{"title":"அகநி வெளியீடு","description":"","products":[{"product_id":"ஊதா-வண்ண-இலைகளின்-பாடல்","title":"ஊதா வண்ண இலைகளின் பாடல்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஉஷாதேவியின் கதைகளில் வருபவர்களை நம்மால் உடனடியாக அடையாளம் கண்டுகொள்ள முடியாது. பூனையைப் போல் சத்தமில்லாதவர்கள். குயிலைப் போல் தன் இருப்பை வெளிக்காட்டிக் கொள்ளாதவர்கள். வாசிக்கத் தொடங்கியவுடன் அதில் தெரியும் துயருறும் மனிதர்களை உணரத் தொடங்குவோம். நம் வீடுகளில், வீதிகளில், நண்பர்கள் மத்தியில், உறவினர்களில் என வெளித்தெரியாத மனிதர்களை அடையாளம் கண்டுகொள்வோம். பிறகு நம்மால் அவர்களை ஒருபோதும் மறக்க முடியாததுடன், அவர்களின் துயரங்களை நமக்குள் ஏற்றிக்கொண்டு நாமும் அல்லலுறுவோம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47634214355180,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/76c07cc026ce4e18ce1e9185cbbebb59.jpg?v=1778834682"},{"product_id":"பூமியெங்கும்-புத்தக-வாசம்","title":"பூமியெங்கும் புத்தக வாசம்","description":"\u003cp\u003e\u003cstrong data-start=\"0\" data-end=\"29\"\u003eபூமியெங்கும் புத்தக வாசம்\u003c\/strong\u003e – \u003cstrong data-start=\"32\" data-end=\"48\"\u003eமு. முருகேஷ்\u003c\/strong\u003e எழுதிய இந்தக் கட்டுரைத் தொகுப்பு, புத்தகங்கள் மனித வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றங்களையும், வாசிப்பின் மகத்துவத்தையும், இலக்கிய ஆளுமைகளின் அனுபவங்களையும் சுவாரஸ்யமாகப் பதிவு செய்யும் சிறந்த நூலாகும். 'தி இந்து' தமிழ் நாளிதழில் வெளியான நேர்காணல்கள் மற்றும் கட்டுரைகளின் தொகுப்பாக உருவான இந்நூல், புத்தகங்களின் உலகை வாசகர்களுக்கு நெருக்கமாக அறிமுகப்படுத்துகிறது.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47634237325548,"sku":null,"price":206.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/7630d1a6813194043e914b07aa82b134.jpg?v=1778836307"},{"product_id":"வீடு-பள்ளத்தில்-இருக்கிறது","title":"வீடு பள்ளத்தில் இருக்கிறது","description":"\u003cp\u003e\u003cspan\u003eவலிவற்றுப் புறக்கணிக்கப்பட்டுத் தேய்ந்து நொறுங்கிக் கொண்டிருக்கும் ஒரு இடைநிலை விளிம்புநிலைச் சமூகக் கண்ணியின் துயர் தோய்ந்த குரல்கள் இக்கதைகள். உரத்துப் பேச இயலாத, மெளனப்படவும் முடியாத, மெலிந்த வலுவற்ற குரல்களின் ஏக்கப் பதிவுகள் இவை. காது கொடுத்துக் கவனிப்பவர்க்கு இந்த மெலிந்த குரல்களினுள்ளே சமூக உடைவுகளின், சிதைவுகளின் பேரோசைகளைக் கேட்க இயலும். இடிபாடுகளிடையே சிக்கி, நசுங்கி, உயிர் நலிந்து போனோரின் மெலிந்த முனகல்களைக் கேட்க இயலும். உஷாதேவியின் இந்த அபூர்வக் கதைகள் இன்றைய தமிழ் இலக்கியச் சூழலில் நல்ல வரவு. கதைகளில் சில தமிழ் இலக்கிய வரலாற்றில் நிலைத்து நிற்கும் ஆற்றலுள்ளவை என்பது என் கணிப்பு. எழுத்தாளர். உஷாதேவிக்கு என் நல்வாழ்த்துகள். - பொன்னீலன்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47634242240748,"sku":null,"price":131.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ef830d3af3cbb3bd98cdd0ccb8079b37.jpg?v=1778836844"},{"product_id":"ஆறாவது-பெண்","title":"ஆறாவது பெண்","description":"\u003cdiv class=\"o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eஇங்கும் ஒரு மாமனும் மாமியும் இருக்கிறார்கள் . தாழ்வாரத்திலுள் பெண்பிள்ளைகளுக்கு அவர்களும் ஒவ்வொரு வகை பூக்களின் பெயர்களைச் சூட்டியுள்ளார்கள் . கண்ணும் காதும் விளங்காதவர்கள் ; கை கால்கள் துவண்டு போனவர்கள் , தேவையான அளவுக்கு புத்தி உறைக்காதவர்கள் . ஏதோவொரு அநாதை விடுதியிலிருந்து குதிரை வண்டியில் விடியற்காலையில் வந்து சேர்பவர்கள் . அவர்களுக்கிடையில் அமர்ந்திருக்கும்போது எல்லா உறுப்புகளும் தேவைக்கு அதிகமாகவே இருக்கிறதே என்னும் இறுமாப்பு எண்ணம் எனக்கு ஒருபோதும் தோன்றுவதில்லை அக்கூட்டத்தில் அவர்களைவிடவும் நாள் குறையுள்ளவளாகத்தான் இருக்கிறேன் .\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eஇன்னொரு விஷயத்தை மட்டும் சொல்லி நிறுத்திவிடுகிறேன் . உங்கள் காதம்பரி தோற்றதில்லை ஒருபோதும் தோற்கவும் மாட்டேன் . இங்கிருந்து கிடைக்கும் அறிமுகங்களையும் அங்கிருந்து கிடைத்த சில நல்ல பழக்கங்களையும் வைத்து நான் ஒரு பூக்கடையை எப்போதாவது தொடங்குவேன் வேறொரு ஊரில் வேறொரு தோதில் . அது அனந்தராமன் வம்சத்து பூக்கடையாக இருக்காது . காதம்பரியின் பூக்கடை காதம்பரியினுடையதாக மட்டுமே அது இருக்கும் . வம்சங்களின் கட்டுப்பாடுகள் இல்லாமல் காதம்பரி இழக்க வேண்டியது ஒன்றுமில்லையே ‘\u003c\/div\u003e\n\u003c\/div\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47634257150188,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/6a2411bee02413338ec06595bf65c475.jpg?v=1778837681"},{"product_id":"எண்ணமும்-எழுத்தும்","title":"எண்ணமும் எழுத்தும்","description":"\u003cp\u003e\u003cspan\u003eவண்ணநிலவனின் நேர்காணல்கள். பல்வேறு பத்திரிகைகளில் வெளியான பத்திகள், கட்டுரைகள், தமிழின் மூத்த எழுத்தாளர்களைய் பற்றிய எண்ணப் பதிவுகள் உள்ளடங்கிய தொகுப்பு நூல், மென்மையும் பூடகமும் நிறைந்த புனைவெழுத்திற்கு நேரெதிராக, உரத்த குரல் இவரின் அபுனைவுகளில் வெளிப்படுகிறது. ஒளிவுமறைவின்றி. தன் கருத்துகளைப் போட்டுடைக்கிறார். லயம் கூடிவரும் நல்ல எழுத்துகளை அனுபவிக்கும் ஒரு தேர்ந்த வாசகராகவும் இருப்பதால், நிர்தாட்சண்யமான இலக்கியப் பார்வைகளை அவரால் முன்வைக்க முடிகிறது.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eதமிழின் அபூர்வ எழுத்துக் கலைஞரான வண்ணநிலவனின் ஆளுமையைப் புரிந்துகொள்ள. பின்தொடர வழிகொடுக்கும் கட்டுரைகள் இத்தொகுப்பில் உள்ளன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47634268061932,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/4c0cb0cf318125850cedc0d3ed58a781.jpg?v=1778838058"},{"product_id":"பிச்சியின்-பாடு","title":"பிச்சியின் பாடு","description":"\u003cp\u003e\u003cspan\u003eதமிழிலும் மலையாளத்திலும் கொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் பி.உஷாதேவியின் மூன்றாவது சிறுகதை தொகுப்பு. நிராதரவானவர்கள், குடும்பங்களில் உறவுகளால் கைவிடப்பட்டவர்கள், அன்பினை உணரா குழந்தைகள் என உஷாதேவியின் கதைகளுக்குள் அடியோட்டமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு துயர நதி. அடங்கிய குரலில் அவர் கதை சொல்லிக்கொண்டு செல்லும் தொனி, அந்தத் துயரத்தை மேலும் கனமாக்கும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47634294276332,"sku":null,"price":132.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/fdfe06a1c7f197535d312ab61804b46b.jpg?v=1778838376"},{"product_id":"வடகரை","title":"வடகரை","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇந்த நாவலில் அறுநூறு வருட வாழ்க்கை ஒரு குடும்பத்தின் நிகழ்வுகலாகச் சொல்லப்படுகிறது. பெண் தெய்வங்கள் தங்களை அழித்துக் கொண்டு மற்றவைகளைக் காப்பதாக பல வழக்குக் கதைகள் இருந்தாலும் இந்நாவலில் வருகிற நொண்டி மீனாட்சி என்கிறபெண் தனி ஒருவளாக தன் தங்கையையும் அவளது வம்சத்தையும் நிலைநிறுத்தப் பலபோராட்டங்களை மேற்கொள்கிறாள். அவளது கதையை மிக அருமையாகச் சொல்லி இருக்கிறார் நன்பர் ராஜேந்திரன். நான் இதை நாவலாகவே பார்க்கிறேன். அப்படி தான்பார்க்க முடியும். ஒருவர் பார்வையிலான சுயசரிதை அல்லது ஒற்றை வாழ்க்கை, பலவகையிலும் அவர் வாழுகிற சமூகமும் சார்ந்ததே. - கலாப்ரியா\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47634323407084,"sku":null,"price":376.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/b82d3cca9fda4a56fcec2d60a6686e6c.jpg?v=1778838908"},{"product_id":"கலை-அல்லது-காமம்","title":"கலை அல்லது காமம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eசீனிவாசன் நடராஜன், “கலை அல்லது காமம்” என்கிற அவருடைய இந்தக் கட்டுரைகளில் கவிதை பற்றி அதிகம் பேசுகிறார். பேச முயற்சிக்கிறார். மரபு தொடங்கி, நவீன கவிதைகள் வரையில் ஒரு பேச்சை உருவாக்குகிறார். அந்தப் பேச்சு தொடரப் படுதல் வேண்டும். கவிதை பற்றி, கலைகள் பற்றி ஒரு சமூகம் பேசத் தொடங்குமானால், அது நுண்ணுணர்வுக்குள் அடியெடுத்து வைக்கத் தொடங்குகிறது என்று அர்த்தம்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eநீண்ட நெடிய மரபு கொண்ட தமிழ், இன்று அன்றாடச் செய்திகளை மட்டுமே எடுத்து விவாதிக்கிறது. மறுநாள் அதனை மறதியில் தொலைத்து விட்டு, அடுத்த செய்தியை விவாதிக்கத் தேர்வு செய்கிறது. ஒரு பரபரப்பு அடங்குவதற்குள், மறு பரபரப்பு தேவைப்படுகிறது. கவிதையை, கலையை பேசு பொருளாக்காத எந்த ஒரு சமூகத்திற்கும் இந்த ஊழ் வந்து சேரும். ஓவியம் பற்றியும், கூடவே காரல்மார்க்ஸ் கணபதியின் நாவல் பற்றிய ஒரு பதிவும், ஒரு சினிமா மதிப்புரையும் இதில் இடம் பெற்றிருக்கின்றன. இத்தகைய சூழலில் நின்று சீனிவாசன் நடராஜன் கவிதை பற்றிய ஒரு பேச்சை நிகழ்த்துகிறார்.கவிதையைப் பொறுத்தவரையில் கவிஞர்களை மறு கண்டுபிடிப்புச் செய்ய வேண்டியது ஒரு முக்கியமான பணி. பாரதி உள்பட பெருங்கவிஞர்கள் பலர் அவ்வாறு மறு கண்டுபிடிப்புச் செய்யப்பட்ட பிறகு கண்டடையப் பட்டவர்களே. கவிதை முதலில் வாசகப்பரப்பில் ஒருவரால் எடுத்துக் கூறப்பட்ட பிறகே அடையாளம் காணப்படுகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47634359615724,"sku":null,"price":113.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/fe6de99f9f937a094762928d7aab4c5c.jpg?v=1778839234"},{"product_id":"மதாம்","title":"மதாம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eபிரெஞ்சிந்தியாவின் கவர்னராக 12 ஆண்டுகள் இருந்தவர் ஜோசப் துயூப்ளே. அவரின் மனைவி மதாம் என்றழைக்கப்பட்ட ழான் பேகம்தான் நிழல் கவர்னராகக் கோலோச்சியவர். செல்வாக்குமிக்க கவர்னராகப் பதவியேற்க கப்பலில் வந்திறங்குவதில் தொடங்கி, பதவி பறிக்கப்பட்டு குற்றவாளியாய் பிரான்ஸ் தேசத்திற்குச் செல்ல கப்பல் ஏறுவது வரையிலான காலகட்டம் பற்றிய நாவல்....\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47729445044460,"sku":null,"price":376.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MATHAAM.jpg?v=1781169229"},{"product_id":"தகழியின்-படைப்புலகம்","title":"தகழியின் படைப்புலகம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eகேரளாவின் குட்ட நாட்டின் வரலாற்று நாயகரான தகழி சிவசங்கர பிள்ளையைப் பற்றிய ஒரு முழுமையான தொகுப்பு. இத்தொகுப்பில் அவரின் படைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 சிறுகதைகள், இரண்டு குறு நாவல்கள், அவருடைய 60 சிறுகதைகள் மற்றும் நாவல்களின் சுருக்கமும், அவைகளைப் பற்றிய திறனாய்வும் அடங்கிய நூல். இவை தவிர தகழியே தம் படைப்பு(நாவல்கள்)களை எழுதும்போது எழுந்தப் பிரச்சினைகள் பற்றி எழுதிய ஒரு மனம் திறந்த கட்டுரையும் அடங்கிய ஒரு முழுமையான தொகுப்பு. தகழியைப் பற்றி அறியக்கூடிய ஒரு பெரும் தொகுப்பு.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47873403027692,"sku":null,"price":517.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/THAGAMEYIN.jpg?v=1782972149"},{"product_id":"காலா-பாணி","title":"காலா பாணி","description":"\u003cp\u003e\u003cspan\u003eகிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகளின் கடிதங்கள், நினைவுக் குறிப்புகள் ஆகியவற்றையும் கே.ராஜய்யன், எஸ்.ஜெயசீல ஸ்டீபன் முதலிய வரலாற்று ஆய்வாளர்களின் நூல்களையும் ஆதாரங்களாகக் கொண்டு இந்த நாவலுக்கான அடித்தளங்களைக் கட்டமைத்திருக்கிறார் மு.ராஜேந்திரன். வேலு நாச்சியாரும் அவரது மருமகன் பெரிய உடையணரும் தலைமறைவாயிருந்த விருப்பாச்சிக் காடுகளிலிருந்து பினாங்கு, சுமத்ரா வரையில் இந்த வரலாற்றுச் சுவடுகளைப் பின்தொடர்ந்து பயணங்களை மேற்கொண்டிருக்கிறார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47873429078252,"sku":null,"price":658.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KAALAPAANI.jpg?v=1782972531"},{"product_id":"செயலே-சிறந்த-சொல்","title":"செயலே சிறந்த சொல்","description":"\u003cp\u003eஇந்திய நிர்வாகவியலின் அடிப்படை கட்டுமானமே ஆட்சிப் பணிதான். உச்சபட்ச அதிகாரத்துடனும் கவர்ச்சியுடனும் இன்றும்  வசீகரித்துக் கொண்டிருக்கும் ஆட்சிப் பணி, அலங்காரமோ,  புகழோ  நிரம்பியவை மட்டுமல்ல. ஒவ்வொரு  துறையும் அரசு இயந்திரத்தை சுழலச் செய்வதற்காகவும்  மக்களின் வாழ்வியலை மேம்படுத்தவும் மட்டுமே என்ற புரிதலில், முப்பதாண்டு கால ஆட்சிப் பணி அதிகாரியாக இருக்கும் டாக்டர் மு.ராஜேந்திரன், இஆப நிர்வகித்த பல்வேறு துறைகளைப் பற்றிய அனுபவப் பகிர்வுகளே, செயலே சிறந்த சொல்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47873440710892,"sku":null,"price":893.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SEYALESIRANTHA.jpg?v=1782973308"},{"product_id":"கங்காபுரம்","title":"கங்காபுரம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eநூறு களிறுகளைப் போரில் கொன்று குவிக்கும் வீரனுக்கும், எதிரிகளே இல்லையென்னும் மாவீரனுக்கும், விரிந்து பரந்த ராஜ்ஜியத்தின் அரசனுக்கும், சட்டிச் சோறு வாங்கிச் சாப்பிட்டுக் காலம் கடத்தும் பரதேசிக்கும், செல்வத்தில் திளைக்கும் வணிகனுக்கும், சமன் குலைந்த நடத்தையுடன் இருக்கும் பித்தனுக்கும் நினைவுகள் ஒன்றே பொது. ஒவ்வொருவரின் மரணத் தருவாயிலும் அவரவரிடம் மிஞ்சி நிற்கப் போவது எஞ்சிய நினைவுகள்தான். ராஜராஜன் என்ற சூரியனுக்கடியில் கரு நிழலென மறைக்கப்பட்டது  ராஜேந்திரனின் தன்னொளி. மிகப் பெரும் வெற்றியாளன். ஆனால், எப்போதும் தோல்வியின் கசப்புடன் வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டவன். ராஜேந்திரனின் துயர நினைவுகளின் வேர் தேடிச் செல்லும் பயணமே இந்த ‘கங்காபுரம்’ நாவல்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47873471938796,"sku":null,"price":470.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SANGAPURAM.jpg?v=1782973530"},{"product_id":"1801","title":"1801","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇந்திய சுதந்திர வரலாற்றில், விடுதலை எழுச்சிக்கான முதல் குரல் தென்னகத்தில்தான் ஒலித்தது. ஒலிக்கச் செய்தவர்கள் பூலித்தேவர், திப்பு சுல்தான், கட்டபொம்மன், தூந்தாஜி வாக், மருதுபாண்டியர், ஊமைத்துரை, விருப்பாச்சி கோபால் நாயக்கர், தீரன் தின்னமலை உள்ளிட்ட போராளிகளே. தென் இந்தியாவின் போராளிகளை ஒன்று திரட்டி மருது சகோதரர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடத்திய போராட்டமே இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தொடக்கமாகும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47873488748780,"sku":null,"price":517.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/1801.jpg?v=1782973942"},{"product_id":"மாதா-ஆப்பிரிக்கா","title":"மாதா ஆப்பிரிக்கா","description":"\u003cp\u003e\u003cstrong data-start=\"0\" data-end=\"20\"\u003eமாதா ஆப்பிரிக்கா\u003c\/strong\u003e – \u003cstrong data-start=\"23\" data-end=\"47\"\u003eடி. டி. ராமகிருஷ்ணன்\u003c\/strong\u003e எழுதிய இந்த விரிவான நாவல், ஆப்பிரிக்கக் கண்டத்தின் வரலாறு, காலனித்துவ அரசியல், இனவெறி, புலம்பெயர் வாழ்க்கை மற்றும் மனிதநேயத்தின் பல்வேறு பரிமாணங்களை ஆழமாக ஆராயும் முக்கியமான இலக்கியப் படைப்பாகும். மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த நாவலை \u003cstrong data-start=\"293\" data-end=\"310\" data-is-only-node=\"\"\u003eகுறிஞ்சிவேலன்\u003c\/strong\u003e தமிழில் சிறப்பாக மொழிபெயர்த்துள்ளார்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47873517453548,"sku":null,"price":611.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MADHAAPRICA.jpg?v=1782974279"},{"product_id":"சாலாம்புரி","title":"சாலாம்புரி","description":"\u003cp\u003eமாயரகசியத்தைப் புதைந்து வைத்திருக்கும் காலத்தின் யுகாந்திரங்களில் எத்தனையோ மனிதர்களின் வாழ்க்கைப் புதைந்திருக்கிறது. மனிதர்களாலான வாழ்வு ஒருபோதும் ஒற்றைத்தன்மை கொண்டதாக இருந்ததில்லை. சிலருக்கு வெற்றியும் சாதனைகளின் உயரங்களும் கைகூடி வந்தாலும், அவை அவர்களின் தகுதியின் உயரங்களைவிட குறைவாகவே இருந்திருக்கிறது. வாழ்க்கைத் தனக்கு அணுக்கமாகச் சிலரை வைத்துக் கொண்டிருக்கிறது. சிலரைத் துயரத்தின் எல்லைவரை விரட்டிச் சென்றிருக்கிறது.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47873534099692,"sku":null,"price":517.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SAALAMPURI.jpg?v=1782974877"},{"product_id":"சூஃபி-சொன்ன-கதை","title":"சூஃபி சொன்ன கதை","description":"\u003cp\u003e'சூஃபி சொன்ன கதை' படைப்புலகில் ஒரு புதிய அனுபவத்தைக் கொடுக்கக் கூடிய நாவல். வார்த்தை களைப் பற்றிய பாரம்பரியமான புரிதல்களைப் புரட்டிப் போடும் மொழி ஆச்சரியப்படுத்தக் கூடியது. வார்த்தை களைக் கட்டுடைத்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் கவர்ச்சியூட்டுவதிலுமான தேவை குறித்து வெளிப்படுத்துவது...\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47873577517292,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SOOPI.jpg?v=1782975300"},{"product_id":"படித்துப்-பழகு-1-tamil-english","title":"படித்துப் பழகு – 1 ( TAMIL\u0026 ENGLISH)","description":"\u003cp\u003e\u003cstrong data-start=\"0\" data-end=\"41\"\u003eபடித்துப் பழகு – 1 (தமிழ் \u0026amp; ஆங்கிலம்)\u003c\/strong\u003e – \u003cstrong data-start=\"44\" data-end=\"60\"\u003eமு. முருகேஷ்\u003c\/strong\u003e எழுதிய இந்த இருமொழிச் சிறுகதைத் தொகுப்பு, சிறுவர்களின் வாசிப்புத் திறன், மொழி அறிவு மற்றும் சிந்தனைத் திறனை வளர்க்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட சிறந்த நூலாகும். ஒவ்வொரு கதையும் தமிழிலும் அதற்கான எளிய ஆங்கில மொழிபெயர்ப்புடனும் இடம்பெற்றுள்ளதால், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளையும் ஒரே நேரத்தில் எளிதாகக் கற்றுக்கொள்ள உதவுகிறது.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47873633779948,"sku":null,"price":47.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PADITHU.jpg?v=1782976273"},{"product_id":"பாண்டவபுரம்","title":"பாண்டவபுரம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eசேதுவின் 'பாண்டவபுரம்' சந்தேகமில்லாமல் இந்திய எழுத்துலகில் நிகழ்த்தப்பட்ட ஒரு பெரும் சாதனை. ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்திற்குள் உருவாகும் ஒரு குழ்நிலை, ஒரே சமயத்தில் பதார்த்தமாகவும் மாத்திரீ யதார்த்தமாகவும் இருவேறு பரிமாணங்களாகும் ஆச்சரி யத்தை விளக்கவே முடியாது. இடம், காலம் என்கிற படைப்பின் இரு அடிப்படைகளையுமே இல்லாமல் ஆக்கிவிடும் இந்நாவல், மாந்திரீக யதார்த்த எழுத்து வகையில் ஒரு பேய்ப்பரச்சல் நிகழ்த்தியிருக்கிறது. அந்த அளவிற்கு இது ஒரு சிறந்த நாவல் என்பதுடன், எத்தனை முறை வாசித்தாலும் புதுப்புது அனுபவங்களை அளித்துக் கொண்டே இருக்கும் படைப்புமாகும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47873647739116,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PAANDAVAPURAM.jpg?v=1782976697"},{"product_id":"மகாத்மா-காந்தி","title":"மகாத்மா காந்தி","description":"\u003cp\u003eகாந்தியின் சிறுவயது, தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற சத்தியாகிரகப் போராட்டம், இந்திய விடுதலை இயக்கம், அகிம்சை, சத்தியம் மற்றும் எளிமையான வாழ்க்கை குறித்த அவரது கொள்கைகள் ஆகியவற்றை சுவாரஸ்யமான நடையில் ஆசிரியர் விளக்குகிறார். அரசியல் தலைவராக மட்டுமல்லாமல், மனிதநேயம், ஒழுக்கம் மற்றும் தன்னலமற்ற சேவையின் அடையாளமாக காந்தியை வாசகர்கள் புரிந்துகொள்ள இந்த நூல் உதவுகிறது.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47873757053164,"sku":null,"price":329.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MAHATHMAKANTHI.jpg?v=1782978188"},{"product_id":"பல்லவர்-காலச்-செப்பேடுகள்","title":"பல்லவர் காலச் செப்பேடுகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eசெப்பேடுகள் அனைத்தும் பழங்கால அரசு ஆவணங்கள். மன்னர்களின் நேர்முக ஆணைகள், ஆணையிட்டது முதல் செயல்படுத்தும் வரை உள்ள செயல்களின் குறிப்புகள் அடங்கியவை. சுலபமாக எல்லோராலும் எடுத்துப் படித்து விட முடியாது. இந்நிலையில் மாணவர்களும் வரலாற்று ஆர்வலர்களும் எளிதாக படித்து தெரிந்து கொள்ளும் வகையில் படைத்திருக்கிறார் நூலாசிரியர்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47873780711660,"sku":null,"price":329.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PALLAVAR.jpg?v=1782978748"},{"product_id":"கட்டபொம்மன்-வழக்கு-விசாரணை","title":"கட்டபொம்மன் வழக்கு விசாரணை","description":"\u003cp\u003eகட்டபொம்மன் கைது செய்யப்பட்டதிலிருந்து அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள், நடைபெற்ற விசாரணை, தூக்குத் தண்டனை மற்றும் அதன் பின்னர் பாளையக்காரர்களுக்கு எதிராக ஆங்கிலேயர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் ஆகியவை இந்நூலில் விரிவாக இடம்பெற்றுள்ளன. உணர்ச்சிபூர்வமான கதையாக அல்லாமல், ஆவணங்களின் அடிப்படையில் வரலாற்றை அறிந்துகொள்ள விரும்பும் வாசகர்களுக்கு இது அரிய ஆதார நூலாக அமைகிறது.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47873899593964,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KATTAPOMMAN.jpg?v=1782980632"},{"product_id":"சிப்பாயி-களவு-போன-கதை","title":"சிப்பாயி (களவு போன கதை)","description":"\u003cp\u003e\u003cspan\u003eதனது 50வது வயதுக்குப் பிறகு எழுதத் தொடங்கி, பத்தாண்டுகளுக்குள் வரலாற்று ஆய்வு, செப்பேடுகள் உரை, சிறுகதை, நாவல், கட்டுரைகள் என எழுத்தின் பல்வேறு வகைமைகளிலும் எழுதியவர் மு.ராஜேந்திரன், இவரது, ’வடகரை - ஒரு வம்சத்தின் வரலாறு’ என்ற தன் வரலாற்று நாவல், தமிழ் இலக்கியத்தின் முதல் இனவரைவியல் நாவலாக அறியப்படுகிறது. தென்தமிழகத்தில் 1801ஆம் நடைபெற்ற காளையார்கோயில் போரை மையமாக வைத்து இவர் எழுதிய, ’1801’, ’காலாபாணி’ ஆகிய இரட்டை நாவல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றவை. இதில் காலாபாணி நாவல், மத்திய அரசின் 2022ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்றது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47873917059308,"sku":null,"price":206.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SIPAYI.jpg?v=1782980948"},{"product_id":"சட்ட-வல்லுநர்-திருவள்ளுவர்","title":"சட்ட வல்லுநர் திருவள்ளுவர்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஉலகெங்கும் அந்தந்த நாடுகளின் அறக்கருத்துக்களே, அந்தந்த நாடுகளின் சட்டங்களுக்கு முன்னோடிகளாக இருந்துள்ளன. திருக்குறள் தமிழர்களின் மிகச் சிறந்த அறநூல். திருக்குறளில் உள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சட்டக் கருத்துக்காளை ஆழ்ந்த புலமையுடன் ஆய்ந்து, தற்கால நடைமுறையுடன் இந்நூலின் ஒப்பாய்வு செய்துள்ளார் டாக்டர் மு.ராஜேந்திரன் இ.ஆ.ப.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47873937309932,"sku":null,"price":329.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SATTAVALLUNAR.jpg?v=1782981205"},{"product_id":"தமிழ்-சினிமாவில்-கலைஞரின்-எழுத்து","title":"தமிழ் சினிமாவில் கலைஞரின் எழுத்து","description":"\u003cp\u003eஇன்றுவரை ஜீவஒளி வீசும் கலைஞரின் வசனங்கள் குறித்த விரிவான ஒரு நூலை எழுதியிருப்பதன் மூலம் சிறந்த ஒரு பெரும்பணியைச் செய்திருக்கிறார் எஸ்.இளங்கோ. உலக சினிமாக்கள் குறித்து அபார ஞானம் கொண்ட இவர், ஒரு திரைப்படக் கல்லூரி செய்ய வேண்டிய பணியைத் தனி மனிதனாக தொடர்ந்து செய்து வருகிறார்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஉலக சினிமாவை மட்டுமல்ல. இந்திய. தமிழ்ச் சினிமாக்களையும் ஆழ்ந்து உள்வாங்கி, அதிலுள்ள நுணுக்கங்களையும் நுட்பங்களையும் பகிர்ந்துகொண்டுள்ள எஸ்.இளங்கோவின் முயற்சி பாராட்டுக்குரியது.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47873958707436,"sku":null,"price":263.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/TAMILCINIMAAAAAAA.jpg?v=1782981407"},{"product_id":"முத்தச்சிறுகிளை","title":"முத்தச்சிறுகிளை","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇப்பூவுலகின் நிலப்பரப்பில் இந்தியா 2.4 விழுக்காடுதான் என்றாலும் உலகின் 11.4 % தாவரங்களுக்கு இது வாழ்விடம். இருந்தாலும், தாவரங்களை நாம் கவனிப்பதில்லை என்று நூலாசிரியர் அங்கலாய்க்கின்றார். செடி கொடிகளைக் கண்டுகொள்ளாதிருக்கும் நிலையை 'தாவரக்குருடு என்று கூறுகின்றார். ஒரு வேளை தாவரங்கள் ஒரே இட த்தில் நிலைத்து இருப்பதால் நாம் அவற்றைக் கவனிப் பதில்லையோ? இங்கு மனதில் கொள்ள வேண்டியது 'காட்டுயிர்' என்ற சொல், விலங்கு களையும் தாவரங்களையும் குறிக்கின்றது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47874062844140,"sku":null,"price":300.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MUTHASIRUKILAI.jpg?v=1782981731"},{"product_id":"சேரர்-காலச்-செப்பேடுகள்","title":"சேரர் காலச் செப்பேடுகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eசேர மன்னர் வரலாறு முழுமையாகவும், தொடர்ச்சியாகவும் தொகுத்து எழுதப்பெறாதது போலவே சேரர் செப்பேடுகளும், மிகச் சிலவற்றைத் தவிர, பெரும்பாலும் வரலாற்று நூல்களில் இடம் பெறாதது மட்டுமல்ல, அவை அறிமுகப்படுத்தப்படவுமில்லை. இது பெரும் குறையே. அக்குறையை நீக்கும் பொருட்டு மிக அரிதின் முயன்று இச்சேரர் காலச் செப்பேடுகள் பற்றிய தம் அறிமுக ஆய்வு நூலை முனைவர் மு,ராஜேந்திரன் அவர்கள் படைத்துள்ளார்கள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47874148630764,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SERARKAALA.jpg?v=1782982239"},{"product_id":"ராதிகா-சாந்தமானாள்","title":"ராதிகா சாந்தமானாள்","description":"\u003cdl\u003e\n\u003cdd\u003e\u003cspan dir=\"auto\"\u003eஎன்னைப்போன்ற வேறு எந்தப் பெண்ணுக்கு...\u003c\/span\u003e\u003c\/dd\u003e\n\u003cdd\u003e\u003cspan dir=\"auto\"\u003eஅறிஞர்களை இதுபோன்ற பரிசுகளையும் பணத்தையும் கொடுத்துப் பாராட்டினார்களா?\u003c\/span\u003e\u003c\/dd\u003e\n\u003cdd\u003e\u003cspan dir=\"auto\"\u003eஅதற்கு என் இனத்தைச் சேர்ந்த மற்ற பெண்களும் இருக்கிறார்கள்\u003c\/span\u003e\u003c\/dd\u003e\n\u003cdd\u003e\u003cspan dir=\"auto\"\u003eகாவியங்கள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளனவா?\u003c\/span\u003e\u003c\/dd\u003e\n\u003cdd\u003e\u003cspan dir=\"auto\"\u003eஎன்னைப்போன்ற வேறு எந்தப் பெண்ணுக்கு...\u003c\/span\u003e\u003c\/dd\u003e\n\u003cdd\u003e\u003cspan dir=\"auto\"\u003eஒவ்வொரு கலைத்துறையிலும் அத்தகைய பாராட்டைப் பெற்றதா?\u003c\/span\u003e\u003c\/dd\u003e\n\u003cdd\u003e\u003cspan dir=\"auto\"\u003eநீங்கள் ஈடு இணையற்றவர்.\u003c\/span\u003e\u003c\/dd\u003e\n\u003cdd\u003e\u003cspan dir=\"auto\"\u003eமுத்துப்பழனி, உங்களைப் போன்றவர்தான்.\u003c\/span\u003e\u003c\/dd\u003e\n\u003c\/dl\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47874276786412,"sku":null,"price":423.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/RADHIKA.jpg?v=1782982946"},{"product_id":"அந்தரத்தாமரை","title":"அந்தரத்தாமரை","description":"\u003cp\u003e\u003cspan\u003e12 கிலோ எடையில் சுமத்திரா தீவிலுள்ள காட்டு மலர், கலிபோர்னியாவில் 115 மீட்டர் உயரமுள்ள உலகின் மிக உயரமான மரம், 4 கிலோ எடையுள்ள வாழைப்பழத்தைத் தரும் இந்தோனேசிய வாழை, இன்று பிரபலமாக உள்ள பயிர் சுழற்சி முறையை 19-ஆம் நூற்றாண்டில் முதல் முறையாக அறிமுகப்படுத்திய கருப்பின பேராசிரியர் கார்வர், உலகிலேயே 50-க்கும் குறைவான டிகப்ரியோ மரங்கள் என்று நம்மில் பலருக்குத் தெரியாத செய்திகளை இந்நூல் கொண்டுள்ளது. \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47874378825964,"sku":null,"price":282.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ANTHARATHAMARAI.jpg?v=1782983427"},{"product_id":"விதி-என்ன-செய்யும்","title":"விதி என்ன செய்யும்?","description":"\u003cp\u003e\u003cstrong data-start=\"0\" data-end=\"23\"\u003eவிதி என்ன செய்யும்?\u003c\/strong\u003e – \u003cstrong data-start=\"26\" data-end=\"55\"\u003eகிருத்தினா நேரு அதெட்சிங்\u003c\/strong\u003e எழுதிய இந்த நாவல், மனித வாழ்க்கையில் விதியின் தாக்கம், மனிதனின் முயற்சி, உறவுகள் மற்றும் எதிர்பாராத நிகழ்வுகளால் உருவாகும் வாழ்க்கைப் பயணத்தை உணர்வுபூர்வமாக சித்தரிக்கும் படைப்பாகும். பழைய தமிழ்ப் பதிப்புகளில் இடம்பெற்ற இந்த நூல், வாசகர்களிடையே அறியப்பட்ட நாவலாகும்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47874428141804,"sku":null,"price":282.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/VITHIENNASEUUM.jpg?v=1782984018"},{"product_id":"வைக்கம்-முகம்மது-பஷீர்-எனும்-பேப்பூர்-சுல்தான்","title":"வைக்கம் முகம்மது பஷீர் எனும் பேப்பூர் சுல்தான்","description":"\u003cp\u003e\u003cspan\u003e'போடா, உன் பொண்டாட்டிக்கு வரதட்சணையா வந்ததாடா இந்த மலையாள மொழி? எனக்கு என்ன இஷ்டமோ அதைத்தான் எழுதுவேன். எனக்குத் தெரிஞ்ச எழுத்துக்களைதான் நான் எழுதுவேண்டா. உன்னோட ஏட்டு எலக்கணத்த நீயே வச்சுக்கடா-என்று தன் தம்பி (மலையாள மொழிப் புலவர்) யிடம் கோபிக்கும் பஷீரின் மூடி மறைக்கப்படாத வாழ்க்கை வரலாறு இந்நூல். அவருடைய கதைகளைப் போலவே எளிமையும் சுவாரசியமும் கொண்டிருப்பது இதன் சிறப்பு.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47874432663788,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/VAIKAMMUHAMADH.jpg?v=1782985452"},{"product_id":"சேவல்-கூவி-விடிந்தது","title":"சேவல் கூவி விடிந்தது","description":"\u003cp\u003e\u003cstrong data-start=\"0\" data-end=\"24\"\u003eசேவல் கூவி விடிந்தது\u003c\/strong\u003e – \u003cstrong data-start=\"27\" data-end=\"46\"\u003eமு. ராஜேந்திரன்\u003c\/strong\u003e எழுதிய இந்த நாவல், கிராமிய வாழ்க்கை, மனித உறவுகள் மற்றும் சமூக மாற்றங்களின் தாக்கத்தை யதார்த்தமாகப் பதிவு செய்யும் சிறந்த படைப்பாகும். எளிய மக்களின் அன்றாட வாழ்வில் நிகழும் போராட்டங்கள், நம்பிக்கைகள் மற்றும் வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்லும் மனவலிமை ஆகியவற்றை உணர்வுபூர்வமாக சித்தரிக்கிறது.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47874436104428,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SEVALKOOVI.jpg?v=1782986118"},{"product_id":"மலர்ப்பித்து","title":"மலர்ப்பித்து","description":"\u003cp\u003e\u003cspan\u003e18-ம் நூற்றாண்டில் ஆண் வேடமிட்டு கடற்பயணம் மேற்கொண்ட பெண் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்ட காகித மலர், உலகின் முதல் பொருளாதார குமிழிவெடிப்புக்கு காரணமாயிருந்த ட்யூலிப் மலர்மீதான பித்து, உலகின் மிக மோசமான களைகளில் ஒன்றாகவும் அழிக்கவே முடியாத நச்சுக்களையாகவும் மாறிவிட்டிருக்கும் அழகிய வெண்ணிற மலர்களைக் கொண்ட பார்த்தீனியம், பல சுலாசாரங்களுடன் இணைந்திருக்கும் எனக்கு மலர், 12 வருடக் காலக் கணக்கை நினைவில் கொண்டிருக்கும் நீலக்குறிஞ்சி, மிகையாக மலர்ந்து உடனே அழிந்துவிடும் மூங்கில், இவற்றோடு குங்குமப்பூ. கருவிளைமலர், வெனிலா, ஜப்பானியக் கலாசாரத்தின் முக்கிய அங்கமான இசுபானாவின் வரலாறு உள்ளிட்ட பல மலர்களின் வரலாறு. \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47874468511980,"sku":null,"price":206.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MALARPITHU.jpg?v=1782986475"},{"product_id":"வெயில்-தேசத்தில்-வெள்ளையர்கள்","title":"வெயில் தேசத்தில் வெள்ளையர்கள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇந்தியாவில் ஆங்கிலேயர்களின் வாழ்வைப் பற்றி அவர்களே புத்தகங்களாக, நாட்குறிப்புகளாக, கடிதங்களாக, அரசாங்கச் செய்திப் பரிவர்த்தனைகளாக எழுதியிருக்கிறார்கள். அவைகள் நூலகங்களின் கவனிக்கப்படாத இடுக்குகளில் உறங்கிக் கொண்ருக்கின்றன. அவைகளை நூற்றாண்டு கால உறக்கத்திலிருந்து எழுப்பி அழைத்து வந்திருக்கிறேன். ஆங்கிலேயர்களின் வாழ்வை, அவர்கள் சந்தித்த சிக்கல்களைத் தமிழ் வாசகர்களுக்கு விளக்க விரும்பியதன் விளைவு இந்த நூல். ஆங்கிலேயர்களைப் பற்றி நமது பாடப் புத்தகங்களில், பொதுப் புத்தியில் உள்ள கற்பிதங்களை இந்தப் பதிவுகள் மாற்றக்கூடும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47874473165036,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/VEYILTHESAM.jpg?v=1782986852"},{"product_id":"எழுத்துலக-மேதைகளின்-முதல்-கதைகள்","title":"எழுத்துலக மேதைகளின் முதல் கதைகள்","description":"\u003cp\u003e\u003cstrong data-start=\"0\" data-end=\"36\"\u003eஎழுத்துலக மேதைகளின் முதல் கதைகள்\u003c\/strong\u003e – \u003cstrong data-start=\"39\" data-end=\"56\"\u003eகுறிஞ்சிவேலன்\u003c\/strong\u003e தொகுத்து வழங்கியுள்ள இந்த நூல், இந்தியாவின் பல்வேறு மொழிகளைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர்கள் தாங்கள் எழுதிய முதல் கதைகள் உருவான பின்னணி, அந்த முதல் முயற்சியின் அனுபவங்கள் மற்றும் எழுத்துலகப் பயணத்தின் தொடக்கத்தைப் பதிவு செய்யும் அரிய தொகுப்பாகும்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47874488107244,"sku":null,"price":117.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MUTHULAGA.jpg?v=1782987086"},{"product_id":"யானை-வருது-யானை-வருது","title":"யானை வருது... யானை வருது..","description":"\u003cp\u003e\u003cstrong data-start=\"0\" data-end=\"31\"\u003eயானை வருது... யானை வருது...\u003c\/strong\u003e என்பது சிறுவர்களுக்காக எழுதப்பட்ட சுவாரஸ்யமான நூலாகும். யானையை மையமாகக் கொண்டு இயற்கை, விலங்குகள் மற்றும் மனிதர்களின் உறவை எளிமையாகவும், ரசிக்கும்படியும் அறிமுகப்படுத்தும் இந்நூல், குழந்தைகளின் கற்பனைத் திறனையும் சுற்றுச்சூழல் பற்றிய ஆர்வத்தையும் வளர்க்கும் வகையில் அமைந்துள்ளது.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47874494693612,"sku":null,"price":94.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/YANAIVARUTHU.jpg?v=1782987552"},{"product_id":"பாரதப்-புழையின்-மக்கள்","title":"பாரதப் புழையின் மக்கள்","description":"\u003cp\u003e\u003cstrong data-start=\"0\" data-end=\"26\"\u003eபாரதப் புழையின் மக்கள்\u003c\/strong\u003e – \u003cstrong data-start=\"29\" data-end=\"57\"\u003eஎம். டி. வாசுதேவன் நாயர்\u003c\/strong\u003e எழுதிய இந்தப் படைப்பு, கேரளத்தின் பண்பாடு, மனித உறவுகள் மற்றும் பாரதப்புழை நதிக்கரையை மையமாகக் கொண்ட மக்களின் வாழ்க்கையை நெகிழ்வூட்டும் வகையில் சித்தரிக்கும் இலக்கிய ஆக்கமாகும். மலையாள இலக்கியத்தின் தனித்துவமான அழகையும் மனித உணர்வுகளின் ஆழத்தையும் தமிழில் அறிமுகப்படுத்தும் சிறந்த நூலாக இது திகழ்கிறது.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47874499608812,"sku":null,"price":84.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/BHARATHPULAYIN.jpg?v=1782988080"},{"product_id":"பறக்கும்-பப்பி-பூவும்-அட்டைக்கத்தி-ராஜாவும்","title":"பறக்கும் பப்பி பூவும் அட்டைக்கத்தி ராஜாவும்","description":"\u003cp\u003e\u003cspan\u003eகுழந்தைகளும் கதைகளும் பிரிக்க முடியாதவை. குழந்தைகளுக்காகவே கதைகள் நித்தம் நவமென உருவாகிக் கொண்டிருக்கின்றன. வளர்ந்த பிறகும் குழந்தையாக விரும்புவதே மனித மனத்தின் ஆகப்பெரும் அதிசயம். அந்த அதிசயத்தை அடைய ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான முயற்சிகளை செய்துகொண்டிருக்கிறோம். உலகம் முழுக்க தங்களின் குழந்தைப் பருவத்திற்குத் திரும்பும் எத்தனிப்போடு படைக்கப்பட்ட படைப்புகளே காலத்தால் அழியா படைப்புகளாக இருக்கின்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47874516648172,"sku":null,"price":75.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PARAKUMPAPPI.jpg?v=1782988547"},{"product_id":"வானப்பிரஸ்தம்","title":"வானப்பிரஸ்தம்","description":"\u003cp\u003e\u003cstrong data-start=\"0\" data-end=\"17\"\u003eவானப்பிரஸ்தம்\u003c\/strong\u003e – \u003cstrong data-start=\"20\" data-end=\"47\"\u003eஎம்.டி. வாசுதேவன் நாயர்\u003c\/strong\u003e எழுதிய முக்கியமான படைப்புகளில் ஒன்றாகும். மனித வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் எழும் தனிமை, முதுமை, உறவுகளின் மாற்றம், நினைவுகள் மற்றும் உள்ளார்ந்த தேடல் ஆகியவற்றை ஆழமான உளவியல் பார்வையுடன் சித்தரிக்கும் சிறந்த இலக்கியப் படைப்பு இது. மலையாள இலக்கியத்தின் செழுமையை தமிழில் அழகாக அறிமுகப்படுத்தும் நூலாகவும் இது திகழ்கிறது.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47874548990188,"sku":null,"price":65.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/VAANAPRESTHAM.jpg?v=1782989080"},{"product_id":"பெரிய-வயிறு-குருவி","title":"பெரிய வயிறு குருவி","description":"\u003cp\u003e\u003cstrong data-start=\"0\" data-end=\"22\"\u003eபெரிய வயிறு குருவி\u003c\/strong\u003e – \u003cstrong data-start=\"25\" data-end=\"42\" data-is-only-node=\"\"\u003eபாரதி முருகன்\u003c\/strong\u003e எழுதிய சிறுகதைத் தொகுப்பு. மனிதர்களின் அன்றாட வாழ்க்கை, கிராமிய சூழல், உறவுகளின் நுணுக்கம் மற்றும் சமூகத்தின் பல்வேறு முகங்களை எளிமையான மொழியிலும் ஆழமான சிந்தனையுடனும் பதிவு செய்யும் படைப்பாக இது திகழ்கிறது. யதார்த்தமான கதாபாத்திரங்கள் மற்றும் வாழ்வின் சிறு நிகழ்வுகள் மூலம் மனித மனத்தின் உணர்வுகளை நுட்பமாக வெளிப்படுத்துகிறது.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47874570617068,"sku":null,"price":28.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PEREYAVAYARU.jpg?v=1782989530"},{"product_id":"படித்துப்-பழகு-2-tamil-english","title":"படித்துப் பழகு - 2 (TAMIL \u0026 ENGLISH)","description":"\u003cp\u003e\u003cspan\u003eபடித்துப் பழகு-2 புத்தகம் பெயருக்கு ஏற்றாற்போல. படித்துப் பழகும் வண்ணம் எளிய கதைகளைக் கொண்டுள்ளது. படிக்கச் சுவாரசியமாகவும், மிக அருமையான கருத்துகளையும் குழந்தைகளுக்குக் கதைகளின் வாயிலாகக் கூறியுள்ளதைப் பார்க்கும்போது. எதிர்கால சமுதாயத்தின் மீது நீங்கள் கொண்டுள்ள அக்கறையைக் காட்டுகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47874573598956,"sku":null,"price":47.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PADITHUPALAGU.jpg?v=1782989874"},{"product_id":"அம்மாவுக்கு-மகள்-சொன்ன-உலகின்-முதல்-கதை","title":"அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை","description":"\u003cp\u003e\u003cspan\u003eதமிழ்நாட்டில் இன்று குழந்தை இலக்கியம் நிறைய தேவைப்படுகிறது. இப்புத்தகத்தின் ஆசிரியர் மு.முருகேஷ். ஏற்கெனவே சிறுவர்களுக்கான கதைகள் எழுதி இருப்பவர். அவரது இப்புத்தகம் குழந்தைகள் ரசித்து வாசிப்பதாக அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47874576482540,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/AMMAVUKUMAHALSONNA.jpg?v=1782990180"},{"product_id":"வந்தவாசிப்-போர்-250","title":"வந்தவாசிப் போர் 250","description":"\u003cp\u003e\u003cspan\u003eவந்தவாசிப் போர் நடந்து 250 வருடங்கள் ஆகின்றன என்றும், அச்சமயத்தில் இம்மலையும் ஒரு முக்கிய களமாக இருந்திருக்கலாம் என்றும் அறிந்தோம். மலையிலிருந்து பார்த்தபோது வந்தவாசியின் இடிந்த கோட்டை தென்பட்டது. பின்பு மலையைவிட்டு இறங்கியவுடன் தொல்பொருள் ஆய்வுத் துறையின் காப்பாட்சியர் கலைவாணனிடம் தொடர்பு கொண்டேன். எனது உதவியாளர்கள் ரமேசும் பன்னீர்செல்வமும் கணினி வலையில், 1760 ஆம் ஆண்டு நடந்த வந்தவாசிப் போர் என்று தேட ஆரம்பித்தனர்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47874592637164,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/VANTHAVAASI.jpg?v=1782990427"},{"product_id":"எட்டுக்கால்-பூச்சிக்கு-ஏழு-கால்கள்","title":"எட்டுக்கால் பூச்சிக்கு ஏழு கால்கள்","description":"\u003cp\u003eகுழந்தைகளின் உலகிற்குள் எவராலும் எளிதில் நுழைந்துவிட முடியாது. குழந்தைகளின் சிந்தனைகள் எனும் பஞ்சுப் பொதிகளை நம்மால் சுமக்கவே இயலாது. அந்த மகிழ்ச்சியான மழலை உலகின் மந்திரக் கதவுகள் மு.முருகேஷ்-க்கு எப்போதும் திறந்தே இருக்கின்றன.\u003c\/p\u003e\n\u003cp\u003eஎளிதில் நம்மை வசப்படுத்திவிடும் எழுத்தும், வேகமாக நம்மை இழுத்துச்செல்லும் நடையும், நிஜமென நம்மை நம்ப வைக்கும் கற்பனை வளமும், ஒவ்வொரு கதைக்குள்ளும் பொதிந்துகிடக்கும் நற்கருத்தும் கதைகளோடு நம்மை எளிதில் கைகுலுக்க வைக்கின்றன. வாசித்து முடித்த பிறகு ஒவ்வொரு கதையும் நம்மை நோக்கி ஒரு சிநேகப் பார்வை பார்ப்பதை உணர முடிகிறது.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47874600042732,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ETTUKAALPOOCHI.jpg?v=1782990729"},{"product_id":"தவிட்டுக்குருவியும்-தங்கராசு-மாமாவும்","title":"தவிட்டுக்குருவியும் தங்கராசு மாமாவும்","description":"","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47874603188460,"sku":null,"price":112.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/THAVIKKUM.jpg?v=1782991021"},{"product_id":"குழந்தைகளுக்குப்-பிடித்த-நாட்டுப்புறக்-கதைகள்","title":"குழந்தைகளுக்குப் பிடித்த நாட்டுப்புறக் கதைகள்","description":"","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47874605940972,"sku":null,"price":112.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NAATUPURA.jpg?v=1782991313"},{"product_id":"சோழர்-காலச்-செப்பேடுகள்","title":"சோழர் காலச் செப்பேடுகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eடாக்டர் மு.ராஜேந்திரன் IAS, இந்நூலின் வழி எடுத்துரைத்துள்ள அறிய செய்திகள் தமிழுக்கும் தமிழ் வரலாற்றுக்கும் புதிய பரிணாமத்தை அளிக்கும் என்பதில் ஐயமில்லை. வரலாற்று அடிப்படையிலோ அல்லது ஆய்வின் அடிப்படையிலோ குற்றம் இல்லாத வகையில் திகழும் வரலாற்று நூல் இது. பயனுடைய நூல்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47889780834540,"sku":null,"price":470.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/cholarkalam.jpg?v=1783052610"},{"product_id":"வண்ணச்-சீரடி","title":"வண்ணச் சீரடி","description":"\u003cp\u003e\u003cspan\u003eசிலப்பதிகார காப்பிய நாயகி கண்ணகிக்கு நடக்கும் ஒரே திருவிழா சித்திரை பௌர்ணமி திருவிழா. மங்கலதேவி கண்ணகிக் கோட்டம் இருக்கும் விண்ணேற்றிப் பாறையில் இரு மாநில எல்லைப் பிரச்சினையில் பராமரிப்பின்றி சிதிலமடைந்து கிடைப்பது குறித்து, இந்து தமிழ் திசையில் கட்டுரை ஒன்று எழுதியுள்ளேன். நாற்பதாண்டுகளுக்கும் மேலாக நடக்கும் மங்கலதேவி கண்ணகிக் கோட்டம் பராமரிப்பு குறித்து டாக்டர் மு.ராஜேந்திரன்,இஆப 'வண்ணச் சீரடி' என்றொரு நூல் எழுதியிருக்கிறார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47889802526956,"sku":null,"price":423.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/vannaseweradi.jpg?v=1783052991"},{"product_id":"தண்டோராக்காரர்கள்","title":"தண்டோராக்காரர்கள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eதிரைப்படம் ஒரு பொழுதுபோக்குக் கலையாக இருக்கிறது. ஆனால் அதன் பொழுதுபோக்கு அம்சங்களைக் கடந்து, நம் வாழ்வின் அங்கமாகவும் இருக்கிறது. தனிநபரின் வாழ்விலும், சமூக வாழ்விலும் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணுகிறது.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eகதைக்கும் கதை மாந்தர்களுக்கும் இடைவெளி உணரப்படாத காலத்தில், நாடகமும் திரைப்படமும் தேசிய அரசியலி\u003c\/span\u003e\u003cspan class=\"text_exposed_show\"\u003eல் எவ்விதம் கோலோச்சின?\u003cbr\u003eதமிழ் நாடக இயக்கம் தொடங்கி, தொடக்கக் கால திரைப்படங்கள் வரை, கி.பி.1880 முதல் 1945 வரையான காலகட்டம் குறித்த மிக முக்கியமான புத்தகம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47889828085996,"sku":null,"price":206.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/thandorakaran.jpg?v=1783053217"},{"product_id":"யானைகளின்-கடைசி-தேசம்","title":"யானைகளின் கடைசி தேசம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eசிவகங்கை அரசர் வெங்கம் பெரிய உடையணத் தேவர் நாடு கடத்தப்பட்டு, சிறை வைக்கப்பட்டிருந்த நாடு. கலையெழில் நிரம்பிய இந்து, பௌத்தக் கோயில்கள் நிரம்பிய தீவு. ஒரே நேரத்தில் பெருமிதமும் துயரமும் பெருகச் செய்யும் பதினாயிரம் தீவுகள் கொண்ட தேசமான இந்தோனேசியா பற்றிய பயண அனுபவங்களைப் பேசும் நூல். ‘யானைகளின் கடைசி தேசம்.’ இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான டாக்டர் மு. ராஜேந்திரனின் இந்தோனேசியப் பயண அனுபவங்கள், வரலாற்றைத் தேடி அறியும் நோக்கத்தையும் கொண்டிருப்பதால், பயணக் கட்டுரைகளுக்கானப் புதிய பரிமாணத்தைக் கொடுக்கின்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47889860428012,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/yanaigalinkadaisidesam.jpg?v=1783053568"}],"url":"https:\/\/centaram.com\/collections\/akani-veliyeedu.oembed?page=3","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}