேள்விக்குள்ளாக்குகிறது.நளினி ஜமிலாவோடு சாரு நிவேதிதா நிகழ்த்திய இந்த உரையாடல் இருண்ட உலகின் அறியப்படாத மூலைகளில் வெளிச்சம் பாய்ச்சுகிறது.பாலியல் தொழிலாளிகள் பற்றி நிலவும் பொதுப்புத்தி சார்ந்த பிம்பங்களைத் தகர்கிறது.அந்த உலகத்தில் வாழும் ஒரு பெண்ணின் பிரச்சினைகளை அதற்குரிய மானுட கௌரவத்துடன் அணுகுகிறது இந்த உரையாடல்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47943888470252,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/59d921dfa5d8ae11d56e968d15e00802.webp?v=1784019989"},{"product_id":"எக்ஸிஸ்டென்ஷியலிசமும்-ஃபேன்ஸி-பனியனும்","title":"எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇந்த நாவல் வெளிவந்த புதிதில் பிரம்மராஜன் இது ஜேம்ஸ் ஜாய்ஸின் A Portrait of the Artist as a Young Man நாவலில் ஒரு முக்கியமான கண்ணி உண்டு. எந்த ஒரு இடத்திலும் மதிப்பீட்டு அளவிலான தீர்ப்பை முன் வைக்கும் வார்த்தைகளையோ பார்வையையோ இதில் காண முடியாது. அப்படி ஒரு நாவலை தமிழில் வாசித்தது இல்லை; என்னுடைய மற்ற நாவல்களையும் சேர்த்தே சொல்கிறேன். அந்த வகையில் இந்த நாவல் தனித்தன்மை கொண்டது. -சாரு நிவேதிதா\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47943957545196,"sku":null,"price":216.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/13c494e63815ee524ab784db21dc613f.jpg?v=1784020359"},{"product_id":"ஊரின்-மிக-அழகான-பெண்","title":"ஊரின் மிக அழகான பெண்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஊரின் மிக அழகான பெண் என்ற தொகுப்பில் உள்ள கதைகள் உலகின் பிரபலமான சிறுகதைத் தொகுதிகளில் பார்க்க முடியாத அரிதினும் அரிதான கதைகள். லத்தீன் அமெரிக்க இலக்கியத்தில் பரிச்சயம் உள்ளவர்களுக்குக் கூட பனாமாவைச் சேர்ந்த ரொஹேலியோ சினான் (Rogelio Sinan) என்பவரைப் பற்றித் தெரிந்திருக்காது. ஏனென்றால், லத்தீன் அமெரிக்கச் சூழலிலேயே அதிகம் விவாதிக்கப்படாதவர் அவர். தமிழ்ச் சூழலில் தி.ஜ.ரங்கநாதன், ப.சிங்காரம், நகுலன் போல் வைத்துக் கொள்ளுங்களேன். ரொஹேலியோ சினான் பற்றி இணையத்தில் தேடினால்கூட மூணு வரி தான் போட்டிருக்கும். இவர்களைப் பற்றியெல்லாம் நான் கூபாவிலிருந்து வந்து கொண்டிருந்த Granma என்ற வாரப் பத்திரிகையிலிருந்து தெரிந்து கொண்டேன். டேப்ளாய்ட் அளவில் வரும் அந்தப் பத்திரிகை. இதுவரை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படாத தென்னமெரிக்கக் கதைகளை முதன்முதலாக மொழிபெயர்த்து வெளியிட்டு வந்தார்கள் அப்பத்திரிகையில். அந்த வகையில் இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளை பிரபலமான லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகளின் தொகுப்பிலேயே கூட பார்க்க இயலாது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47944039891180,"sku":null,"price":329.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/7a78ecc4fd30b2c4e274f0c4cce27933.png?v=1784020697"},{"product_id":"சினிமா-சினிமா","title":"சினிமா சினிமா","description":"\u003cp\u003e\u003cspan\u003eதமிழில் வெளியான திரைப்படங்கள் மட்டுமின்றி, இந்தியாவில் வெளியான சில படங்கள் குறித்தும், உலகின் மற்ற மொழிகளில் வெளியான சில படங்கள் குறித்தும் இந்நூலில் கட்டுரைகள் எழுதியுள்ளார் சாரு நிவேதிதா. தமிழ் சினிமா குறித்து அவருக்கு இருக்கும் கறாரான பார்வை, தமிழ் விமர்சன மரபுக்கு மிக முக்கிய பங்களிப்பாகவே இருக்கிறது. மற்ற மொழிப் படங்களைப் பற்றியும் ஒருசேர வாசிக்கும்போது. ஒரு ஒப்பீட்டு அடிப்படையில் சர்வேதேசத் தரம் என்ன என்பதை வாசகர்கள் அறிந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கிறது. தமிழ் திரைப்படங்களை வெறுமனே விமர்சன ரீதியில் மட்டும் அணுகாமல், அவ்வபோது வெளியாகும் சிறந்த படங்களை இதில் சிலாகித்து பேசவும் செய்கிறார். சினிமாவை அதன் அழகியலோடு அணுக இந்த புத்தகம் வாசகர்களுக்கு உதவும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47944677621996,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/eff34cd3a2dca4e09078c4165e906b3a.jpg?v=1784024386"},{"product_id":"இஞ்சி-சுக்கு-கடுக்காய்","title":"இஞ்சி சுக்கு கடுக்காய்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇஞ்சி, சுக்கு, கடுக்காய் — வாழ்க்கையின் சுவை, காரம், கசப்பு அனைத்தையும் தயக்கமின்றி எதிர்கொள்ளும் சாரு நிவேதிதாவின் அ-புனைவு எழுத்துகள்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eநினைவு, பயணம், இசை, இலக்கியம், தனிமை, அரசியல் ஆகியவை ஒன்றாகக் கலக்கும் இந்நூல், கட்டுரைகளாக அல்ல, காலத்தின் துடிப்பாக வாசகனை அணுகுகிறது.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eசமாதானம் தராத, ஆனால் சிந்திக்க வைக்கும் எழுத்துகளின் தொகுப்பு.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஇந்நூல் ஆகஸ்ட் 2012 முதல் அக்டோபர் 2013 வரையிலான காலகட்டத்தில் சாரு நிவேதிதா தனது இணையதளத்தில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாகும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47944713699564,"sku":null,"price":169.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/eb656a015daf5c94ad4aa37311185336.webp?v=1784025053"},{"product_id":"தேகம்","title":"தேகம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇன்றைய சினிமா, சிறார்களின் விடியோ விளையாட்டுகள், பத்திரிகைகள், செய்தித்தாள்கள், அன்றாட வாழ்க்கை என்று எதை எடுத்துக் கொண்டாலும் வன்முறைதான் அதன் அடியோட்டமாக இருக்கிறது. மொழி, நாகரிகம், பண்பாடு, கலாசாரம் என்று எத்தனையோ விழுமியங்களைக் கொண்டுள்ள மனித சமூகம் ஏன் வன்முறையைக் கொண்டாடுகிறது? ஒரு மனிதன் இன்னொரு மனிதனை வதைப்பதில் ஏன் இன்பம் காண்கிறான்? இதில் செயல்படும் அதிகாரம் எவ்வாறு உருவாகிறது? அந்த அதிகாரத்தின் அரசியல் என்ன? இது போன்ற பலவிதமான கேள்விகளை எழுப்பக் கூடியது தேகம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47944719925484,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/621df8db19fc1af02da8c1786a70a671.webp?v=1784025993"},{"product_id":"அன்பு-ஒரு-பின்நவீனத்துவவாதியின்-மறுசீராய்வு-மனு","title":"அன்பு ஒரு பின்நவீனத்துவவாதியின் மறுசீராய்வு மனு","description":"\u003cp\u003eஇப்படி ஒரு நாவல் இனிமேல் தமிழில் வருமா என்பது சந்தேகம்தான்.  கி.பி. 258ஆம் ஆண்டு வலேறியன் என்ற ரோமைப் பேரரசன் கிறிஸ்துவர்களை வதைத்தான். திருச்சபையின் சொத்துக்களை சூறையாட நினைத்திருந்தபோது இரண்டாம் சிக்ஸ்தூஸ் என்ற போப் திருச்சபையின் சொத்துக்களை விற்று ஏழைகளுக்குப் பகிர்ந்து கொடுத்தார். சொத்துக்கள் எதையும் கைப்பற்ற முடியாத வலேறியன் இரண்டாம் சிக்ஸ்தூஸைக் கொன்றுவிடுகிறான். போப்பின் உதவியாளரான லாரன்ஸையும் சித்ரவதைக்கு உள்ளாக்குகிறான். எப்படியென்றால் இரும்புக் கட்டிலில் லாரன்ஸைப் படுக்க வைத்து, கீழே விறகை மூட்டித் தீ வைக்கிறான். கொஞ்சம் கொஞ்சமாக லாரன்ஸின் சதை வேக ஆரம்பிக்கிறது. ஆனால் முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் இருக்கிறார் லாரன்ஸ். பின் வலேறியனைப் பார்த்து என்னுடைய ஒரு பக்கம் நன்றாக வெந்து விட்டது, வேண்டுமானால் என்னைத் திருப்பிப் போட்டு வேக வைத்துக் கொள் என்று சொன்னார் லாரன்ஸ். இப்படியான முயற்சிதான் சாருவின் இந்த நாவல்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஇந்த நாவலின் வழியாக தான் நம்பிய கோட்பாட்டிற்காக உயிரையும் துச்சமாக நினைத்து தன் சதையை வாட்டி உண்ணக் கொடுத்திருக்கிறார் சாரு. அன்பு குறித்த நம்பிக்கைகள் கட்டுடைக்கப்படும் அதிர்ச்சியுடன் இச்சமூகம் இப்புதினத்தைப் புசிக்கட்டும்.\u003c\/p\u003e\n\u003cp\u003eவளன் அரசு\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47944720777452,"sku":null,"price":319.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/a6be537f4e2d0c6c1718bd49bc316e5e.webp?v=1784026081"},{"product_id":"இன்ஸ்பெக்டர்-செண்பகராமனும்-திருவல்லிக்கேணி-டாஸ்மாக்கும்","title":"இன்ஸ்பெக்டர் செண்பகராமனும் திருவல்லிக்கேணி டாஸ்மாக்கும்","description":"\u003cp\u003e\u003cspan\u003eவார்த்தைக்கு வார்த்தை தீதும் நன்றும் பிறர் தர வாரா என்று சொல்லிக்கொண்டிருக்கும் அப்பா இப்போது மகன் பேச்சைக் கேட்டு ராஸ்கலை வளர்ப்பது பற்றி அதிகமாகவே புலம்பிக் கொண்டிருக்கிறார். ஏனென்றால், அகிதா இனு ஜாதி நாய்கள் மிகவும் அபாயகரமானவை. யாராவது வீட்டுக்குள்ளே வந்தால் குதறித் தள்ளி விடும். சில நாடுகளில் அகிதா இனு நாய் வளர்ப்பதைத் தடை செய்து வைத்திருக்கிறார்கள். அப்பேர்ப்பட்ட அகிதா இனு நாயை ஒரு இதய நோயாளியான அப்பா வளர்ப்பதும் மானுட வாழ்வின் அபத்தங்களில் ஒன்றுதானோ? சரி, கடைசியாக ஒன்றைச் சொல்லி முடிக்கிறேன். இப்போது எனக்கு எட்டு வயதாகிறது. இன்னும் ரெண்டு வருஷமோ மூணு வருஷமோ. சாகும் வரை எனக்குப் பிடித்த உணவுப் பலகாரங்களைத் தின்றுகொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கிறது. தனிமனித சுதந்திரம் பற்றி எவ்வளவோ எழுதும் மை டியர் அப்பா, நாய் சுதந்திரத்தையும் கொஞ்சம் பேணக் கூடாதா? எனக்கு இட்லிதான் உயிர். ஆனால் இட்லியை யாரும் கண்ணிலேயே காட்ட மாட்டேன் என்கிறார்கள். சாப்பிடுவதைக்கூட ஒளித்து ஒளித்துதான் சாப்பிடுகிறார்கள். இது முறையா, தர்மமா, சொல்லுங்கள். - நூலிலிருந்து...\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47944724611308,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/f13fe58da0b4cf06a285267a1d01340a.png?v=1784026496"},{"product_id":"ராஸ-லீலா","title":"ராஸ லீலா","description":"\u003cp\u003e\u003cspan\u003eஅதிகாரம் தனிமனிதர்களின் மீது செலுத்தும் ஒடுக்கு முறையையும் வன்முறையையும் அதன் அபத்தத்தையும் மிகுந்த எள்ளலுடன் முன்வைக்கிறது ராஸ லீலா. மானுடத் துயரம் கேளிக்கையாக மாற முடியும் என்பதை இந்தப் பின்நவீனத்துவ நாவலின் ஒவ்வொரு பக்கத்திலும் உங்களால் உணர முடியும். ஜாக்கிரதை, படிக்கும் போதே வாய்விட்டுச் சிரிக்கும் உங்களை மற்றவர்கள் ஒருவிதமாகப் பார்க்கக் கூடும். அந்த வகையில் காஃப்காவின் அனுபவங்கள் வூடி ஆலனின் வெளிப்பாடாக விரியும் இந்த நாவலை ஒருவர் எந்த அத்தியாயத்திலிருந்தும் துவங்கி எந்த வரிசையில் வேண்டுமானாலும் வாசிக்கலாம். நேர்க்கோட்டுத்தன்மை இல்லாத, நான்-லீனியர் முறையில் சொல்லப்பட்டிருக்கும் இந்தப் பக்கங்களின் வரிசையைக் கலைத்துப் போட்டு விட்டு பித்தனின் சீட்டுக்கட்டுகளைப் போல் ஒவ்வொருவரும் தன்னிச்சைப்படி எப்படி வேண்டுமானாலும் அடுக்கிக் கொள்ளலாம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47944734146796,"sku":null,"price":810.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/49c50e5c5457db03e4f45ab7bdb984da.webp?v=1784027255"},{"product_id":"கடவுளும்-நானும்","title":"கடவுளும் நானும்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஆன்மீகம், கடவுள் சார்ந்த விஷயங்கள் பிறருக்கு எதிரான கொலைக் கருவிகளாக மாறி விட்ட ஒரு காலகட்டத்தில் இறையனுபவம் என்பதை அதன் வழக்கமான மையப் புள்ளிகளிலிருந்து விலக்க முற்படுகின்றார் சாரு நிவேதிதா. பாபா, கவிதை, இசை, சூஃபியிசம் என வெவ்வேறு சாரங்களிலிருந்து தனது இறையனுபவத்தைத் தொகுத்துக் கொள்ள விலையும் அவர் அறுதியாக ஆன்மீகம் என்பதை தன்னை வெளி நடத்தும் வெளிச்சமாகக் காண்கிறார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47944753938668,"sku":null,"price":112.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/917d1664dbd97fb22f959aaea1a9d78d.webp?v=1784029006"},{"product_id":"வால்ட்டேரை-எப்படி-நாம்-கைது-செய்ய-முடியும்","title":"வால்ட்டேரை எப்படி நாம் கைது செய்ய முடியும் ?","description":"\u003cp\u003e\u003cspan\u003eநூறு முறை சொன்ன உதாரணத்தை மீண்டும் சொல்கிறேன். எம்.கே.டி. பாகவதர்தான் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார். கொலைக் கேஸில் ஜெயிலுக்குப் போய் வந்தார். புகழும் போனது. பணமும் போனது. கண் பார்வையும் போய் விட்டது. ஒரு காலத்தில் அவர் பாட்டைக் கேட்க மரக்கிளைகளிலும் விளக்குக் கம்பங்களிலும் நிற்பார்கள் மக்கள். அப்படி நின்று மின் அதிர்ச்சியில் செத்திருக்கிறார்கள். அவர் வந்தால் சமையலை அப்படியே போட்டு விட்டு ஓடுவார்களாம் பெண்கள். அப்பேர்ப்பட்டவர் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கண் பார்வை இல்லாமல் உட்கார்ந்திருந்த போது யாரோ பிச்சைக்காரன் என்று நினைத்து ஒருவர் காசு போட்டிருக்கிறார். கருங்கல் தரையில் விழுந்த அந்த நாணயத்தின் 'ணங்' என்ற சப்தம் பற்றி மனம் குமுறி அழுதிருக்கிறார் எம்.கே.டி. என் காதிலும் அந்த 'ணங்' என்ற சப்தம் என் ஆயுள் உள்ளளவும் கேட்டுக் கொண்டே இருக்கும். நடிப்பினால் வரும் புகழ் அப்படித்தான் முடிவுறும். அப்படிப்பட்ட தொழிலின் மீதா நான் ஆசைப்படுவேன்?\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47946061316332,"sku":null,"price":169.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/1d122f6f68bc3723e0f09d308cb2fbde.jpg?v=1784086868"},{"product_id":"மெதூஸாவின்-மதுக்கோப்பை","title":"மெதூஸாவின் மதுக்கோப்பை","description":"\u003cp\u003e“நீ எனக்கு அன்னையாகவும் குழந்தையாகவும் இருந்தாய்\u003cbr\u003eநான் உனக்குக் குழந்தையாகவும் அன்னையாகவும் இருந்தேன்\u003cbr\u003eநேற்று நீ என்னை விட்டுப் பிரிந்து போய் விட்டாய்\u003cbr\u003eஎன் ஆத்மா துயருறுவதைப் பொருட்படுத்தாமல் என்னைத் தனியே விட்டு விட்டுப் போய் விட்டாயே, என் தாயே…\u003cbr\u003eவெறுப்பூட்டும் விதிக்குப் பிறந்த நான்\u003cbr\u003eஉன்னை நினைத்துக் கதறிக் கொண்டே மரணத்தைக் கடந்து செல்கிறேன்\u003cbr\u003eஎரியும் உன் தகன நெருப்பின் குளிரில் நடுங்குகிறது என் ஆத்மா”.\u003c\/p\u003e\n\u003cp\u003eகஸ்தூர்பாவின் மரணத்தின் போது காந்தி\u003c\/p\u003e\n\u003cp\u003eஹெலன் சிஸ்யுவின் இந்தியா என்ற நாடகத்தில்…\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47946066002156,"sku":null,"price":329.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/d57eebc6ba74c868ede9eeaa1262aac8.jpg?v=1784087239"},{"product_id":"நான்-தான்-ஔரங்ஸேப்","title":"நான் தான் ஔரங்ஸேப்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇந்த பூமியின் காலம் அட்சரேகைகளாலும் தீர்க்கரேகைகளாலும் அளக்கப்படுகிறது என்றால் வரலாறு என்பது ரத்தத்தின் மீதும் முத்தத்தின் மீதும் புனையப்பட்ட கதைகளால் உருவானது. புகழப்பட்ட அரசர்கள்தான் தெய்வங்கள் ஆக்கப்பட்டார்கள். எதிர்த் திசையில் இகழப்பட்டவர்கள் அசுரர்கள் ஆகிறார்கள். அப்படி பாடப் புத்தகங்கள் வழி கிட்டத்தட்ட ஓர் அசுரனாக கட்டமைக்கப்பட்ட பிம்பம்தான் ஔரங்ஸேப். ஒரே மொழி, ஒரே மதம், மற்ற மதங்கள் யாவும் கீழானவை என்று அதிகார பீடம் அவர்களின் வழிபாட்டுத் தலங்களையும் வாழிடங்களையும் இடித்து அரச கோட்டைகள் கட்டுகின்ற ஒரு இருண்ட காலத்தில், அரக்கனாக பிம்பம் எழுப்பப்பட்ட ஓர் அரசனின் வாழ்வை வரலாற்றின் கல்லறைகளில் இருந்து தார்மீக அறத்துடன் சரியான தரவுகளின்  மூலம் நாவலாக எழுதியிருக்கிறார் சாரு நிவேதிதா.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eபொதுவாக வரலாற்றுப் புனைவுகள் அலங்காரமான சொற்கள், மிகை வர்ணனைகள், நீளமான வாக்கியங்கள் கொண்டு எழுதப்படும். ஆனால், பாரமற்ற வாக்கியங்கள், எளிய சொற்றொடர்கள் மூலம் நேர்மையான பார்வையுடன் மிக அணுக்கமான சொல்லல் முறை வழியே ஒரு எதிர் அரசியல் பேசும் படைப்பைத் தந்திருக்கிறார் சாரு நிவேதிதா. காலத்திற்கு எதிராக ஒரு சீரிய கலைஞனின் பிரக்ஞை இப்படித்தான் வேலை செய்யும்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e- நேசமித்ரன்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47946119545068,"sku":null,"price":1030.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/73695b27bf2820ed49d8a1256ab24fcb.webp?v=1784090283"},{"product_id":"சாரு-நிவேதிதா","title":"சாரு நிவேதிதா","description":"\u003cp\u003e\u003cstrong data-start=\"263\" data-end=\"280\"\u003eசாரு நிவேதிதா\u003c\/strong\u003e சமகாலத் தமிழ் இலக்கியத்தின் முக்கியமான பின்நவீனத்துவ (Postmodern) எழுத்தாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், பயணக் குறிப்புகள் மற்றும் விமர்சனங்கள் என பல்வேறு இலக்கிய வடிவங்களில் தனது தனித்துவமான எழுத்து பாணியால் வாசகர்களிடையே தனி இடத்தைப் பெற்றுள்ளார். \u003cem data-start=\"569\" data-end=\"582\"\u003eஸீரோ டிகிரி\u003c\/em\u003e, \u003cem data-start=\"584\" data-end=\"593\"\u003eஎக்ஸைல்\u003c\/em\u003e, \u003cem data-start=\"595\" data-end=\"602\"\u003eதேகம்\u003c\/em\u003e, \u003cem data-start=\"604\" data-end=\"614\"\u003eராஸ லீலா\u003c\/em\u003e போன்ற படைப்புகள் மூலம் தமிழ் இலக்கியத்தில் புதிய கதை சொல்லும் முறைகளையும் சிந்தனைத் தளங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47951542845676,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/CHARUNIVETHA.jpg?v=1784183354"},{"product_id":"நாகூர்-தம்ரூட்டும்-ஆட்டையாம்பட்டி-முறுக்கும்","title":"நாகூர் தம்ரூட்டும் , ஆட்டையாம்பட்டி முறுக்கும் ...","description":"\u003cp\u003e\u003cspan\u003eஎன்ன இது, மூன்றாம் உலக யுத்தம் வரப்போகின்ற மாதிரியான இந்த சூழலிலும் ஜாலியாக நாவல், கதை என்று எழுதிக்கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டார் நண்பர் ஒருவர். Underground திரைப்படத்தில் வீட்டின் மீது குண்டுகள் விழுந்து கொண்டிருக்கும்போது கூட நாயகன் நடனமாடிக் கொண்டிருப்பான்.அப்படிபட்ட மனநிலையில் வாழ்பவன் நான். எனக்குக் கடந்த காலமும் இல்லை, எதிர்காலமும் இல்லை. கடந்த காலம் குறித்த வருத்தமில்லாமல், எதிர்காலம் குறித்த பயமில்லாமல், வர்தமான காலத்தில் வாழ்பவனே விவேகி என்கிறது சுபாஷிதம். இத்தொகுப்பில் உள்ள இரண்டு கதைகளைத் தவிர மற்றவை கொரோனா காலத்தில் எழுதப்பட்டவை. உலகமே மரண பீதியில் ஒடுங்கியிருந்த போது, உச்சகட்ட களியும் கொண்டாட்டமுமாக எழுதப்பட்ட இந்தக் கதைகளே அதற்க்கு சாட்சி..\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":48056811127020,"sku":null,"price":470.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/jpg_193fe4b6-fc77-41c5-81af-91fbf83e29d4.jpg?v=1785561835"},{"product_id":"இப்போதெல்லாம்-ஊரில்-யாரும்-வாழ்வதில்லை","title":"இப்போதெல்லாம் ஊரில் யாரும் வாழ்வதில்லை","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇலக்கியம்\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eஎன்பது\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eஒழுக்கம்\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eகுறித்த\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eபாடம்\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eஅல்ல\u003c\/span\u003e\u003cspan\u003e; \u003c\/span\u003e\u003cspan\u003eஅது\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eமனித\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eஆன்மாவின்\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eதடைசெய்யப்\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eபட்ட\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eபகுதிகளுக்குள்\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eமேற்கொள்ளப்படும்\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eஒரு\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eபயணம்\u003c\/span\u003e\u003cspan\u003e. \u003c\/span\u003e\u003cspan\u003eஇந்தத்\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eதொகுப்பில்\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eஉள்ள\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eகதைகள்\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eஅந்தப்\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eபயணத்தின்\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eபதிவுகள்\u003c\/span\u003e\u003cspan\u003e. \u003c\/span\u003e\u003cspan\u003eஇங்கே\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eநாயகர்கள்\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eஇல்லை\u003c\/span\u003e\u003cspan\u003e; \u003c\/span\u003e\u003cspan\u003eகுற்றவாளிகளும்\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eஇல்லை\u003c\/span\u003e\u003cspan\u003e. \u003c\/span\u003e\u003cspan\u003eமனிதர்கள்\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eமட்டுமே\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eஇருக்கிறார்கள்\u003c\/span\u003e\u003cspan\u003e - \u003c\/span\u003e\u003cspan\u003eஅவர்களின்\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eஆசைகள்\u003c\/span\u003e\u003cspan\u003e, \u003c\/span\u003e\u003cspan\u003eஅச்சங்கள்\u003c\/span\u003e\u003cspan\u003e, \u003c\/span\u003e\u003cspan\u003eபித்துகள்\u003c\/span\u003e\u003cspan\u003e, \u003c\/span\u003e\u003cspan\u003eகனவுகள்\u003c\/span\u003e\u003cspan\u003e, \u003c\/span\u003e\u003cspan\u003eதோல்விகள்\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eஆகியவற்றோடு\u003c\/span\u003e\u003cspan\u003e. \u003c\/span\u003e\u003cspan\u003eசமூகத்தின்\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eவெளிச்சம்\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eசென்றடையாத\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eமூலைமுடுக்குகளில்\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eநிகழும்\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eவாழ்வின்\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eசலனங்களைப்\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eபதிவு\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eசெய்வதே\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eஇக்கதைகளின்\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eநோக்கம்\u003c\/span\u003e\u003cspan\u003e. \u003c\/span\u003e\u003cspan\u003eஇந்தக்\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eகதைகள்\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eஉங்களை\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eசங்கடப்படுத்தினால்\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eஅதுவே\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eஅவற்றின்\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eவெற்றி\u003c\/span\u003e\u003cspan\u003e. - \u003c\/span\u003e\u003cspan\u003eசாரு\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eநிவேதிதா\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":48056814338284,"sku":null,"price":470.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ed4c5c2595db592898e1a518153acc65.jpg?v=1785562220"},{"product_id":"கல்ச்சர்-வல்ச்சர்","title":"கல்ச்சர் வல்ச்சர்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇந்த நூலிலுள்ள கட்டுரைகளை எழுதி சுமாராக ஒரு தசாப்தம் ஆகிறது.இன்றைய என் மனநிலையில் இதை நான் எழுதியிருக்க சாத்தியமே இல்லை. காரணம், நான் என்னைச் சுற்றியுள்ள மனித வாழ்விலிருந்து விலகி,ஒரு தவசியைப் போல் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நான் திட்டமிட்டுள்ள புனைவுகளை எழுதி முடிப்பதில் மட்டுமே என் கவனம் குவித்து கிடக்கிறது. இப்போது இந்தக் கட்டுரைகளை வாசிக்கும்போது எனக்குள் ஒரு நடுக்கம் உண்டாகிறது. என்னை எப்படி உயிரோடு விட்டு வைத்தார்கள் என்ற ஆச்சரியம் மேலிடுகிறது.தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு இலக்கியம் தெரியாது என்பதனால் பிழைத்தேன்...\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":48056814567660,"sku":null,"price":300.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/f5f7c3a6b3d02698db82b80e46de61d7.jpg?v=1785562516"},{"product_id":"கோடம்பாக்கம்-சினிமா-கட்டுரைகள்","title":"கோடம்பாக்கம்-(சினிமா கட்டுரைகள்)","description":"\u003cp\u003e\u003cspan\u003eஒரு டஜன் நூல்களுக்கான வேலையை இந்த ஒரு நூல் வாங்கிவிட்டது. இதை நீங்கள் வாசிக்கத் தொடங்கும் தருணத்திலேயே உணர்ந்து கொள்வீர்கள். சினிமா பற்றி நான் எழுதுவதை நிறுத்திப் பத்தாண்டுகள் இருக்கும். சினிமா ரசனை என்றால் என்ன? ஒரு திரைப்படத்தை எப்படி deconstruct செய்வது? எது நல்ல சினிமா? மாற்று சினிமா என அறியப்படும் திரைப்படங்களின் பிரச்சினை என்ன? - இத்தகைய கேள்விகளின் வழியாக, சினிமா குறித்த உங்கள் பார்வையை விசாலமாக்கும் ஒரு முயற்சிதான் இந்த நூல்.... - சாரு நிவேதிதா\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":48056814993644,"sku":null,"price":441.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/c92f34e18eaddb0f752c9a1a3fae85ec.jpg?v=1785562730"},{"product_id":"அக்கார-அடிசிலும்-மாசிக்-கருவாடும்","title":"அக்கார அடிசிலும் மாசிக் கருவாடும்","description":"\u003cp\u003e\u003cspan\u003eநான் உங்களிடமிருந்து விலகி நிற்கிறேன்-அகந்தையினால் அல்ல; நெருப்பைத் தாங்கிக் கொண்டவனின் தனிமையினால். ப்ராமித்யூஸ் மனிதர்களுக்காக கடவுளிடமிருந்து நெருப்பைத் திருடிக் கொண்டு வந்தான். அந்த நெருப்பு சமையலுக்கானது அல்ல - அது விழிப்புணர்வு மற்றும் ஞானம் ஆகியவற்றின் குறியீடு. இந்தத் தொகுப்பில் உள்ள கட்டுரைகள், அந்த நெருப்பின் சிதறல்கள். நான் உங்களுக்குக் கொடுக்க நினைப்பது ஆறுதல் அல்ல; அசெளகரியம். ஏனெனில், நம் வாழ்க்கை பெரும்பாலும் நாமே கட்டிய பொய்களின் சுவர்களுக்குள் சுகமாக உறங்கிக் கொண்டிருக்கிறது. அந்தச் சுவர்களை எரிக்காத வரை, எந்த வெளிச்சமும் உள்ளே வராது. ப்ராமித்யூஸ் தண்டிக்கப்பட்டான்- மனிதனை உயர்த்த முயன்றதற்காக. நானும் இந்த எழுத்துக்களில் உங்களுக்குப் பழக்கமாகி விட்ட நிழல்களைக் கிழிக்க முயல்கிறேன். நீங்கள் நம்ப விரும்பும் கதைகளை அல்ல; நீங்கள் தவிர்க்க நினைக்கும் சத்தியங்களை இங்கே சந்திக்க நேரிடும். இந்த நூல் உங்களுக்கு பதில்களைத் தராது. இது உங்களை உங்களுக்கே எதிராக நிறுத்தும். நான் உங்களுடன் இல்லை என்று சொல்லும் போது, அது வெறுப்பீனம் அல்ல. உங்கள் மத்தியிலிருந்து விலகி வெளியே போய் நின்று, உங்கள் உலகைப் பார்க்கும் அவசியம் எனக்கு உண்டு. அந்தத் தூரமே இந்த எழுத்தின் தீவிரம் இந்த நெருப்பை நீங்கள் ஏற்றிக் கொள்ளலாம்; அல்லது தவிர்க்கலாம். ஆனால் ஒருமுறை இதன் ஒளியைப் பார்த்துவிட்டால், மீண்டும் இருளை நிம்மதியாகக் கொண்டாட முடியாது...\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":48056815452396,"sku":null,"price":441.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/dd251bae3162058b705685bca482d569.jpg?v=1785562905"},{"product_id":"உயிரின்-நெருப்பை-ஊதி-வளர்த்தவனின்-நாட்குறிப்புகள்","title":"உயிரின் நெருப்பை ஊதி வளர்த்தவனின் நாட்குறிப்புகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003e2020ஆம் ஆண்டு, உலகம் முழுவதும் மரணத்தின் பெரும் நிழல் பரவியிருந்த காலம். பயமும், மனச்சோர்வும் எல்லா இடங்களையும் ஆக்ரமித்திருந்த போது, நான் தினமும் என் இணையதளத்தில் நாட்குறிப்புகளை எழுதத் தொடங்கினேன். கொரோனா என்னைத் தீண்டவில்லை. என் எழுத்தே எனக்கு நிவாரணியாகவும், உள்ளத்தின் நெருப்பை ஊதி வளர்க்கும் காற்றாகவும் மாறியிருந்தது. எல்லோரும் இருளில் மூழ்கியிருந்த நாட்களில், நான் மிகுந்த பரவசத்துடன், உற்சாகத்துடன் தினமும் எழுதினேன். அந்த நாட்களில் எனக்கு நினைவுக்கு வந்தவர், போலந்து எழுத்தாளர் Witold Gombrowicz. இரண்டாம் உலக யுத்தத்தின் போது எக்ஸைலில் - அர்ஜென்டினாவில் - வாழ்ந்த அவர், தன் வாழ்நாளின் பிற்பகுதியை நாட்குறிப்புகள் எழுதுவதில் செலவிட்டார். அந்நிய நாட்டில், தனிமையில், அரசியல் மற்றும் சமூக அழுத்தங்களுக்கு மத்தியில் அவர் தன் வாழ்வை துணிச்சலாகப் பதிவு செய்தார். அந்த நாட்குறிப்புகள் வாழ்வின் சுதந்திரத்தைக் கொண்டாடும் ஆவணமாக மாறின. இந்த நூல் அந்த உணர்வின் தொடர்ச்சி. இருண்ட காலத்தில் வாழ்வின் நெருப்பை ஊதி வளர்த்த ஒரு மனிதனின் நாட்குறிப்புகள்... - சாரு நிவேதிதா\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":48056816599276,"sku":null,"price":423.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/792471152ea8702b712c6fa08f9a4599.jpg?v=1785563143"},{"product_id":"உயிரின்-நெருப்பை-ஊதி-வளர்த்தவனின்-நாட்குறிப்புகள்-2","title":"உயிரின் நெருப்பை ஊதி வளர்த்தவனின் நாட்குறிப்புகள்-2","description":"\u003cp\u003eஇந்த நாட்குறிப்புகள், சிஸிஃபஸின் பாறையைப் போன்றவை. ஒவ்வொரு நாளும் ஒரு பெரிய பாறையை மேலே தள்ளி, உச்சியை நெருங்கும் போது அது கீழே உருண்டு விழுந்தாலும், மறுநாள் மீண்டும் அதைத் தூக்கி நடக்கத் தொடங்கும் பயணம். இந்தப் பக்கங்களில் நான் பதிவு செய்திருப்பது வெறும் சம்பவங்கள் அல்ல; அந்தப் பாறையைத் தள்ளும் ஒவ்வொரு துளி வியர்வையையும், இதயத்தின் துடிப்பையும், விழுந்த பிறகு எழுந்து கொள்ளும் தருணங்களையும் சிஸிஃபஸ் போலவே, வாழ்வின் அபத்தமான சுழற்சியில் சிக்கியிருந்தாலும், அதை அறிந்தபடியே தொடர்வதில் ஒரு விசித்திரமான சுதந்திரம் இருப்பதைக் கண்டேன்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஇந்த நாட்குறிப்புகள் என் சாட்சி. என் போராட்டதின், என் எதிர்ப்பின், என் அன்பின், என் கோபத்தின், என் தனிமையின், என் நம்பிக்கையின் சாட்சி. இது வெறும் நாட்குறிப்புகள் அல்ல. உருண்டு விழும் பாறையின் நினைவில் எழுதப்பட்ட ஒரு பிரார்த்தனை; நாளைய மனிதனைத் தேடி, இன்றைய மனிதன் விட்டுச் சென்ற காலடித் தடங்கள்... - சாரு நிவேதிதா\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":48056817615084,"sku":null,"price":423.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/2_d5ed97b8-920a-4d74-97ff-8ce1f2abd897.jpg?v=1785563636"},{"product_id":"மொழி","title":"மொழி","description":"\u003cp\u003e\u003cspan\u003eஎன் வாழ்வில் பாதியை ஒரு பேரரசனாகவும், மீதியை பிச்சைக்காரனாகவும் வாழ்ந்திருக்கிறேன். எப்படிப் பார்த்தாலும் கடந்த காலம் ஒரு துன்பக்கேணிதான். எதிர்காலமோ அச்சத்தையும் பீதியையும் மட்டுமே தரக் கூடியது. ஆதலினால், எப்போதும் இந்தக் கணத்திலேயே வாழும் வகையைக் கற்றுக் கொண்டேன். ஆனால் மொழி என்ற இந்த நூல் என் சுயசரிதம். இதை செப்பனிடும் பொருட்டு, கடந்த காலத்தின் சாளரத்தைத் திறக்க வேண்டியதாயிற்று. பெரும் கொண்டாட்டத்தையும், சொல்லவொண்ணா வாதையையும் ஒருங்கே அனுபவம் கொண்டேன். இந்த இடத்தில் பாப்லோ நெரூதாவின் Ode to the Present என்ற கவிதை ஞாபகம் வருகிறது. அதன் முக்கியமான பகுதி இது:\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":48056818041068,"sku":null,"price":423.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/b8dc1bac40da376e10e0cc92157af80c.jpg?v=1785564057"},{"product_id":"நமனை-அஞ்சோம்","title":"நமனை அஞ்சோம்","description":"\u003cp\u003eதமிழின் ஆதி கவிகளான சித்தர்கள் பிண்டத்தை (human body) அண்டத்திலும் (cosmos) அண்டத்தைப் பிண்டத்திலும் கண்டவர்கள். இந்தப் பேரண்டத்தையே தானாகவும் (self) தன்னையே பேரண்டமாகவும் காணும் நிலை அது. அப்படிக் கண்ட கவிஞன் இந்தப் பேரண்டத்தின் முன்னே நின்றபடி அதனோடு உரையாடிக் கொண்டிருக்கிறான். நட்சத்திரக் கூட்டங்களை நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருக்கும் போது – ஆழ்கடலில் ஒரு கட்டுமரத்தில் சென்று கொண்டிருக்கும் போது – கண்களை மூடி வனத்தின் இசையைக் கேட்டுக் கொண்டிருக்கும் போது அல்லது ஒரு மெத்ரோ ரயிலில் பயணித்துக் கொண்டிருக்கும் போது எப்போது வேண்டுமானாலும் அந்த உரையாடல் நிகழலாம்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஅந்த உரையாடல் மனித சமூகத்தின் கலாச்சார, வரலாற்று ஞாபகங்களைத் தன் சுவாசமாகக் கொண்டிருக்கும் மொழி என்ற தளத்தில் நிகழ்வதால் கவிஞனுக்கும் மற்ற மனிதனுக்குமான உறவு ஏற்படுகிறது. இருந்தாலும் கவிஞன், தான் கையாளும் மொழியைப் படிமங்களாகிய அணுத்துகள்களாக மாற்றி விடுவதால் அந்த ரஸவாதம் (alchemy) அறியாத மனிதன் கவிஞனிடமிருந்து விலகிப் போகிறான்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஅப்படியின்றி கவிஞனின் உரையாடலைக் கேட்க நேரும் மனிதன் பாக்கியவான். அவன் கவிஞனைப் போலவே அண்டத்திலொரு பிண்டமாகத் தன்னை உணரத் துவங்குகிறான். அப்படி உணர்பவனால் ஆஷ்விட்ஸ்களை உருவாக்க முடியாது. அவன் இந்தப் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு துகளோடும் தன்னையே காண்பான்.\u003cbr\u003e\u003cbr\u003eநூலிலிருந்து...\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":48056820400364,"sku":null,"price":338.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/032485eed439f24d3d7502f975a37fd3.jpg?v=1785564311"},{"product_id":"ஜோடிப்புறாவை-எங்கே-காணோம்","title":"ஜோடிப்புறாவை  எங்கே காணோம் ?","description":"\u003cp\u003e\u003cspan\u003eபுனைவுகளின் வழியே ஒரு தனித்துவமான ஈரோடிக் ஏஸ்தெடிக்ஸை உருவாக்குவதே என் முயற்சி. இது பாலியல் இன்பத்தைத் தாண்டி, ஆன்மீகப் பேரின்பத்தையும் உள்ளடக்கியது. பாக்ஹின் சிம்ஃபனியைக் கேட்கும்போது நம்மை மீறி அடையும் transcendal bliss \u0026amp; காம உச்சத்தின் இன்மை - இவை இரண்டும் ஒரே சூன்யத்தின் வெளிப்பாடுகள். கடவுள் சூன்யம், மரணமும் சூன்யம்,காமம் சூன்யம் - இவை மூன்றிலும் “நான்\" இல்லாமல் போகிறது. அதனால்தான் ஜார்ஜ் பத்தாய் போக உச்சத்தை La petite mort என்கிறார். சிறிய மரணம். பீத்தோவன் தன் செவித்திறனை முழுமையாக இழந்த நிலையிலும் ஒன்பதாம் சிம்ஃபனியைப் படைத்தது போல - இழப்பின் ஊடே பேரின்பம் பிறக்கிறது. அத்தகைய ஈரோடிக் ஏஸ்தெடிக்ஸை உருவாக்கும் முயற்சியே 'ஜோடிப்புறாவை எங்கே காணோம்?' - காமம், இழப்பு, சூன்யம் மூன்றும் பின்னிப் பிணைந்து வாசகரை இன்மையின் பேரின்பத்தில் ஆழ்த்தும் ஒரு பயணம். - சாரு நிவேதிதா.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":48056821678316,"sku":null,"price":620.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/4edb9382fac3a17cb8a3761e4a4578ec.jpg?v=1785564549"},{"product_id":"மயன்-மாளிகை","title":"மயன் மாளிகை","description":"\u003cp\u003e\u003cspan\u003eமயன் மாளிகை என்பது எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் சிந்தனைகளையும் அனுபவங்களையும் தொகுத்த கட்டுரை நூல். இந்த நூலில் பயணம், ஆன்மீகம், இசை, வாழ்க்கை அனுபவங்கள் போன்ற பல்வேறு தளங்கள் ஒன்றோடு ஒன்று கலந்திருக்கின்றன. இமயமலைப் பயணம், பாங்கோங் ஏரி, லடாக் போன்ற இடங்களின் அனுபவங்கள் வாசகர்களை நேரடியாக அந்தப் பயணத்தில் கலந்து கொண்டது போல உணர வைக்கின்றன. பயண குறிப்புகளுடன் சேர்ந்து எழுத்தாளரின் ஆன்மீக சிந்தனைகள், நண்பர்கள், இசை, வாழ்க்கை பற்றிய ஆழமான எண்ணங்களும் இந்த நூலில் இடம்பெறுகின்றன. சாதாரண பயணக் குறிப்புகளை விட மனித மனம், நம்பிக்கை, அனுபவம் ஆகியவற்றின் கலவையாக இந்த நூல் அமைந்துள்ளது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":48056821907692,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/68635623a27ed1e51d172161ca1e0cf1.jpg?v=1785564763"}],"url":"https:\/\/centaram.com\/collections\/charu-nivedita.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}