{"title":"ஆ. இரா. வேங்கடாசலபதி","description":"","products":[{"product_id":"புதுமைப்பித்தன்-கதைகள்","title":"புதுமைப்பித்தன் கதைகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eசெம்பதிப்பு எனச் சிறப்புப்பெயர் பெற்றுவிட்ட இத்தொகுப்பில் புதுமைப்பத்தன் கதைகள் அனைத்தும் இடம்பெறுகின்றன. காலவரிசையில் கதைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. முதன்முதலில் இக்கதைகள் வெளியான இதழ்களோடும் புதுமைப்பித்தன் காலத்தில் வெளியான முதல் பதிப்புகளோடும் ஒப்பிடப்பட்டு, திருத்தமான பாடத்தோடு இந்நூல் அமைந்துள்ளது. பின்னிணைப்புகளில், கதைகளை வெளியிடப் புதுமைப்பித்தன் பயன்படுத்திய புனைபெயர்கள், பதிப்புக் குறிப்புகள், பாட வேறுபாடுகள் முதலானவை இடம்பெறுகின்றன. பல்லாண்டுக் கால ஆராய்ச்சியில் உருவாகியுள்ள தொகுப்பு இது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47605974827244,"sku":null,"price":670.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/c52e97f454172c6aabe47461da0fc449.jpg?v=1778144043"},{"product_id":"திருநெல்வேலி-எழுச்சியும்-வ-உ-சி-யும்-1908","title":"திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908","description":"\u003cp\u003e\u003cspan\u003eகப்பல் ஓட்டி வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு அறைகூவல் விடுத்த வ.உ.சி. கைதுசெய்யப்பட்ட செய்தியைக் கேட்டுத் திருநெல்வேலியிலும் தூத்துக்குடியிலும் மக்கள் கிளர்ந்தெழுந்தனர். தெருவில் இறங்கினர். கூட்டம் கூடினர். வேலைநிறுத்தம் செய்தனர். அரசு சொத்துகளை அழித்தனர். இரும்புக்கரம்கொண்டு இந்த எழுச்சியை அரசு ஒடுக்கியது. துப்பாக்கிச்சூட்டில் நால்வர் மாண்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் கைதாயினர். மக்கள்மீது திமிர்வரி விதித்த அரசு, ஆறு மாதங்களுக்குத் தண்டக்காவல் படையை நிலைநிறுத்தியது. அதற்கு முன்போ பின்போ விடுதலைப் போராட்டக் காலத் தமிழகத்தில் இப்படியோர் எழுச்சி ஏற்பட்டதில்லை எனலாம். ஏராளமான சான்றுகளைக் கொண்டு இந்த எழுச்சியின் போக்கை விவரிக்கும் இந்நூல் இதன் பின்னணியையும் விளைவுகளையும் விரிவாக ஆராய்கிறது. இந்த எழுச்சியின் நாயகரான வ.உ.சி. இதைப் பற்றி எடுத்த நிலைப்பாட்டை விளக்குவதோடு எழுச்சியில் பங்களித்த எண்ணற்ற எளிய மக்களின் கதையினையும் மீட்டுருவாக்கம் செய்கிறது இந்நூல். ஆய்வுத் திறமும் அறிவார்ந்த சுவாரசியமும் மிளிர இந்நூலை எழுதியிருக்கிறார் ஆ. இரா. வேங்கடாசலபதி.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47606298149100,"sku":null,"price":296.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/5.jpg?v=1778149509"},{"product_id":"அந்தக்-காலத்தில்-காப்பி-இல்லை","title":"அந்தக் காலத்தில் காப்பி இல்லை","description":"\u003cp\u003e\u003cspan\u003eநவீனத் தமிழக உருவாக்கத்தின் பின்புலத்தில் சமூகப் பண்பாட்டு மாற்றங்களை ஆராயும் கட்டுரைகள் இவை. தற்காலத்தைப் புரிந்துகொள்வதற்குக் கடந்தகாலத்தை விமர்சன நோக்கோடு பார்க்கவேண்டும் என்பதை வற்புறுத்தும் பார்வை இவற்றின் ஊடுசரடு. காப்பியும் புகையிலையும் தமிழ்ச் சமூகத்தில் எதிர்கொள்ளப்பட்ட முறை; திராவிட இயக்கத்தின் மொழிசார்ந்த அரசியல்; பாரதியின் எழுத்து வாழ்க்கை பற்றிய சமூகவியல் நோக்கு; கருத்துப் படங்கள், பகடி ஆகிய கலை வடிவங்கள் தமிழ் மரபில் பெறும் இடம் முதலானவை இந்நூலில் ஆராயப்படுகின்றன. ஆய்வுக் கட்டுரை என்றால் சாரமற்றிருக்கும் என்ற நினைப்பை முறியடித்து, சுவையும் விறுவிறுப்பும் மிக்க நடையில் இவை எழுதப்பட்டிருக்கின்றன. ஆய்வுலகத்தைத் தாண்டிப் பரவலான வாசக கவனத்தைப் பெற்ற நூலின் புதிய பதிப்பு இது\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47666535661804,"sku":null,"price":258.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/f499ca7dede7b929dd97c09b15b9815f.jpg?v=1779772850"},{"product_id":"தமிழ்க்-கலைக்களஞ்சியத்தின்-கதை","title":"தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை","description":"\u003cp\u003e\u003cspan\u003eஉலகிலுள்ள அனைத்து அறிவையும் திரட்டிப் பொருள்வாரியாகத் தலைச்சொற்களை அகரவரிசையில் அமைத்துப் பல தொகுதிகளாக வழங்குவதே ‘கலைக் களஞ்சியம்’ ஆகும். தமிழில் ஒரு கலைக்களஞ்சியம் என்பது தமிழரின் நூற்றாண்டுக் கனவாகும். அக்கனவை நனவாக்கியவர்கள் தி.சு. அவினாசிலிங்கம், பெ. தூரன் ஆகியோர். 20 ஆண்டு உழைப்பு, 1200 கட்டுரையாளர்கள், 15,000 தலைப்புகள், 7,500 பக்கங்கள், 10 தொகுதிகள் கொண்டு 1953 முதல் 1968 வரை வெளியான கலைக் களஞ்சியம் இந்தியப் பதிப்புலகில் ஒரு சாதனையாகும். ஏராளமான தகவல்களைத் திரட்டி, இச்சாதனை வரலாற்றை இச்சிறு நூலில் நயம்பட எழுதியிருக்கிறார் ஆ.இரா. வேங்கடாசலபதி.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47717773934828,"sku":null,"price":70.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/c87ff9a553b9213bac66f2ece658a9e2.jpg?v=1780904127"}],"url":"https:\/\/centaram.com\/collections\/a-r-venkatachalapathy.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}