{"title":"அடையாளம் பதிப்பகம்","description":"","products":[{"product_id":"தமிழர்-மானிடவியல்","title":"தமிழர் மானிடவியல்","description":"\u003cp\u003e\u003cspan\u003eகடந்த காலத்திலும் நிகழ் காலத்திலும் மனிதர்கள், மனித நடத்தைகள், சமூகங்கள் பற்றி அறிவியல் பூர்வமாக ஆய்வது மானிடவியல். சமூக மானிடவியல் சமூக நடத்தைகளையும், பண்பாட்டு மானிடவியல் நெறிமுறைகள், மதிப்பீடுகள் உள்ளிட்ட கலாச்சார அர்த்தங்களையும் ஆய்வு செய்கின்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47648414793964,"sku":null,"price":423.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/091624ff32e589e417a7f2f991515562.jpg?v=1779259350"},{"product_id":"பண்டைத்-தமிழ்ப்-பண்பாடு","title":"பண்டைத் தமிழ்ப் பண்பாடு","description":"\u003cp\u003e\u003cspan\u003eதமிழர்களின் தொன்மை, மரபு மற்றும் பண்பாட்டு வளத்தை அறிந்துகொள்ள விரும்பும் மாணவர்கள், வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் தமிழ் இலக்கிய நேசிகளுக்கு இந்நூல் சிறந்த வழிகாட்டியாக அமைகிறது. தமிழர் நாகரிகத்தின் பெருமையையும், அதன் தனித்துவமான அடையாளங்களையும் புதிய தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் மதிப்புமிக்க வாசிப்பாக \u003c\/span\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eபண்டைத் தமிழ்ப் பண்பாடு\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e திகழ்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47648422527212,"sku":null,"price":329.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/2e3ea28810f327a6648d273de2e666ea.jpg?v=1779259772"},{"product_id":"கடவுள்-சந்தை","title":"கடவுள் சந்தை","description":"\u003cp\u003e\u003cspan\u003eதாராளமயம் இந்தியாவின் பொருளாதாரமாய் ஆகியிருக்கிறது. ஆகவே இந்தியா மேலும் இந்துமயமாகவும் ஆகியிருக்கின்றது. நடுத்தர வர்க்க இந்தியர்கள், வளமடைகின்ற போதே செயலூக்கமுள்ள மதத்தன்மை கொண்டவர்களாகவும் ஆகிறார்கள். கடந்த பத்தாண்டுகள், ஆற்றல் மிகுந்த புதிய சாமியார்களின் பெருக்கம், கோயில் சடங்குகளில் மிகப்பெரிய அதிகரிப்பு, புதிய கடவுளரின் உருவாக்கம், பூசாரிகளின் தேவை அதிகரிப்பு ஆகிய வற்றைக் கண்டுள்ளன. அரசியல்வாதிகள் தங்கள் பிரச்சாரங்களில் பூசைகளையும் யாகங்களையும் கால ஒழுங்கோடு பயன்படுத்த முற்பட்டுவிட்டதால், இந்து மதமும் பொதுவாழ்க்கையில் நுழைந்துவிட்டது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47925655666924,"sku":null,"price":282.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/7cda1d75fec38df30308574d516db02d.webp?v=1783754706"},{"product_id":"எர்ரி-அபிராத்து","title":"எர்ரி அபிராத்து","description":"\u003cp\u003e\u003cspan\u003eதுரட்டி ஏந்திய மேய்ப்பவரின் உள்ளங்கைகளில் ஒட்டி உருண்டு, வட்டச் சுவடியாய் உருமாறும் புதினம் இது. காகிதங்களில் கிறுக்கலாய்க் கோடவிழ்த்து வந்த சற்பாத்திரங்களைக் கரும்பிக் கரும்பி வெளியேற்றிவிட்டு, மெல்ல அசைந்து, மஞ்சள் முள்ளுகளால் குத்தி எழுதி வரும் இந்த முள்ளெலிகள், கதாருதுக்களைக் கீச்சுக் குரலிடும் உவர் தரவைக் கதைகளையும் வாசிப்பீரே... நீவீர் கோபியாது, உற்றுணருமாறு அத்தியந்தத் தாழ்மையாய்க் கோலியாத்தின் மணற்கண் சுமந்த துயர இமைப்புகளையும் ‘ஈரேழ் அபிராத்தின்’ பாசி அடைந்த சீதள ஓலைக் குருத்துகளில் கோணங்கி எழுதியுள்ளார். நீங்கள் இதை வாங்கி நாதகிருத்தியங்களோடு ஆராதித்து, பரோக் கலை உலக விருத்தாந்தங்களையும் காது வைத்துக் கேட்கவேண்டும். மணற்கண்ணின் பரிபாஷைகளில் இமை பிரித்து, லிபிகளைத் தைத்தவாறு, ஏடவிழ்த்து ரெப்பை மூடி, மொழி இருட்டில் மறையுருவாய்க் கதைத் திரட்டின் முதுநீர்ப் பாதைகளில் நீந்தி ‘எர்ரி அபிராத்து’ நவீனம் அடைவீரே... நோவாவின் இருட்டுப் படகில் அடிக்கடலின் சமவெளிக்குள் ஊடுருவிச் சென்று, இந்த ஒவ்வொரு புத்தக இரு வெளிகளை எர்ரித் துணிகளால் மடித்து, உலோக உப்புகள் தடவி நீரில் போட்டால், நூல் ரெட்டையாகிவிடும். ஈரேழ் அபிராத்தின் இந்த மடக்குகள் எல்லாம் வனமந்திரக் கதா நூதன வடிவம். வேறொருவர் வாசிப்பில் ஊனுடல் மொழியாய், எலும்புச் சட்டகமாய் வரிப்படும் சொல் ஓர் உயிரி. முதுநீரில் கரையாமல் அது நீந்தியபடி இருப்பதற்கு, வார்த்தைகளின் ஆவி சொல்ல ஆரம்பிக்கும் போதே எழுதும் உயிரி தோன்றி, இயங்கியலாகி அலைகிறது இந்தக் கதைகளின் விதிகளுக்குள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47925702099180,"sku":null,"price":720.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/7001b392312be12b6e217556e6e60d56.jpg?v=1783755019"},{"product_id":"நீர்ப்பழி","title":"நீர்ப்பழி","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇந்தத் திரட்டில் உள்ள கதைகள் அலாதியான தெருவின் வாசனையில் மண்கூரை இற்று உதிரும் இயற்கையின் துகள்களாக உரையாடுகின்றன. கழுகுமலை அடிவாரப் பாறைகளில் காணப்படும் கிறுக்கிய பல ரூபங்கள், பாதையில் போவோர் வருவோரைக் கூப்பிடும் உருவிலிகள், நரிக்குட்டி கண்ணுக்குப் படும் ஒளியுருவங்கள் சோ.தர்மனின் கதைகளில் காணலாம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47925726445804,"sku":null,"price":555.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/4e45ccc5c893eb58ba090f9ddf90aef6.jpg?v=1783755273"},{"product_id":"இந்திய-அரசும்-கல்விக்-கொள்கைகளும்-1986-2016","title":"இந்திய அரசும் கல்விக் கொள்கைகளும் (1986-2016)","description":"\u003cp\u003e\u003cspan\u003eகல்விக் கொள்கை என்பது வெறும் கல்வி குறித்த ஓர் அணுகுமுறை மட்டுமல்ல, சமூக உருவாக்கம் குறித்த ஓர் ஆட்சியின் அல்லது ஒரு காலகட்டத்தின் அணுகல்முறையைப் புரிந்துகொள்வதற்கான அடிப்படைக் கருவியாகவும் இருக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பிறகு, நேரு காலத்தில் அமைக்கப்பட்ட டாக்டர் இராதாகிருஷ்ணன் குழு, பேராசிரியர் கோத்தாரி குழு ஆகியவை அளித்த அறிக்கைகள் தேச நிர்மாணம் குறித்த பொறுப்புடன் உருவாக்கப்பட்டன. இவை கல்விப் பரவலில் அரசின் பங்கை வலியுறுத்தின; அருகமைப் பள்ளிகளையும் இலவசக் கல்வியையும் பரிந்துரைத்தன. இந்த நூலில் கல்வியாளர் பேராசிரியர் அ.மார்க்ஸ், 1986 - 2016 காலகட்டத்தில் வெளியிடப்பட்ட நான்கு அறிக்கைகளைக் கொண்டு, 1980களின் பிற்பகுதியில் இந்தியாவிலும் உலக அளவிலும் ஏற்பட்ட மாற்றங்கள் எவ்விதம் இந்தியக் கல்விக் கொள்கைகளில் பிரதிபலிக்கின்றன என்பதை விவரிக்கிறார். இதை, சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகு உருவான 'ஒரு துருவ உலகம்', கல்வியை அரசின் பொறுப்பில் செயல்படும் 'மக்கள் சேவை' எனும் நிலையிலிருந்து தனியார்களும் கார்பொரேட்களும் 'இலாபம் ஈட்டும் பண்டம்' என்கிற நிலைக்கு எவ்வாறு தாழ்த்தின என்பதினூடாக உலகளாவிய பொருள் வணிகத்திற்கான - 'காட்' ஒப்பந்தத்தை அடுத்து இப்போது உலகளாவிய சேவை வணிகத்திற்கான - 'காட்ஸ்' ஒப்பந்தம் எப்படி உருவாகியிருக்கிறது போன்றவற்றுடன் விளக்குகிறார். அத்துடன் கல்விக் கொள்கைகளைப் புகழ்மிக்க கல்வியாளர்கள் உருவாக்கிய நிலைபோய் இன்று அம்பானி, பிர்லா போன்றவர்களின் தலைமையில் ஏன் உருவாக்கப்படுகின்றன, பல்கலைக்கழகம் எனும் கருத்தாக்கமே இன்று மாற்றமடைகிறதா, இன்றைய பாடத்திட்டங்கள் சிந்தனைத் திறனை வளர்ப்பதற்குப் பதிலாக, பயிற்சிபெற்ற ரொபோட்களைப் போல மாணவர்களை உருவாக்குகிறதா, கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் தரம் பிரிக்கப்பட்டு மாணவர்கள் மேற்படிப்புக்குச் செல்வோர், வெறும் தொழில் பயிற்சி பெறுவோர் என ஏன் பிரிக்கப்படுகிறார்கள், பல்வேறு மொழிகள், பண்பாடுகள், வளர்ச்சி நிலைகள் உள்ள இந்த நாட்டில் நாடுதழுவிய பொதுத் தேர்வுகள் உருவாக்கப்படுவதன் பின்னணி போன்றவற்றையும் இந்த நூல் விவரிக்கிறது. இதன் மூலம், அரசின் கல்விக்கொள்கை குறித்த மாற்றங்களை நாம் தெரிந்துகொள்வதற்கும் எதிர்வினையாற்றுவதற்கும் அதிக வாய்ப்பைத் தருகிறது இந்த நூல்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47925739159788,"sku":null,"price":310.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/1986-2016.jpg?v=1783755893"},{"product_id":"கியூபாவின்-விடுதலை","title":"கியூபாவின் விடுதலை","description":"\u003cp\u003e\u003cspan\u003eகியூபா அமெரிக்காவுக்குத் தெற்கில் உள்ள ஒரு குட்டித் தீவு. இந்தியாவுக்கு வழி தேடிய கொலம்பஸ் முதலில் கால்வைத்த தீவு. காலனி ஆதிக்கத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் எதிராக உரக்க விடுதலைக் குரல் கொடுக்கும் நாடு. இதனால் உலகம் நன்கறிந்த நாடு. அனைவருக்கும் இலவசக் கல்வி, மருத்துவம், மனிதர்களின் நெடுநாள் வாழ்வு, குழந்தைகள் நோய்களுக்குப் பலியாகாமல் வளர்வது போன்ற சாதனைகளால் சமூக வளர்ச்சியில் அமெரிக்காவையும் மிஞ்சி நிற்கும் நாடு.இந்த நாட்டை நாம் சமூக அரசியல் வரலாற்றுக் கண்ணுடன் பார்ப்பதற்கு, தான் நேரில் பார்த்த அனுபவத்தின் மூலமும் ஆராய்ச்சியின் மூலமும் நம்மை அழைத்துச் செல்கிறார் நாகேஸ்வரி அண்ணாமலை. கியூபாவின் வரலாற்றை அதன் தொடக்க காலம், அடிமைகளின் வரவு, காலனிய விடுதலைப் போர்கள், அமெரிக்கக் கைப்பாவை பதீட்சாவின் கொடுங்கோலாட்சி, அமெரிக்காவின் கொடூரச் செயல்கள் என்று வரிசையாக எளிய தமிழில் ஆதாரத்துடன் விவரிப்பது நமது பார்வையைக் கூர்மையாக்குகிறது. கியூபாவின் புரட்சி, புரட்சியின் நாயகனான ஃபிடல் காஸ்ட்ரோவின் ஆளுமை, அவர் அரசியலிலும் சமூகத்திலும் பொருளாதாரத்திலும் செய்த அடிப்படை மாற்றங்கள், அவருடைய பொதுவுடைமை ஆட்சியின் இலட்சியம், சோவியத் யூனியனுடன் சிக்கலான உறவு, மூன்றாம் உலக நாடுகளின் விடுதலைப் போர்களில் உதவி, தொடரும் கியூபாவின் பிரச்சினைகள் என ஒவ்வொரு கண்ணியாக ஆசிரியர் தொடுத்துக் கட்டி நமது கியூபா பற்றிய தேடலுக்கான அறிவைச் சிரமமில்லாமல் தருகிறார். ஃபிடல் காஸ்ட்ரோவின் தலைமைக்குப் பின்புலனாக இருக்கும் அவருடைய ஆளுமையின் புதிரையும் அவிழ்க்கிறார் ஆசிரியர்.கொடுங்கோன்மையின் வீழ்ச்சி, சமத்துவப் புரட்சி, ஏகாதிபத்தியங்களின் இயலாமை, வளம் குறைந்த பொருளாதாரத்தில் சமூக வளர்ச்சிச் சாதனை ஆகியவை பற்றி அக்கறை உள்ளவர்கள் படிக்க வேண்டிய புத்தகம் இது. நாகேஸ்வரி அண்ணாமலை தமிழ்நாட்டின் கடைக்கோடி பகுதியொன்றில் பிறந்த நாகேஸ்வரி, பெரிய மொழி ஆளுமையான அண்ணாமலையின் மனைவி. இள வயதிலேயே கணவரோடு அமெரிக்கா சென்றவர். தன் குடும்பம், பிள்ளைகளின் எதிர்காலம் என்று அவர் காலத்துப் பெண்கள் பலரையும்போல ஒரு சின்ன வட்டத்துக்குள் அடைத்துக்கொண்டிருக்க வேண்டியவர். தன்னுடைய 60-வது வயதுக்குப் பிறகு, திடீரென எழுதத் தொடங்கினார் 'அமெரிக்காவில் முதல் வேலை', 'அமெரிக்க அனுபவங்கள்', 'அமெரிக்காவின் மறுபக்கம்' என்று அமெரிக்கா பற்றி அவர் எழுதிய புத்தகங்கள் அமெரிக்க வாழ்வு, கலாச்சாரம் சம்பந்தமான தமிழின் முக்கியமான வரவுகளாக அமைந்தன. தொடர்ந்து, 'ஐந்து தலைமுறை நாடார் பெண்களின் கதைகள்', 'பாலஸ்தீன இஸ்ரேல் போர்', 'போப் பிரான்சிஸ்' ஆகிய புத்தகங்களை எழுதினார். அமெரிக்கா தொடர்பாக இங்கு நிலவும் பொது பிம்பத்தை உடைப்பவை நாகேஸ்வரியின் புத்தகங்கள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47925810266348,"sku":null,"price":203.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/0121b3a4207c8c1f9ff93084fa999153.webp?v=1783757521"},{"product_id":"சம்ஸ்காரா","title":"சம்ஸ்காரா","description":"\u003cp\u003eகாலங்காலமாக வந்த மரபுகளைத் தாக்கும் நாவலாக இப்புத்தகம் விமர்சிக்கப்படுகிறது. எனினும் மொழியைக் கையாளும் முறையாலும் படிமங்களை உபயோகிக்கும் விதத்தாலும் இதே மரபை ஏற்றும் நிற்கிறது. பேராசிரியர் அனந்தமூர்த்தியின் எழுத்துகளில் இந்நாவலின் கதாநாயகன் பிராணேஸாசாரியன் தன் தர்மத்தின் மீது ஐயம் கொண்டாலும் அதே நேரத்தில் ஆழமான சிரத்தையும் கொண்டு, நிர்த்தாட்சண்யமாய் சிந்தித்து, பிரச்சினையிலிருந்து பின்வாங்கி ஓடாமல் எதிர்கொண்டு நிற்கிறான். உயிர் வாழ்தலையே ஒரு பொருள் பொதிந்த அனுபவமாகப் பார்க்கிறான். அவனது தெய்வீகப் பயணம் உயிர் தரிப்போடு கூடிய ஒரு புதிய பயணமாக, தன் கலாச்சாரத்தையே புதுக்கண் கொண்டு நோக்கும்படி செய்யும் பயணமாக அமைகிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003eபல எதிர்ப்புகளைச் சந்தித்து, இலக்கிய உலகில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றுக்கொண்ட இந்நாவல், கன்னட நாவல் உலகில் பின்பு ஏற்பட்ட மகத்தான சாதனைகளுக்கு ஒரு மைல்கல்லாக அமைந்தது என்றால் அது மிகையல்ல.\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47925818458348,"sku":null,"price":150.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/766ed9171829fe77ef1474676002b6c0.jpg?v=1783757822"},{"product_id":"பாழி","title":"பாழி","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇந்த நாவலின் கதாபாகங்களில் ஏழு ஏடுகளாக உடல் பெற்றாள் பாழி. ஏழுமலை தாண்டி, இலந்தைக்கொடி ஒதுக்கி, ஒரு பூ பூத்ததும் முதலாம் புத்தகமானாள். ஆனைகட்டித் தெருவில் இரண்டாம் ரத்தாம்பரப் புத்தகத்தில் வெள்ளைப்பூவும் மஞ்சப்பூவும் ஏந்திய கணிகைகள் இருவரைக் கூட்டிவந்தாள். மூன்றாம் புத்தகத்தில் மூன்று பூ திறந்து ஏகலைவன் தாவிவரும் வில்திறம் அதிரும் கானகத்தில் வேடபுராண ஏடானாள். கருப்பு டியூலிப் பூவால் இருட் புத்தகம் திறந்தாள். வேறொரு திசையில் குருடர்களின் கண்ணேடு தடவினாள் பாழி. சிற்பவயல் ஏடும் சித்திரவயல் ஏடும் அருகரும் அபிதரும் ஆகி மயிற்பிஞ்சத்தால் தூற்றுத் தூற்று எறும்புகளின் கோடுகள் அழியாமல் கேட்டுச்சொல்ல வந்தாள் முதல் கதையை... ‘உலகம் விரிகிற ஒரு தானியம்’ என்றாள் முதல் ஸ்திரீயான தானியாள் எனப்பட்ட பச்சைநிறமானவள். இமைகள் மூடிய அகலமான அந்த தானியத்தைச் சுற்றிவந்த கல்பறவையை தானியாள் கேட்டாள், ‘யாருக்காக இனி இராஜ்ஜியத்தை அமைக்கப்போகிறார்கள்’ 'கண்ணீருக்காகவும், தானியமணிகளில் பிறக்கப்போகிற உன் குழந்தைகளுக்காகவும் பறவைகளுக்காகவும் சூதறியா மிருகங்களுக்காகவும் இலைகள் படரும் விருட்சங்களுக்குமாக உலகம் இனி வரும்.’\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47925825732844,"sku":null,"price":453.25,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/e4648335f1430e2a409e06e5d0965051.jpg?v=1783758062"},{"product_id":"நீர்வளரி","title":"நீர்வளரி","description":"\u003cp\u003e\u003cspan\u003eமால்பரோவில் இருந்து வெளியேறினாலும் பினாங்குக் காட்டுக்குத்தான் கொண்டுபோவார்கள். சாப்பிடச் சொன்னாள் கடிமிளை. ;பழையதாகிவிட்டது இவற்றை என்னால் உண்ண முடியாது என்றான். சிறையில் இருப்பவர் சினமடையவோ நடுங்கவோ கூடாது. நான் விரும்புவது காற்றை. இந்த ஜன்னலில் நல்ல காற்று வரும். இந்த மால்பரோ ஜன்னலில் எல்லா ஒலிகளுக்குள்ளும் பட்சிகளின் சிறு இதயம் இருக்கிறது. எல்லா உயிர்நிலைகளுக்குள்ளும் காத்திருக்கும் மரணம். இதுவே என்னை விடுதலைக்கு அழைத்து செல்லும். நான் கற்பாறையாக;இருக்கிறேன். பற்பல வடிவங்களாக இக்கல் வடிவடைந்து இருக்கிறது. சொற்களும் மனமும் திணைகளில் பொதிந்திருக்கிறது. ஆனால், அங்கு என்னால் போக முடியாது யதார்த்த வாதமும் கவித்துவமும் கூடிவரும் கோணங்கியின் புதிய சொல்மொழியில் புதிய நாவல் நீர்வளரியிலிருந்து.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47925831696620,"sku":null,"price":594.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/c3cf77fe24a5395099cd2493cfce9ce5.jpg?v=1783758230"},{"product_id":"பண்பாட்டு-மானிடவியல்","title":"பண்பாட்டு மானிடவியல்","description":"\u003cp\u003e\u003cspan\u003eமனித சமூகங்களில் காணப்படும் சமூக நடத்தைகளும் நெறிமுறைகளும் பண்பாடு என்று அழைக்கப்படுகிறது. நிகழ்வுகளில் வரம்பை உள்ளடக்கி இருக்கும் அது மனித சமூகங்களில் சமூக ரீதியான கற்றல் மூலம் பரவுகிறது. கலை, இசை, சடங்கு, சமயம், உடை, சமயல், தொழில்நுட்பங்கள், பயன்பாட்டுக் கருவிகள், குடியிருப்பு என பல்வேறு வடிவங்களில் தம்மை வெளிப்படுத்திக் கொள்கிறது. இந்த நூலில் பக்தவத்சல பாரதி மானிடவியலின் மையக்கருத்தாக இருக்கும் பண்பாட்டை அறிவியல் பூர்வமாக விளக்குவதற்கு முதலில் மானிடவியலின் தோற்றம் அதன் வளர்ச்சி, உட்பிரிவுகள், ஆய்வுமுறை பற்றி பேசுகிறார். பிறகு அனைத்து சமூகங்களிலும் காணப்படும் பண்பாட்டு பொதுமைகளைப் பற்றி விவரிக்கிறார். இதற்காகப் பண்பாடு தம்மை வெளிப்படுத்திக் கொள்ளும் பல்வேறு வடிவங்களை அதன் உட்கூறுகள், அமைப்பு, அணுகுமுறை, படிமலர்ச்சி, பரவல், மாற்றம், சமூக அமைப்புகள், குடும்பம், திருமணம், உறவுமுறை, தொன்மைப் பொருளாதாரம், சமயம், வழிபாடு, இளையோர் கூடங்கள், தொல்குடி அரசு முறைகள் என பல்வேறு தலைப்புகளைக் கொண்டு விவரிக்கிறார். இதன் மூலம் வாழ்க்கை முறையாகவும் வாழ்வுக்கான அர்த்த மாகவும் அமையும் பண்பாட்டை பற்றி அதிகம் தெரிந்துகொள்ள உதவுகிறது இந்த நூல்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47925842084076,"sku":null,"price":585.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/72fa5552c0d02355a367c09dc956ce41.jpg?v=1783758403"},{"product_id":"பண்பாட்டு-மானிடவியல்-மிகச்-சுருக்கமான-அறிமுகம்","title":"பண்பாட்டு மானிடவியல் மிகச் சுருக்கமான அறிமுகம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eதமிழுக்கு பக்தவத்சல பாரதி தந்த முதுசம் ‘பண்பாட்டு மானிடவியல்’. தமிழை அறிவியல் மொழியாக்கும் எங்கள் காலத்து முதன்மை அறிஞராக அவருக்குப் புகழையும், எங்களுக்குப் பண்பாடு தொடர்பான தெளிந்த ஞானத்தையும் வழங்குகிறது இந்நூல்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47925853094124,"sku":null,"price":225.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/990252a21bb215323dff7ffb6f20a134.jpg?v=1783758803"},{"product_id":"பண்டைத்-தமிழ்ப்-பண்பாடு-1","title":"பண்டைத் தமிழ்ப் பண்பாடு","description":"\u003cp\u003eபண்டைய தமிழர்களின் வாழ்வியல், மரபுகள், சமூக அமைப்பு, கலை, இலக்கியம், வழிபாட்டு முறைகள், வீரப் பண்பு மற்றும் பண்பாட்டு சிறப்புகளை சங்க இலக்கியங்களின் ஆதாரங்களுடன் விளக்கும் அரிய நூல். தமிழர் நாகரிகத்தின் தொன்மையையும் அதன் உயர்ந்த வாழ்வியல் விழுமியங்களையும் அறிய விரும்பும் அனைவருக்கும் இந்நூல் சிறந்த வழிகாட்டியாக அமைகிறது.\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47925872197868,"sku":null,"price":394.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/15b5ca128d70179396ec2033624ca3dc.jpg?v=1783759170"},{"product_id":"முரசுப்-பறையர்","title":"முரசுப் பறையர்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇந்தியச் சமூகம் சாதியச் சமூகமாகவும் சாதியப் பண்பாடாகவும் பரிணாமம் பெற்றிருக்கிறது. அது அரசியலாலும் பண்பாட்டாலும் தாழ்த்தப்பட்டோ உயர்வடைந்தோ வந்திருக்கின்றது. அதேசமயம் தமிழகம் ஒற்றையடுக்கு கொண்ட சாதியமைப்பை இடைக்காலத்தோடு இழந்து, தென்னிந்திய மக்களின் சவ்வூடு பரவலாகப் பல இனங்கள் சேர்மமான கதை ஈர்ப்புமிக்கது. தமிழ்ச் சாதிகள் மீது தெலுங்குச் சாதிகள்; அவற்றின் மீது கன்னடச் சாதிகள்; அவற்றின் மீது மலையாளச் சாதிகள் என ஒன்றின் மீது ஒன்றாகப் படிந்துகிடக்கின்றன. இத்தகைய பன்மையடுக்கு கொண்ட தமிழ்ச் சமூகத்தின் அசைவியக்கம் பற்றிய கண்திறப்பாக முரசுப் பறையர் நம் கைகளில் தவழ்கிறது. இந்த நூலில் முனைவர் தி. சுப்பிரமணியன் முரசுப் பறையர் என்னும் தலித்துகள் கர்நாடகத்திலிருந்து தமிழகம் வந்து எவ்வாறு குடியமர்ந்தார்கள் என்பதை வரலாறு, சமூகம், பண்பாடு எனும் மூன்று பொருள்களில் விவரிக்கிறார். இதை முரசு நாட்டினர் எல்லை எது என்பதில் தொடங்கி அவர்களின் தோற்றம், தொல்பழங்கால சமுதாய அமைப்பு, குலங்கள், வழக்காறுகள், தெய்வவழிபாடு, திருமணமுறை, பண்டிகைகள், சடங்குகள் போன்றவை குறித்துப் பல்வேறு தகவல்களை இனவரைவியல் நோக்கில் வழங்குகிறார். மேலும் தமிழகத்தில் வாழும் முரசுக் கொங்கரு, திகலரு, புட்ட ஒலையரு, ஒலையரு, முரசுப் பள்ளி, மக்கதூர் போன்ற ஏழு கன்னடம் பேசும் தலித்துகளைப் பற்றியும் இனவரைவியலாக நமக்குக் காட்சிப் படுத்துகிறார். இதற்காக தர்மபுரி, ஓசூர் பகுதிகளில் களப்பணி செய்தும் பண்டைய நடுகற்கள், கல்வெட்டுச் சான்றுகள், வரலாற்று ஏடுகள், நிகழ்கால இனவரைவியல் சான்றுகள் எனப் பன்முகப்பட்ட தரவுகளைக் கொண்டும் இந்தச் சமூக ஆவணம் எழுதப்பட்டிருக்கிறது. இதன்மூலம் தமிழ்ச் சூழலில் தலித் சொல்லாடலைப் புதிய பரிமாணத்தில் இந்த நூல் விரிவுபடுத்துகிறது. கூடவே, தமிழ்ச் சமூகத்தின் பன்மை அசைவியக்கத்தை இனவரைவியலாகப் பேசுகிறது. தமிழ்ச் சமூக வரலாற்றில் ஆர்வமுள்ள அனைவரும் வாசிக்க வேண்டிய நூல்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47925884387564,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/f48737aaf357da30a518aab209f169f5.jpg?v=1783758918"},{"product_id":"சிலுவைராஜ்-சரித்திரம்","title":"சிலுவைராஜ் சரித்திரம்","description":"\u003cp\u003eதமிழின் அபூர்வமானதொரு நாவல் ‘சிலுவைராஜ் சரித்திரம்.’ இந்த நாவலின் சொல்முறை, அதைக் கீழே வைக்க முடியாமல் தொடர்ந்து வாசித்துக்கொண்டே போகச் செய்கிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003eஏழ்மையாலும் வேலையின்மையாலும் சாதிய முரண்களாலும் குரூரமாகத் துவைத்தெடுக்கப்பட்ட ஒரு கதாபாத்திரம் சிலுவைராஜ். வலிகளாலும் அவமானங்களாலும் நிரம்பிய அவனது கதை, நம்மிடம் அசலான குரலில் மிக அன்யோன்யமாகக் கூறப்படுகிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003eவாழ்வின் எல்லா நிகழ்வுகளையும் சாதிய, தத்துவ, அரசியல் வரலாற்றுடன் இணைத்து எழுதப்படுவதால், ஐம்பதுகளுக்குப் பிறகான ஒரு காலகட்டம் முழுவதையும் நாவல் உறிஞ்சிக் கொள்கிறது. கிராமத்தில் விளையாட்டுத்தனமாக வளரும் சிறுவன் சிலுவை, மிலிட்டரி தந்தையிடம் அடி வாங்குகிறான். பள்ளியிலும் அடி. ராக்கம்மாப் பாட்டியின் கதைகள் அவனை அணைத்துக்கொள்கின்றன. பால்யத்திலிருந்து விரியும் நாவல் பின்னால் வரும் வாழ்வு முழுவதையும் அதே பால்யத்தின் வெகுளித்தனத்துடனும் மாசடையாத மனசாட்சியுடனும் பரிசீலிக்கிறது. பின்காலனிய முரண்பாடுகளும் இருத்தலியல் நெருக்கடிகளும் மிகத் தீவிரமான அகத் தர்க்கங்களில் இறங்கி பகடியாக வெடிக்கின்றன.\u003c\/p\u003e\n\u003cp\u003eஒடுக்கப்பட்ட மனிதர்களின் அலைக்கழிப்பை அனுபவங்களின் வழியாக எழுதிச் செல்வதன் மூலம் சிலுவை கூறுவதில் ஒரு தவறையும் காணமுடியவில்லை. சிலுவைராஜ் சாதாரண மனிதன் இல்லை; அவனது தேர்ந்த ரசனை, விரிந்த வாசிப்பு, தன்னெழுச்சியாய் எழும் கூர்மையான பார்வை, சதா துடிதுடிக்கும் மனசாட்சி போன்றவற்றால் நம் மனதில் ஆழப் பதிகிறான். இறுதியாக, ஒரு தேசத்தின் அதன் மனிதர்களின் அக வரலாறே நாவல் என்பது நிரூபணமாகிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e‘நிகழ்ந்தவையும் புனைந்தவையும் ஊடுகலந்த ஒரு யதார்த்தம். கூரிய அங்கதமே நாவல் முழுக்க சிலுவைராஜை நமக்கு அணுக்கமாக ஆக்குகிறது. தமிழிலக்கியத்தின் முதன்மையான இலக்கியப் படைப்புகள் சிலவற்றில் சிலுவைராஜ் சரித்திரமும் ஒன்று.’\u003c\/p\u003e\n\u003cp\u003e- ஜெயமோகன்\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47925893529836,"sku":null,"price":507.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/6f037910d8f01db8dc91e42896955fcc.jpg?v=1783759455"},{"product_id":"த","title":"த","description":"\u003cp\u003eசொல்கதை, நிகழ்கதை, படிமக்தை, வரலாற்றுக் கதை , கதையில் மூழ்கும் கோணங்கியின் அதிகதைகளாலான நாவல்- ஆயிரம் பக்கங்களில், நேர்த்திமிகு அச்சில்.\u003c\/p\u003e\n\u003cp\u003eத நாவலைத் திறக்கிறீர்கள். பென்சில் கோடுகளால் புனைவு உடலை வரைந்து அதன் குறுக்குவெட்டுப் பாதைகளில் பயணிக்கிறீர்கள். நிச்சலனமான வாசிப்புக்குத் தயாராகிறீர்கள். எழுதுதல்தான் நாவல். மொழிக்கு வெளியில் த நாவல் இல்லை. எனவேதான் த நாவலின் மொழிப்பரப்பில் இன்றைய நவீன வாசகனாக நாவலின் பதினாறு காற்றுகளை சுவாசிக்கிறீர்கள். உங்களுக்கு இப்போது தெரிந்துவிடும் பிரதியும் ஒரு புனைவுதான் என்று. புனைவின் மூலகங்களை கனவுகளாகவும் அடைந்துள்ளது த நாவல். எதிர் நாவலுக்கான காகிதங்களும் அடித்துத் திருத்திய கச்சாவான குறிப்புகளும் வாசகனின் புனைவுக்கான பிறை வடிவ நுழைவு வாயில்களாக உள்ளன.\u003c\/p\u003e\n\u003cp\u003eஒவ்வொரு பிறையும் வட்டமான ஏரியில் வீழ்ந்ததும் பக்கத்தை திருப்புகிறீர்கள். அசைவற்ற நீர் மைய அலைகளில் வாசிப்பு தொடர்கிறது. த நாவலின் பக்கங்களுக்கு வெளிப்புறம் உள்ளே புரளும் காகித அடுக்கில் பார்வைத்தளம் உள்ளது. நாவலின் மையம் எப்போதும் த-க்களின் நூலாக உட்பரப்பினுள் மீன்கள் நீரேற்றத்தில் தவழ்ந்து உள்படர்கின்றன. உலகின் நீராகவும் நாவலின் அலையடுக்கில் கடந்து ஏறும் மீனாகிறீர்கள்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஅடிப்படையற்ற இருப்பில் விடுதியின் விளக்கொளியில் நாவல்களாக மாறும் நாவலாக எழுதப்பட்ட கோடுகளில் நுழைந்து வரும் கதாபாத்திரங்கள் பிரதான இடத்துக்கு வருகிறார்கள். இவர்கள்தான் நிராகரிக்கப்பட்ட கதாப்பாத்திரங்கள். தனுஷ்கோடி ஓவியத்திலிருந்து விரல்களை எடுக்கமுடியாது என்னால். முதலில் அபூர்வமானதாகவும் பிறகு உப்பு விடுதியின் தனிமையாகவும் உப்புக்காற்று நூலகத்தில் இசை மாறு உண்டாவதை கானல் வரிகளில் காண்கிறீர்கள். நாவல் இயற்றும் மூத்தமொழியின் பாய்மரத்தில் வாசித்தவாறு கமாரா வாசிகளைச் சந்திக்கிறீர்கள்.\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47925902311660,"sku":null,"price":684.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/67bc0e351e5362700382a06285a52a92.jpg?v=1783760156"},{"product_id":"வார்ஸாவில்-ஒரு-கடவுள்","title":"வார்ஸாவில் ஒரு கடவுள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eவார்ஸா நகரின் சரித்திர நிழலில் அலையும் ஒரு தமிழனின் பார்வையினூடாக, பலரின் கதைகள் வருகின்றன. ஒரு கதையைக் குறுக்கும் நெடுக்குமாகப் பல கதைகளாய் பின்னும் சந்திரன், யுத்தம் தோய்ந்த பர்மாவிலிருந்து கோவைக்கு வந்தவர்களின் ஞாபகத்தோடு வாழ்கிறான். கிழக்கு, மேற்கு எனும் உலக முரண்களின் சங்கமமாய் வெளிப்படுகிறான். இரண்டாம் உலகப்போர் இடிபாடுகளையும் பெண்ணுடல் மீதான எண்ணங்களையும் சிந்தனையில் கொண்டு அலைகிறான். சரித்திரம் வழங்கிய மனநோயைச் சுமக்கும் நகரத்தில் தமிழ்க்கதையை ஐரோப்பியர் அனைவரும் வாசிக்கும்படி கூறுகிறான். இதற்கிடையில் ஒரு அரசியல்வாதி தோன்றி ஆதிவாசிகளின் லாட்ஜ் ஒன்றிலிருந்து பறந்துபோகிறான். பஞ்சாப், இலங்கை, ஆப்பிரிக்கா என நாடுகளைத் தாண்டும் ஒருவன் மின்சாரம் பாய்ச்சப்பட்டு இறந்தும்போகின்றான். சுற்றிச்சுழலும் கதையில் சந்திரனும் கடவுள் பேசுவதைக்கேட்கும் சிவநேசமும் எதார்த்தத்தையும் மாயத்தையும் கொண்டுவருகின்றனர். அகப்பயணம், சிறைவாழ்க்கை, வானத்தில் தோன்றும் மலர், நடந்தபடி பேசும் கடிகாரம் என பல நிகழ்வுகள் இந்நாவலில் குறிப்புகளாகின்றன. குடும்பம் வடிவம் இழக்கிறது. கிழக்கத்திய நாகரிகத்தின் பிரதிபலிப்பாய் மேற்கத்தியம் ஆகிறது. எதையோ இழந்தும் ஆன்மீகம் மேலுருவாகவும் ஒன்றைப் பற்றுவதற்கான நம்பிக்கையின்றியும் அனைத்தும் தேடல்கொண்டு அலைகின்றன. கடைசியாக ஒரு ரயில்வே நிலையத்தில் எங்குப் போவதெனத் தெரியாமல் ஸ்தம்பித்து நிற்கிறான் நாவலின் மையப்பாத்திரம். இதனால்தான் இந்நாவலுக்கு கனடா இலக்கியத்தோட்டமும் சிறந்த மொழிபெயர்ப்பு நாவலென கர்நாடக அரசும் விருதுகளை வழங்கியிருக்கின்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47925902508268,"sku":null,"price":366.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/127cffaa673040310953f779a2b8418f.jpg?v=1783759982"},{"product_id":"தமிழக-நாடார்கள்","title":"தமிழக நாடார்கள்","description":"\u003cp\u003eஒடுக்கப்பட்ட ஒரு சமுதாயம் அரசியல் பண்பாட்டால் எவ்வாறு முன்னேற்றமடைந்திருக்கிறது என்பதைக் கொள்ள உதவும் புத்தகம்.\u003c\/p\u003e\n\u003cp\u003eதென்னிந்தியாவில் உள்ள பல்வேறு சமுதாயங்களில், கடந்த இருநூறு ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றத்தின் தாக்கத்தைத் தெளிவாகச் சான்றுரைப்பவர்கள் நாடார்கள்தான் எனலாம்.\u003c\/p\u003e\n\u003cp\u003eபத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உயர்சாதி இந்துக்களால் மிகக் கீழான வகுப்பினராக - கள்ளிறக்குபவர்களாகவும் பனையேறிகளாகவும் கருதப்பட்ட நாடார்கள், மிகக் கடுமையான சமூக இயலாமைகளால் துன்பம் அனுபவித்தவர்கள். தமிழ்நாட்டில் மிக மோசமான ஒடுக்குதல்களுக்கு உட்பட்டிருந்த சமுதாயங்களில் தாங்களும் ஒன்றாக இருந்தார்கள்.\u003c\/p\u003e\n\u003cp\u003eகடந்த ஒன்றரை நூற்றாண்டாக நிகழ்ந்த சமூக, பொருளாதார மாற்றத்திற்கு நுண்ணுணர்வுடன் எதிர்வினை ஆற்றுபவர்களாக இருந்ததால், நாடார்கள் இன்று பொருளாதாரத்துறை அரசியல்துறை இரண்டிலும் தெற்கில் மிக வெற்றிபெற்ற குழுவினராகவும், தங்கள் முயற்சியாலும் சாதனையாலும் மரியாதையைப் பெறுகின்றவர்களாகவும் உள்ளனர். அவர்களது இனத்திலிருந்து வணிக முன்னோடிகள், தொழிலதிபர்கள், வாழ்க்கைத்தொழில் செய்வோர் பலர் தோன்றியுள்ளனர். அரசியலில், அவர்களின் திறன்மிக்க வழித்தோன்றலான காமராஜர், தமிழக முதலமைச்சராகவும் அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்து தமது இனத்திற்குப் புகழளித்துள்ளார்.\u003c\/p\u003e\n\u003cp\u003eநாடார்களுக்கு ஒரு கொந்தளிப்பு மிக்க, வண்ணமயமான வரலாறு இருக்கிறது. அந்தச் சாதிக்கும் அதன் எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் தொடர்ச்சியாக அதிகரித்து வந்த மோதல்களின் ஊடாக, ஒடுக்கப்பட்ட நிலைமையிலிருந்து தாங்கள் உயர்வதற்காகச் செய்த போராட்டம் கதைப் பாங்கான வடிவங்களை ஏற்றது.\u003c\/p\u003e\n\u003cp\u003eதோள்சீலைப் போராட்டம் முதலாக, சிவகாசிக் கொள்ளை ஊடாக, நாடார் மகாஜன சங்கம் வரை, இந்தியச் சமூகத்தின் அணி-திரட்டல் செயல்முறையை எடுத்துக்காட்டும் நாடார்களின் எழுச்சி, மாற்றம் பெறும் ஒரு சமுதாயத்தின் அரசியல் வாழ்க்கையைப் பகுப்பாய்வு செய்ய வளமான பொருண்மையை அளிக்கிறது.\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47925918597356,"sku":null,"price":517.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/d25d9c46cfa56b12eaf0624d108c19ff.jpg?v=1783760747"},{"product_id":"மானிடவியல்-கோட்பாடுகள்","title":"மானிடவியல் கோட்பாடுகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003e“காலனியத்தின் குழந்தை மானிடவியல். இது உணர்வு சார்ந்த கூற்றல்ல; மூன்றாம் உலக நாட்டைச் சேர்ந்த மானிடவியலன் என்பதாலுமல்ல. இது வரலாற்றின் வரலாறாகும்” என்றவாறு இந்த நூலின் முன்னுரையே கருத்துச் செறிவின் முழுவீச்சோடு தொடங்குகிறது. பலதுறை இணைவுப் போக்குடைய இன்றைய தமிழ்ப் புலமை வீச்சில் கோட்பாடு மையமிட்ட சொல்லாடல்கள் மேலும் செழுமைப் படுவதற்கு இந்நூல் ஒரு திறவுகோல் என்று பதிப்புரையில் மகரந்தன் மொழிவது மிகவும் சரி.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47925930557676,"sku":null,"price":488.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/2010368003d85a031a018a09a3ca1ece.jpg?v=1783760860"},{"product_id":"கிராம-ஊராட்சி-அரசாங்கம்","title":"கிராம ஊராட்சி அரசாங்கம்","description":"\u003cp\u003eகிராமிய மேம்பாடு நிபுணத்துவம் மிக்க பணி. இதைச் செய்வதற்குக் கிராம மக்களுக்கு விழிப்புணர்வும் மக்கள் பிரதிநிதிகளுக்கு நிபுணத்துவமும் வேண்டும்.\u003c\/p\u003e\n\u003cp\u003eக. பழனித்துரை எழுதியிருக்கும் இந்த நூல், ஒரு கிராம ஊராட்சி அரசாங்கம் எப்படி நிருவகிக்கப்பட வேண்டும் என்பதற்கு வழிகாட்டும் ஓர் அரிய கையேடு.\u003c\/p\u003e\n\u003cp\u003eஉள்ளாட்சியின் அடிப்படைத் தத்துவங்களையும் இன்றைய கிராம வாழ்க்கையை எவ்வாறு மேம்படுத்தலாம், தமிழ்நாட்டின் ஊரக உள்ளாட்சிச் சட்டத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரங்களை எப்படிப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் போன்றவற்றையும் இந்தக் கையேட்டின் முதல் இரண்டு பகுதிகள் விவரிக்கின்றன.\u003c\/p\u003e\n\u003cp\u003eகிராம ஊராட்சி செயல்படும் போது மக்களைப் பொறுப்புமிக்க குடிமக்களாக மாற்றி, அவர்களை ஆளுகையிலும் மேம்பாட்டுப் பணிகளிலும் பங்கேற்க வைப்பதன் மூலம், ஒரு கிராம மேம்பாட்டுக்கான மக்கள் இயக்கமாக மாற்றுவது குறித்து மூன்றாவது பகுதி பேசுகிறது. இதில் மிக முக்கியமானது கிராமங்களைத் தற்சார்பும் தன்னாட்சியும் உடையதாக எவ்வாறு உருவாக்கலாம் என்பதை விளக்கியுள்ளதுதான்; இன்றைய சூழலில் செலவில்லாப் பணிகள் பல செய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதையும் விவரிப்பது ஆர்வமூட்டுவதாய் இருக்கின்றது. இவை அனைத்தும் தலைவரால் மட்டும் செய்யப்படுவதல்ல, மக்களின் பங்களிப்போடு எப்படிச் செய்ய வேண்டும் என்பதையும் நூலாசிரியர் தெளிவாக விளக்குகிறார்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஇந்த மாதிரியான விளக்கக் கையேடு இந்தியாவில் எந்த மாநிலத்திலும் உருவாக்கப்படவில்லை. இப்படி ஒரு கையேட்டை உள்ளாட்சித் தலைவர்களுக்கு மட்டுமல்ல, கிராம மேம்பாட்டில் ஆர்வமுள்ள அனைவருக்கும் பயன்படும் வகையில் எழுதியிருப்பது பாராட்டத்தக்கது.\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47925944844524,"sku":null,"price":564.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/1c95c11ccdbce35a1e91b5da32e0fbbf.jpg?v=1783760856"},{"product_id":"சிவப்புச்-சந்தை","title":"சிவப்புச் சந்தை","description":"\u003cp\u003e\u003cspan\u003eஉலகளாவிய உடல் வணிகத்துக்குள் அதை இயங்கச் செய்யும் பொருளாதாரம் குறித்த ஆழ்ந்த புரிதலுடன் பரபரப்பூட்டும் ஒரு துணிச்சலான பயணம். மனித உடல் பகுதிகளுக்கான மாற்றுக்கு இருக்கும் தணிக்கும் முடியாத நமது தேவை, அவற்றை நாம் பெறுவதற்குப் பயன்படுத்தும் மர்மமான, பெரும்பாலும் மனஅமைதியைக் குலைக்கும் வழிகள் ஆகிய இரண்டையும் ஸ்காட் கார்னி புலனாய்வு செய்கிறார். -- கிறிஸ் ஆண்டர்சன், 'த லாங்டெய்ல்' நூலின் ஆசிரியர்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47925945696492,"sku":null,"price":282.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/92e438d25545c0f97f41af2bfc8c8a3c.jpg?v=1783761201"},{"product_id":"பிதிரா","title":"பிதிரா","description":"\u003cp\u003e\u003cspan\u003eசொற்களில் தங்கியிராத கோணங்கியின் அதிகதை நாவல் பிதிராவின் நத்தைவடிவம் சுருள்வடிவங்களால் உருவாகியிருந்தன. மோனமாய் திறக்கும் சிருஷ்டிகணம். மலரும் பழக்கத்தை உடலாகக் கொண்ட குற்றவாளிகள் பூவின் கவலை கொள்ளக்கூடும். குளிரால் மரங்களுடன் மௌனமாய் இருக்கிறார்கள் பிதிராவாசிகள். இந்த இரவின் குளிரில் வீடற்றவர்களின் வெளியில் மெல்ல நிலவு தூங்கிக் கொள்கிறது. புனைவுகள் நடமாடும் சோக இழை. கோகின் கலைந்த வெள்ளையுடல் காலனியக் கோரத்துடன் கடலில் கிடந்தது. நிலவு மயங்கினால் உயிர்பெறக்கூடிய பிதிராவின் சாமகால தறிகள் ஊர் உருவத்தை வேறொன்றாக நெய்து காட்டும். ஓசையில் நகர்ந்து கொண்டே இருக்கும் சுண்ணாம்பு ஊரின் நீர்ச்சுனை அடியில் உவர்மகள் இலந்த்ரா விரல் வைத்துத் துயில்கிறாள் மண்குடத்துடன். பாறையின் நிழலில் குளிர்ந்த எறும்பு மண் புற்றில் மேலே, கீழே ஓடும் பிதிராவின் கால்களின் ஒளிர்வு. பிதிரா ஒரு கதாபீடிகை. ஆலமரத்தடியில் பிதிரா வாசித்தால் ஒவ்வொரு பிரதியில் ஒளிந்திருக்கும் குணங்களைப் பொறுத்து நிழல்கள் மாறுபடும். அவரவர் சிற்பிக்க உளிகளால் குடைந்து செதுக்கி செதுக்கி இருட்டும் வெளிச்சமும் பாய்ச்சி இப்பிரதியில் புதைந்து கிடக்கும் பிதிராவை திறப்பதற்குமுன் கல்வாசல் வழி நுழைவதற்குள், வேறு சிலர் வேறுபடும் உருவத்தில் திறந்துவிடப் போகிறார்கள். வாசனை தரும் ஒளி வீசியது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47925951889644,"sku":null,"price":404.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/2ff82c69f3caf317078d0d2379c10d2a.png?v=1783761355"},{"product_id":"எங்கள்-ஊரில்-எங்கள்-வாழ்க்கை","title":"எங்கள் ஊரில் எங்கள் வாழ்க்கை","description":"\u003cp\u003e\u003cspan\u003eமானிடவியலாளர் பக்தவத்சலபாரதி தொகுத்திருக்கும் இந்த நூலில் தமிழகம், ஈழம், அயலகம் வழியாகப் புகழ்பெற்ற 54 பண்பாட்டு ஆளுமைகள் தங்களுடைய கிராம நினைவுகளை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்கள்.அவற்றில் சமூக வாழ்க்கை, சாதிக்கட்டுமானம், உறவுமுறை, குடும்பம், வாழ்வாதாரம், சடங்கு, வழிபாடு, உணவு, கலைகள், போர், புலப்பெயர்வு எனத் தமிழர்களின் கிராமிய வாழ்வு அங்குலம் அங்குலமாக விரிவடைந்து நமக்குச் சிலிர்ப்பைத் தருகின்றன - ஏன், நம்மை வியப்பிலும் ஆழ்த்துகின்றன.இதன் மூலம் தமிழர் வாழ்வின் தொன்மை, தொடர்ச்சி, மாற்றம் ஆகியவற்றை நாம் தெரிந்துகொள்ள உதவுகிறது இந்த நூல்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47925952774380,"sku":null,"price":864.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ceca0cb21b1dd29e0351d5075f82f05b.png?v=1783761479"},{"product_id":"கிராமத்துச்-சித்திரங்கள்","title":"கிராமத்துச் சித்திரங்கள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eகிராமங்கள் என்பது துரட்டிக் கம்புடன் ஆட்டு மந்தையை ஓட்டிச் செல்வது, பள்ளிக்கூட மணியடித்தவுடன் சிறுவர்கள் கூட்டமாக ஓடிச்சென்று மூத்திரம் பெய்வது போன்ற காட்சிகளில் அல்ல; அசல் கிராமங்களை அதுவும் அறுபது எழுபது வருடங்களுக்கு முன் உள்ள இந்தத் தலைமுறை அறியாத கிராமச் சித்திரங்களை வெகு அற்புதமாக இந்த நூலில் காட்சிப்படுத்தியிருக்கிறார் சோ. தர்மன். இதிலுள்ள கட்டுரைகளை ஒரு சிறுகதையைப் போல வாசிக்கலாம்; தொடர்ந்து நாவலைப் போலும் வாசிக்கலாம். நம்முன் இருக்கும் நாம் பார்க்காத, கேட்காத சம்பவங்கள் ஒரு புதிய திறப்பை நமக்குக் காட்டுகின்றன. எத்தனை விதமான கலாச்சாரச் சடங்குகள், எத்தனை விதமான வாழ்வியல், எளிய மருத்துவ முறைகள், நாம் அறியாத பறவைகள், செடிகள், கொடிகள், நாடி வரும் நாடோடிக் கூட்டங்கள், கிராமத்துச் சனங்களிடம் குடிகொண்டிருந்த வாழ்வியல் அறங்கள் போன்றவற்றின் மூலம் வாசிக்க வாசிக்க நம்மைப் புதிய ஓர் இடத்திற்கு அழைத்துச் சென்று, வியப்படைய வைப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார் சோ. தர்மன். கிராமத்தை எழுதுவது என்பது கிராமத்தின் அன்றாடங்களை எழுதுவது அல்ல; மாறாகக் கிராமத்தின் அகத்தையும் கிராம மக்களின் ஆன்மாவையும் எழுதுவது. ஊடகங்கள் காட்டும் கிராமம் கண்களோடு மட்டுமே தொடர்புடையது, ஆனால் இலக்கியவாதியும் சம்சாரியுமான சோ. தர்மன் காட்டும் கிராமம் கண்களுக்கு அப்பால் ஊடுருவி, அகத்தைத் தொடுவது மட்டுமல்லாமல், நம்மை வியப்படையவும் வைக்கிறது. இந்தக் 'கிராமத்துச் சித்திரங்கள்' நூலை வாசித்த பிறகு நீங்கள் பார்த்த, பார்க்கப் போகிற கிராமங்களை வேறு கோணத்தில் காண்பீர்கள் என்பது நிச்சயம். சோ. தர்மன் அதைச் சாத்தியப்படுத்தியிருக்கிறார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47925969486060,"sku":null,"price":329.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/9d874ff1fa0e80c39c6b60bf4fb9f775.jpg?v=1783761523"},{"product_id":"பொருட்களின்-கதை","title":"பொருட்களின் கதை","description":"\u003cp\u003e\u003cspan\u003eபீவிசி முற்றிலும் பாதிப்பில்லாத பொருளென நினைக்கிறீர்களா? மைக்ரோசிப்புகள்தாம் தொழில்நுட்பம் பற்றிய அனைத்துமா? அல்லது ஒரு டீசர்ட்டின் விலை அதன் உண்மையான அடக்கவிலையைப் பிரதிப்பலிக்கிறதா? மீண்டும் சிந்தியுங்கள். ஆனி லியோனார்டு குப்பைக் குழிகளின் மீது பித்துப் பிடித்தவர். “த ஸ்டோரி ஆஃப் ஸ்டஃப்” என்னும் பரப்பரபூட்டும் இணையதளப் படத்தை உருவாக்கியவர். இன்றைய உலகத்தின் முன்னிருக்கும் பெரும் பிரச்சினைகளுக்கு அவரது ஒரே விளக்கம்: நமது வாழ்வில் பொருட்கள் ‘ மிகவும் அதிகமாக’ இருக்கின்றன என்பதுதான். அதிர்ச்சியூட்டும் இந்த நூலில் லியோனார்டு நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் எல்லாப் ‘பொருட்களின்' கதையையும் கூறுகிறார் – பாட்டில்களில் அடைக்கப்பட்ட தண்ணீர், கைப்பேசிகள், ஜீன்ஸ் துணி, புத்தகங்கள், பூச்சிக்கொல்லிகள், அழகுசாதனப் பொருட்கள் போன்றவை எங்கிருந்து வருகின்றன, எவ்வாறு தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன, வீசியெறியப்படும்போது அவை உண்மையில் எங்கே சென்றடைகின்றன? நமது ‘பொருள்சார் பொருளாதாரம்’ வழியாக நாம் செய்யும் சாகச சவாரியில் நம் வாழ்வு நாசமாவதையும் புவிக்கோளின் அழிவிற்கான கட்டுப்பாடில்லா நுகர்வுப் பழக்கங்களையும் லியோனார்டு விவரித்துக் காடுகிறார். இந்தப்புத்தகத்தில் பேசப்படும் புரட்சிகரமான எளிய கோட்பாடு உங்கள் வாழ்க்கையை நிரந்திரமாக மாற்றும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47925978169580,"sku":null,"price":470.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/626838e902243559ce9f91382c62c66f.jpg?v=1783761786"},{"product_id":"பெருமூச்சு-பின்னால்-சொன்ன-கதைகள்","title":"பெருமூச்சு - பின்னால் சொன்ன கதைகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eசோ. தர்மன் சிறுகதைகளின் முழுத் தொகுப்பு ‘நீர்ப்பழி’ வெளியாகி, பின்னால் எழுதப்பட்ட கதைகளாகப் ‘பெருமூச்சு’ உருவாகியிருக்கிறது. இதிலுள்ள கதைகளின் தானியத்துக்குள் நழுவி மறைந்த பாம்படம் திரும்பிவந்து கதை போடத் துவங்கிவிட்டது - பாட்டியின் குரல் வளையில். பாட்டியின் சுருக்கம் விழுந்த கோடுகள் பட்ட முகத்துக்குள், கவனமாகச் சென்று அவளுடைய முகத்தை வாசிப்போமானால், மறைந்திருக்கும் கரிசல் வெளியின் நிலத் தோற்றங்களைப் பன்முகக் கதைகளினூடாக நிலங்களின் வாசனைகளோடு காண்பீர்கள். சோ. தர்மனின் கதைகளில் கிளிகள் கொஞ்சும் மரத்தின் பச்சை சரீரம் நிலவில் படர்ந்து அலைய, எல்லா உயிரினங்களும் பிறந்துகொண்டே இருக்கின்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47926004744428,"sku":null,"price":131.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/aa494da6edf29f02e6f4778a7a37a541.jpg?v=1783762171"},{"product_id":"தமிழகத்-தொல்குடிகள்","title":"தமிழகத் தொல்குடிகள்","description":"\u003cp\u003eநமது ஆதி முன்னோர்களே தொல்குடிகள். அவர்களின் வாழ்வும் வரலாறும் நமது அடையாளங்களின் உருமாற்றங்களைத் தெரிந்துகொள்ள உதவுகின்றன.\u003c\/p\u003e\n\u003cp\u003eஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்னர் எட்கர் தர்ஸ்டனும் காதம்பி ரங்காச்சாரியும் தென்னிந்தியச் சாதிகளையும் குடிகளையும் பற்றிய விவரங்களைத் தொகுத்தனர். அவற்றில் வரும் தமிழகத் தொல்குடிகளை இந்த நூலில் தொகுத்து, செம்மைப்படுத்தியிருக்கிறார் மானிடவியலாளர் பக்தவத்சல பாரதி.\u003c\/p\u003e\n\u003cp\u003eஇந்தத் தொகுப்பில் அடியான்,தோடர், குறும்பர், முதுவர் போன்ற 24 தொல்குடிகள் பற்றிய செய்திகள் தனித்தனி இயல்களில் ஆவணப்படம் போல காட்சிப்படுத்தப்படுகின்றன.\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47926352904428,"sku":null,"price":300.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/TAMILAGATHOLKUDIGAL.jpg?v=1783763410"},{"product_id":"ஆடுகளம்","title":"ஆடுகளம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eகலையம்சமும் ஜனரஞ்சகத் தன்மையும் அற்புதமாகக் கூடி முயங்கிய வெற்றித் திரைப்படம் ஆடுகளம். இத்திரைப்படம் எடுக்கப்படுவதற்காக இயக்குநர் வெற்றிமாறனால் எழுதப்பட்ட திரைக்கதையின் புத்தக வடிவம் இது. ஒரு சிறந்த திரைப்படப் படைப்பாளியின் பார்வையிலிருந்து திரைப்பட மொழியில் உருவான திரைக்கதை. ஒரு திரைக்கதை எவ்வளவு நேர்த்தியாகவும் உருவாக்கப்பட்டிருந்தாலும், அதன் களத்தில் காட்சிப்படுத்தப்படும் போது சில மாற்றங்களுக்கு உள்ளாவது தவிர்க்க முடியாதது. மனதில் கருவும் உருவும் கொண்ட கதை உலகம், களத்தில் வடிவம் பெறும்போது, களத்தின் சாதக பாதங்களுக்கேற்ப சில மற்றங்களுக்கு உள்ளாகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47926545711340,"sku":null,"price":329.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/AADUKALAM.jpg?v=1783764077"},{"product_id":"நாகரிகங்களின்-மோதல்","title":"நாகரிகங்களின் மோதல்","description":"\u003cp\u003e\u003cspan\u003eசர்வதேச உறவுகள் பற்றிய ஒரு செவ்வியல் ஆராய்ச்சி நூலான இது, போர்ச் சூழலை உருவாக்குகிற உலக அரசியலை இயக்கும் சக்திகளைப் பற்றிய ஒரு தொலைநோக்குள்ள, வலிமைவாய்ந்த பகுப்பாய்வு. *** உலகின் மிகவும் செல்வாக்குள்ள சிந்தனையாளரான சாமுவேல் பி. ஹண்டிங்டன், வெவ்வேறான பண்பாட்டு ‘நாகரிகங்க’ளிடையிலான மோதல்கள்தான் உலக அமைதிக்கு மிகப் பெரிய அபாயம் என்று முன்னறிவிப்புமிக்க இந்த நூலில் வாதிடுகிறார். சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு முதன்முதலாக இந்த நூல் வெளியிடப்பட்டது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47926705914092,"sku":null,"price":507.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NAAGARIGANGALIN.jpg?v=1783764468"},{"product_id":"தமிழகத்தில்-நாடோடிகள்","title":"தமிழகத்தில் நாடோடிகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eசங்ககாலத்தில் பதினெட்டுக்கும் மேற்பட்ட பாண் சமூகத்தினர் ஐந்திணைகளிலும் சுற்றித் திரிந்து கலைச்சேவை செய்தார்கள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47926869491948,"sku":null,"price":357.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/TAMILAGATHIN.jpg?v=1783765023"},{"product_id":"தலித்-அரசியல்","title":"தலித் அரசியல்","description":"\u003cp\u003e\u003cspan\u003eசென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் சோவியத் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் உருவாகியிருந்த மாற்றுப் பொருளாதாரம் சார்ந்த அமைப்புகளின் வீழ்ச்சிக்குப் பிறகு உருவான உலக அரசியல்-பொருளாதார மாற்றங்களில் ஒன்று அடையாள அரசியல். இனி அரசியல் என்பது பண்பாட்டின் அடிப்படையில்தான் அமையும் என சாமுவேல் ஹட்டிங்டன் போன்றோர் முழங்கும் நிலை ஏற்பட்டது. சாதி மற்றும் தீண்டாமைக் கொடுமைகளின் களமாக இருந்த இந்தியத் துணைக் கண்டத்தில் அது தலித் அரசியலாக வடிவு பெற்றது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47926924869868,"sku":null,"price":465.3,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/THALITH.jpg?v=1783765414"},{"product_id":"இலக்கிய-மானிடவியல்","title":"இலக்கிய மானிடவியல்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஉலகமயம், தாராளமயம் போன்ற போக்குகளால் முதலாளித்துவமும் நுகர்வுப் பண்பாடும் அசுரத்தனம் பெற்றுள்ளன. இதனால் தேசம், இனம், மொழி, பண்பாடு போன்றவற்றின் தனித்தன்மைகளும் அழித்தொழிக்கப்படும் நெருக்கடிகள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. இதிலிருந்து மீள்வது எப்படி? நமக்கான அடையாளமும் மீட்டுருவாக்க நெறியும் தேவைப்படும் இந்நேரத்தில் இவையிரண்டின் இணைவாக இலக்கிய மானிடவியல் அமைகிறது. \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47926959538412,"sku":null,"price":338.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ILAKEYAMAANIDAVEYA.jpg?v=1783765621"},{"product_id":"புத்துயிர்ப்பு","title":"புத்துயிர்ப்பு","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇது டால்ஸ்டாயின் பத்தாண்டு காலக் கடின உழைப்பு மூலம் 1899-ல் ருஷ்ய மொழியில் வெளிவந்த நாவல். பின்னர் படிப்படியாக உலக மொழிகள் பலவற்றிலும் மொழிபெயர்க்கப்பட்டது. முதல்முறையாக 1979-ல் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டு மாஸ்கோ பதிப்பகம் வெளியிட்டது. டால்ஸ்டாயின் மற்ற நாவல்களுக்கும் புத்துயிர்ப்பு நாவலுக்கும் இடையே பெரிய வேறுபாடு உண்டு. இது ஒரு உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில், பல ஆண்டுகள் (1889-1899) உழைப்பைச் செலுத்தி, பாடுபட்டு பல்வேறு தேடல்களுக்கும் தயக்கங்களுக்கும் பரிசீலனைக்கும் பின் எழுதப்பட்ட நாவல். \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47926999285996,"sku":null,"price":498.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PUTHUERPPU.jpg?v=1783765871"},{"product_id":"என்-நினைவில்-சே","title":"என் நினைவில் சே","description":"\u003cp\u003e தங்களுடைய அற்புதமான காதலை, கியூபப் புரட்சிப் போரின்போது ஒரே குழுவைச் சேர்ந்த கொரில்லாக்களாக முதன்முதலாகச் சந்தித்துக் கொண்ட நாட்களில் தொடங்கி பத்து ஆண்டுகள் பூர்த்தியடையாத ஒரு காலகட்டத்தில் பொலிவியாவில் சே படுகொலை செய்யப்பட்டதைக் கேள்வியுற்ற துயரமான கணம் வரை அவர்கள் இணைந்து நடத்திய வாழ்க்கையினூடாக அவர் வவரிக்கிறார்.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cb\u003eமாபெரும் வரலாற்று நாயகனின் காதல் வாழ்க்கை.\u003c\/b\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47927120298220,"sku":null,"price":282.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NAMNINAIVILSHO.jpg?v=1783766483"},{"product_id":"தமிழகப்-பழங்குடிகள்","title":"தமிழகப் பழங்குடிகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eதொன்மைக்கும் நாகரிகத்துக்கும் என்ன தொடர்பு? உலகம் குழந்தையாய் இருந்த போது தோன்றிய பழங்குடி மக்கள் இதை அறிய உதவுகிறார்கள். இந்த நூல், பழங்குடியினர் பற்றிய வரையறையில் தொடங்கி அவர்களின் அடையாளச் சிக்கல்கள், சமூக வாழ்க்கை, நம்பிக்கைகள், சடங்குகள் போன்ற பல்வேறு தலைப்புகளில் மானிடவியல் நோக்கில் விவாதிக்கிறது. இதன் மூலம் தமிழகத்தில் வாழும் தொதவர், இருளர், முதுவர், பளியர், குறும்பர் உள்ளிட்ட 37 பழங்குடிகள் மீது புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறார் பக்தவத்சல பாரதி.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47927175643372,"sku":null,"price":451.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/TAMILA.jpg?v=1783766908"},{"product_id":"நமது-ஊர்-நமது-பொறுப்பு","title":"நமது ஊர் நமது பொறுப்பு","description":"\u003cp\u003e‘மக்களைப் பொறுப்பேற்க வைத்தால் மட்டுமே எந்த முன்னேற்றத்தையும் சமூகத்தில் கொண்டுவர முடியும்’ என்கிறது பங்கேற்புக் கோட்பாடு.\u003c\/p\u003e\n\u003cp\u003eஇந்தியா விடுதலை அடைந்தவுடன் அறிமுகமான சமூக மேம்பாட்டு (கம்யூனிட்டி டெவலப்மெண்ட்) திட்டம் முதல், மக்களின் பங்கேற்பை ஊக்குவிக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் அவற்றிலெல்லாம் மக்களின் பங்கேற்பு அதிகமாக இல்லை என்றாலும், ஆய்வுகள் காட்டுகின்றன அதிகாரமும் பங்கேற்பும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்று.\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47927189209324,"sku":null,"price":206.8,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NAMATHUOOR.jpg?v=1783767433"},{"product_id":"தூர்வை","title":"தூர்வை","description":"\u003cp\u003e\u003cspan\u003e'தூர்வை, அதிகம் அலட்டிக் கொள்ளாமல் எழும் ஒரு மாற்றுக் குரல், திர்ப்புக் குரல்... தானறிந்த வாழ்க்கையின் ஒரு சித்திரம் இது. வரலாற்றின் ஒரு பரிமாணம். வெகு தீர்மானமான அமைதியான குரல். இக்குரல்தான் ஒரு எழுத்தாளனின் கலை சமூக சக்தியாக, உண்மைக்குச் சாட்சியாக, மனசாட்சியின் குரலாக, இப்படிப் பல பரிமாணங்களில் தன்னை வெளிக்காட்டிக் கொள்கிறது’    \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47927198187756,"sku":null,"price":282.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/THOORVAI.jpg?v=1783767642"},{"product_id":"அன்பு-என்னும்-கலை","title":"அன்பு என்னும் கலை","description":"\u003cp\u003e\u003cspan\u003e'உலக அளவில் சிறந்த விற்பனையைக் கொண்டு திகைக்க வைக்கும் இந்த நூல், இலட்சக்கணக்கான வாசகர்களுக்குத் தங்களுள் மறைந்திருக்கும் அன்புக்கான ஆற்றலை வளர்க்கிறது; இதன்மூலம் எவ்வாறு வளமிக்க, செயலூக்கமுள்ள வாழ்க்கையை அடையலாம் என்பதைக் காட்டுகிறது.' செவ்வியல் படைப்பான இந்த நூல் ஓர் அசல் சுயவுதவிப் பெட்டகம். இது உலகெங்கும் எண்ணிக்கையற்ற ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ளாற்றலை வழங்கிக்கொண்டிருக்கிறது. \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47927212769516,"sku":null,"price":159.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ANBUENNUMKALAI.jpg?v=1783767864"},{"product_id":"அவஸ்தை","title":"அவஸ்தை","description":"\u003cp\u003e\u003cspan\u003eகிருஷ்ணப்பன் என்ற மையப் பாத்திரத்தைச் சுற்றியது இப்புனைவு. இடதுசாரி அரசியலையும் இந்தியப் பாரம்பரியத்தையும் புதுவிதமாக இணைக்கிறது. உள்பிரதியில் இருத்தலியலும் மாடர்னிசமும் புது இழைகளாகப் பின்னிப் பிணைந்துள்ளன. கிருஷ்ணப்பனின் குருவான அண்ணாஜி என்ற அண்டர் கிரௌண்ட் கம்யூனிஸ்ட், பல பெண்களோடு சரளமாகப் பழகுகிறவன்; இறுதியில் சுவாமியார் வேடத்தில் என்கௌண்டரில் சுட்டுக் கொல்லப்படுகிறான். \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47927317594348,"sku":null,"price":206.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/AVASTHAI.jpg?v=1783768481"}],"url":"https:\/\/centaram.com\/collections\/adaiyalam-pathippagam.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}