தனிமை தளிர்
Original price was: ₹800.00.₹752.00Current price is: ₹752.00.
1 in stock
பெருமழை வந்து பெரிய ஆல மரம் விழுந்துவிடும். பழங்களும், காய்களும், குச்சிக் கொம்புகளும், நீள் விழுதுகளும், திறந்த பொந்துகளும், கலைந்த கூடுகளும், அவற்றிலிருந்து பறக்கும் பறவைகளுமாய், வேர்கள் வானத்தைப் பார்த்தபடி கிடக்கும். உடன் எல்லோரும் பழங்களையும், காய்களையும், குச்சிகளையும் பொறுக்க வருவார்கள். சூடாமணியும் ஓர் ஆலமரமாய் இருந்தவர். காயாய், பழமாய், பூவாய், கனத்த விழுதுகளாய், ஆழமான வேர்களாய், கலைந்த கூடுகளிலிருந்து பறக்கும் கிளிகளாய், பொந்துகளிலிருந்து வெளிப்படும் அணில்களாய் சிதறிக்கிடக்கும் அவருடைய கதைகளை அவருடைய நண்பர்கள் பலர் இன்னும் பொறுக்கிக்கொண்டிருக்கிறோம்.
Customer Reviews
Share your experience with this product
Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.
