{"title":"அ.வெண்ணிலா","description":"","products":[{"product_id":"கங்காபுரம்","title":"கங்காபுரம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eநூறு களிறுகளைப் போரில் கொன்று குவிக்கும் வீரனுக்கும், எதிரிகளே இல்லையென்னும் மாவீரனுக்கும், விரிந்து பரந்த ராஜ்ஜியத்தின் அரசனுக்கும், சட்டிச் சோறு வாங்கிச் சாப்பிட்டுக் காலம் கடத்தும் பரதேசிக்கும், செல்வத்தில் திளைக்கும் வணிகனுக்கும், சமன் குலைந்த நடத்தையுடன் இருக்கும் பித்தனுக்கும் நினைவுகள் ஒன்றே பொது. ஒவ்வொருவரின் மரணத் தருவாயிலும் அவரவரிடம் மிஞ்சி நிற்கப் போவது எஞ்சிய நினைவுகள்தான். ராஜராஜன் என்ற சூரியனுக்கடியில் கரு நிழலென மறைக்கப்பட்டது  ராஜேந்திரனின் தன்னொளி. மிகப் பெரும் வெற்றியாளன். ஆனால், எப்போதும் தோல்வியின் கசப்புடன் வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டவன். ராஜேந்திரனின் துயர நினைவுகளின் வேர் தேடிச் செல்லும் பயணமே இந்த ‘கங்காபுரம்’ நாவல்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47873471938796,"sku":null,"price":470.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SANGAPURAM.jpg?v=1782973530"},{"product_id":"சாலாம்புரி","title":"சாலாம்புரி","description":"\u003cp\u003eமாயரகசியத்தைப் புதைந்து வைத்திருக்கும் காலத்தின் யுகாந்திரங்களில் எத்தனையோ மனிதர்களின் வாழ்க்கைப் புதைந்திருக்கிறது. மனிதர்களாலான வாழ்வு ஒருபோதும் ஒற்றைத்தன்மை கொண்டதாக இருந்ததில்லை. சிலருக்கு வெற்றியும் சாதனைகளின் உயரங்களும் கைகூடி வந்தாலும், அவை அவர்களின் தகுதியின் உயரங்களைவிட குறைவாகவே இருந்திருக்கிறது. வாழ்க்கைத் தனக்கு அணுக்கமாகச் சிலரை வைத்துக் கொண்டிருக்கிறது. சிலரைத் துயரத்தின் எல்லைவரை விரட்டிச் சென்றிருக்கிறது.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47873534099692,"sku":null,"price":517.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SAALAMPURI.jpg?v=1782974877"},{"product_id":"மீதமிருக்கும்-சொற்கள்","title":"மீதமிருக்கும் சொற்கள்","description":"\u003cp\u003e\u003cspan\u003e1930 – 2004 வரை எழுதி வெளிவந்த பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்திருக்கிறார் கவிஞர் அ. வெண்ணிலா. கடினமான வேலையை எடுத்துக்கொண்டு, பெண்களின் சிந்தனைப் புரட்சியை வெளிக்கொண்டு வந்திருக்கிறார். பெண்களின் உணர்வுகள் நுட்பமாக வெளிப்படுகின்றன. கோதைநாயகி அம்மாளில் ஆரம்பித்து வெண்ணிலா வரைக்கும் ரசிக்கத்தக்க எழுத்துக்கள். மொழிநடை, கருத்து, சொல்கிற விதம் எல்லாமே மாறி வந்திருக்கிற அழகு கவனிக்கத்தக்கது!\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47889934516460,"sku":null,"price":470.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/meethamirukum.jpg?v=1783055010"},{"product_id":"தேவரடியார்-கலையே-வாழ்வாக","title":"தேவரடியார்: கலையே வாழ்வாக","description":"\u003cp\u003e\u003cspan\u003eசங்க காலம் தொடங்கி, இருபதாம் நூற்றாண்டு வரை தமிழகத்தின் நடனம், இசை, ஓவியம், சிற்பம் ஆகிய கலை வடிவங்கள் பரிணாம வளர்ச்சி பெற்று வந்திருக்கின்றன. தமிழகக் கலைகள் கோயில் சார்ந்தே இயங்கி வந்திருக்கின்றன. கோயில் என்ற நிறுவனம் உருவாகி வளர்ந்தெழுந்தபோது, கடவுளர்கள் ஆர்ப்பாட்டமான வழிபாட்டுக்குரியவர்களாக மாற்றப்பட்டார்கள். இசையும் நடனமும் மங்கலகரமானவையாகக் கருதப்பட்டன. கடவுள்களைப் புகழ்ந்தும், அவர்களின் மகிமைகளை வெளிப்படுத்தவும் பதிகங்களும் பாசுரங்களும் பாடப்பட்டன. வழிபாட்டின் ஓர் அங்கமாகக் கோயில்களுக்குப் பெண்கள் நேர்ந்துவிடப்பட்டார்கள். \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47889998708972,"sku":null,"price":282.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/devaradeyar.jpg?v=1783056411"},{"product_id":"எரியத்-துவங்கும்-கடல்","title":"எரியத் துவங்கும் கடல்","description":"\u003cp\u003e\u003cspan\u003eநான் கவிதைகளால் ஆனவள். கவிதைகள் வழியே என்னை நான் அறிந்தேன். கவிதையே என் மனசின் இருளடந்தப் ப்குதிகளுக்கு வெளிச்சம் பாய்ச்சியது. என் சிந்தையில் இருந்த கசடகற்றி என்னை ஒளிப் பொருந்தியவளாக்கியது. கவிதையே என்னை மூடநம்பிக்கைகளில் இருந்து காப்பாற்றி நம்பிக்கை உடையவளாக்கியது. தனித்துவ மிக்கவளாக, சுயமரியாதை நிரம்பியவளாக நான் பரிமளிக்கும் வித்தையைக் கவிதையே கற்றுக் கொடுத்தது. கடவுளிடமிருந்தும் சாத்தாஙளிடம் இருந்தும் விலகி நான் பத்திரமாக இருப்பதற்குக் கைவசம் இருக்கும் கவிதையே சூத்ரதாரி.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47890228576492,"sku":null,"price":376.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ereyathuvangum.jpg?v=1783059017"},{"product_id":"கண்ணம்மாக்கள்-மரிப்பதில்லை","title":"கண்ணம்மாக்கள் மரிப்பதில்லை","description":"\u003cp\u003eஇந்த நூலில் இடம்பெறும் கதைகள் மற்றும் அனுபவங்கள், ஒவ்வொரு பெண்ணின் உள்ளார்ந்த போராட்டத்தையும், அன்பையும், தியாகத்தையும் உயிரோட்டமாகச் சித்தரிக்கின்றன. சமூகத்தின் அழுத்தங்களையும் வேதனைகளையும் எதிர்கொண்டாலும், பெண்களின் நம்பிக்கையும் மன உறுதியும் ஒருபோதும் அழிவதில்லை என்பதை \u003cstrong data-start=\"600\" data-end=\"632\"\u003e\"கண்ணம்மாக்கள் மரிப்பதில்லை\"\u003c\/strong\u003e என்ற தலைப்பு வலிமையாக உணர்த்துகிறது.\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47890314920172,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/kannammakal.jpg?v=1783059481"}],"url":"https:\/\/centaram.com\/collections\/a-vennila.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}