{"title":"பாரதி புத்தகாலயம்","description":"","products":[{"product_id":"கல்வி-உயர","title":"மாடுகளின் வேலைநிறுத்தம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eபுதிய கல்விக் கல்விக் கொள்கை குறித்த தொடர் உரையாடல்கள் கல்வி குறித்த பெருத்தக் கவலையை உருவாக்கி வந்தன. தொடர்ந்து கலகல வகுப்பறை சிவாவும், நானும் பல இடங்களில் கல்விக் கல்வி கொள்கை குறித்துப் பேசுவதற்குச் சென்றோம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47667841302764,"sku":null,"price":75.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/76a86b9e0c56638e12b156f1e5261389.jpg?v=1779787178"},{"product_id":"மாடுகளின்-வேலைநிறுத்தம்","title":"மாடுகளின் வேலைநிறுத்தம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eமாடுகளின் வேலை நிறுத்தம் கதையில் பண்ணையார் பசுபதிக்கு ஒரு விநோதப் பிரச்சனை! அவர் பண்ணையில் இருந்த மாடுகள் தட்டச்சு இயந்திரத்தில் தட்டிக்கொண்டே இருக்கின்றன. தட்டச்சு இயந்திரத்தில் தட்டச்சு செய்து அளித்த தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமெனக் கூறி, பால் தருவதை ஒரு நாள் நிறுத்திவிட்டன. தொடக்கத்தில் பண்ணையார் மசியவில்லை. பிறகு மாடுகளுக்கும் அவருக்கும் ஒப்பந்தம் ஏற்பட்டது அதன் பிறகாவது பிரச்சனை தீர்ந்ததா?\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47667846185196,"sku":null,"price":28.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ab42f638054f8f9b696500fb9c8662c6.png?v=1779791185"},{"product_id":"குட்டி-இளவரசன்","title":"குட்டி இளவரசன்","description":"\u003cp\u003e\u003cspan\u003eகுழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோரும் விரும்பிப் படிக்கும் ‘குட்டி இளவரசன்’ ஏறக்குறைய 200 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, கிட்டத்தட்ட பத்து கோடி பிரதிகள் விற்பனையாகியிருக்கிறது. நூலிலிருந்து: “பெரியவர்கள் ஒருபோதும் எதையும் தாங்களாகவே புரிந்துகொள்வதில்லை. எப்போதும் ஓயாமல் அவர்களுக்கு விளக்கங்களைத் தருவது குழந்தைகளுக்குச் சலிப்பாக இருக்கிறது.” “இதயத்திற்குத்தான் பார்வை உண்டு. முக்கியமானது கண்களுக்குத் தென்படாது.” “உன்னுடைய ரோஜாவுக்கு நீ செலவழித்த நேரந்தான் ரோஜாவை உனக்கு அவ்வளவு முக்கியமானதாகச் செய்கிறது.”\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47667852050668,"sku":null,"price":65.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/25a646017e61ba14a50840f8f83b3ad7.jpg?v=1779792131"},{"product_id":"உலகை-மாற்றிய-பெண்-கணித-மேதைகள்","title":"உலகை மாற்றிய பெண் கணித மேதைகள்","description":"\u003cdiv id=\"bookDescription_feature_div\" class=\"celwidget\" data-feature-name=\"bookDescription\" data-csa-c-type=\"widget\" data-csa-c-content-id=\"bookDescription\" data-csa-c-slot-id=\"bookDescription_feature_div\" data-csa-c-asin=\"\" data-csa-c-is-in-initial-active-row=\"false\" data-csa-c-id=\"vycq4j-m44t2y-eejz5c-xx76p1\" data-cel-widget=\"bookDescription_feature_div\"\u003e\n\u003cdiv data-a-expander-name=\"book_description_expander\" data-a-expander-collapsed-height=\"280\" class=\"a-expander-collapsed-height a-row a-expander-container a-spacing-base a-expander-partial-collapse-container\"\u003e\n\u003cdiv data-expanded=\"false\" class=\"a-expander-content a-expander-partial-collapse-content\"\u003e\u003cspan\u003eஆண்களால் எழுதப்பட்ட வரலாறுகளில் பெண்களுக்கு இடமிருந்ததில்லை. அறிவுத் தளத்தில் இந்த உலகம் முன்னேறுவதற்கும் பெண்களின் பங்களிப்பு கணிசமாக இருந்திருக்கிறது. அப்படிக் கணிதத்தில் பங்களிப்புச் செய்த கிரேக்க கணித மேத ஹைபேஷாவிலிருந்து, இன்றைய ஈரானிய கணிதமேத மரியம் மிர்ஸாகனி வரை இந்த நூலில் 15 கணித மேதைகளைப் பற்றி பதிவு செய்திருக்கிறார்.\u003cbr\u003eஇந்நூலில் பெண்கள் படிப்பதற்கும், கண்டுபிடிப்பை வெளியிடுவதற்கும் எவ்வளவு தடைகள் இருந்திருக்கின்றன எவ்வளவு போராடி வெளியில் வந்துள்ளனர் என்பது ஆச்சரியம் வேதனையும் கலந்த வலி மிகுந்த விஷயங்கள். அவற்றை நீங்களே புத்தகத்தின் வழி படித்து அறிந்து கொள்ளுங்கள்.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv id=\"hushpuppyUpsell_feature_div\" class=\"celwidget\" data-feature-name=\"hushpuppyUpsell\" data-csa-c-type=\"widget\" data-csa-c-content-id=\"hushpuppyUpsell\" data-csa-c-slot-id=\"hushpuppyUpsell_feature_div\" data-csa-c-asin=\"\" data-csa-c-is-in-initial-active-row=\"false\" data-csa-c-id=\"8bfq6o-5y5fd1-qycfqu-mw1j9l\" data-cel-widget=\"hushpuppyUpsell_feature_div\"\u003e\u003c\/div\u003e\n\u003cdiv id=\"richProductInformation_feature_div\" class=\"celwidget\" data-feature-name=\"richProductInformation\" data-csa-c-type=\"widget\" data-csa-c-content-id=\"richProductInformation\" data-csa-c-slot-id=\"richProductInformation_feature_div\" data-csa-c-asin=\"\" data-csa-c-is-in-initial-active-row=\"false\" data-csa-c-id=\"vv1ekc-p7rny4-k9cu40-l7c89c\" data-cel-widget=\"richProductInformation_feature_div\"\u003e\n\u003cdiv id=\"rich_product_information\" class=\"a-section a-spacing-none celwidget\" data-csa-c-id=\"tmm9g2-ymqxiq-q2cxzj-duvpln\" data-cel-widget=\"rich_product_information\"\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47667900383468,"sku":null,"price":178.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/0256b8804dd81bb974322577cf0b65fc.jpg?v=1779793276"},{"product_id":"அய்யன்காளி","title":"அய்யன்காளி","description":"\u003cp\u003e\u003cspan\u003eபுது வாசிப்பு சுகமளிக்கும் நூல். இந்தியாவில், கேரளாவில் சமூக சீர்திருத்த இயக்கங்கள் எல்லாம் ஒரே காலத்தில் தொடங்கின. அதாவது, பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில். கேரளாவுக்கு இத்தகையதோர் இயக்கம் எழுந்தது, வங்கத்தில். பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வங்கத்தில் நடைபெற்ற பண்ணை ஆதிக்க எதிர்ப்புக் கலவரங்களும் ஆங்கிலேய ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நிலையான நில வரி முறையால் செல்வந்த பெரும் விவசாயிகள் உருவாகி வளர்ந்து வந்தனர். செராம்பூரை மையமாகக் கொண்டு, கிறித்துவ மிஷனரிகள் தம் பணிகளை தொடங்கினர். ஆங்கில கல்விக்கு பெரும் வரவேற்பு கிட்டியது. இதுவெல்லாம், வங்கத்தை சமூக சீர்திருத்த இயக்கத்தின் பிறப்பிடம் ஆக்கியது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47677577691372,"sku":null,"price":159.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/581a42699b00c8979d4bb8a9364a76bc.jpg?v=1779882111"},{"product_id":"சொல்ல-மறந்த-தமிழர்-வரலாறு","title":"சொல்ல மறந்த தமிழர் வரலாறு","description":"\u003cp\u003e\u003cspan\u003eசுமேரியாவின் முக்கிய நகரங்களுள் மிக முக்கிய நகரம், ‘ஊர்’ என்பதாகும். ‘ஊர்’ என்ற சொல்லுக்கு வேறு எம்மொழியிலும் பொருத்தமான பொருள் இல்லை. ஆங்கில மொழியில் பொருளற்ற வார்த்தை என்றும் அல்லது வசிப்பிடம் என்றும் குறிப்பிடுகின்றனர்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47678608244972,"sku":null,"price":103.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/f9579a851a7bea3f9fff6528ec5f5979.jpg?v=1779887293"},{"product_id":"என்-சிவப்புப்-பால்பாயிண்ட்-பேனா","title":"என் சிவப்புப் பால்பாயிண்ட் பேனா","description":"\u003cp\u003e\u003cspan\u003eதமிழகத்தின் முன்னணிக் கல்விச் சிந்தனையாளர்களில் ஒருவர் பேராசிரியர் ச.மாடசாமி. பல்லாண்டுகாலம் கல்லூரிப் பேராசிரியராகவும், அறிவொளி இயக்கத்தின் உந்து சக்திகளில் ஒருவராகவும், பள்ளிக் கல்வி முறைபாடுகள் குறித்த நிபுணராகவும் பழுத்த அனுபவம் பெற்ற பேரா.மாடசாமி அவர்கள் கல்வி உளவியல் குறித்து தனது பிரத்யோகமான மெல்லிய நகைச் சுவையோடும், ஆழத்தை எளிதில் வெளிக்காட்டாத எளிய சொல்லாடலோடும் விளக்குகின்றார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47678614208748,"sku":null,"price":94.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/a3419dfa26e14831a96da6161e899e6b.jpg?v=1779888301"},{"product_id":"எனக்குரிய-இடம்-எங்கே","title":"எனக்குரிய இடம் எங்கே?","description":"\u003cp\u003e\u003cspan\u003eகல்விச் சீர்திருத்தம், கல்விக்கூட சுதந்திரம், மாற்றுக்கல்வி ஆகியவை பற்றி சமீப ஆண்டுகளில் நிறைய விவாதங்கள் நடைபெறுகின்றன. பள்ளிக்கல்வி பற்றி இப்படி நிறைய கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்ந்தாலும், கல்லூரி மாணவர்களைப் பலரும் கண்டுகொள்வதில்லை. அந்த வெற்றிடத்தை நிரப்பும் நூல் இது! 'ஒரு வகுப்பறை யாருக்குச் சொந்தம்... பேராசிரியருக்கா? மாணவனுக்கா? கல்விக்கூடத்தின் கதாநாயகனாக யார் இருக்க வேண்டும்?’ எனக் கேள்விகளை எழுப்பி விடை தேடுகிறார் அவர். அய்யப்பராஜ் என்ற பேராசிரியரின் பார்வையில் ஒரு நாவல் போல விரியும் இந்த நூல், தங்கள் பணியில் அக்கறையுள்ள அத்தனை ஆசிரியர்களுக்கும் வேதம். அதே சமயம் மாணவர்களுக்கும் தங்களைச் செதுக்கிக்கொள்ள இந்த நூல் வாய்ப்பு தருகிறது. கல்வியில் முழுமை பெற்று, வாழ்வில் தனக்குரிய இடத்தை தேடிக்கொள்வது எப்படி என்பதற்கான வழிகாட்டியாக இந்த நூல் இருக்கிறது. பாதைகளை தேர்ந்தெடுப்பவர்களைத் தாண்டி, பாதைகளை உருவாக்குபவர்களும் இருக்கிறார்கள். எல்லோருக்கும் சிந்தனையின் வாசலைத் திறந்து வைத்துக் காத்திருக்கிறது 'எனக்குரிய இடம் எங்கே?’\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47678655725804,"sku":null,"price":122.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/776d4e65f0181b19d5afdd3f119a9da2.jpg?v=1779888798"},{"product_id":"அரசியல்-எனக்குப்-பிடிக்கும்","title":"அரசியல் எனக்குப் பிடிக்கும்","description":"\u003cp\u003eஅரசியல் என்பது தேர்தலோ, அரசியல்வாதிகளோ மட்டும் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல; ஒவ்வொரு மனிதரின் அன்றாட வாழ்க்கையையும் பாதிக்கும் அடிப்படை சக்தி என்பதை எளிமையாக விளக்கும் சிறந்த அறிமுக நூல் இது.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47678729486572,"sku":null,"price":33.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ca60a87b3e9f4f4d7164867c4c413441.jpg?v=1779889121"},{"product_id":"அவமானம்","title":"அவமானம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஎன் இலக்கியத்தை எதிர்ப்பதைக் காட்டிலும்,இப்படிப்பட்ட இலக்கியங்கள் உருவாவதற்கு ஏதுவாக இருக்கும் சூழ்நிலையை மாற்ற முயற்சி செய்யுங்கள்.இதுதான் சிறந்த வழி.. “என்னுடைய கதைகளை உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றால் நம்முடைய காலத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றே அர்த்தம்.என் கதைகளில் எந்தத் தவறும் இல்லை.என் கதைகளில் தவறு என்று சொல்லப்படுவன எல்லாம் உண்மையில் அழுகிப்போன இந்த சமூக அமைப்பைத் தான் குறிக்கிறது….”\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47678846271724,"sku":null,"price":94.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/f77d36b72c212e10105f532c83c64cae.jpg?v=1779889316"},{"product_id":"உங்கள்-வாழ்வில்-வேதியியல்","title":"உங்கள் வாழ்வில் வேதியியல்","description":"\u003cp\u003eவேதியியல் என்பது பாடப்புத்தகத்தில் மட்டுமே இருக்கும் ஒரு பாடமல்ல; நம் அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும் இயங்கிக்கொண்டிருக்கும் அற்புதமான அறிவியல் என்பதை எளிமையாக விளக்கும் நூல் இது. சமையலறை முதல் செல்போன் வரை, சோப்பு முதல் உரம் வரை, நம்மைச் சுற்றியுள்ள பொருட்களின் பின்னால் இருக்கும் வேதியியல் உண்மைகளை சுவாரஸ்யமான உரையாடல்களுடன் ஆசிரியர் அறிமுகப்படுத்துகிறார்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47678925701356,"sku":null,"price":94.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/1258ebd23a0cb7c323c09278cc9b7b02.jpg?v=1779889938"},{"product_id":"முதல்-ஆசிரியர்","title":"முதல் ஆசிரியர்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஅன்றைய சோவியத் நாட்டைச்சேர்ந்த கிர்கிஸிய எழுத்தாளர் லெனின் பரிசு பெற்றவருமான சிங்கிஸ் ஐத் மாத்தவ்வின் மிக முக்கியமான நாவல் இது.இந்தப் படைப்பில் கதாபாத்திரங்களின் தார்மீக வளர்ச்சி,குணநலன்கள்ஆகியவை பற்றி தூய்மையும்,எதார்த்தமான நாவல் கட்டமைப்பு.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47678974787820,"sku":null,"price":89.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/f4c6be387009a8df8b03312e5d74dc6b.jpg?v=1779890240"},{"product_id":"சே-குவேரா-கனல்-மணக்கும்-வாழ்க்கை","title":"சே குவேரா: கனல் மணக்கும் வாழ்க்கை","description":"\u003cp\u003e\u003cspan\u003eசு.பொ. அகத்தியலிங்கம் மூத்த ஊடகவியலாளர்,எழுத்தாளர். ‘சாதியம்: வேர்கள், விளைவுகள் சவால்கள்’, ‘விடுதலைத் தழும்புகள்’ உள்ளிட்ட16 நூல்களின் ஆசிரியர். தமிழக அரசு விருது உள்ளிட்ட பல விருதுகள் பெற்றவர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் தலைமை பொறுப்பில் இருந்தவர். தீக்கதிர் பொறுப்பாசிரியராகவும், மார்க்க்சிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினராகவும் செயலாற்றியவர். \"ஏன் சேவுக்கு மட்டும் இப்படி மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கும் பழக்கம் உள்ளது? அவன் எந்த அளவு கேவலப்படுத்தப்படுகிறானோ, சூழ்ச்சிகளில் சிக்கவைக்கப்படுகிறானோ, ஏமாற்றப்படுகிறானோ அந்த அளவு அவன் மீண்டும் வருகிறான். மற்றெவரையும் விட அவனுக்குப் பிறவிகள் அதிகம். நினைத்ததைச் சொல்வதாலா? அவன் சொன்னதைத்தான் செய்ததாலா? காலந்தோறும் போர்குணத்தின் குறியீடாக அவன் எழுகிறான் என்பதுதான். எட்வர்டோ காலினோ 'எழுதச்சலிக்காத நெருப்புவரிகள்' என்பதன் பொருளாய் இருப்பது சேகுவேராவின் வாழ்க்கை வரலாறுதான்’ என்று கூறும் நூலாசிரியர் சு.பொ. அகத்தியலிங்கம் ‘புதிய வாசகர்களுக்கு சேகுவேராவை உரியமுறையில் அறிமுகம் செய்யும் பணிக்கு நான் தகுந்த நியாயம் வழங்கி இருக்கிறேன்’ என்றும் உறுதி கூறுகிறார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47679031509228,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/7cd0ad53958c02eedf8c6bea246b9e25.jpg?v=1779890470"},{"product_id":"பகத்சிங்-ஒரு-வீர-வரலாறு","title":"பகத்சிங் - ஒரு வீர வரலாறு","description":"\u003cp\u003e\u003cspan\u003eநாளை காலை மெழுகுவர்த்தி ஒளி மங்குவது போல் நானும் மறைந்து விடுவேன். ஆனால் நம்முடைய நம்பிக்கைகள் குறிக்கோள்கள் இந்த உலகத்தை பிரகாசிக்கச் செய்யும். மீண்டும் பிறப்போம். எண்ணற்ற இந்நாட்டு வீரர்களின் உருவில்...\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47679078760684,"sku":null,"price":94.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/85517cc052e39252eaf50595a62c0730.png?v=1779890736"},{"product_id":"இளம்-மேதைகளின்-போராட்டங்கள்","title":"இளம் மேதைகளின் போராட்டங்கள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇளம் வயதிலேயே சமூக மாற்றத்துக்கான வெளிச்சம் பரப்பிய கிரேட்டா தன்பெர்க், ஆன் ஃபிராங்க், மலாலா யூசஃப்சாய், க்லோடியன் ருடோல்ப், நுஜூத் அலி, ஃபரா பேக்கர் ஆகிய இளம் பெண்களை இந்த நூல் அறிமுகப்படுத்துகிறது. ஆண் – பெண் ஏற்றத்தாழ்வையும் பழமைவாத சிந்தனைகளையும் எதிர்த்து தங்கள் வழியில் முன்னேறியவர்கள் இவர்கள். தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தும் மன உறுதி, அநீதிக்கு எதிரான போராட்டங்கள் ஆகியவற்றின் மூலம் வரலாற்றில் இடம் பெற்றவர்கள். இளைஞர்களுக்கு என்றும் உத்வேகமளிப்பவர்கள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47679228608748,"sku":null,"price":113.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/0cb98437a12fa0dedf0fecaba49003e4.jpg?v=1779891183"},{"product_id":"டடங்","title":"டடங்","description":"\u003cp\u003e\u003cspan\u003e\"ட்டங்\"- ஒரு கதம்ப மாலை. உலக நடப்புகள். தொழில்நுட்பம். இயல்பு. ஆச்சரியம், பரிவு, பாசம், உதவிக்கரம் என பலவற்றைத் தொட்டுச் செல்லும் சிறார் கதைகள். சிறார் மன உலகின் நீளமும் அகலமும் விரிவடையும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47679283265772,"sku":null,"price":84.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/8ccd3dd39af040c4444aaa4f90e8281f.jpg?v=1779891728"},{"product_id":"காகம்-ஏன்-கறுப்பானது-உலக-சிறார்-நாடோடிக்-கதைகள்","title":"காகம் ஏன் கறுப்பானது? (உலக சிறார் நாடோடிக் கதைகள்)","description":"\u003cp\u003e\u003cspan\u003eசிறார்கள் நாடோடிக் கதைகளை வாசிப்பதன் மூலம் மனித குலம் சேமித்து வந்துள்ள ஞானத்தைப் பெறுகிறார்கள். இத்தொகுப்பிலுள்ள 21 கதைகளும் அத்தகைய ஞானத்தைத் தருகிறது. “காகம் ஏன் கறுப்பானது?” என்ற கதை சுயநலத்தை எதிர்க்கிறது. பொது நலத்துக்காகப் போராடுகிறது. இப்படி ஒவ்வொரு கதையும் ஓர் உண்மையைச் சொல்லுவதை படித்துப் பார்த்துச் சொல்லுங்கள்! சிறார்களுக்கு நாடோடிக் கதைகள் தான் பிடித்தமானவை என்பதையும் உணர்வீர்கள்!\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47679361515756,"sku":null,"price":113.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/dc59d7c287e3a434e0f470c9c32161eb.jpg?v=1779892026"},{"product_id":"மலர்-அல்ஜிப்ரா","title":"மலர் அல்ஜிப்ரா","description":"\u003cp\u003e\u003cspan\u003eமலர் அல்ஜீப்ரா என்பது ஒரு கண்டுபிடிப்பு.அந்தக் கண்டுபிடிப்புக்காக நோபல் விருது(கற்பனையாக)பெறுகிறார் ஒரு விஞ்ஞானி.அவரது விருது ஏற்புரையிலிருந்து விரிகிறது இக்கதை.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47679596724460,"sku":null,"price":70.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/684ea6807ffcdcebbb7d36f281e1902b.jpg?v=1779892347"},{"product_id":"தேநீரில்-மிதக்கும்-கணிதம்","title":"தேநீரில் மிதக்கும் கணிதம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eதேநீரில் கணிதமா என ஆச்சரியமுடன் உள்ளே நுழைந்தால் உங்களுக்கு நீசயம் தேநீர் கொடுக்கும் அதே கதகதப்பு கிடைக்கும். கணிதம் எங்கும் உள்ளது, தேநீரில் அவ்வளவு உள்ளது. கணிதப் பார்வையும் இப்புத்தகம் இளஞ்சூட்டில் உங்களுக்குக் கொடுக்கும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47679788876012,"sku":null,"price":103.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/7ebfc02d9e8a5258dc7b589451dece6a.jpg?v=1779893429"},{"product_id":"அறிவியல்-அ-முதல்-ஃ-வரை-பொருட்களஞ்சியம்","title":"அறிவியல் அ முதல் ஃ வரை பொருட்களஞ்சியம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஅறிவியல் பதங்களுக்கான ஆங்கிலம், தமிழ் பொருட் குறிப்புகள். இருநூறுக்கும் மேலான அறிவியல் அறிஞர்கள் குறித்த சிறு குறிப்புகள், அவர்களது வரைபடங்கள்அறிவியல் கண்டுபிடிப்புகள், அவை நிகழ்ந்த ஆண்டுகள் கண்டு பிடிப்புகளின் தோற்ற மூலங்கள் அறிவியல் குறித்த ஆயிரம் ஆயிரம்விவரங்கள், அறிவியல் கற்போர், அறிவியல் கற்பிப்போர் மற்றும் அறிவியல்ஆர்வலர்கள் ஆகியோருக்கான உற்ற துணைவனாக கையேடாக விளங்கும் நூல்.அந்த வகையில் தமிழின் முதல் நூலாக,ஏற்கனவே புக்ஸ் ஃபார் சில்ரன்' வெளியிட்டுள்ள அறிவியல் களஞ்சியம் 1,2,3 ஆகியவற்றின் தொடர்ச்சியாகவும், தனித்தும் பயன் தரக்கூடிய நூல்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47679815614700,"sku":null,"price":206.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/1defb74a0585abaeb4fe3d5e24d9b772.jpg?v=1779893872"},{"product_id":"வெண்ணிற-இரவுகள்","title":"வெண்ணிற இரவுகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eதஸ்தயேவ்ஸ்கியின் \u003c\/span\u003e\u003cstrong\u003eவெண்ணிற இரவுகள்\u003c\/strong\u003e\u003cspan\u003e தனித்துவமான படைப்பு. உலகில் தொடர்ந்து வாசிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வரும் அரிய காதல்கதை இது. இரண்டு ஆண்கள் ஒரு இளம் பெண். மூன்றே முக்கிய கதாபாத்திரங்கள். நான்கு இரவுகள் ஒரு பகலில் கதை முடிந்துவிடுகிறது. கதை முழுவதும் ஒரே இடத்தில் ஒரு ஆணும் பெண்ணும் சந்தித்துக் கொள்ளுகிறார்கள். பேசிக் கொள்ளுகிறார்கள். முடிவில் பிரிந்து போய்விடுகிறார்கள்…\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47684757520620,"sku":null,"price":75.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NewDoc05-27-202619.41_7.jpg?v=1780028490"},{"product_id":"சே","title":"சே","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47684786815212,"sku":null,"price":84.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NewDoc05-27-202619.41_16.jpg?v=1780029124"},{"product_id":"ஓட்டப்பல்லு","title":"ஓட்டப்பல்லு","description":"\u003cp\u003e\u003cspan\u003eகுழந்தைகளின் வாசிப்பை முதன்மைப்படுத்தி, எளிய சொற்களால் நகரும் வேடிக்கையான கதைகளின் தொகுப்பு இது. இக்கதைகள் குழந்தைகளின் சின்னச் சின்ன சந்தோசங்களையும் குறும்புகளையும் அழகுணர்ச்சியுடன் பேசுகின்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47684821450988,"sku":null,"price":37.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NewDoc05-27-202619.41_15.jpg?v=1780029642"},{"product_id":"அந்தரத்தில்-நடந்த-அபூர்வ-கதை","title":"அந்தரத்தில் நடந்த அபூர்வ கதை","description":"\u003cp\u003e\u003cspan\u003eசிறார் எழுத்தாளர். சிறுவர்களுக்குக் கதை கட்டுரைகள் எழுதுவதோடு, கணிதக் கட்டுரைகளையும் எழுதி வருபவர். கணித ஆர்வலர். சென்னையில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறார். எம்.டெக் பட்டதாரி. கணிதம் கற்பிப்பதில் உள்ள சவால்களை ஒட்டி தமிழகம் எங்கும் பேசியும் பயிற்றுவித்தும் வருகிறார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47684836393196,"sku":null,"price":28.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NewDoc05-27-202619.41_14.jpg?v=1780030012"},{"product_id":"அம்பேத்கர்-வாழ்வும்-பணியும்","title":"அம்பேத்கர் வாழ்வும் பணியும்","description":"\u003cp\u003e\u003cspan\u003eகல்வி, அரசியல், சட்டம், தொழிலாளர் நலன், பெண்கள் உரிமை மற்றும் சமூகச் சமத்துவம் ஆகிய துறைகளில் அம்பேத்கர் ஆற்றிய பங்களிப்புகளையும், இந்திய அரசியலமைப்பை உருவாக்குவதில் அவர் வகித்த முக்கியப் பங்கையும் இந்நூல் விளக்குகிறது. மாணவர்கள், இளைஞர்கள், வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் சமூக நீதியின் வளர்ச்சிப் பாதையை அறிய விரும்பும் அனைவரும் வாசிக்க வேண்டிய ஊக்கமூட்டும், சிந்தனைத் தூண்டும் நூலாக \u003c\/span\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eஅம்பேத்கர்: வாழ்வும் பணியும்\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e திகழ்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47684867916012,"sku":null,"price":178.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NewDoc05-27-202619.41_8.jpg?v=1780030928"},{"product_id":"வரலாறு-என்னை-விடுதலை-செய்யும்","title":"வரலாறு என்னை விடுதலை செய்யும்","description":"\u003cp\u003e\u003cspan\u003e\"வரலாறு என்னை விடுதலை செய்யும்\" - தீர்க்கதரிசனமான இந்த வார்த்தைகளை ஃபிடல் காஸ்ட்ரோ உதிர்த்தபோது, 1953-ல் மன்கடா படைத்தளத்துக்கு எதிரான தாக்குதலில் தோல்வியடைந்ததன் காரணமாக தேசத் துரோகக் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கு விசாரணைக்காக கைது செய்யப்பட்டிருந்தார். விசாரணையின்போது தன் தரப்பை நீண்ட வாதமாக முன்வைத்தார். வாதத்தின் இறுதியில் அவர் உதிர்த்த வார்த்தைகளே மேற்கண்டவை\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47684875813100,"sku":null,"price":103.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NewDoc05-27-202619.41_13.jpg?v=1780032096"},{"product_id":"எனது-இளமைக்-காலங்கள்","title":"எனது இளமைக் காலங்கள்","description":"\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eஎனது இளமைக் காலங்கள்\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e என்பது இளமைப் பருவத்தின் இனிய நினைவுகள், கனவுகள், அனுபவங்கள், நட்புகள் மற்றும் வாழ்க்கைப் போராட்டங்களை உணர்வுப்பூர்வமாகப் பதிவு செய்யும் சுயசரிதைத் தன்மையுடைய நூல். கடந்த கால நிகழ்வுகளை நினைவுகூரும் போது உருவாகும் மகிழ்ச்சி, ஏக்கம் மற்றும் வாழ்க்கைப் பாடங்களை ஆசிரியர் எளிமையான, நெகிழ்வான நடையில் பகிர்கிறார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47684878467308,"sku":null,"price":169.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NewDoc05-27-202619.41_12.jpg?v=1780032430"},{"product_id":"பூதம்","title":"பூதம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eகதையின் பாத்திரம் மாய உலகில் இருந்து நிஜ உலகிற்கு பயணிப்பதும், நிஜ உலகிலுள்ள பாத்திரம் கதையினுள் ஒரு பாத்திரமாக மாறுவதும், அதன்பின் அதனதன் இடத்திற்கு திரும்புவதற்கான தளத்தில் இந்நாவல் எழுதப்பட்டுள்ளது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47684883546348,"sku":null,"price":61.1,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NewDoc05-27-202619.41_11.jpg?v=1780032789"},{"product_id":"யுரேகா-கோர்ட்","title":"யுரேகா கோர்ட்","description":"\u003cp\u003e\u003cspan\u003eவெவ்வேறு காலக்கட்டங்கள், வெவ்வேறு மனிதர்கள். வெவ்வேறு ஆராய்ச்சி முயற்சிகள்னு பல கட்டங்களுக்குப் பிறகுதான் நமக்குத் தேவையான ஒரு கண்டுபிடிப்பு உருவாகுது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47684908351724,"sku":null,"price":122.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NewDoc05-27-202619.41_10.jpg?v=1780033186"},{"product_id":"முதன்மைப்-பெண்கள்-30-பேர்","title":"முதன்மைப் பெண்கள் 30 பேர்","description":"\u003cp\u003e\u003cspan\u003eபல்வேறு சவால்களைச் சந்தித்து முன்னேறிச் செல்லும் பெண் இனத்தின் குறிப்பிடத் தகுந்த முப்பது ஆளுமைகள் பற்றிய அறிமுகத்தை \u003c\/span\u003e\u003cstrong\u003eமுதன்மைப் பெண்கள் 30 பேர் \u003c\/strong\u003e\u003cspan\u003eநூல் தருகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47684929290476,"sku":null,"price":94.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NewDoc05-27-202619.41_9.jpg?v=1780033726"},{"product_id":"தேன்கணி","title":"தேன்கணி","description":"\u003cp\u003e\u003cspan\u003eசிறார் எழுத்தாளர். சிறுவர்களுக்குக் கதை கட்டுரைகள் எழுதுவதோடு, கணிதக் கட்டுரைகளையும் எழுதி வருபவர். கணித ஆர்வலர். சென்னையில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறார். எம்.டெக் பட்டதாரி. கணிதம் கற்பிப்பதில் உள்ள சவால்களை ஒட்டி தமிழகம் எங்கும் பேசியும் பயிற்றுவித்தும் வருகிறார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47684939809004,"sku":null,"price":169.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/THENKANI.jpg?v=1780034631"},{"product_id":"ஆயிஷா","title":"ஆயிஷா","description":"\u003cp\u003e\u003cspan\u003eஒரு சிறுகதை.கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்தில் கல்வி வட¢டாரங்களில் பணிபுரியும் எல்லோரையும் ஆட்டிப் படைக்கும் சிறுகதை.இன்று பாரதியின் மூலம் எல்லோருக்குமான வாசிப்புக்கு வந்துள்ளது.பள்ளி ஆசிரியை ஒருவருக்கும் ஆயிஷா என்கிற மாணவிக்கும் இடையில் கல்வி தொடர்பான கேள்விகள் முலம் மலரும் உறவு கதையின் அடிச்சரடாக ஓடுகிறது.ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையிலான நப்பு,அப்பா,மகன் உறவு அம்மா,மகள் உறவு பற்றியெல்லாம் கூடக் கதைகள் சில வந்ததுண்டு.பாடத் திட்டத்தோடு கூடிய கேள்விகள் அக்கேள்விகள் வழியே அக்குழந்தையின் மேதமையை சட்டெனெ அடையாளம் கண்டுவிடும் ஆசிரியை.ஆனால் அவளை சரியாக அடையாளம் காண முடியாத செக்குமாட்டு வாழ்க்கையில் சிக்கிக் கொண்ட பிற சக ஆசிரியர்கள் அவளை நடத்தும் விதம் அவள் மீது பிரயோகிக்கும் வன்முறை.இதையும் மீறி இந்த ஆசிரியையுடன் அவள் கொள்ளும் சினேகம்.நேசம்.புரிந்து கொண்ட ஒருவராவது பள்ளியில் இருக்கிறாரே என்கிற பெருமிதம்.கேள்விகளால் தொடரும் இந்த நட்பு.ஆனால் இறுகிப் போன கல்விமுறை ஆயிஷாவை என்ன செய்துவிட்டது?கதையை வாங்கிப் படித்துத்தான் ஆக வேண்டும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47684946493676,"sku":null,"price":23.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/AAESHA.jpg?v=1780035030"},{"product_id":"மயில்-போட்ட-கணக்கு","title":"மயில் போட்ட கணக்கு","description":"\u003cp\u003e\u003cspan\u003eபோராட்டம் ஒலிமாசுக்கு எதிரான கதை. ‘மயில் போட்ட கணக்கு’ மிகை தன்னம்பிக்கை ஆபத்தானது என கூறுகிறது. ‘யார் கொடுத்தது?’ குழந்தைகள் திருமணத்திற்கு எதிரான கதை. இதுபோன்ற தற்கால சமூக பிரச்சனைகளை சிறார் கதைகள் வழியாக பேசுகிறது இந்நூல்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47684949049580,"sku":null,"price":103.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MAYILPOTTAERAGU.jpg?v=1780035609"},{"product_id":"பெண்மை-என்றொரு-கற்பிதம்","title":"பெண்மை என்றொரு கற்பிதம்","description":"\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eபெண்மை என்றொரு கற்பிதம்\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e என்பது ‘பெண்மை’ என்ற கருத்து சமூகத்தால் எவ்வாறு உருவாக்கப்பட்டது, பெண்களின் வாழ்க்கை, அடையாளம், சுதந்திரம் மற்றும் சமூகப் பங்குகள் மீது அது எவ்வாறு தாக்கம் செலுத்துகிறது என்பதை ஆராயும் சிந்தனைத் தூண்டும் நூல். பாரம்பரியம், குடும்பம், கல்வி, பண்பாடு மற்றும் சமூகக் கட்டமைப்புகள் பெண்களிடம் உருவாக்கும் எதிர்பார்ப்புகளை விமர்சனப் பார்வையுடன் இந்நூல் அணுகுகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47684958060780,"sku":null,"price":75.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PENMAI.jpg?v=1780036069"},{"product_id":"தேநீரில்-கலந்திருக்கும்-இயற்பியல்","title":"தேநீரில் கலந்திருக்கும் இயற்பியல்","description":"\u003cp\u003e\u003cspan\u003eநம் நடைமுறை வாழ்க்கையில் தினந்தோறும் செய்யும் செயல்களில் மறைந்திருக்கும் இயற்பியலை அறிந்துகொள்ள இந்த நூல் பெரிதும் உதவும். குறிப்பாக குழந்தைகள் மாணவர்கள் இந்நூலைப் படிக்கும்போது அறிவியல் உண்மைகளை மிக எளிதில் அறிந்துகொள்ள முடியும். அனைவரும் படித்தறிய வேண்டிய முக்கியமான நூல் இது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47684983849196,"sku":null,"price":122.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/THENIRILKALANTHERUKUMEARBEYAL.jpg?v=1780036469"},{"product_id":"வன்முறையில்லா-வகுப்பறை","title":"வன்முறையில்லா வகுப்பறை","description":"\u003cp\u003eஒரு ஆசிரியரின் அடிப்படைத் தகுதி என்ன? அன்பு.\u003c\/p\u003e\n\u003cp\u003eஅன்பு, ஆசிரியருக்கு மட்டுமல்ல அனைவருக்கும் அடிப்படையானது. ஏற்றுக்கொள்ளப்படாத, அங்கீகரிக்கப்படாத அன்பிலிருந்து வருவதுதான் வெறுப்பு. ஒரு ஆசிரியருக்கு இந்த வெறுப்பு எப்போது வருகிறது?. இதை கீழ்கண்ட இரண்டு சம்பவத்தின் அடிப்படையில் விளக்கலாம்.\u003c\/p\u003e\n\u003cp\u003e1. அவர் கணித ஆசிரியர். எப்பேர்பட்ட மக்கையும்,மட்டியையும் பாஸ் மார்க் எடுக்க வைத்துவிடுவார், கண்டிப்பானவர், அடி பின்னி எடுத்துவிடுவார் என பெயரெடுத்தவர். அன்று வகுப்பில் அவர் சற்று நிலைகுலைந்து ஒரு மாணவியை அடிக்க , அம்மாணவியின் தாடை கிழிய, வழக்கு பாய, இப்போது நடையாய் நடக்கிறார் நீதிமன்றத்துக்கு. இப்போது கண்டிப்பான கணித ஆசிரியர் போய், ரத்த ஆசிரியர் என்று பெயர் பெற்றிருக்கிறார்.\u003c\/p\u003e\n\u003cp\u003e2. அவர் ஒரு திறமையான தாவரவியல் ஆசிரியை. மாணவ, மாணவிகள் அழகாக படம் வரைய வேண்டும் என்பதற்காய் மிகுந்த மெனக்கெடுபவர். அன்று ஒரு மாணவியை சரியாக படம் வரையவில்லை என்பதற்காய் , “இது படமா? உன் மூஞ்சியை மாதிரியே வரைந்துவிட்டாயே.. உனக்கெல்லாம் இந்தப் பாடம் சரிவராது. புள்ளை பெத்துக்கத்தான் லாயக்கு..” என்று வார்த்தையால் சுட, அம்மாணவியோ தன்னை நெருப்பால் சுட்டு இறந்து போகிறாள்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஒரு திறமையான ஆசிரியையை இப்போது கல்வித்துறையாலும், காவல்துறையாலும் காப்பாற்ற முடியவில்லை. வெளிநாடு தப்பிச் செல்ல துடிக்கிறார் ஆசிரியை. இது ராஜபாளையத்தில் நடைபெற்ற சம்பவம்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47684991615212,"sku":null,"price":112.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/e5d312ed049e4f84c7e99918fd64feb9.jpg?v=1780037003"},{"product_id":"தன்வியின்-பிறந்தநாள்","title":"தன்வியின் பிறந்தநாள்","description":"\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eதன்வியின் பிறந்தநாள்\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e என்பது குழந்தைகளின் மகிழ்ச்சி, குடும்ப அன்பு, நட்பு மற்றும் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் இனிமையான தருணங்களை அழகாகப் பதிவு செய்யும் சிறார் நூல். தன்வியின் பிறந்தநாளை மையமாகக் கொண்டு விரியும் கதை, உற்சாகம், ஆச்சரியம் மற்றும் மனதை நெகிழ வைக்கும் நிகழ்வுகளால் வாசகர்களை மகிழ்விக்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47684997415148,"sku":null,"price":122.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/THANVEINPIRANTHANAAL.jpg?v=1780037200"},{"product_id":"சார்லி-சாப்ளின்","title":"சார்லி சாப்ளின்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஉலகின் மிகச் சிறந்த நகைச்சுவை நடிகரான சார்லி சாப்ளினுடைய வாழ்க்கை வரலாறு.தன் வாழ்க்கை அனுபவங்களை திரைபடங்களில் சித்தரித்து பார்வையாளர்களை ஒரே நேரத்தில் சிரிக்க,சிந்திக்க,அழவும் வைத்த சாப்ளின் கதை.திரைப்படத்தின் அனைத்து துறைகளிலும் மேதைமை பெற்றிருந்த சாப்ளின்,ஒடுக்குமுறை மற்றும் யுத்தத்திற்கு எதிரான அமைப்புகளுடன் சேர்ந்து செயல்பட்டார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47685002690796,"sku":null,"price":84.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/e66815c53e3774945e6226b3cd089729.jpg?v=1780037410"},{"product_id":"நீலக்-கழுகு","title":"நீலக் கழுகு","description":"\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eநீலக் கழுகு\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e என்பது சாகசம், மர்மம் மற்றும் விறுவிறுப்பான நிகழ்வுகள் நிறைந்த ஒரு சுவாரஸ்யமான படைப்பு. எதிர்பாராத திருப்பங்களும் சவால்களும் நிறைந்த கதைக்களத்தின் வழியாக, துணிச்சல், தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியின் முக்கியத்துவத்தை இந்நூல் அழகாக எடுத்துரைக்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47685015634156,"sku":null,"price":56.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/f8a276bdb16f6b6f66de2d74dfd20e42.jpg?v=1780037785"},{"product_id":"சாதியற்ற-தமிழர்-சாதித்-தமிழர்","title":"சாதியற்ற தமிழர் சாதித் தமிழர்","description":"\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eசாதியற்ற தமிழர் சாதித் தமிழர்\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e என்பது தமிழ்ச் சமூகத்தில் சாதி எவ்வாறு உருவாகி, காலப்போக்கில் மனிதர்களின் வாழ்க்கை, அடையாளம், உறவுகள் மற்றும் சமூக அமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை ஆராயும் சிந்தனைத் தூண்டும் நூல். தமிழரின் தொன்மையான சமூக வாழ்வு, சமத்துவக் கருத்துகள் மற்றும் பின்னாளில் ஏற்பட்ட சமூகப் பிரிவுகள் ஆகியவற்றை வரலாற்று மற்றும் சமூகப் பார்வையில் இந்நூல் எடுத்துரைக்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47685018222828,"sku":null,"price":75.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SATHIYATRASATHEYATAMIL.jpg?v=1780037732"},{"product_id":"அம்கா","title":"அம்கா","description":"\u003cp\u003e\u003cspan\u003eஅம்கா”- சிறுவர்களுக்கான மற்றும் ஓர் இனிமையான கதைத்தொகுப்பு. எல்லாக் கதைகளிலும் பற்றிக்கொள்ளுதல் எவ்வளவு இனிமையானது. அவசியமானது என நெகிழ்வான கதைகள் மூலம் குழந்தைகளிடம் கடத்தும். அமைதியான வாசிப்பு அனுபவத்தைச் சிறுவர்கள் பெறுவார்கள். வேறு வேறு களங்களின் மனங்களின் தொகுப்பு அம்கா…\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47685125505260,"sku":null,"price":84.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/b7e0c4b03b3d42ef04b840432519977d.jpg?v=1780038334"},{"product_id":"நீல-மரமும்-தங்க-இறக்கைகளும்","title":"நீல மரமும் தங்க இறக்கைகளும்","description":"\u003cp\u003eமகிழ்ச்சியூட்டல் தான் குழந்தை இலக்கியத்தின் அடிப்படை. அதன்பிறகே மற்ற சங்கதிகளான கருத்து, செய்தி, நீதி, நன்னெறி எல்லாம் வாலைப் போன்று நீண்டு கொண்டு வரும். அந்தவகையில் சரிதா ஜோவின் எட்டுக்கதைகள் அடங்கிய இந்தத் தொகுப்பு அந்த ஆனந்தத்தைக் குழந்தைகளுக்கு நிச்சயமாகக் கொடுக்கும்.\u003c\/p\u003e\n\u003cp\u003eசரிதா ஜோவின் இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் அனைத்தும் குழந்தை இலக்கியத்தின் அனைத்து வகைமையிலும் எழுதப்பட்டுள்ள கதைகள். ஒரே நேரத்தில் அறிவியலையும், இயற்கையையும், அதீதங்களையும் குழைத்து அழகான சிற்பங்களாக வடித்திருக்கிறார். அனைத்துமே குழந்தைகளின் மனதில் மிகச்சிறந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. இக்கதைகளின் வழியாகக் குழந்தை இலக்கியத்திற்கு காத்திரமான ஒரு படைப்பாளி கிடைத்திருக்கிறார்.\u003c\/p\u003e\n\u003cp\u003e– எழுத்தாளர் உதயசங்கர்\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47685125669100,"sku":null,"price":75.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/69dd8998282df1ca5af278fe4e1bc950.jpg?v=1780038090"},{"product_id":"பெண்-அன்றும்-இன்றும்","title":"பெண் அன்றும் இன்றும்","description":"\u003cp\u003eநமது சமூகத்தில் பெண்கள் ஏன் ஒடுக்கப்பட்ட நிலையில் இருக்கிறார்கள்? பெண்களாக, தொழிலாளர்களாக, குடிமக்களாகப் பெண்கள் சந்திக்கும் ஒடுக்குமுறைகள் என்ன?  பெண்களின் உழைப்பை சமூகம் எப்படிச் சுரண்டுகிறது? பெண் விடுதலைக்கான பாதை எது?\u003c\/p\u003e\n\u003cp\u003eஆணாதிக்க சமூகத்தில் பெண்ணின் வீடுசார் உழைப்பு கண்ணுக்குப் புலப்படாத உழைப்பாகத் தொடர்ந்து இருந்து வருகிறது. இங்கு, வெந்நீர் கூட வைக்கத் தெரியாது என ஓர் ஆணால் மட்டுமே கூற முடியும்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47685163712748,"sku":null,"price":488.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/b55dfcd8b1373235a91c502726b028be.jpg?v=1780038996"},{"product_id":"சாதி-ஒழிப்பு","title":"சாதி ஒழிப்பு","description":"\u003cp\u003e\u003cspan\u003e1935களில் லாகூரில் நடக்க இருந்த ஜாத்பட் தோடக் மண்டல் என்னும் உயர் சாதி இந்துக்களின் மாநாட்டில் தலைமை உரையாற்றுவதற்காக டாக்டர் அம்பேத்கர் அவர்களால் தயாரிக்கப்பட்ட உரை இது. ஆனால் மாநாட்டு உறுப்பினர்கள் சிலரின் எதிர்ப்பால் அம்மாநாடு ரத்து செய்யப்படுகிறது. ஆனால் இந்த உரை புத்தகமாக வெளிவந்து மிகப்பெரும் வெற்றி பெற்றது. சாதியை அழித்தொழிப்பதற்கான வழிகளைக் கூறும் இந்நூல் இன்று வரை பலரால் வாசிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47685188878572,"sku":null,"price":94.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/c33def30835b970eeb18c6405404e067.jpg?v=1780039927"},{"product_id":"அப்பா-ஒரு-கதை-சொல்றீங்களா","title":"அப்பா ஒரு கதை சொல்றீங்களா...","description":"\u003cp\u003e\u003cspan\u003eகுழந்தைகளுக்கு சோறு ஊட்டுவதும் கதை சொல்வதும் அம்மாவின் கடமையாகும் காலங்காலமாக சொல்லப்பட்டு வருகிறது. ஆனால், அப்பாக்களும் சோறூட்ட வேண்டும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47685212471532,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NewDoc05-27-202619.41_35.jpg?v=1780040175"},{"product_id":"கணிதமேதை-இராமானுஜன்","title":"கணிதமேதை இராமானுஜன்","description":"\u003cp\u003e\u003cspan\u003e\"கணக்கு, மணக்கு எனக்கு பிணக்கு\" - என்றார் மகாகவி பாரதியார். அவர் காலத்தில் பிறந்த ராமானுஜரோ “கணக்கு எனக்கு உயிர்க்கு நேர்\" என்றார். அந்த வகையில் பூஜ்யத்திற்கு மதிப்பில்லை என்ற பள்ளி ஆசிரியருக்கு எதிர் விடையாக பள்ளி மாணவனான இராமானுஜன் பூஜ்ஜியத் துக்கு மதிப்பு உள்ளது. ஒரு எண்ணுக்கு பின்னால் போட்டால் அவற்றின் மதிப்பு பன்மடங்கு அதிகமாகும் என விடை அளித்து ஆசிரியர் அவனது திறமையை வியந்தோதி பாராட்டினார். இதன் விளைவே நவீன அறிவியல் வளர்ச்சியின் கண்டுபிடிப்புகளான பல்வேறு இயந்திரங்கள், ராக்கெட், மற்றும் இன்னும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் ATM (Automatic Teller Machine) பண பரிவர்த்தனை இயந்திரம் இராமானுஜரது கண்டுபிடிப்பின் விளைவே எனலாம்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47685219680492,"sku":null,"price":225.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/d1dbbb207ebad72ac68c6f8afd2b9907.jpg?v=1780040366"},{"product_id":"மலைப்பூ","title":"மலைப்பூ","description":"\u003cp\u003e\u003cspan\u003e(malaipoo) குழந்தை இலக்கிய வரலாற்றில் ஒரு திருப்புமுனை இந்த ’மலைப்பூ’ . ஒளிரும் இந்தியாவின் முகத்தில் ஓங்கி அறையும் பிஞ்சிக் குரலின் உரத்த முழக்கம்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47685221253356,"sku":null,"price":112.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NewDoc05-27-202619.41_34.jpg?v=1780040548"},{"product_id":"டார்வின்-ஸ்கூல்","title":"டார்வின் ஸ்கூல்","description":"\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eடார்வின் ஸ்கூல்\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e – \u003c\/span\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eஆயிஷா இரா. நடராசன்\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e எழுதிய அறிவியல் சார்ந்த சிறார் நூல். உயிரியல், பரிணாம வளர்ச்சி மற்றும் சூழலியல் போன்ற அறிவியல் கருத்துகளை, குழந்தைகள் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் கதை சொல்லும் பாணியில் சுவாரஸ்யமாக எடுத்துரைக்கிறது. அறிவியலை வெறும் பாடமாக அல்லாமல், வியப்பும் ஆர்வமும் நிறைந்த உலகமாக வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47685264572652,"sku":null,"price":108.1,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NewDoc05-27-202619.41_33.jpg?v=1780041157"},{"product_id":"வாலுவின்-ஜாலி-புதிர்கள்","title":"வாலுவின் ஜாலி புதிர்கள்","description":"\u003cp\u003eஇந்த புத்தகத்தில் உள்ள புதிர்களைப் போல பாடங்களை வடிவமைத்து, அது போன்ற கல்விமுறையை கொடுத்தால் தான் உயர்தர சிந்தனைத் திறன்கள் வளரும்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஜாலியாகப் படி, பதற்றம் வேண்டாம். ஜாலியாகப் படித்தால் அது மனதில் நிற்கும். அதன்மூலம், வேறு பல புது புது சிந்தனைகள் நமக்கு வரும் என்பதை, இப்புத்தகத்தின் மூலம் அழகாகக் கொடுத்திருக்கிறார் மோ. கணேசன்\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47685324570860,"sku":null,"price":103.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NewDoc05-27-202619.41_32.jpg?v=1780041892"},{"product_id":"மாயமரம்","title":"மாயமரம்","description":"\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eமாயமரம்\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e – \u003c\/span\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eவிஷ்ணுபுரம் சரவணன்\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e எழுதிய சுவாரஸ்யமான சிறார் இலக்கியப் படைப்பு. கற்பனை, இயற்கை மற்றும் குழந்தைகளின் வியப்பூட்டும் உலகத்தை மையமாகக் கொண்டு அமைந்துள்ள இந்நூல், வாசகர்களை புதுமையான அனுபவங்களின் பயணத்திற்கு அழைத்துச் செல்கிறது. எளிமையான மொழிநடை, உயிரோட்டமான காட்சிகள் மற்றும் குழந்தைகளின் மனதிற்கு நெருக்கமான நிகழ்வுகள் இந்நூலை ரசிக்கத்தக்க வாசிப்பாக மாற்றுகின்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47685380145388,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/542d824821545f2578846b4a4a1b31b8.jpg?v=1780040927"}],"url":"https:\/\/centaram.com\/collections\/bharathi-puthakalayam.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}