{"title":"அசோகமித்திரன்","description":"","products":[{"product_id":"தண்ணீர்","title":"தண்ணீர்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஜமுனா, சாயா, டீச்சரம்மா . . . ‘தண்ணீர்’, சமுதாய அமைப்பினால் கைவிடப்பட்டுத் தனித்து வாழும் மூன்று பெண்களின் கதை. சினிமா கதாநாயகியாகும் கனவு பொய்த்துப் போனதன் நிராசையை மட்டுமல்ல, தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களால் ஒதுக்கப்படுவதன் வலியையும் சுமக்கும் ஜமுனா. இராணுவத்தில் பணிபுரியும் கணவனைப் பிரிந்து பெண்களுக் கான விடுதியில் தங்கி பலவிதமான நெருக்கடிகளுக்கிடையில் பிழைக்கும் ஜமுனாவின் தங்கை சாயா. சீக்காளிக் கணவனுக் கும் வன்மத்தின் மறுஉருவமான மாமியாருக்கும் இடையே நம்பிக்கையின்றி துறவியின் மனவுறுதியுடனும் விரக்தியுடனும் காலந்தள்ளும் டீச்சரம்மா. நகரத்தில் கடும் தண்ணீர்ப் பஞ்சம். மனித வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான தண்ணீருக்குத் தட்டுப்பாடு வரும்போது மனித இயல்புகளும் உறவுகளும் மாற்றம்கொள்வதை இந்நாவல் துல்லியமாக விவரிக்கிறது. சாதாரண மக்களிடம் தவிப்பு, கோபம், தந்திரம், மிருகத் தனமான சுயநலம், இவற்றுடன் தாராள குணமும் மேன்மையும் தென்படுவதை நாம் உணரலாம். தினந்தோறும் தண்ணீரைத் தேடி அலைந்து சேகரித்து தேவைக் கேற்ப சேமித்து வைப்பதற்கான போராட்டம் எல்லோரையும் போல ஜமுனா, சாயா, டீச்சரம்மா ஆகியோரையும் அலைக் கழிக்கிறது. இவ்வலைக்கழிப்பு ஜமுனா, சாயாவிடம் வாழ்க்கைப் போராட்டத்தை எதிர்கொள்வதற்கான தெளிவையும் உறுதியையும் ஏற்படுத்துவதுதான் ‘தண்ணீர்’ நாவலின் முதன்மைச் சரடு. ‘தண்ணீர்’ நகர்ப்புறச் சமூகத்தின் இயல்பைப் பற்றிய மகத்தான படைப்பு.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47599439413484,"sku":null,"price":175.75,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/62da0d0ff39131d6c31640708750a743.jpg?v=1777978479"},{"product_id":"கரைந்த-நிழல்கள்","title":"கரைந்த நிழல்கள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஅசாதாரணமானது என்ற வார்த்தை 1970ல் முதன்முறையாகக் ‘கரைந்த நிழல்கள்’ நாவலைப் படிக்கும்போது தோன்றிற்று. தற்போது, இந்த இரண்டு மாதங்களுக்குள் ஒரு தடவை முழுதாகவும், ஏழெட்டு தடவை பகுதி பகுதியாகவும், நாவலின் நேர்த்தியில் ஈடுபட்டுத் திரும்பவும் ஒரு தடவை முதலிலிருந்து கடைசிவரை ஒரே மூச்சிலும் படிக்க நேர்ந்த பிறகு, ‘கரைந்த நிழல்கள்’ அசாதாரணமான சாதனைதான் என்பது நிச்சயமாகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47599446491372,"sku":null,"price":203.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/f8180d4a38150fa39966dfd6a936a391.jpg?v=1777978928"},{"product_id":"அசோகமித்திரன்-குறுநாவல்கள்","title":"அசோகமித்திரன் குறுநாவல்கள்","description":"\u003ch5\u003e\u003cb\u003eதாத்தாவிடம் ஒரு அன்பான சொல் பேசியது அவரைப் பார்த்ததேகூட கிடையாது. அவர் சொத்து மட்டும் வேண்டும்! இது என்ன சுரண்டல் எண்ணம்? இது என்ன ஒட்டுண்ணி வாழ்க்கை? காலம் காலமாக மனிதன் நீடித்து இருப்பதே இப்படிச் சுரண்டுவதற்கும் மாற்றான் முயற்சியின் பலன்கனைத் தான் பறித்துக்கொள்வதற்கும் தானா?..\u003c\/b\u003e\u003c\/h5\u003e\n\u003ch5\u003e\u003c\/h5\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47603179454700,"sku":null,"price":721.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/e888711031df8bac03aabbf0acbd529a.jpg?v=1778056698"},{"product_id":"ஒற்றன்","title":"ஒற்றன்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஅமெரிக்காவிலுள்ள அயோவர் பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில் சர்வதேச எழுத்தாளர் சந்திப்புக்குச் சென்ற அசோகமித்திரன், அங்கு தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் புனைகதையுருவில் முன்வைக்கிறார். நிகழ்வுகளுடனும் அனுபவங்களுடனும் ஒன்றிப்போகாமல் மானசீகமாக விலகி நின்று பதிவு செய்யும் அசோகமித்திரனின் கலைப் பார்வை, தேர்ந்த காமிராக் கலைஞனின் நுணுக்கத்தோடு காட்சிகளைச் சித்திரிக்கவும் தவறுவதில்லை. பயணக்கட்டுரையும் புனைகதையும் சந்திக்கும் புள்ளியில் சஞ்சரிக்கும் இந்நாவலின் பிரதி நெடுகிலும் இழையோடும் அங்கதம் வாசிப்பில் சுவை கூட்டுகிறது. தமிழின் தனித்துவம் மிக்க கலைஞர்களில் ஒருவரான அசோகமித்திரனின் அலாதியான படைப்பாக்கங்களில் ஒன்று ‘ஒற்றன்’. நாவல் வடிவம் சார்ந்த பரிசோதனையில் முன்னோடி முயற்சிகளில் ஒன்றான ‘ஒற்றன்’ முதன் முறையாக அதன் முழுமையான வடிவில் வெளிவருகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47606310764780,"sku":null,"price":231.25,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/d44d4ad32cad4ead621d8ef692f50a62.jpg?v=1778149876"},{"product_id":"இந்தியா-1948","title":"இந்தியா 1948","description":"\u003ch4\u003e\u003cb\u003eஇந்தியா 1948 - அசோகமித்திரன்:\u003c\/b\u003e\u003c\/h4\u003e\n\u003ch5\u003eநான் அமெரிக்காவில் இருந்தபோது அவளைச் சந்தித்தது எண்ணி ஆறு முறைதான். அதற்க்குள் எங்கள் உறவிலும் இருவர் குடும்பச் சூழ்நிலையிலும் எவ்வளவு மாற்றங்கள் ஏற்ப்படுத்தியது ! அவள் தரப்பில் அவள் அம்மா தெறியாது ஒரு காரியம் செய்யமாட்டாள், அவள் அமேரிக்கா சென்று படித்தது கூட அவளுடைய அம்மா தந்த ஊக்கத்தால்தான். நான் என் அம்மாவிடம் எப்படி நடந்துகொள்கிறேன் ? மேலோட்டமான விஷயங்கள் தவிர அந்தரங்கம் எதைத் தெரியப்படுத்தியிருக்கிறேன், யோசனை கேட்டிருக்கிறேன் ?\u003c\/h5\u003e\n\u003ch5\u003eஅவளுக்கும் தந்தை அற்பாயுவில் போய்விட்டார், மிகவும் சிக்கலான கூட்டுக் குடும்பம், இப்போது ஒரு வழியாக குடும்பத்தினர் பிரிந்து, சுதந்திரமாகச் செயைல்பட முடிகிறது. என் தகப்பனார் என் சிறு வயதிலேயே இறந்துபோய்விடாமல் இருந்தால் என் வாழ்க்கை பாலக்காடும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் கைக்கும் வாய்க்கும் எட்டாதபடி அமைந்திருக்கும்.\u003c\/h5\u003e\n\u003ch5\u003eஎனக்கு என் மாமாவைப் பார்க்க வேண்டும் என்றிருந்தது. என் அந்தரங்கத்தை அவரிடம் சொல்லலாம். அவர் என் மாமனாராக இருந்தால்கூட ஒரு குருவாக எனக்கு வழிகாட்டுவார்.\u003c\/h5\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47632052486380,"sku":null,"price":112.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/1948.jpg?v=1778754590"},{"product_id":"18வது-அட்சக்கோடு","title":"18வது அட்சக்கோடு","description":"\u003cp\u003e\u003cspan\u003eஒரு பெரிய நகரத்தில் இளமைப் பருவத்தைக் கழித்த ஒவ்வொருவரும், தம்முடைய சொந்த அல்லது சமூக அனுபவங்களுக்கும் அந்நகரத்தின் தனித்தன்மை வாய்ந்த கட்டிடங்கள், பஜார்கள், வீதியமைப்புகள், மக்களின் இயல்புகள் ஆகியவற்றுக்குமிடையே இதே விதமான சம்பந்தத்தை உணர்ந்திருக்கக்கூடும். இந்தச் சம்பந்தம் இந்த நாவலில் பதிவாகியிருப்பதுபோல வேறு எந்தத் தமிழ் நாவலிலும் நான் பார்த்ததில்லை.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47651204890860,"sku":null,"price":263.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/18.jpg?v=1779342904"},{"product_id":"மானசரோவர்","title":"மானசரோவர்","description":"\u003cp\u003e\u003cspan\u003eபகுத்தறிவின் எல்லையை உணர்வதிலும் உணர்த்துவதிலும் முக்கியப் பங்கு வகிப்பது ‘மானசரோவர்’ நாவலின் முக்கியமான பரிமாணம் என்று சொல்ல வேண்டும். நவீனத்துவத்தின் ஆதாரமான அறிவியல் பார்வையின் எல்லைகளை, போதாமையைத் தெளிவாகவே கோடிகாட்டும் நாவல், விளங்கிக்கொள்ள முடியாத வாழ்வின் புதிர்களுக்கான பதில்களையும் நெருக்கடிகளுக்கான தீர்வுகளையும் பகுத்தறிவின் எல்லைக்கு அப்பாற்பட்டுத் தேடிச் செல்கிறது.\u003c\/span\u003e\u003cspan\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47654590808300,"sku":null,"price":272.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/3da2ae9010770e93fc947d4ab0ee60e4.jpg?v=1779432224"}],"url":"https:\/\/centaram.com\/collections\/ashokamitran.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}