{"title":"அன்னி எர்னோ","description":"","products":[{"product_id":"தந்தைக்கோர்-இடம்","title":"தந்தைக்கோர் இடம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஅன்னி எர்னோவின் படைப்புகள் பல்வேறு பரிமாணங்கள் கொண்டவை. அவற்றைப் பெண்ணியக் கருத்துகள், வரலாற்றுச் செய்திகள், சமூகச் சிந்தனைகள் போன்ற வெவ்வேறு கோணங்களில் அணுகலாம். இந்த நூலில் சமூக ஏற்றத் தாழ்வுகள் முன்னிறுத்தப்படுகின்றன. பிரான்சின் வட மேற்கு மாகாணமான நார்மண்டியில், விவசாயப் பண்ணைகளில் வேலைசெய்பவர்களின் குடும்பங்கள் வறுமையின் பிடியில் வாடிக்கொண்டிருந்தன. அப்படிப்பட்ட குடும்பம் ஒன்றில் பிறந்த அன்னி எர்னோவின் தந்தை சமூகத்தில் சற்று \u003c\/span\u003e\u003cspan\u003e‘மேலான’ இடத்தைப் பிடிப்பதற்காக முயற்சிகள் மேற்கொள்கிறார். அவர் சந்தித்த இன்னல்கள் ஏராளம். இருந்தும், அவரால் பெரிதாக வெற்றிபெற முடியவில்லை. தந்தையால் நிகழ்த்த இயலாத சாதனையை நிகழ்த்திக்காட்ட மகள் உறுதிபூணுகிறாள். அவளுடைய முயற்சி என்ன ஆனது என்பதை இந்தக் கதை எடுத்துக் காட்டுகிறது. தன்வரலாறுபோலத் தோன்றினாலும், இக்கதையில் வெளிப்படும் அன்னி எர்னோவின் ஆழ்ந்த சமூகவியல் பார்வை சிந்தனையைத் தூண்டும் விதத்தில் அமைந்திருக்கிறது. 1983ஆம் ஆண்டு வெளிவந்த இந்த நூலுக்கு வெளிவந்த அடுத்த ஆண்டே பிரான்சின் உயர் இலக்கிய விருதுகளில் ஒன்றான ரெனோதோ விருது (Prix Renaudot) வழங்கப்பட்டது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47652423172332,"sku":null,"price":94.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/9dad2a39a9e8fe5c2cba192947a16d78.jpg?v=1779362375"},{"product_id":"ஒரு-பெண்மணியின்-கதை","title":"ஒரு பெண்மணியின் கதை","description":"\u003cp\u003e\u003cspan\u003eஅன்னி எர்னோ 2022ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர். இந்நூலில் அவர் 1986 ஆம் ஆண்டு மரணமடைந்த தன் தாயை முன்னிறுத்துகிறார். விவசாயம், ஆலைத் தொழில், வியாபாரம் எனப் பல்வேறு தளங்களில் துடிப்புடனும், சமூக விழிப்புணர்வுடனும் செயல்பட்ட அப்பெண்மணி வயதான காலத்தில் துரதிர்ஷ்டவசமாக ‘அல்சைமர்’ நோயினால் பாதிக்கப்பட்டு, தன் நினைவுகளையும், கடந்துவந்த பாதையையும் மறந்துவிடுகிறாள். தன் வாழ்க்கையில் தடம் பதித்த தன் தாயை மறைவிலிருந்தும் மறதியிலிருந்தும் மீட்டெடுக்க விழைகிறார் அன்னி எர்னோ. அவளது ஆளுமையை வெளிப்படுத்தும் அதேவேளையில் தனக்கும் அவளுக்குமிடையே இருந்த பாசப் போராட்டத்தையும் பிணக்குகளையும் எடுத்துரைக்கிறார். தனிப்பட்ட ஒரு குடும்பத்தைக் காட்சிப்படுத்தும் இந்நூல் சமூகவியல் பார்வையில் படைக்கப்பட்டிருப்பது சிறப்பாகும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47719976993004,"sku":null,"price":103.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/bdfe0e3e0427ac1abf0cc8e089ddf58d.jpg?v=1780981553"}],"url":"https:\/\/centaram.com\/collections\/annie-ernaux.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}