{"title":"ALL BOOKS","description":"","products":[{"product_id":"வாடிவாசல்","title":"வாடிவாசல்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஜல்லிக்கட்டு ஒரு வீர நாடகம். அது விளையாட்டும்கூட. புய வலு, தொழில் நுட்பம், சாமர்த்தியம் எல்லாம் அதுக்கு வேண்டும். தான் போராடுவது மனித னுடன் அல்ல, ரோஷமூட்டப்பட்ட ஒரு மிருகத்துடன் என்பதை ஞாபகத்தில் கொண்டு வாடிவாசலில் நிற்கவேண்டும் மாடு அணைபவன். அந்த இடத்தில் மரணம் தான் மனிதனுக்குக் காத்துக் கொண்டிருக்கும். காளைக்குத் தன்னோடு மனுஷன் விளை யாடுகிறான் என்று தெரியாது. அதற்கு விளையாட்டிலும் அக்கறை இல்லை. அதை மையமாக வைத்துப் புனையப்பட்ட இந்தக் கதையில் ஜெல்லிக் கட்டு பற்றிய வர்ணனை தத்ரூப மாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. நுட்பமாகவும்கூட. ஒரு குறிப்பிட்ட வட்டாரத்துப் பேச்சு வழக்கிலேயே முழுக்க முழுக்க எழுதப்பட்டது. படிக்கும்போது சிலிர்ப்பு ஏற்படுத்தும் கதை. Jallikkattu, the bull fight of Tamilnadu, is the central theme of this highly interesting short fiction.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47599389147372,"sku":null,"price":92.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/a913e58ddccaa804b703e33a0c08fabe.jpg?v=1777975655"},{"product_id":"குறத்தி-முடுக்கு","title":"குறத்தி முடுக்கு","description":"\u003cp\u003e\u003cspan\u003eகுறத்தி முடுக்கு’ ஓர் இடமில்ல. ரத்தமும் நிணமும் சீழும் ஓயாமல் கசியும் ஆறாத ரணம். தான் உயிர்தப்ப, பல்லி துறந்த வால். பிறகு அதே பல்லியின் தினவுக்கு வடிகாலன அவலம். மும்பையின் காமாட்டிபுரா, கொல்கொத்தாவின் சோனாகாச்சி போல, தமிழ்நாட்டுத் திருநெல்வேலியில் ஜி.நாகராஜன் உருவக்கிய விலைப்பெண்டிர் தெரு. ‘குறத்தி முடுக்’ கின் பிரவாகத்தில் அமிழ்ந்து மூச்சுத்திணறும் பெண்கள் ஒருபுறம்; சந்தர்ப்பவசத்தால் சிக்கிக்கொண்ட தொழிலுக்கு உடம்பையும் கொஞ்சமும் மங்கிவிடாதபடி தான் அடைகாக்கும் கனவுக்கு மனத்தையும் கொடுத்து நீர் ஒட்டாத இலைபோல வாழும் தங்கம் மறுபுறம்; இருதரப்பையும் ஒரு மாயக்கோடுபோல இணைக்கும் பத்திரிகையாளன் என மூன்று தரப்புகளின் சங்கமம் இந்தக் குறுநாவல். பொதுவாகவே ஜி.நாகராஜனின் படைப்புகளில் ஒருவிதக் கைப்புச்சுவை உண்டு. ‘குறத்தி முடுக்’கிலும் நிராசையின் குரல் ஓங்கித்தான் ஒலிக்கிறது. ஆனால் அதையும் மீறி, மனித மனத்தில் இயற்கையாக ஊற்றெடுக்கும் வாஞ்சையும் கம்பீரமும் இந்தக் குறுநாவலில் முன்நிற்கின்றன. -யுவன் சந்திரசேகர்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47599399436524,"sku":null,"price":129.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/850503c3bcf25fa56fbdfad63b739bfb.jpg?v=1777976305"},{"product_id":"கிடை","title":"கிடை","description":"\u003cp\u003e\u003cspan\u003e‘கிடை’ காட்டும் சமூக உறவுகள் மிகவும் இறுக்கமானவை. சாதி வேறுபாடும் பொருளாதார ஏற்றத்தாழ்வும் அங்கு இறுகிப் பிணைந்து கிடக்கின்றன. எல்லப்பனின் கலியாண ஊர்வலமும் செவனியின் பேயோட்டு வைபவமும் இந்தச் சமூக முரணை உக்கிரமாகக் காட்டுகின்றன. கிராமத்தின் சில வலியகரங்கள் சில தனிமனிதர்களின் வாழ்வை ரகசியமாக இறுக்கிக்கொண்டிருப்பதை இதில் காண்கிறோம். ஒரு கலை என்ற வகையில் ‘கிடை’தான் ராஜநாராயணனின் படைப்புகளிலேயே சிகரம் என்று இப்போதும் எனக்குத் தோன்றுகின்றது. இதில் அவர் காட்டி யுள்ள நுட்பம் அலாதியானது. எம்.ஏ. நுஃமான்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47599405957356,"sku":null,"price":83.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/0a98f543d1516d50b57c7129dd301965.jpg?v=1777976834"},{"product_id":"பால்யகால-சகி","title":"பால்யகால சகி","description":"\u003cp\u003e\u003cspan\u003eபஷீர் ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதி வெளியிட்ட நாவல் ‘பால்யகால சகி’. இன்றுவரை வெவ்வேறு தலைமுறை வாசகர்களால் தொடர்ந்து வாசிக்கப்பட்டுவரும் மலையாளப் படைப்பும் இதுதான். தோல்வியடைந்த காதலின் கதை என்னும் எளிய தோற்றத்துக்குப் பின்னால் பஷீரின் சொந்த அனுபவங்களின் சாயலும் இஸ்லாமியப் பின்புலமும் உணர்ச்சிப் பெருக்கும் கொண்ட புனைகதை ‘பால்யகால சகி’. எழுத்தின் கூறுகளாக மட்டுமல்லாமல் வாழ்க்கையின் அம்சங்களாகத் திரண்டிருப்பது தான் நாவலை இலக்கிய முக்கியத்துவம் கொண்டதாகவும் தொடர்ந்து வாசிக்கக் கூடியதாகவும் ஆக்குகிறது. அதன் பின்னுள்ள படைப்பு மனம்தான் பஷீரை மலையாளப் படைப்பாளிகளில் ‘உம்மிணி வலிய ஓர் ஆளாக’ - இன்னும் பெரிய ஒருவராக - ஆக்குகிறது. ‘பால்யகால சகி’க்கு இன்று உருவாகியிருக்கும் செவ்வியல் தகுதியும் அதனால்தான். Basheer’s much acclaimed love story. Well translated.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47599418376428,"sku":null,"price":120.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/dff9daa17ca1f0e23cd3102a25fbcea2.jpg?v=1777977238"},{"product_id":"அசுதினாபுரம்","title":"அஸ்தினாபுரம்","description":"\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003eகடலோர மக்களின் வாழ்வைப் பல்வேறு பரிணாமங்களுடனும் காலப்போக்கில் அவர்கள் அடைந்துவரும் மாற்றங்களுடனும் கலாபூர்வமாகப் பதிவுசெய்துவருபவர் ஜோ டி குருஸ்.\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan\u003e‘\u003cspan lang=\"EN-IN\"\u003eஆழிசூழ் உலகு\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan\u003e’\u003c\/span\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003e,\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan\u003e‘\u003cspan lang=\"EN-IN\"\u003eகொற்கை\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan\u003e’ \u003c\/span\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003eஆகிய நாவல்களைத் தொடர்ந்து அவர் எழுதிய மூன்றாவது நாவல்\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan\u003e‘\u003cspan lang=\"EN-IN\"\u003eஅஸ்தினாபுரம்\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan\u003e’\u003c\/span\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003e.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003eகடலோரத்தில் பிறந்த ஒருவன் கப்பல் சரக்குப் போக்குவரத்துத் துறைக்குச் செல்வதையும் அந்தத் துறையில் பல்வேறு போராட்டங்களுக்கிடையில் உயர்ந்த நிலையை அடைவதையும் சொல்லும்\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan\u003e‘\u003cspan lang=\"EN-IN\"\u003eஅஸ்தினாபுரம்\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan\u003e’ \u003c\/span\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003eகப்பல் சரக்குப் போக்குவரத்துத் துறை சார்ந்த கதையாகவும் விரிகிறது. கள அனுபவமும் அபாரமான நிர்வாகத் திறனும் கொண்ட நாவலின் மையப்பாத்திரம் வழியே ஜோ டி குருஸ் பல்வேறு விஷயங்களை உணர்த்துகிறார். பல கேள்விகளை எழுப்புகிறார். கப்பல் போக்குவரத்துத் துறை செயல்படும் விதத்தைக் கதைப்போக்கினூடே மிக நுட்பமாகவும் துல்லியமாகவும் சொல்கிறார். கூடவே ஒரு தனிமனிதனின் வாழ்வை யும் அவன் வாழ்வு எவ்வாறு பிற மனிதர்களுடன் பிணைந்தும் அறுந்தும் மீண்டும் இணைந்தும் பயணிக்கிறது என்பதையும் காட்டுகிறார். மானுட இனத்தின் கீழ்மை சமூகத்தின் சகல அடுக்கு களிலும் பரவியிருக்கும் இன்றைய யதார்த்தத்தையும் நாவல் கவனப்படுத்துகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47599424635116,"sku":null,"price":481.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/60e975d2e093a94562a8e4aaa3eb6506.jpg?v=1777977971"},{"product_id":"தண்ணீர்","title":"தண்ணீர்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஜமுனா, சாயா, டீச்சரம்மா . . . ‘தண்ணீர்’, சமுதாய அமைப்பினால் கைவிடப்பட்டுத் தனித்து வாழும் மூன்று பெண்களின் கதை. சினிமா கதாநாயகியாகும் கனவு பொய்த்துப் போனதன் நிராசையை மட்டுமல்ல, தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களால் ஒதுக்கப்படுவதன் வலியையும் சுமக்கும் ஜமுனா. இராணுவத்தில் பணிபுரியும் கணவனைப் பிரிந்து பெண்களுக் கான விடுதியில் தங்கி பலவிதமான நெருக்கடிகளுக்கிடையில் பிழைக்கும் ஜமுனாவின் தங்கை சாயா. சீக்காளிக் கணவனுக் கும் வன்மத்தின் மறுஉருவமான மாமியாருக்கும் இடையே நம்பிக்கையின்றி துறவியின் மனவுறுதியுடனும் விரக்தியுடனும் காலந்தள்ளும் டீச்சரம்மா. நகரத்தில் கடும் தண்ணீர்ப் பஞ்சம். மனித வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான தண்ணீருக்குத் தட்டுப்பாடு வரும்போது மனித இயல்புகளும் உறவுகளும் மாற்றம்கொள்வதை இந்நாவல் துல்லியமாக விவரிக்கிறது. சாதாரண மக்களிடம் தவிப்பு, கோபம், தந்திரம், மிருகத் தனமான சுயநலம், இவற்றுடன் தாராள குணமும் மேன்மையும் தென்படுவதை நாம் உணரலாம். தினந்தோறும் தண்ணீரைத் தேடி அலைந்து சேகரித்து தேவைக் கேற்ப சேமித்து வைப்பதற்கான போராட்டம் எல்லோரையும் போல ஜமுனா, சாயா, டீச்சரம்மா ஆகியோரையும் அலைக் கழிக்கிறது. இவ்வலைக்கழிப்பு ஜமுனா, சாயாவிடம் வாழ்க்கைப் போராட்டத்தை எதிர்கொள்வதற்கான தெளிவையும் உறுதியையும் ஏற்படுத்துவதுதான் ‘தண்ணீர்’ நாவலின் முதன்மைச் சரடு. ‘தண்ணீர்’ நகர்ப்புறச் சமூகத்தின் இயல்பைப் பற்றிய மகத்தான படைப்பு.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47599439413484,"sku":null,"price":175.75,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/62da0d0ff39131d6c31640708750a743.jpg?v=1777978479"},{"product_id":"கரைந்த-நிழல்கள்","title":"கரைந்த நிழல்கள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஅசாதாரணமானது என்ற வார்த்தை 1970ல் முதன்முறையாகக் ‘கரைந்த நிழல்கள்’ நாவலைப் படிக்கும்போது தோன்றிற்று. தற்போது, இந்த இரண்டு மாதங்களுக்குள் ஒரு தடவை முழுதாகவும், ஏழெட்டு தடவை பகுதி பகுதியாகவும், நாவலின் நேர்த்தியில் ஈடுபட்டுத் திரும்பவும் ஒரு தடவை முதலிலிருந்து கடைசிவரை ஒரே மூச்சிலும் படிக்க நேர்ந்த பிறகு, ‘கரைந்த நிழல்கள்’ அசாதாரணமான சாதனைதான் என்பது நிச்சயமாகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47599446491372,"sku":null,"price":203.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/f8180d4a38150fa39966dfd6a936a391.jpg?v=1777978928"},{"product_id":"சிவப்புக்-கழுத்துடன்-ஒரு-பச்சைப்-பறவை","title":"சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை","description":"\u003cp\u003e\u003cspan\u003eஅம்பையின் ஏழாவது சிறுகதைத் தொகுப்பு இது. பதிமூன்று கதைகள் கொண்ட இத்தொகுப்பின் பல கதைகள் பிரசுரம் ஆகாதவை.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47599448522988,"sku":null,"price":203.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/e9c42012da36f9cb6a1c9656df05f7ed.jpg?v=1777979179"},{"product_id":"திருடன்-மணியன்பிள்ளை","title":"திருடன் மணியன்பிள்ளை","description":"\u003cp\u003e\u003cspan\u003eசெய்யாத குற்றத்திற்காகச் சிறைத் தண்டனை அனுபவித்ததிலிருந்து இவரது குற்றவாசனை வெளிப்பட ஆரம்பிக்கிறது. திருட்டுகளில் ஈடுபடுகிறார். இதற்காக இவர் கையாள்கிற நுட்பங்கள் பிரமிக்க வைப்பவை; சாகசத் தன்மை கொண்டவை. போலீசில் பிடிபட்டதுமே உண்மைகளை ஒப்புக்கொண்டுவிடுகிற இவர், தன் மீதான வழக்குகளுக்கு வழக்கறிஞர்களை நியமித்துக்கொள்ளாமல் தானாகவே வாதாடுவார். இவரது குறுக்கு விசாரணைகள், போலீஸ் அதிகாரிகளும் நீதிபதிகளும் பயப்படுமளவுக்கு அமைந்திருக்கும். ஒருபுறம் மனிதத்தன்மை யற்றதாக இருக்கும் இவரது செயல்பாடுகளினுள் ஏழைகள் மீதான உள்ளார்ந்த பரிவும் இடைகலந்திருக்கும். திருவனந்தபுரத்திலிருந்து ஒரு முஸ்லிம் பெண்ணை வாழ்க்கைத் துணையாகச் சேர்த்துக்கொண்ட இவர் ஒரு கட்டத்தில் திருடிய பொருளுடன் குடும்பத்தோடு மைசூருக்குச் சென்று வீதியோரத்தில் பாயாசக் கடை தொடங்குகிறார். பிறகு யூசுஃப் பாட்சா எனும் பெயரில் அங்கே புகையிலை விவசாயத்தில் ஈடுபட்டு ஏழைப் பங்காளன் எனப் பெயர் பெறுகிறார். பிறகு மைசூரில் இவரது வளர்ச்சி கர்நாடக மாநில முதலமைச்சருடன் சேர்ந்து ஹெலிகாப்டரில் பறக்கும் அளவுக்கு முன்னேறுகிறது. மக்களவைத் தேர்தலில் ஒரு அரசியல் கட்சியின் வேட்பாளராகத் தேர்வு செய்யப்படுகிறார். மக்கள் செல்வாக்கு மிகுந்தவரும் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவருமாக இருப்பதால் ‘மாண்புமிகு’கூட இவரது கைக்கெட்டும் தூரத்தில் வந்து நிற்கிறது. இந்நிலையில், இவர் மைசூரிலிருக்கும் தகவலைக் கேள்விப்பட்டு வந்த கேரளக் காவல் துறை இவரைக் கைது செய்கிறது. ஒரே இரவுக்குள் சம்பாதித்த அத்தனைச் செல்வங்களையும் இழந்துவிட்டு வெறுங்கையுடன் கேரளத்திற்குக் கொண்டுவரப்படுகிறார் மணியன்பிள்ளை.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47599452225772,"sku":null,"price":693.75,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/THIRUDANMANIYANPILLAI.jpg?v=1777978660"},{"product_id":"பாத்துமாவின்-ஆடு","title":"பாத்துமாவின் ஆடு","description":"\u003cp\u003e\u003cspan\u003eவேடிக்கை கதையாகச் சொல்லப்பட்ட குடும்பப் புராணம் ‘பாத்துமாவின் ஆடு’. ஆனால் வைக்கம் முகம்மது பஷீர் எழுதியவற்றில் பல அடுக்குகளில் புரிந்துகொள்ளப்பட வேண்டிய நாவலும் இதுதான். அன்பின் பெயரால் மையப்பாத்திரத்தைச் சுரண்டும் உறவுகளின் வலை, பெண்களின் உலகத்துக்குள் நிலவும் பூசல்களின் சிக்கல், மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமான சார்புநிலை உறவு, வாழ்க்கைக்கும் இலக்கியத்துக்குமான பிணைப்பின் வலு, நகைச்சுவையின் மிளிரல் என எந்த அடுக்கிலிருந்தும் இதை அணுகலாம். பஷீரின் இலக்கியத்தில் மனிதர்களுக்கு மட்டுமல்ல பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் தாவரங்களுக்கும் இடமுண்டு. மனிதர்களுக்கு இயற்கையின் உயிர்தரிப்புக் குணத்தையும் ஜீவராசிகளுக்கு மனித சுபாவத்தையும் வழங்குகிறது பஷீரின் படைப்பாளுமை. தன்னை மையமாக வைத்து வீட்டுக்குள் ஓர் உலகை உருவாக்குகிறார். அது உம்மிணி வலிய வீடு அல்லது மிகவும் சின்னப் பிரபஞ்சம். இது பஷீர் மட்டுமே உருவாக்கக்கூடிய கதா பிரபஞ்சம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47603138658540,"sku":null,"price":138.75,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/1a57140b241a82f97eb17349491d680e.jpg?v=1778055904"},{"product_id":"வாசனை","title":"வாசனை","description":"\u003cp\u003e\u003cspan\u003eதமிழின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவரான சுந்தர ராமசாமி 1955முதல் 2004வரை ஐம்பது ஆண்டுகளில் எழுதியவற்றிலிருந்து தேர்ந்தெடுத்த கதைகளைக் கொண்ட தொகுப்பு இது. அவருடைய கதையுலகம், எழுத்து முறை, மொழி, கதைக்களம், கதைகளில் வெளிப்படும் பார்வை, கலைத்திறன் ஆகியவை காலப்போக்கில் எவ்வாறு மாறிவந்திருக்கின்றன என்பதைக் காட்டும் மாதிரிகள் இவை.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eதொடர்ந்து தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருந்த ஒரு படைப்பாளியின் இலக்கியப் பயணத்தின் தடங்களை இக்கதைகளில் காணலாம். காலம் கடந்து நிற்கும் தன்மையும் மறு வாசிப்புகளில் புதிதாக வெளிப்படுத்திக்கொள்ளும் தன்மையும் கொண்ட இந்தக் கதைகள் கிளாசிக் தொகுப்பாக வெளியாகின்றன. இக்கதைகளின் அழகியல் கூறுகள், மொழி நேர்த்தி, நுட்பமான அவதானிப்புகள், பாத்திர வார்ப்புகள் ஆகியவற்றின் மூலம் வாசகர் பெறும் கலையனுபவம் அபூர்வமானது.\u003c\/span\u003e\u003cspan\u003e.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47603154321644,"sku":null,"price":416.25,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/d8dbfa9f19c0492819c40b8ea8c1c8ce.jpg?v=1778056181"},{"product_id":"அசோகமித்திரன்-குறுநாவல்கள்","title":"அசோகமித்திரன் குறுநாவல்கள்","description":"\u003ch5\u003e\u003cb\u003eதாத்தாவிடம் ஒரு அன்பான சொல் பேசியது அவரைப் பார்த்ததேகூட கிடையாது. அவர் சொத்து மட்டும் வேண்டும்! இது என்ன சுரண்டல் எண்ணம்? இது என்ன ஒட்டுண்ணி வாழ்க்கை? காலம் காலமாக மனிதன் நீடித்து இருப்பதே இப்படிச் சுரண்டுவதற்கும் மாற்றான் முயற்சியின் பலன்கனைத் தான் பறித்துக்கொள்வதற்கும் தானா?..\u003c\/b\u003e\u003c\/h5\u003e\n\u003ch5\u003e\u003c\/h5\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47603179454700,"sku":null,"price":721.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/e888711031df8bac03aabbf0acbd529a.jpg?v=1778056698"},{"product_id":"கோபல்லபுரத்து-மக்கள்","title":"கோபல்லபுரத்து மக்கள்","description":"\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan\u003e-\u003c\/span\u003e\u003cspan\u003eகோபல்லபுரத்து மக்களின் எளிமையும் வெள்ளந்தி மனமும்தான் இந்த நாவலின் உயிரோட்டம். அந்தக் கிராமத்தின் ஆன்மாவைத் தன் எழுத்தால் கி.ரா. படம் பிடிக்கிறார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003eமண் ஒன்றானாலும் மனங்கள் பிளவுபட்டிருக்கின்றன. இந்தப் பிளவை நாட்டில் நடக்கும் விடுதலைப் போரோடு இணைக்கிறார்; கோபல்லபுரத்தாரால் நேரடியாகப் போரில் ஈடுபட முடியவில்லை. ஆனாலும்  தலைவர்களின் நோக்கையும் போக்கையும் கண்டு விமர்சனம் செய்யும் அளவுக்கு அவர்களின் வாழ்க்கைக் கண்ணோட்டம் விரிவடைகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan\u003e‘\u003c\/span\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003eகோபல்ல கிராமம்\u003c\/span\u003e\u003cspan\u003e’ \u003c\/span\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003eநாவலின் தொடர்ச்சியாக எழுதப்பட்ட இந்த நாவலில் சமகால வரலாற்றுச் சம்பவங்களின் பின்னணியில் சாதாரண மக்கள் நாயகர்களாக விளங்குவதைத் தனக்கே உரிய நடையில் சொல்கிறார் கி.ரா. ஒவ்வொரு வரியிலும் மண் வாசனை வீசும் இந்த நாவல் தமிழின் சிறந்த வட்டார வழக்கு நாவல்களில் ஒன்று என்னும் சிறப்பையும் பெற்றது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003e1991ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்ற நாவல் இது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47603197477100,"sku":null,"price":360.75,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/c155b4a32885ff73309c9d7811196819.jpg?v=1778057183"},{"product_id":"கிழவனும்-கடலும்","title":"கிழவனும் கடலும்","description":"\u003cp\u003e\u003cspan\u003eநோபல் பரிசு பெற்ற எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் ஆகப் புகழ்பெற்ற நாவல் இது. ஒரு மனிதனுக்கும் மீனுக்குமிடையே நடைபெறும் உயிர்ப்போராட்டத்தைக் காவியச் சுவையுடன் சித்திரிக்கிறது இந்நூல். அழகிய கோட்டோவியங்கள் இடம்பெற்றுள்ளன. பல மொழிகளில் திரைப்படங்கள் இந்நாவலைத் தழுவி எடுக்கப்பட்டள்ளன. ‘கிழவனும் கடலும்’ வெளிவந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இன்றும் வாசிக்கும்போது இது ஒரு அற்புதமான கதை. ஒரு தளத்தில் மனிதனுக்கும் இயற்கைக்குமான போராட்டம், இன்னுமோர் தளத்தில் மானுடப் பண்பாடு, துணிச்சல், போர்க்குணம் பற்றியது. பிறிதொரு தளத்தில் அமெரிக்காவாழ்வின் மையமாகத் தனிமனிதன் – குழுவோ அமைப்போ அல்ல – இருந்த காலகட்டத்தின் கதை. வாழ்வுக்கான அவன் போராட்டத்தின் சித்திரம். சிக்கனமான சொற்பிரயோகம், தெறிக்கும் விவரணைகளில் தனிமனிதப் போராட்டத்தைக் கொண்டாடும் படைப்பு.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47603203473644,"sku":null,"price":87.88,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/b3e424da615a6b2ec36f2c0ed408b240.jpg?v=1778056634"},{"product_id":"மாதொருபாகன்","title":"மாதொருபாகன்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇந்த நாவலைப் படிக்கத் தொடங்கியதும் முழுமூச்சாகப் படித்துவிட்டே கீழே வைக்க வேண்டும் என்னும் வகையில்தான் இருந்தது. அதுவும் நம் கவனம் முழுவதையும் ஈர்த்துக்கொள்ளும் வகையில் இருந்தது. இந்தக் கதையைப் படித்த பிறகு மனதில் தோன்றியது என்ன? குறைந்தபட்சம் எங்களைப் பொருத்தவரையில் தங்களுக்குள் அமைதியடைந்தவர்கள் என்றாலும் குழந்தை இல்லாதவர்கள் என்னும் தகுதியைச் சமூகம் தொடர்ந்து அவர்களுக்கு நினைவூட்டிக்கொண்டேயிருக்கும் ஒரு கணவன் மனைவியின் நெஞ்சை உருக்கும் கதை அது இந்த நாவலை முழுமையாக உள்வாங்க வேண்டுமெனில் மேலட்டையிலிருந்து பின்னட்டை வரை முழுமையாகப் படிப்பதன் மூலமே அது இயலும். இந்த நாவல் உங்களை உலுக்கியெடுக்கும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47603214418156,"sku":null,"price":231.25,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/685bd9948806100538eae419aebb8c59.jpg?v=1778057443"},{"product_id":"கடல்புரத்தில்","title":"கடல்புரத்தில்","description":"\u003cp\u003e\u003cspan\u003eதுளியை நுணுக்கமாகச் சித்திரிப்பதன் வழியாக, வெளியை அதன் விரிவோடு எழுப்பிக்காட்ட முயல்வது எழுத்தின் ஆதாரமான நோக்கங்களில் ஒன்று. இச் சிறுநாவலில் அந்த ரசவாதம் குறைந்த பக்கங்களுக்குள்ளாகவே நிகழ்ந்தேறியிருப்பதைக் காணலாம். ஒரு எளிய மீனவக் குடும்பத்தைப் பற்றியதாகத் தொடங்கும் கதையானது, முடியும் தருவாயில் அக்குடும்பம் வசிக்கும் கிராமத்தை, அது அமைந்திருக்கும் அகண்ட கரையை, அதற்கப்பால் விழிக்கெட்டாத தூரத்திற்கு விரிந்துகிடக்கும் கடலைப் பற்றின கதையாகவும் பெருகிவிடுகிற மாயம் எவ்விதப் பிரயாசையுமின்றி இயல்பாகவே நிகழ்கிறது. இது கடல்புரத்தைக் குறித்த கதை மாத்திரமல்ல; கடலைப் பின்புலமாகக் கொண்டு இயற்கைக்கும் மனிதனுக்கும், பழமைக்கும் புதுமைக்கும், தந்தைக்கும் மகனுக்கும், ஆணுக்கும் பெண்ணுக்கும், அன்பிற்கும் பகைக்கும், உடலுக்கும் உள்ளத்திற்கும் இடையிலான சிக்கலான பிணைப்புகளை, அவற்றில் விழுந்துவிடுகிற முடிச்சுக்களை, அவற்றை அவிழ்க்க முயன்று தோற்ற அலைகழிகிற மனத்தின் பாடுகளை எனப் பலதையும் குறித்து ஆதூரத்துடன் பேசுகிறது. முதல்பதிப்பு வெளியாகி முப்பதுக்கும் அதிகமான வருடங்கள் கடந்துவிட்டபோதிலும், இன்றும் வாசகர் கவனத்தைத் தக்கவைத்துக் கொண்டிருப்பது இந்நாவலின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47603238502636,"sku":null,"price":157.25,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/2d7c466e084a7413517e5fe39dcd4d49.jpg?v=1778058177"},{"product_id":"பூக்குழி","title":"பூக்குழி","description":"\u003cp\u003e\u003cspan\u003eகொங்கு வட்டாரப் பின்புலத்தில் கதைகளை நிகழ்த்திக் காட்டும் பெருமாள்முருகன், ‘பூக்குழி' நாவலில் சாதிய முரண் குறித்த உரையாடலை முன்வைக்கிகிறார். இந்நாவலை அவர் சாதி மீறித் திருமணம் செய்து ‘பலி'யான தருமபுரி இளவரசனுக்குச் சமர்ப்பித்துள்ளார். இந்த நாவலைப் படிக்கும் யாருக்கும் தலித், தலித்தல்லாதோர் என்கிற பின்புலத்தில் கதை எழுதப்பட்டிருக்கலாம் என்று எண்ணவே வாய்ப்பிருக்கிறது. ஆனால் கதை சாதியின் முரண்களைப் புரிந்துகொள்வதற்கான முயற்சி பற்றியதாக உள்ளது. புராணங்கள், இதிகாசங்கள், மநு போன்ற புத்தகங்களிலிருந்து சாதி உருவாகி இருக்கிறதென்று சொல்லி, தங்களுக்கும் சாதிக்கும் எத்தகைய தொடர்பும் இல்லை என்று இடைநிலைச் சாதிகள் தங்களை நியாயப்படுத்திக்கொள்ள முனையக்கூடும். இந்நாவல் சாதிப் பிரச்சினைகளுக்கு ஆதிக்கச் சாதிகளும் பொறுப்பேற்க வேண்டும் என்கிறது. இடைநிலைச் சாதிகளின் சாதி மனோபாவத்தை இப்பிரதி வெளிச்சமிடுகிறது. சுய விமர்சனத்திலிருந்தே மாற்றங்கள் உருவாகும். அப்படியான விமர்சனத்தை இந்நாவல் வைக்கிறது. மௌனமாய் இருக்கும் குளத்தில் பெருமாள்முருகனால் எறியப்பட்ட கல்லுக்கு, சலனத்தை உண்டாக்கும் ஆற்றல் இருப்பதாகச் சொல்ல முடிகிறது.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e                                                 \u003c\/span\u003e\u003cspan\u003e                                                                                                                                                     \u003c\/span\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003eசந்துரு மாயவன்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47603256590572,"sku":null,"price":185.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/5c89d1ef0d8190c47b3cc7eb1b523722.jpg?v=1778058570"},{"product_id":"அக்னிச்-சிறகுகள்","title":"அக்னிச் சிறகுகள்","description":"\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003eராமேஸ்வரத்தில் எளிய குடும்பத்தில் பிறந்த ஒருவர் தன் கனவுகளைத் தீவிரமாகப் பின்தொடர்ந்து வாழ்வில் பெற்ற வெற்றி ஒரு தனிநபரின் வெற்றி மட்டுமல்ல; இந்திய விண்வெளித் துறையின் வெற்றியுடனும் இந்தியப் பாதுகாப்புத் துறை தன்னிறைவு பெற்ற வெற்றியுடனும் இரண்டறக் கலந்தது அது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003eஆ.ப.ஜெ. அப்துல் கலாமின் இந்தத் தன்வரலாறு விண்வெளி ஆய்வு, செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துதல், ஏவுகணைத் தொழில்நுட்பம் ஆகியவற்றில் இந்தியா தன்னிறைவு பெற்ற வரலாற்றை விறுவிறுப்பாகவும் எளிமையாக வும் கூறுகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003eஇந்தப் புதிய பதிப்பில் கூடுதலாக ஐந்து இயல்கள் உள்ளன. அவை\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan\u003e‘\u003cspan lang=\"EN-IN\"\u003eஅக்னிச் சிறகுகள்\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan\u003e’ \u003c\/span\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003eநூலின் முந்தைய பதிப்பு முடிவடைந்த தருணத்திலிருந்து டாக்டர் கலாம் மறைந்தது வரையிலான (1991-2015) காலகட்டத்தின் நிகழ்வுகளைச் சித்தரிக்கின்றன. கலாமுக்கு நெருங்கிய துணையாக இருந்த,\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan\u003e‘\u003c\/span\u003e\u003cspan\u003eஅக்னிச்\u003c\/span\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003e சிறகுகள்\u003c\/span\u003e\u003cspan\u003e’ \u003c\/span\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003eநூலின் இணையாசிரியரான அருண் திவாரி தரும் பதிவுகள் இவை. தேசத்திற்கான கடமைகளில் உச்ச சாதனையைத் தொட்ட பிறகும் மகத்தான இந்தியாவுக்கான பெரும் கனவுகளுடன் வாழ்ந்து மேலும் பல சாதனைகளைப் புரிந்த நிகழ்வுகளை இந்தப் புதிய பக்கங்கள் உயிரோட்டத் துடன் விவரிக்கின்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47603271565548,"sku":null,"price":231.25,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/747a6d2bc7c27660e74af7188a031224.jpg?v=1778058779"},{"product_id":"ஆலவாயன்","title":"ஆலவாயன்","description":"\u003cp\u003e\u003cspan\u003e‘மாதொருபாகன்’ நாவலின் இரு வெவ்வேறு கோணங்களை விரித்து ‘அர்த்தநாரி’, ‘ஆலவாயன்’ ஆகிய நாவல்களாக உருவாக்கியுள்ளார் பெருமாள்முருகன். இவை ஒரு நாவலின் அடுத்தடுத்த பாகங்கள் அல்ல. தம்மளவில் முழுமை பெற்றுத் தனித்தியங்குபவை. இரண்டும் ஒரே புள்ளியில் தொடங்கினாலும் வெவ்வேறு திசைகளில் பயணம் செய்யும் சாத்தியப்பாடுகளைக் கொண்டுள்ளன. ஆண்களைச் சார்ந்தும் சாராமலும் உருக்கொள்ளும் பெண் உலகின் விரிவையும் அதற்குள் இயங்கும் மன உணர்வுகளையும் காணும் நோக்கு நாவல் ‘ஆலவாயன்.’ உறவுகள் சார்ந்த கேள்விகள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஓயாமல் எழுவதையும் அதைக் கடக்க மனிதர்கள் படும் பாடுகளையும் காட்சிச் சித்திரமாக்கியுள்ளது இந்நாவல்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47603279790316,"sku":null,"price":231.25,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/44f2bf2c00aeb01a5142902d1fdf6435.jpg?v=1778059367"},{"product_id":"உன்-கதை-என்-கதை","title":"உன் கதை என் கதை","description":"\u003cp\u003e\u003cspan\u003eகவிஞர்கள் சில்வியா பிளாத்-டெட் ஹியூஸ் இணையரின் திருமண வாழ்வு நவீன இலக்கியத்தின் மிகவும் பேசப்பட்ட, சோகமயமான நிகழ்வுகளில் ஒன்று. இளம் வயதில் தற்கொலை செய்துகொண்டு இறந்துபோன சில்வியா பிளாத்தின் மீதான அனுதாபம் சில்வியா-டெட் ஹியூஸ் இணையரின் திருமண வாழ்வைப் பற்றிய பல புனைவுகளுக்கும் ஊகங்களுக்கும் இடமளித்தது. டச்சு எழுத்தாளரான கோனி பால்மன் புனைவுகள், ஊகங்கள், அவதூறுகள் ஆகியவற்றை விலக்கிவிட்டு, பல்வேறு ஆதாரங்களை ஆழமாக ஆராய்ந்து அவர்களது வாழ்வைப் புனைகதையாகப் படைத்துள்ளார். ஹியூஸின் பார்வையில் விரியும் இந்தக் கதை சில்வியாவைப் பற்றியும் இவர்களுக்கிடையே இருந்த உறவின் பல்வேறு பரிமாணங்களையும் சிடுக்குகளையும் புரிந்துகொள்ள உதவுகிறது. படைப்பூக்கத்தின் பரவசத்தையும் வேதனையையும் உணரச் செய்கிறது. எந்தக் குற்றச்சாட்டுக்கும் பதில் சொல்லாமல் இருந்த டெட் ஹியூஸின் குரலில் வெளிப்படும் இந்த நாவல் மிக நெருக்கமான ஒரு காதலின் வெளியில் தெரியாத சில பக்கங்களைக் காட்டுகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47603351257324,"sku":null,"price":314.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/f9d3a9eec6a9cf03722761d08e225300.jpg?v=1778060431"},{"product_id":"புத்தம்-வீடு","title":"புத்தம் வீடு","description":"\u003cp\u003e\u003cspan\u003e‘புத்தம் வீடு’ - எளிய மொழியில் சொல்லப்பட்ட காதல் கதையாகத் தோற்றம்கொள்ளும் நாவல். லிஸியும் தங்கராஜும் இளம்பருவத்தில் கொண்ட ஈர்ப்பு காதலாக முதிர்ந்து திருமணத்தில் கனிய நீண்ட காலம் காத்திருக்கிறார்கள். தடைகளைக் கண்டு அஞ்சுகிறார்கள். இறுதியில் இணைகிறார்கள். முதல் சந்திப்புக்கும் முதல் நெருக்கத்துக்கும் இடையில் வருடங்கள் கடந்து போகின்றன. இடங்கள் மாறுகின்றன. மனிதர்கள் கடந்து போகிறார்கள். அவர்கள் உறவாடுகிறார்கள். காசுக்காகத் தகப்பனை ஏய்க்கிறார்கள். பகைகொண்டு சொந்தச் சகோதரனையே கொல்கிறார்கள். குலப்பெருமை பேசுகிறார்கள். புதிய தலைமுறையோடு பிணங்குகிறார்கள். காலத்துக்கேற்ப மாறுகிறார்கள். இது லிஸியின் கதை. மூன்று தலைமுறைகளை இணைக்கும் கண்ணி அவள். அவளை மையமாகக் கொண்டு விரியும் கிராம உறவுகளின் கதை. ஆர்ப்பாட்டமில்லாமல் வெளிப்படும் அவளுடைய சிநேகச் சரடின் மறுமுனையில்தான் அவளைத் தூற்றியவர்களும் விரும்பியவர்களும் இயங்குகிறார்கள். படைப்பு இயல்பால் தன்னை நிலைநிறுத்திக்கொண்ட இலக்கிய ஆக்கங்களில் ஒன்று ‘புத்தம் வீடு’. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு முன்பு எழுதப்பட்டது. எனினும் இன்னும் வாசிப்பில் சுவை குன்றாமல் துலங்குகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47603501138156,"sku":null,"price":203.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/08412adc1eca8ff4ebb694fd03d7ab10.jpg?v=1778061572"},{"product_id":"எங்க-உப்பப்பாவுக்கொரு-ஆனையிருந்தது","title":"எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது","description":"\u003cp\u003e\u003cspan\u003eஎங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது’ நாவலில் ஒரு முஸ்லிம் குடும்பத்தின் அகக் காட்சிகளை முன்வைத்து அந்தச் சமூகத்தைப் பற்றிய ஓர் உருவகத்தை வைக்கம் முகம்மது பஷீர் உருவாக்குகிறார். இறந்த காலத்தின் நினைவுகளுடன் நிகழ்காலத்தை வாழப்பார்க்கிறது அந்தக் குடும்பம். வட்டனடிமைக் காக்காவுக்கு ஊர்ப் பிரமுகராக இருப்பதன் பெருமை. மனைவி குஞ்ஞுத்தாச்சும்மாவுக்கு அவள் அப்பா யானை வளர்த்த காலம் பற்றிய பெருமை. மகள் குஞ்ஞுபாத்தும்மாவுக்கு மணமகன் யானைமேல் வரும் கனவு. இந்தப் பழம் பெருமைகளெல்லாம் கால மாற்றத்தில் கலைந்துபோகின்றன. தாத்தாவின் யானை கொம்பானையல்ல, வெறும் குழியானைதான் என்று புதிய தலைமுறை கற்பிக்கிறது. மூவரும் புதிய உலகத்தின் விதிகளுக்கும் நடைமுறைகளுக்கும் இணங்க நேர்கிறது. அரைநூற்றாண்டு கடந்தும் வாசகர்கள் போற்றிப் பாராட்டி வாசிக்கும் புனைகதையின் புதிய தமிழாக்கம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47603503694060,"sku":null,"price":138.75,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/dba95d58fa9f70f0cfde4d65328572ed.jpg?v=1778061973"},{"product_id":"தோட்டியின்-மகன்","title":"தோட்டியின் மகன்","description":"\u003cp\u003e\u003cspan\u003eநவீன மலையாளப் புனைவெழுத்தில் அனல் காற்றைப் படரச் செய்த ஆரம்பகாலப் படைப்புகளில் முக்கியமானது ‘தோட்டியின் மகன்.’ தகழி சிவசங்கரப் பிள்ளை 1947இல் எழுதிய நாவல். இலக்கியத்தில் மட்டுமல்ல; சமூகப் பார்வையிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. அதுவரை இலக்கியத்தில் யாரும் பார்க்காத களம்-சேரி; கேட்காத மொழி-பாமரக் கொச்சை; முகர அஞ்சிய வாடை-மலம்; வாழ்ந்திராத வாழ்வு - தோட்டிப் பிழைப்பு என்று பின்தள்ளப்பட்ட உலகைப் பொதுக் கவனத்துக்கு வைத்தது நாவல். சமூக அரங்கிலும் அரசியல் துறையிலும் அதன் மற்றொலிகள் எழுந்தன என்பது நாவலின் வெற்றி. விமர்சனங்கள் கூறப்பட்டாலும் இன்றும் தொடர்ந்து வாசிக்கப்பட்டுவரும் இந்த நாவலே மலையாளத்தில் தலித் வாழ்வை இலக்கியமாக்கியதில் முன்னோடிப் புனைவு.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47603505496300,"sku":null,"price":203.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/72897327f4b148295591b656f2a38f75.jpg?v=1778062187"},{"product_id":"மரப்பசு","title":"மரப்பசு","description":"\u003cp\u003e\u003cspan\u003eமரப்பசு எழுபதுகளின் தொடக்கத்தில் கணையாழி இதழில் வெளிவந்து 1975இல் நூல் வடிவம் பெற்றது. அன்று முதல் இன்று வரை நாற்பது ஆண்டுகளாக இலக்கிய உலகில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டும் வருகிறது - ஆதரவாகவும் எதிராகவும். தி. ஜானகராமன் நாவல்களில் மிக நவீனமான படைப்பு ‘மரப்பசு’. அவரது பிற நாவல்கள் கடந்தகாலத்தின் மறு உருவாக்கங்கள். ஆனால் நிகழ்காலத்தை நேர்முகமாக எதிரொளித்த படைப்பு ‘மரப்பசு’. பிற நாவல்கள் வாழ்வனுபவத்தின் மீதான படைப்புகள். அவற்றில் கருத்துக்கள் பின்புலமாகவே அமைந்தவை. மரப்பசு கருத்தை முன்னிறுத்தி வாழ்வை பாதித்த படைப்பு. இதில் அனுபவங்கள் கருத்துக்களை வலுப்படுத்துவதற்கான காரணிகளாகவே உருப்பெற்றிருப்பவை. உலகம் முழுவதும் பெண்ணியக் கருத்துகள் அலையடித்துக்கொண்டிருந்த தருணத்தில் அவற்றை தமிழில் விவாதித்த முதல் ஆக்கம் ‘மரப்பசு’. பூமியிலிருக்கும் சகல உயிர்களையும் அன்பின் கரங்களால் தழுவ விரும்பும் அம்மணி நவீன தமிழ் இலக்கியத்தில் மறக்க முடியாத பாத்திரங்களில் ஒன்று. அம்மணி மழைத் துளிபோல புதிதானவள். அதே சமயம் நதியைப் போல பழமையானவள். காற்றைப் போல் சுதந்திரமானவள். அதே சமயம் சிறகுகளின் பாதுகாப்பில் ஒடுங்க விரும்பியவள். உறவுகளைத் தேடி அலைந்தவள். அதே சமயம் தனிமையானவள். நாவலில் தன்னைப் பற்றி அம்மணி கூறும் சொற்களை மாற்றிச் சொன்னால் “மரப்பசுவாக இருந்தாலும் உயிருள்ள பசுவாக” இருக்கும் தனித்துவம் கொண்டவள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47603506905324,"sku":null,"price":305.25,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/d0ce70365444f768a527d64990cf17e7.jpg?v=1778062382"},{"product_id":"தெய்வம்-என்பதோர்","title":"தெய்வம் என்பதோர்","description":"\u003cp\u003e\u003cspan\u003eநாட்டார் தெய்வங்கள் என்ற சொல்லாட்சி நம் மனங்களில் சாமியாட்டம், குருதிப்பலி, பலி வடிவங்கள் ஆகிய படங்களாகவே மூட நம்பிக்கைகளோடு பின்னிப் பிணைந்தவையாக விரிந்து கிடப்பது உண்மை. ஆனால் அவை முற்றிலும் தவறான பிம்பங்கள் என்று அழுத்தமாகத் தன் கருத்துக்களை வாசகர் உணரும் விதமாக இந்நூலின் கட்டுரைகள் எடுத்துரைக்கின்றன. வட்டாரம் சார்ந்த உற்பத்தி அசைவுகளும் சமூகம் உளவியலும் எனப் பன்முகத்தன்மையைக் கொண்டாடும் நாட்டார் தெய்வங்கள் ஒரு மக்கள் பண்பாட்டின் அடையாளமாக நிற்கின்றன. - முன்னுரையில் ச. தமிழ்ச்செல்வன்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47603506938092,"sku":null,"price":74.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/9a7d44836e4fce95bf201984d65a466c.jpg?v=1778062407"},{"product_id":"அறியப்படாத-தமிழகம்","title":"அறியப்படாத தமிழகம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eம் அறிந்த தமிழகத்தின் அறியாத பரிமாணம் இந்நூல். ஒரு பொருட்டாக நாம் கருதாத ஒரு செய்தியை எடுத்துக்கொண்டு அதில் வரலாறும் பண்பாடும் எவ்வாறு படிவம் படிவமாகப் படிந்துள்ளன என்பதை நூலின் ஒவ்வொரு கட்டுரையும் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது. உப்பு, எண்ணெய், தேங்காய், வழிபாடு, விழாக்கள், உடை, உறவுமுறை, உறவுப் பெயர்கள் என அன்றாட வாழ்வின் பகட்டில்லாத பல்வேறு கூறுகளைக்கொண்டு தமிழ்ச் சமூகத்தின் ஈராயிரம், மூவாயிரமாண்டு வரலாற்று அசைவியக்கம் இந்நூலில் கோடிட்டுக் காட்டப்பெறுகின்றது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47603531022572,"sku":null,"price":69.37,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ff601ba32da35531d6d39822f108fea6.jpg?v=1778063039"},{"product_id":"தெய்வங்களும்-சமூக-மரபுகளும்","title":"தெய்வங்களும் சமூக மரபுகளும்","description":"\u003cp\u003e\u003cspan\u003eதோன்றிய காலந்தொட்டே நம்பிக்கைகள் சார்ந்திருந்த தெய்வங்கள் காலப்போக்கில் பல்வேறு சமூக நடைமுறைகளாலும் சமூகப் பிரிவுகளாலும் தத்தமக்கான மரபுகளை உருவாக்கிக்கொண்டன. தமிழ்ச் சமூகத்தில் பெருந்தெய்வங்கள் [சிறு தெய்வங்கள்] என்கிற வகைப்பாடு புறநானூற்றிலேயே பதிவு பெற்றுவிட்டதையும் அதன் பின்புலத்தையும் தொட்டுக் காட்டுகிறார் தொ.ப. வாலியோன் என்கிற பலராமன் வழிபாடு வழக்குக் குன்றி மறைந்துவிட்டது என்று எழுத்துச் சான்றுகள் கொண்டு எவரும் சொல்லிவிடலாம். வெள்ளைச்சாமி, வெள்ளைக்கண்ணு முதலிய பெயர்களின் தொடர்ச்சியில் அதன் எச்சங்கள் நிலவுவதைத் தொ.ப.தான் கண்டுகாட்ட முடியும். கள்ளழகர் என்பது மாயனின் கள்ள அழகு வழிப்பட்டதென்பது பௌராணிகம். ஆனால் கள்ளர் சமூகத்தார்க்கும் அழகருக்குமான தொடர்பில் முகிழ்த்தவர் கள்ளழகர் என்பதைத் தொ.ப. கள ஆய்வின் மூலம் கண்டு வரலாற்றுப் பின்னணி தேடி நிறுவுகிறார். தமிழ் வைணவம் வைதிகப் பிடிக்கு வெளியே பரவிய விதத்திற்கு, திருக்கண்ணபுரம் சௌரிராஜப்பெருமாள் மீனவர் மாப்பிள்ளையாகத் திருமலைராயன் பட்டினம் எழுந்தருளும் விழாவும் ஒரு சான்று என விவரிக்கிறார் தொ.ப. தமிழகக் கோயிலமைப்புகளின் பின்னணியில் அழகர் கோயில் அமைப்பைத் துல்லிய வரையறைகளுடன் விளக்கும் தொ.ப. கோயிலமைப்புச் சாத்திர வரம்பை நெகிழ்த்தும் பெருங்கோயில்கள் அமைந்திருப்பதைக் காட்டுகிறார். தெய்வம், - சமூகம், - மரபு என்னும் மூன்று புள்ளிகளைக் கொண்டு வரலாற்றுப் பின்னணியில் தமக்கேயுரிய பண்பாட்டுக் கூர்நோக்கில் தொ.ப. வரைந்த கோலங்களின் ஒரு தொகுப்பு இது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47603602391276,"sku":null,"price":74.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/306212ba461bbaad8d78fb216c5d6c17.jpg?v=1778063447"},{"product_id":"சந்தைக்கடை","title":"சந்தைக்கடை","description":"\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan\u003e-\u003c\/span\u003e\u003cspan\u003eஅளவான உரையாடல் பகுதிகளையும் விரிவான விவரணைப் போக்கையும் தன் பலமாகக் கொண்டுள்ள கதைகள் இவை. எல்லாக் கதைகளிலும் விசாரணை தொனி மையமென இழையோடு கிறது. கதைசொல்லிகள் உணர்ச்சி யின் பிடியில் இருக்கும்போதும் தர்க்கத்துடன் சூழலை அணுகி விடை காண்பவர்களாக உள்ளனர். மரபின் பிடியிலிருந்து விலகச் சாதுர்யத்தைக் கைக்கொள்கின்றனர். ஏகமெனக் காட்சியாகி மலர்கின்ற இச்சிறுகதைகள், காலமாற்றத்தின் பல்வேறு அலகுகளைத் தன்னகத்தே கொண்டுள்ளன. \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003eபுதிய காலம் வழங்கியிருக்கும் பொருளாதார விடுதலைக்குப் பின்னும்கூடத் தனிமனிதனை விடாமல் பற்றியிழுக்கும் சமூகத் தளைகள் அறுபட்டு விழும் இடத்தில் பல கதைகள் முடிவதுபோல் தொடங்குகின்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003eஎளிய பொருள் பொதிந்த மொழியாட்சியின் மூலம் சிறுபுள்ளியிலிருந்து படரவிருக்கும் பெருவெடிப்பின் தருணங்களைத் தொட்டுவிட்டு அமைதியாய்க் கடந்து செல்கிறார் பெருமாள்முருகன்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47603700990188,"sku":null,"price":203.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/e3d02bb34ab441362b358c14bc0c80b0.jpg?v=1778063816"},{"product_id":"ராஜா-வந்திருக்கிறார்","title":"ராஜா வந்திருக்கிறார்","description":"\u003cp\u003e\u003cspan\u003eகு. அழகிரிசாமியின் கதைகள் எளிய நடை, சித்தரிப்பின் லாவகம், உள்ளோடும் துயர இழை, அல்லது மிதக்கும் நகைச்சுவை, கமழும் மண்ணின் மணம் என அழகுகள் கூடி வந்தவை. தமிழில் சிறுகதைக்காக சாகித்திய அக்காடமி பரிசு பெற்ற முதல் எழுத்தாளர். ‘ராஜா வந்திருக்கிறார்’ என்ற அவரது இந்தத் தேர்ந்தெடுத்த கதைகளில் கு. அழகிரிசாமியின் கதைசொல்லும் பன்முக ஆற்றலின் கீற்றுகளை வாசகன் உணர முடியும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47603701022956,"sku":null,"price":323.75,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/f25c7069e230f9a1c63c0b608a3fc666.jpg?v=1778064071"},{"product_id":"மாயமான்","title":"மாயமான்","description":"\u003cp\u003e\u003cspan\u003eகி. ராஜநாராயணன், ஜானகிராமனின் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஜானகிராமனைப் போலவே அபூர்வமான அழகுணர்ச்சியும் ரசனையில் திளைக்கும் மனோபாவமும் கொண்டவர். இவரது கதை உலகத்தைத் தமிழ் மண்ணுக்கே உரித்தான ஒரு பழத்தோட்டம் என்று சொல்லலாம். வித்தியாசமான மனிதர்களைக் கதாபாத்திரங்களாக மாற்றும் ஆற்றல் இவர் கலை வன்மை. - சுந்தர ராமசாமி கரிசல் இலக்கியத்தின் முன்னோடி கி. ராஜநாராயணனின் தேர்ந்தெடுத்த 17 கதைகளின் தொகுப்பு இந்நூல்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47603728744684,"sku":null,"price":249.75,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/e6910cffabc186c313bf58c5e82da13b.jpg?v=1778064317"},{"product_id":"காதுகள்","title":"காதுகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஎம்.வி.வி. தன் வாழ்க்கையின் சுமார் 20 ஆண்டுகால அனுபவத்தைக் ‘காதுகள்’ என்ற பெயரில் எழுதினார். இந்த நாவலின் கதாநாயகன் மகாலிங்கத்தின் மத்திய வயதில் அவன் உள்ளிருந்தும் வெட்ட வெளியிலிருந்தும் பல ஓசைகளை, குரல்களை அவன் காதுகளுக்குள் கேட்க நேர்கிறது. கெட்ட வார்த்தைகள் கூட அவருக்குள் கேட்டன. அவர் உடல் ஒரு குருக்ஷேத்ரமாக வடிவமைக்கப்படுகிறது. இரண்டு அணியினர் போரிடுகிறார்கள். அவர் தெய்வத்தைச் சார்ந்து நிற்கிறார். நன்மைக்கும் தீமைக்குமான போரில், தெய்வம்கூடச் சுலபமாக ஜெயிக்க முடிவதில்லை. ஆனாலும் தன் குரு, அந்தக் கெட்டவைகளை வெற்றி கொள்வார் என்று நம்புகிறார் மகாலிங்கம். அந்த நம்பிக்கைதான் நாவலின் பக்கங்கள். இதை எம்.வி.வி. தன் வாழ்க்கை வரலாற்று நாவல் என்கிறார். விமர்சகர்கள் சிலர் இது மேஜிக்கல் ரியலிச நாவல் என்கிறார்கள். மனநல மருத்துவக் காரர்கள் இது ஒரு ஆடிட்ரி ஹாலுயூசினேஷன் சார்ந்த நாவல் என்கிறார்கள். தமிழ் நாவல் சரிதத்தில இது ஒரு முக்கியமான, வாசிக்கப் பட வேண்டிய நாவல் என்பது ஒரு நிச்சயமான உண்மை. பிரபஞ்சன்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47603738902764,"sku":null,"price":185.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/3e05a73374b44b786ad12aeb6b5310ab.jpg?v=1778065465"},{"product_id":"பண்பாட்டு-அசைவுகள்","title":"பண்பாட்டு அசைவுகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003e'அறியப்படாத தமிழகம்', 'தெய்வங்களும் சமூக மரபுகளும்' ஆகிய இரு நூல்களில் உள்ள கட்டுரைகளையும் சில புதிய கட்டுரை களையும் உள்ளடக்கிய தொகுப்பு இது. மண்ணும், மண்ணின் உயிர்வகைகளும் பயிர் வகைகளும் இவற்றினூடான மனித அசைவு களும் பன்முகத்தன்மை கொண்டவை என்ற புரிதலை இந்நூல் ஏற்படுத்துகிறது. நம்மைச் சுற்றியுள்ள அசைவுகளை எந்திரகதியில் அல் லாமல் தன்னுணர்ச்சியோடு காணவைக்கிறது.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eதொ. பரமசிவத்திடமிருந்து தெறிக்கும் கருத்துகளும், சான்று மேற்கோள்களும், வாழ்ந்து பெற்ற பட்டறிவும் மலைப்பை ஏற்படுத்தக் கூடியவை. நாம் நன்கு அறிந்தது என்று நினைக்கும் விஷயத்தில் புதிய ஒளி பாய்ச்சுவதும், பழகிப் பழகிப் பொருளிழந்துவிட்டது என்று நாம் உணர்வற்று நோக்கும் ஒரு சொல்\/தொடர்\/பழமொழியிலிருந்து ஒரு சமூகப் புரிதலைச் சற்றும் எதிர்பாராத சமயத்தில் வழங்குவதும் தொ.ப.வின் கருத்துப் புலப்பாட்டு முறை. வானிலும் மண்ணிலுமாக மாய ஜாலங்களைக் காட்டும் இந்திரசித்தின் போர் முறையுடன் ஒப்பிடத்தகுந்தது இது.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e                                                                                             \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47603752534252,"sku":null,"price":102.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/4df7a89481c5e974651be2fbe168cc92.jpg?v=1778065779"},{"product_id":"ஆணவக்-கொலைச்-சாமிகளும்-பெருமிதக்-கொலை-அம்மன்களும்","title":"ஆணவக் கொலைச் சாமிகளும் பெருமிதக் கொலை அம்மன்களும்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஅகால மரணமடைந்த ஒரு பெண்ணோ ஆணோ தெய்வமாகி வழிபாடு பெறுவது ஒரு மரபு. இந்த மரணம் கொலை, விபத்து, தற்கொலை என்னும் காரணங்களால் அமையலாம். சாதி மீறிய காதல் திருமணங்கள் தொடர்பான கொலையைச் சாதி ஆணவக் கொலை என்று சொல்வது இன்று பொது வழக்காக உள்ளது. ஆணவக் கொலைக்குப் பின்னால் பணம், அதிகாரம், சாதி என்பன மட்டுமின்றிக் குடும்பப் பெருமிதமும் கொலைகளுக்குத் தூண்டுதலாக அமைகிறது. இப்படிப்பட்ட இறப்புகளுக்குப் பின் தெய்வமாக்கப்பட்ட பதினான்கு பேரின் கதைகள்தான் இந்த நூல்; இதைப் புலனாய்வு அறிக்கை என்றும் கூறலாம். கதைகளை மட்டும் சொல்லாமல் அவற்றின் குற்றப் பின்னணி, தெய்வமாக்கப்பட்ட பின் உருவான வழிபாட்டு முறை என எல்லாவற்றையும் நூலாசிரியர் ஆழமாகப் பதிவுசெய்துள்ளார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47603764297964,"sku":null,"price":129.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/99bce749339a87b9e6e7f6919b501056.jpg?v=1778066427"},{"product_id":"பூனாச்சி-அல்லது-ஒரு-வெள்ளாட்டின்-கதை","title":"பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை","description":"\u003cp\u003e\u003cspan\u003eதலைப்பு உணர்த்துவதுபோலவே இந்த நாவல் ஒரு வெள்ளாட்டின் வாழ்வைக் கூறுகிறது. ஆடுகளின் பிரச்சினைகளையும் சிக்கல்களையும் சொல்கிறது. ஆடுகளின் மேல் மனித குணங்களை ஏற்றும் ஆசிரியர் ஆடுகளின் வாழ்வினூடே மனித வாழ்வைப் பேசுவதாகவும் இந்த நாவலை வாசிக்கலாம். பெருமாள்முருகன் தான் வாழும் சமூகத்தையும் அதிலுள்ள மனிதர்களையும் மட்டுமின்றி ஆடுகளைப் பற்றியும் நன்கு அறிந்தவர் என்பதால் இதில் ஆடுகளின் வாழ்வும் மானுட இயல்புகளும் அற்புதமாகத் துலங்குகின்றன. ஆடுகளின் கதையாக வாசிக்கையில் சுவையாகவும் நுட்பமான கூறுகள் நிறைந்ததாகவும் விளங்கும் இந்த நாவல் குறியீட்டுத் தளத்தில் முற்றிலும் வேறொரு வடிவம் எடுத்து வியக்கவைக்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47605597864172,"sku":null,"price":166.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/56f017eebeb02aaab85337e821f54aa5.jpg?v=1778134194"},{"product_id":"ஏறுவெயில்","title":"ஏறுவெயில்","description":"\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan\u003eநகரமயமாதலின் விளைவாகத் தன்னுடைய பூர்விக நிலத்தை விட்டுச் செல்லும் ஒரு கிராமத்துக் குடும்பத்தின் கதைதான் ‘ஏறுவெயில்'. இந்த இடப்பெயர்வினூடே நடக்கும் பொருளாதார, சமூக, உறவுச் சிக்கல்களை இந்த நாவல் தீவிரமாகக் கையாள்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan\u003eவெயில் தகிக்கும் பிரதேசத்தில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்துவரும் ஒரு படைப்பாளி வெயில் தரும் உணர்வுடன் வாழ்க்கையை அணுகிப் பார்த்ததன் வெளிப்பாடு இந்த நாவல். இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து இயங்குவதற்கான உந்துதலாக அமைந்த நாவல் இது என்று பெருமாள்முருகன் குறிப்பிடுகிறார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan\u003eஇது இவருடைய முதல் நாவல். 1991இல் எழுதிய இந்த நாவல் வாசகர்களிடத்தின் தன் புதுமையையும் உயிர்ப்பையும் இன்றளவிலும் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47605600682220,"sku":null,"price":259.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/aab94a2b709f019353a1c0382215d7bd.jpg?v=1778134454"},{"product_id":"கோபல்ல-கிராமம்","title":"கோபல்ல கிராமம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇயற்கையோடு இணைந்த வாழ்வுக்கான கூருணர்வை இழந்துகொண்டிருக்கிற இன்றைய காலகட்டத்தில் அந்தக் கூருணர்வை உட்சரடாகக் கொண்டுள்ளது. கி. ராஜநாராயணனின் ‘கோபல்ல கிராமம்’ நாவல். மனிதர்களின் கதைகளை எழுதும்போதும் அசையும் அசையாப் பொருட்கள், பறவைகள், விலங்குகள், பூச்சிகள் என இயற்கை சூழ் வாழ்வின் மொத்தத் தொகுப்பின் ஒரு பகுதியாகவே மனித வாழ்வு இந்த நாவலில் வெளிப்படுகிறது. கிராமமும் அந்த நிலப்பரப்பும் இழந்துகொண்டிருக்கிற உயிர்க்களையைப் பற்றியும் இந்நாவல் கவலைகொள்கிறது. ஒரு கிராமத்தின் நிலவியல் தோற்றத்துடன் அதன் விலங்குகள், பறவைகள், செடிகள், கொடிகள், மனிதர்கள் என ஒரு முழுமையான சித்திரத்தை முன்வைக்கும் கதையாடலை இந்நாவலுக்குள் சாத்தியப்படுத்துகிறார் கி.ரா. கிராம வாழ்வில் சாதியின் இருப்பையும் மனிதர்களின் இடத்தையும் கி.ரா. இயல்பாகக் கவனப்படுத்துகிறார். கோபல்லம் எனும் கிராமத்தின் இயல்பையும் அதில் இயக்கம் கொள்ளும் வாழ்வையும் இந்நாவல் முன்னிறுத்தினாலும் அதன் பார்வை உலகம் தழுவும் பார்வையாகவும் விரிவடைவது கி.ரா.வின் எழுத்து வன்மைக்குச் சான்றாக அமைகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47605641150700,"sku":null,"price":231.25,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/8ca08c943a122b5706d00ada6f4ea05d.jpg?v=1778136770"},{"product_id":"அம்மா-வந்தாள்","title":"அம்மா வந்தாள்","description":"\u003cp\u003e\u003cspan\u003e‘அம்மா வந்தாளை’ மீறலின் புனிதப் பிரதியாகக் கொண்டாடலாம். சமூகம் நிறுவிக் காபந்து செய்து வரும் ஒழுக்க மரபைக் கேள்விக்குட்படுத்துகிறது நாவலின் கதை மையம். மனித உறவுகள் நியதி களுக்குக் கட்டுப்பட்டவை அல்ல. அவை உணர்ச்சிகளுக்கு வசப்படுபவை. இந்த இரண்டு கருத்தோட்டங்களின் ஈவாகவே மனித வாழ்க்கை இருக்கிறது; இருக்கும் என்பதை வலியுறுத்துகிறது கதை. இவ்விரு நிலைகளில் ஊசலாடுபவர் களாகவே முதன்மைப் பாத்திரங்கள் அமைகின்றன. இந்த ஊசலாட்டத்தை கலையாக்குகிறார் தி. ஜானகிராமன். ஆசாரங்களையும் விதிகளையும் மீறி மனிதர்களை நிர்ணயிப்பது அவர்களது உணர்வுகள்தாம் என்பதை இயல்பாகச் சொல்வதுதான் அவருடைய கலைநோக்கு. அந்த நோக்கம் உச்சமாக மிளிரும் படைப்புகளில் முதலிடம் வகிப்பது ‘அம்மா வந்தாள்’.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47605646688492,"sku":null,"price":212.75,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/5309ca1121f8706fea6f9c0e02d4da8a.jpg?v=1778137202"},{"product_id":"பஷீர்-கதைகள்","title":"பஷீர் கதைகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eமுற்போக்கு இலக்கியம் முதன்மையான நடைமுறையாக இருந்த காலப் பகுதியில் எழுத்தில் ஈடுபட்டவர் பஷீர். ‘ஜீவன் சாஹித்ய பிரஸ்தானம்’ (வாழ்விலக்கிய இயக்கம்) என்று அழைக்கப்பட்ட போக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள் பஷீர், தகழி சிவசங்கர பிள்ளை, பி. கேசவதேவ், பொன்குன்னம் வர்க்கி ஆகியோர். இவர்களின் எழுத்தில் புதுவகையை உருவாக்கியவர் பஷீர். நடைமுறை உலகை மாற்றிப் புதிய உலகைச் சமைப்பதற்கான அறைகூவலைப் பிற எழுத்தாளர்கள் முன்னிருத்தினர். இந்த முழுமையற்ற உலகத்தை மாற்றி முழுமையான உலகைப் படைப்பது பற்றிய கனவை முன்வைத்தார்கள். ஆனால் பஷீர் இந்த முழுமையற்ற உலகை நேசித்தவராக இருந்தார். தீமையும் கீழ்மையும்இந்த உலகின் உயிரோட்டமான அம்சங்கள் என்று உணர்ந்திருந்தார். நடைமுறை உலகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களேஅவரது கதை மாந்தர்களாக இருந்தனர். அவர்களது வாழ்க்கையே அவருக்குக் கதை நிகழ்வுகளாக இருந்தன. பொறுக்கிகள், வேசிகள், திருடர்கள், முட்டாள்கள், பைத்தியங்கள், ஏமாற்றுப்பேர்வழிகள் எல்லாரும் அவருடைய அன்புக்குரிய பாத்திரங்களாக இருந்தார்கள்.அந்தப் பாத்திரங்கள்மீது வாசகரும் அன்பு பாராட்டக் கட்டாயப்படுத்தியதுதான் பஷீர் கலையின் வெற்றி.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47605657764076,"sku":null,"price":582.75,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/021d86a9acefc4e1a8002c658a54da83.jpg?v=1778138008"},{"product_id":"ஒரு-வீடு-பூட்டிக்-கிடக்கிறது","title":"ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது","description":"\u003cp\u003e\u003cspan\u003eதமிழ்ச் சிறுகதைகளுக்கு புதிய வார்ப்பும் வடிவமும் வனப்பும் வழங்கியவர் ஜெயகாந்தன். சிறுகதை இலக்கியத்துக்கு விரிவான வாசகப் பரப்பை உருவாக்கியவரும் அவரே. ஜெயகாந்தனின் மொத்தச் சிறுகதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பதினேழு கதைகளின் தொகுப்பு ‘ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது’. ஒரு காலகட்டத்தைச் சேர்ந்த தமிழ் சிறுகதைப் போக்கையும் முன்னோடி எழுத்தாளர் ஒருவரின் நோக்கையும் அடையாளப்படுத்துகிறது இத்தொகுப்பு. சுகுமாரன்\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eஜெயகாந்தன்\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eஜெயகாந்தன் (1934 - 2015) த. ஜெயகாந்தன் தென்னார்க்காடு மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் 1934இல் பிறந்தார். தொடக்கப் பள்ளிக் கல்வியைக்கூட முடிக்காத இவர், சுயமாகக் கற்று 1950 முதல் சிறுகதைகள் எழுதத் தொடங்கினார். சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்கள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், திரைக்கதை வசனங்கள், நேர்காணல்கள் என எழுபத்தைந்துக்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவந்துள்ளன. கவிதைகளும் எழுதியுள்ளார். சிறுகதைகள், கட்டுரைகளின் முழுத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன. இவரது சிறுகதைகள், நாவல்கள் பல்வேறு இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நாளிதழ், இலக்கிய இதழ்களின் ஆசிரியராகவும் இருந்துள்ளார். சில திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். ஞானபீட விருது, சாகித்ய அகாதெமி விருது, ராஜராஜன் விருது பெற்றுள்ளார். இவர் இயக்கிய ‘உன்னைப் போல் ஒருவன்’ திரைப்படம் குடியரசுத் தலைவர் விருது (1964) பெற்றது. ஏப்ரல் 8, 2015 அன்று சென்னையில் காலமானார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47605662318828,"sku":null,"price":323.75,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/bc3e77407bb03d43ef02f4edf9676777.jpg?v=1778138317"},{"product_id":"சில-நேரங்களில்-சில-மனிதர்கள்","title":"சில நேரங்களில் சில மனிதர்கள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eபெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய 'அக்கினிப் பிரவேசம்' சிறுகதையின் நீட்சியாக உருவான 'சில நேரங்களில் சில மனிதர்கள்' நாவல், ஒரே சம்பவத்தின் மாறுபட்ட சாத்தியக் கூறுகளைப் பற்றிய சிந்தனைக்கான வாசல்களைத் திறந்துவைக்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eஒரு சம்பவத்தின் விளைவு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். நிஜ வாழ்வில் அதன் சாத்தியங்கள் எண்ணற்றவை; புனைவிலும் அப்படித்தான். பதின் பருவத்தில் வன்புணர்வுக்கு ஆளான ஒரு பெண் சமூகத்தின் பார்வையில் களங்கப்பட்டு நிற்கிறாள். ஆனால் அந்தக் களங்கத்தைக் கண்டு ஒடுங்கிவிடாமல் கம்பீரமாக எழுந்து நிற்கிறாள். தன் வாழ்க்கையைத் தானே தீர்மானிக்கும் துணிவுடன் செயலாற்றுகிறாள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eதமிழ்ப் புனைவுலகின் மறக்க முடியாத பாத்திரங்களில் ஒன்றாக இந்த நாவலின் நாயகி உருப்பெறுகிறாள். அந்தப் பாத்திரத்தின் முன்னிலையில் மற்றவர்கள் சிறுத்துப்போகாமல் தத்தமது அடையாளங்களுடன் காத்திரமாக வெளிப்படுகிறார்கள். இதன் மூலம் அவளோடு சம்பந்தப்பட்ட அனைவருக்குமான நியாயத்தை ஜெயகாந்தன் வழங்குகிறார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eதனியொரு பெண்ணின் கதையைச் சொல்லவந்த ஜெயகாந்தன் அதன்வழி சமூகத்தின் மதிப்பீடுகளையும் தீவிரமாகக் கேள்விக்குட்படுத்துகிறார். கருத்தின் மூலம் அல்லாமல் வாழ்வின் அசைவுகளைக் கலாப்பூர்வமாகச் சித்தரிப்பதன் மூலம் இதைச் செய்கிறார். எழுதி 55 ஆண்டுகள் கழித்தும் வாசகர்களின் மகத்தான வரவேற்பைப் பெற்றுவரும் இந்த நாவல் நவீன இலக்கியத்தின் செவ்வியல் படைப்புகளுள் ஒன்றாக மிளிர்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47605713338604,"sku":null,"price":394.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/74e842865cddbcdd1501b27d00dcb049.jpg?v=1778139497"},{"product_id":"அர்த்தநாரி","title":"அர்த்தநாரி","description":"\u003cp\u003e\u003cspan\u003eமாதொருபாகன்’ நாவலின் இரு வெவ்வேறு கோணங்களை விரித்து ‘அர்த்தநாரி’, ‘ஆலவாயன்’ ஆகிய நாவல்களாக உருவாக்கியுள்ளார் பெருமாள்முருகன். இவை ஒரு நாவலின் அடுத்தடுத்த பாகங்கள் அல்ல. தம்மளவில் முழுமை பெற்றுத் தனித்தியங்குபவை. இரண்டும் ஒரே புள்ளியில் தொடங்கினாலும் வெவ்வேறு திசைகளில் பயணம் செய்யும் சாத்தியப்பாடுகளைக் கொண்டுள்ளன. பெண் மீது ஆண் கொள்ளும் உடைமை உணர்வின் காரணமாக ஏற்படும் உறவுச் சிக்கல்களைப் பேசுகிறது ‘அர்த்தநாரி.’ அதனால் உருவாகும் விழுமியங்களும் மனித மனங்களை அலைக்கழிக்கும் விதத்தை நாவல் பற்றிச் செல்கிறது\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47605716910316,"sku":null,"price":222.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/5c0f472dd54ac8ae0501fad2a13b6162.jpg?v=1778139960"},{"product_id":"ஒரு-புளியமரத்தின்-கதை","title":"ஒரு புளியமரத்தின் கதை","description":"\u003cp\u003e\u003cspan\u003e1966இல் முதல் பதிப்பு வெளிவந்த காலத்திலிருந்து தீவிர வாசகர்களின் கவனத்தில் இருந்துவரும் ‘ஒரு புளிய மரத்தின் கதை’ ஒரு நவீன செவ்வியல் புனைவாக நிலைபெற்றுவிட்டது. மலையாளத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை பெங்குயின் வெளியிட்டது. 2000த்தில் தமிழிலிருந்து நேரடியாக ஹீப்ருவில் மொழிபெயர்க்கப்பட்ட ‘ஒரு புளியமரத்தின் கதை’ குறுகிய காலத்தில் இரண்டு பதிப்புகள் கண்டதுடன் அம்மொழிக்குச் சென்றுள்ள முதல் இந்திய மொழி நூல் என்ற பெருமையையும் பெறுகிறது. ஒப்பீட்டிலக்கிய விமர்சகர் கே. எம். ஜார்ஜ் இந்நாவலை நோபல் பரிசுபெறத் தகுதியான தமிழ் நாவலாகக் குறிப்பிடுகிறார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eசுந்தர ராமசாமி\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eசுந்தர ராமசாமி (1931 - 2005) தமிழின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவரான சுந்தர ராமசாமி நாகர்கோவிலில் பிறந்தார். பள்ளியில் மலையாளமும் ஆங்கிலமும் சமஸ்கிருதமும் கற்றார். 1951இல் ‘தோட்டி யின் மக’னைத் தமிழில் மொழிபெயர்த்ததே முதல் இலக்கியப் பணி. 1951இல் புதுமைப்பித்தன் நினைவு மலரை வெளியிட்டார். இவரது முதல் கதையான ‘முதலும் முடிவும்’ அதில் இடம் பெற்றது. மூன்று நாவல்களும் பல கட்டுரைகளும் சுமார் 60 சிறுகதைகளும், பசுவய்யா என்ற பெயரில் கவிதைகளும் எழுதினார். 1988இல் காலச்சுவடு இதழை நிறுவினார். சுந்தர ராமசாமிக்கு டொரொன்டோ (கனடா) பல்கலைக்கழகம் வாழ்நாள் இலக்கியச் சாதனைக்கான ‘இயல்’ விருதை (2001) வழங்கியது. வாழ்நாள் இலக்கியப் பணிக்காகக் ‘கதா சூடாமணி’ விருதையும் (2003) பெற்றார். சுந்தர ராமசாமி 14.10.2005 அன்று அமெரிக்காவில் காலமானார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47605719662828,"sku":null,"price":231.25,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/d95d80264730f50c637c085be34dbd46.jpg?v=1778140352"},{"product_id":"நாளை-மற்றுமொரு-நாளே","title":"நாளை மற்றுமொரு நாளே","description":"\u003cp\u003e\u003cspan\u003eதன்னை ஏமாற்றியவனே தனக்குத் தந்திரத்தைக் கற்றுக்கொடுக்கும் குரு என்று ஏற்றுக்கொள்ளும் சாமானியர்களின் அடையாளங்களை, அவர்களின் மனப்போக்குகளை ‘நாளை மற்றொரு நாளே...' நாவலில் பதிவுசெய்திருக்கிறார் ஜி. நாகராஜன்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003e கந்தனின் ஒருநாள் பொழுதுதான் இந்த நாவல். கிளைக்கதைகளையும் துணைக் கதாபாத்திரங்களையும் கொண்டு விரியும் கந்தனின் ஒருநாள் பொழுதின் வழியாக, தமிழ்ச் சமூகத்தின் அடியாழத்தில் மறைந்திருக்கும் சல்லித்தனத்தை, கயமையை, சுரண்டலை, இச்சையை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது இந்த நாவல்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003e புறக்கணிக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட சாமானியர்களின் உலகை அதன் அசல்தன்மையுடன் ஜி. நாகராஜன் காட்டுகிறார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eதமிழில் சிறந்த படைப்புகளில் ஒன்றான ‘நாளை மற்றொரு நாளே...' ரவி பேலட்டின் கோட்டோவியங்களுடன் புதிய பொலிவுடன் வெளியாகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47605964538092,"sku":null,"price":180.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NAALAIMACHORUNAALE.jpg?v=1778143205"},{"product_id":"புதுமைப்பித்தன்-கதைகள்","title":"புதுமைப்பித்தன் கதைகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eசெம்பதிப்பு எனச் சிறப்புப்பெயர் பெற்றுவிட்ட இத்தொகுப்பில் புதுமைப்பத்தன் கதைகள் அனைத்தும் இடம்பெறுகின்றன. காலவரிசையில் கதைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. முதன்முதலில் இக்கதைகள் வெளியான இதழ்களோடும் புதுமைப்பித்தன் காலத்தில் வெளியான முதல் பதிப்புகளோடும் ஒப்பிடப்பட்டு, திருத்தமான பாடத்தோடு இந்நூல் அமைந்துள்ளது. பின்னிணைப்புகளில், கதைகளை வெளியிடப் புதுமைப்பித்தன் பயன்படுத்திய புனைபெயர்கள், பதிப்புக் குறிப்புகள், பாட வேறுபாடுகள் முதலானவை இடம்பெறுகின்றன. பல்லாண்டுக் கால ஆராய்ச்சியில் உருவாகியுள்ள தொகுப்பு இது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47605974827244,"sku":null,"price":670.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/c52e97f454172c6aabe47461da0fc449.jpg?v=1778144043"},{"product_id":"கதவு","title":"கதவு","description":"\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan\u003e-\u003c\/span\u003e\u003cspan\u003e‘\u003cspan lang=\"EN-IN\"\u003eகதவு\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan\u003e’ \u003c\/span\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003eகி.ரா.வின் முதல் சிறுகதைத் தொகுப்பு. அவரது படைப்பாற்றலை அழுத்தமாகப் பறைசாற்றிய தொகுப்பும்கூட.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003eஇந்தத் தொகுப்பிலுள்ள கதைகள் அவருடைய கதை சொல்லும் முறையின் நவீனமுகத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கின்றன. கூர்மையான அவதானிப்பும் யதார்த்தமான சித்திரிப்பும் நம்பகத்தன்மையும் இவற்றில் கூடியிருக்கின்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003eகரிசல் வட்டார வழக்கை நவீன தமிழ் இலக்கியத்தில் முக்கிய இடம்பெறச் செய்த முதல் தொகுப்பு இது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003eகுழந்தைகள், முதியவர்கள், பெண்கள், ஆண்கள், மரங்கள், மாடுகள், ஆடுகள், கோழிகள், பறவைகள், பூக்கள், பூச்சிகளின் வழியாகப் புதுவகையான கதைகளைச் சொல்கிறார் கி.ரா.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003eஇக்கதைகளில் வரும் பாத்திரங்களின் ஆசைகளும் ஏமாற்றங்களும் தோல்விகளும் தியாகங்களும் அரசியலும் அன்றாடமும் யதார்த்தத்தைச் சித்திரிக்கின்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003eஇளம் படைப்பாளிகள் பலருக்கும் இன்றளவும் வழிகாட்டியாகவும் முன்மாதிரியாகவும் அமைந்திருக்கும் தொகுப்பு இது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47605983019244,"sku":null,"price":167.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/d33d763b4148fc9f48ff53873d5cc5f5.jpg?v=1778144435"},{"product_id":"மௌனி-படைப்புகள்","title":"மௌனி படைப்புகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eநவீனத் தமிழ்ச் சிறுகதையுலகில் மௌனி ஒரு தனிநபர் இயக்கம். அவர் கதைகளில் சொல்புதிது; அவர் சமைத்த உலகமும் புதிது.மௌனியின் எழுத்துக்களுக்கு முன்னோடியும் வாரிசும் அவர் மட்டுமே. இந்த்த் தன்மையை இனங்கண்டுதான் அவரைச் சிறுகதையின் திருமூலர் எனப் புதுமைப்பித்தன் வியந்தார். தமிழின் முன்னோடிச் சிறுகதையாளர்கள் மனித மனத்தின் மையத்திலிருந்து வெளியுலகை நோக்கி நகர்ந்தபோது, மௌனி உள் உலகின் விளிம்புகளுக்குள் பயணம் செய்தார். மனத்தின் இருள், விநோதம், த்த்தளிப்பு, குதூகலம் போன்ற வழிகளில் நிகழ்ந்த பயணங்கள்தாம் மௌனியின் பெரும்பான்மையான கதைகளும். சுருங்க எழுதிப் பெரும்புகழ் பெற்றவர் மௌனி. அவர் மொத்தம் எழுதியவை 24 கதைகள், 2கட்டுரைகள். மௌனியின் மொத்த ஆக்கங்களையும் உள்ளடக்கியது இந்நூல்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47605990850796,"sku":null,"price":347.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/23b782f61a72d50a2bcc72e720e92b4e.jpg?v=1778144978"},{"product_id":"மோக-முள்","title":"மோக முள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eபல இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்ட ‘தேவதாஸ்’ திரைப்படமாகவும் பல மொழிகளில் வந்திருக்கிறது. தமிழில் இப்போது புவனா நடராஜனின் புதிய மொழிபெயர்ப்பில்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eதி. ஜானகிராமன்\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eதி. ஜானகிராமன் (1921 - 1982) தி. ஜானகிராமன் தஞ்சை மாவட்டம் மன்னார்குடியை அடுத்த தேவங்குடியில் பிறந்தவர். பத்து வருடங்கள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர். பின்பு அகில இந்திய வானொலியில் பணியாற்றி ஓய்வுபெற்றார். கர்நாடக இசை அறிவும் வடமொழிப் புலமையும் பெற்றிருந்தவர். 1943இல் எழுதத் தொடங்கிய தி. ஜானகிராமன் ‘மோகமுள்’, ‘அம்மா வந்தாள்’, ‘மரப்பசு’ உள்ளிட்ட ஒன்பது நாவல்கள், நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், மூன்று நாடகங்கள், பயண நூல்கள் ஆகியவற்றை எழுதியிருக்கிறார். சிட்டியுடன் இணைந்து இவர் எழுதிய ‘நடந்தாய் வாழி காவேரி’ பயண இலக்கிய வகையில் முக்கியமான நூலாகக் கருதப்படுகிறது. ‘மோகமுள்’, ‘நாலு வேலி நிலம்’ ஆகிய படைப்புகள் திரைப்படமாக்கப்பட்டுள்ளன. ‘மோகமுள்’, ‘மரப்பசு’, ‘அம்மா வந்தாள்’ ஆகிய நாவல்களும் பல சிறுகதைகளும் இந்திய, ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. 1979இல் ‘சக்தி வைத்தியம்’ சிறுகதைத் தொகுப்பிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. பதிப்பாசிரியர்: சுகுமாரன் (பி.1957) கோவையில் பிறந்தவர். அச்சிதழ், தொலைக்காட்சி, நூல் வெளியீட்டுத் துறைகளில் பணியாற்றியவர். கவிஞர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர். இலக்கிய இதழ்களிலும் இணையத்திலும் தொடர்ந்து எழுதிவருகிறார். திருவனந்தபுரத்தில் வசிக்கிறார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47606003597548,"sku":null,"price":730.75,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/6acf6adadf28f0e63f7a5f40f27e5457.jpg?v=1778145235"},{"product_id":"சுந்தர-ராமசாமி-சிறுகதைகள்-முழுத்தொகுப்பு","title":"சுந்தர ராமசாமி சிறுகதைகள் முழுத்தொகுப்பு","description":"\u003cp\u003e\u003cspan\u003eசுந்தர ராமசாமியின் படைப்பு ஆளுமையின் முக்கியமான பல கூறுகளை அவரது சிறுகதைகளிலேயே தெளிவாக அடையாளம் காணமுடிகிறது. சு.ரா.வின் சிறுகதைகள் வாசிப்பை ஓர் இனிய அனுபவமாக்கும் அதே நேரத்தில் தீவிரமான அனுபவத்தின் தொந்தரவுக்கும் நம்மை உள்ளாக்குகின்றன. செறிவும் நேர்த்தியும் கொண்ட மொழியோடு உறவுகொள்ளும் சுகத்தை அளிக்கும்போதே உக்கிரமான தேடலின் கனத்தையும் நம் மீது சரியச் செய்துவிடுகின்றன. மனிததுக்கத்தையும் அவலங்களையும் மட்டுமன்றி நெகிழ்வையும் விகாசத்தையும் பதிவுசெய்கின்றன. வாழ்வுக்கும் நமக்கும், காலத்திற்கும் நமக்கும், மொழிக்கும் நமக்கும் இடையேயான உறவுகளைச் செழுமைப்படுத்துவது ஒரு கலைஞனின் முக்கியமான பங்களிப்பாக இருக்க முடியும். சுந்தர ராமசாமியின் சிறுகதைகள் இதைப் பெருமளவில் நிறைவாகச் செய்திருக்கின்றன. பின்னுரையில் அரவிந்தன்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47606013853932,"sku":null,"price":902.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ef5fb0e91333b09202413f52e7aa058b.jpg?v=1778145651"},{"product_id":"ஒரு-மனிதன்-ஒரு-வீடு-ஒரு-உலகம்","title":"ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eதனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ஜெயகாந்தனாலும் அவரது நாவல்களில் ஆகச் சிறப்பானது என்று இலக்கிய விமர்சகர்களாலும் குறிப்பிடப்படுவது ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்.’ எந்த ஊர், பெற்றோர் யார், என்ன இனம், என்ன சாதி என்று எதுவும் தெரியாத, அது பற்றிக் கவலையும் கொள்ளாத ஒரு உலகப் பொது மனிதனைக் கதாபாத்திரமாக்கி, அவன் எதிர்கொள்ளும் அனுபவங்களின் மூலம் இந்த வாழ்க்கையின் போக்கு குறித்த புரிதலை உணர்த்த முனையும் நாவல் இது.எழுதப்பட்டு ஏறத்தாழ முப்பத்தைந்தாண்டுகளைக் கடந்த பின்னரும் இன்றைய சூழலுக்கும் பொருந்துவதான வாசிப்பனுபவத்தைத் தருவதன் மூலம் இந்த நாவல் ஒரு கலைப்படைப்பாக நிமிர்ந்து நிற்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eஜெயகாந்தன்\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eஜெயகாந்தன் (1934 - 2015) த. ஜெயகாந்தன் தென்னார்க்காடு மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் 1934இல் பிறந்தார். தொடக்கப் பள்ளிக் கல்வியைக்கூட முடிக்காத இவர், சுயமாகக் கற்று 1950 முதல் சிறுகதைகள் எழுதத் தொடங்கினார். சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்கள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், திரைக்கதை வசனங்கள், நேர்காணல்கள் என எழுபத்தைந்துக்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவந்துள்ளன. கவிதைகளும் எழுதியுள்ளார். சிறுகதைகள், கட்டுரைகளின் முழுத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன. இவரது சிறுகதைகள், நாவல்கள் பல்வேறு இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நாளிதழ், இலக்கிய இதழ்களின் ஆசிரியராகவும் இருந்துள்ளார். சில திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். ஞானபீட விருது, சாகித்ய அகாதெமி விருது, ராஜராஜன் விருது பெற்றுள்ளார். இவர் இயக்கிய ‘உன்னைப் போல் ஒருவன்’ திரைப்படம் குடியரசுத் தலைவர் விருது (1964) பெற்றது. ஏப்ரல் 8, 2015 அன்று சென்னையில் காலமானார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47606026010860,"sku":null,"price":347.75,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/57b2b1d96b1155a76c1843b1367c8315.jpg?v=1778146194"},{"product_id":"கருக்கு","title":"கருக்கு","description":"\u003cp\u003e\u003cspan\u003eசெவ்வியல் பண்புகளைக் கொண்ட ‘கருக்கு’ செவ்வியல் பதிப்பாக ஒவ்வொரு தசாப்தத்திலும் வெளிவர வேண்டும் என்றே நான் கருதுகிறேன். காரணம் நாம் சரித்திரத்தை வெகு வேகமாக மறப்பவர்கள். குறிப்பிட்டுச் சொன்னால் தலித்துகளின் வாழ்க்கைச் சரித்திரங்களையும், பெண்கள் வாழ்க்கைப் போராட்டங்களையும் மறப்பது நமக்கு எளிதாக இருக்கிறது. அப்படி எளிதாக்கிக்கொள்வது நமக்கு வசதியாக இருக்கிறது. மனத்தைக் குத்துபவைகளை அவை இல்லாதவை போல பாவனை செய்துகொண்டு இருப்பவர்களின் நிம்மதியான தூக்கத்தைக் கெடுக்க, அவர்களை முட்டி முட்டித் தொல்லை தர, அவர்களின் தடித்துப்போன தோல்களைக் கீறிவிட ‘கருக்கு’ தேவைப்படுகிறது. உருவகமாகவும் புத்தகமாகவும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47606042329324,"sku":null,"price":138.75,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ee3cd43e8b15283aebde3fbcab8fa163.jpg?v=1778146798"}],"url":"https:\/\/centaram.com\/collections\/all-books-1.oembed?page=66","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}