பெருமூச்சு – பின்னால் சொன்ன கதைகள்
Original price was: ₹140.00.₹131.60Current price is: ₹131.60.
1 in stock
சோ. தர்மன் சிறுகதைகளின் முழுத் தொகுப்பு ‘நீர்ப்பழி’ வெளியாகி, பின்னால் எழுதப்பட்ட கதைகளாகப் ‘பெருமூச்சு’ உருவாகியிருக்கிறது. இதிலுள்ள கதைகளின் தானியத்துக்குள் நழுவி மறைந்த பாம்படம் திரும்பிவந்து கதை போடத் துவங்கிவிட்டது – பாட்டியின் குரல் வளையில். பாட்டியின் சுருக்கம் விழுந்த கோடுகள் பட்ட முகத்துக்குள், கவனமாகச் சென்று அவளுடைய முகத்தை வாசிப்போமானால், மறைந்திருக்கும் கரிசல் வெளியின் நிலத் தோற்றங்களைப் பன்முகக் கதைகளினூடாக நிலங்களின் வாசனைகளோடு காண்பீர்கள். சோ. தர்மனின் கதைகளில் கிளிகள் கொஞ்சும் மரத்தின் பச்சை சரீரம் நிலவில் படர்ந்து அலைய, எல்லா உயிரினங்களும் பிறந்துகொண்டே இருக்கின்றன.
-pinnaal, kadaigal, perumoochu, perumoochu -pinnaal sonna kadaigal, sonna
Customer Reviews
Share your experience with this product
Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.
