{"title":"அ.முத்துலிங்கம்","description":"","products":[{"product_id":"ஆதிக்க-சாதிகளுக்கு-மட்டுமே-அவர்-பெரியாரா","title":"ஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா?","description":"\u003cp\u003e\u003cspan\u003eதீண்டாதாரின் முன்னேற்றந்தான் பிராமணரல்லாதார்களின் முன்னேற்றமாகும். தீண்டாதார்களின் துன்பந்தான் பிராமணரல்லாதாரின் துன்பமாகும் என்று சுயமரியாதை இயக்கம் தொடங்கியது (1925) முதல், இவ்வுலகில் இருந்து விடைபெறுவதற்கு ஒரு மாதம் முன்பு மதுரையில் ஆதிக்க சாதி மனோபாவத்தைக் கண்டித்துப் பேசியதற்காக கல்வீச்சுத் தாக்குதலுக்கு (1973 அக்டோபர் 20) ஆளானது வரை தந்தை பெரியார் பேசியது, எழுதியது, செயல்பட்டது அனைத்தும் எல்லாத் தமிழ் மக்களுக்குமே. அதை உணராமல், அவரைப் படிக்காமலேயே, “ஈ.வெ.ரா தலித் விரோதி, ஆதிக்க சாதிகளுக்கான பெரியார்” என நிறுவ முயற்சிக்கும் அபத்தக் களஞ்சியங்களுக்கான பதில்தான் இந்த நூல்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47619050078444,"sku":null,"price":376.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PERE2.jpg?v=1782985104"},{"product_id":"ஆட்டுப்பால்-புட்டு","title":"ஆட்டுப்பால் புட்டு","description":"\u003cp\u003e\u003cspan\u003eஒரு பழுதடைந்த துப்பாக்கியை வைத்துக்கொண்டு என்னைக் கொல்லப் போவதாக மிரட்டுகிறாய். என்னைக் கொல்வதால் உனக்கு என்ன பயன்? அடுத்த நாள் உன் ராணுவத்துக்கு வெற்றி கிட்டிவிடுமா? போரை நிறுத்திவிடுவார்களா? என்னைப்போல எத்தனை போராளிகள் இருக்-கிறார்கள். அவர்கள் அத்தனை பேரையும் நீ தேடித்தேடிக் கொல்-வாயா? இந்த வயதுக்குள் நீ இதுவரை எத்தனைக் கொலைகள் செய்திருப்பாய். உன் எதிரிகள் எதற்காகப் போரிடுகிறார்கள் என்றாவது யோசித்துப் பார்த்திருக்கிறாயா? அவர்களுக்குக் குடும்பம் மேல் பற்றில்லையா? பெண்சாதி, பிள்ளைகள் வாழவேண்டும் என்று ஆசைப்படமாட்டார்களா? ஆனாலும் எதற்காக மரணத்தைக்கண்டு அஞ்சாமல் போர் புரிகிறார்கள். அவர்களுக்கு எங்கிருந்து அந்த வெறி வருகிறது? அடிமை களாக வாழ அவர்களுக்குப் பிடிக்கவில்லை. உலகத்தில் பிறந்த எந்த மிருகத்துக்கும் பறவைக்கும் சுதந்திரம் வேண்டியதாய் இருக்கிறது. ஒரு புழுவுக்குக்கூட சுதந்திரம் தேவை. அப்படியிருக்க மனிதன் சுதந்திரத்துக்குப் போராடுவதில் என்ன தப்பு இருக்கிறது. அதை யோசித்துப் பார்த்திருக்கிறாயா? - \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47628172853484,"sku":null,"price":93.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/027c206815e3518304fdabd127fb8d2b.jpg?v=1778653620"},{"product_id":"அமெரிக்க-உளவாளி","title":"அமெரிக்க உளவாளி","description":"\u003cp\u003e\u003cspan\u003eநவீனத் தமிழ் உரைநடைக்கு ஒரு புதிய பரிமாணத்தையும் வசீகரத்தையும் வீச்சையும் சேர்க்கும் எழுத்தில் ஆசிரியர் பல நிகழ்வுகளை இந்நூலில் விவரிக்கிறார். நிகழ் புலங்கள் இலங்கை, அமெரிக்கா, ஆப்பிரிக்கா, கனடா என மாறினாலும் கதை மாந்தர்களின் மனிதநேசமும் மகிழ்ச்சியும் துயரமும் தியாகமும் மாறாமல் ஒரு தமிழ் வாசகருக்கு முற்றிலும் பரிச்சயமில்லாத தருணங்களை வாசக மனத்தில் நீடித்து நிறுத்துகின்றன\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47628199100652,"sku":null,"price":259.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/5dae49ff8d386be7ee2e80d80a737ef7.jpg?v=1778655794"},{"product_id":"உண்மை-கலந்த-நாட்குறிப்புகள்","title":"உண்மை கலந்த நாட்குறிப்புகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eதமிழில் சுயசரிதைத் தன்மை கொண்ட புனைவுகளில் தன்னிரக்கமும் படைப்பூக்கமற்ற வெற்றுத் தகவல்களும் பொது இயல்பாகிவிட்ட சூழலில் முத்துலிங்கத்தின் இந்த நாவல் அந்த வகை எழுத்திற்கு ஒரு புதிய உத்வேகத்தையும் அழகியலையும் வழங்குகிறது. முத்துலிங்கத்தின் கவனம் பெறும் ஒவ்வொரு அனுபவமும் உயிர்ச் சித்திரங்களாக விழித்தெழுகிறது. எந்த ஒரு சிறிய நிகழ்வையும் நினைவையும் ஒரு மர்மமான ரசவாதத்தால் வாழ்வின் தரிசனமாக மாற்றி விடும் அவர் நவீனத் தமிழ் எழுத்திற்கு ஒரு புதிய நீரோட்டத்தை வழங்குகிறார். இந்த நாவலின் சில பகுதிகள் தனி ஆக்கங்களாக வெளி வந்திருந்தபோதும் இந்த வடிவத்தில் அவை தமது உள்ளிணைப்புகளால் ஆழ்ந்த ஓர்மையை வெளிப்படுத்துகின்றன. அவரது புனைவின் நிழல் எதார்த்தத்தை மறைப்பதில்லை. மாறாக அவற்றை அதன் மந்தகதியிலிருந்து விடுவித்துப் பிரகாசமடைய வைக்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47628208308460,"sku":null,"price":333.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/unmaikalantha.jpg?v=1778656310"},{"product_id":"கடவுள்-தொடங்கிய-இடம்","title":"கடவுள் தொடங்கிய இடம்","description":"\u003cp\u003e\u003cspan\u003e-போரின் நிமித்தம் புலம்பெயர்ந்து அகதியாகப் பல நாடுகள் கடந்து கடைசியில் கனடாவில் தஞ்சமடையும் பத்தொன்பதே வயதான நிஷாந் எனும் இளைஞனின் பார்வையில் விரியும் இந்நாவல் உலகெங்கிலும் அலைவுறும் மனிதர்களின் வாழ்க்கையைக் கழிவிரக்கமற்ற மெல்லிய நகையுணர்வுடன், தீவிரத்துடன் முன்வைக்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan\u003eசந்திரா\u003c\/span\u003e\u003cspan\u003e மாமி, சகுந்தலா, ஈஸ்வரி, அம்பிகாபதி, அகல்யா என ஒவ்வொருவராக நிஷாந்தின் மன அறைக்குள் வந்து தங்கி அவரவர் கதைகளைக் கூறி மறைகின்றனர். எவ்வளவு துயரிலும் நிஷாந்துக்குக் காதலிக்கிற மனநிலை வாய்க்கிறது. நாவலெங்கும் கடவுச்சீட்டு ஒரு கதாபாத்திரமாகவே சுற்றிச் சுழல்கிறது.\u003c\/span\u003e\u003cspan\u003e\u003cbr\u003eஅ.முத்துலிங்கம் என்கிற மகத்தான கதைசொல்லியின் மொழி லாவகத்தால் புலம்பெயர் நாவல்களின் வழக்கமான பாணியை உதறிவிட்டு இது வேறொரு ரூபம் கொள்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47648818233580,"sku":null,"price":206.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/26baccd25aa042a9199fdd3212f50017.jpg?v=1779272065"},{"product_id":"புவியீர்ப்புக்-கட்டணம்","title":"புவியீர்ப்புக் கட்டணம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஅ. முத்துலிங்கத்தின் கதைகளில் சுவாரசியம் இருக்கிறது. எளிமை இருக்கிறது. நவீனம் இருக்கிறது. அங்கதம் இருக்கிறது. அவரது கதைப் புலங்கள் இலங்கை, இந்தியா, கனடா, அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சூடான், சோமாலியா, சியாரா லியோன் என்று விரிகின்றன. அவரது கதை வெளியில் புலம்பெயர்ந்தோரின் அலைந்துழல்வும் அடையாளச் சிக்கலும் இருக்கிறது. தமிழ் இருக்கிறது. சர்வதேசியம் இருக்கிறது. உயிரிச் சமநிலை குறித்த அக்கறை இருக்கிறது. அவரது எழுத்துகள் வாசகனைக் கண்ணியப்படுத்துகின்றன. இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக அவரது கதைகளில் உண்மை இருக்கிறது. இந்த நம்பகத்தன்மை, இந்தத் தொகை நூலில் உள்ள கதைகளை இன்னும் பல ஆண்டுகளுக்கு வாசகர்களின் மனத்திற்கு நெருக்கமாக வைத்திருக்கும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47655228834028,"sku":null,"price":310.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/1c5cd8f0eeb06a2e902e5f98899420ef.jpg?v=1779443148"}],"url":"https:\/\/centaram.com\/collections\/a-muthulingam.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}